என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கும் பென் ஸ்டோக்ஸ்
    X

    இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கும் பென் ஸ்டோக்ஸ்

    • இங்கிலாந்து 3 போட்டியில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது.
    • தென்ஆப்பிரிக்கா 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு லக்னோவில் தொடங்கும் 19-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா இடம் பெறவில்லை. அதனால் பொறுப்பு கேப்டனாக மார்க்ரம் செயல்படுகிறார். இதேபோல இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்த போட்டியில் விளையாடுகிறார்.

    நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 3 போட்டியில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் இங்கிலாந்து அதிர்ச்சி அடைந்தது. அதிலிருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது.

    தென்ஆப்பிரிக்கா 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. அந்த அணியும் கடந்த போட்டியில் நெதர்லாந்திடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. தென்ஆப்பிரிக்கா 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    Next Story
    ×