search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டோனி- ஜடேஜாவின் உலக சாதனையை முறியடித்த நெதர்லாந்து ஜோடி
    X

    டோனி- ஜடேஜாவின் உலக சாதனையை முறியடித்த நெதர்லாந்து ஜோடி

    • சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தது.
    • ஒருநாள் உலகக் கோப்பையில் நெதர்லாந்தின் ஐந்தாவது சத பார்ட்னர்ஷிப் இதுவாகும்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து - இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நிலையில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் ஜோடி சேர்ந்து இலங்கை அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

    இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையை இவர்கள் படைத்தனர். ஒருநாள் உலகக் கோப்பையில் நெதர்லாந்தின் ஐந்தாவது சத பார்ட்னர்ஷிப் இதுவாகும்.

    மேலும் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 7-வது விக்கெட்டுக்கு டோனி- ஜடேஜா 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த சாதனையை சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் முறியடித்துள்ளது.

    Next Story
    ×