என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் மகள் பிறந்ததில் இருந்தே முதலீடு செய்யலாம்.
- இந்த திட்டம் மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும்
பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் நலனுக்காக சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு 2015ம் ஆண்டு தொடங்கியது.
கடந்த பத்தாண்டுகளாக இந்த திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் இன்னும் பலருக்கும் இந்த திட்டம் குறித்த பொது விவரங்கள் தெரியவில்லை. அதன் காரணமாகவே இந்த திட்டத்தில் இன்னும் எண்ணற்றோர் இணையாமல் உள்ளனர்.
பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பெற்றோர்கள் பணத்தை சேமிப்பது அவசியமாகும்.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் மகள் பிறந்ததில் இருந்தே முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் மகள்களின் பெயரில் கணக்கு தொடங்கலாம்.
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ்,18 ஆண்டுகளுக்குப் பிறகு, பாதித் தொகையைத் திரும்பப் பெறலாம். 21 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கில் ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.250 முதலீடு செய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதனுடன் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இந்தக் கணக்கில் ரூ.1.5 லட்சத்துக்கான வரிச் சலுகையும் கிடைக்கும்.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், ஒருவர் தனது குழந்தை பிறந்த உடனேயே SSY திட்டத்தில் ஒரு கணக்கைத் திறந்து, மாதா மாதம் ரூ.10,000 முதலீடு செய்து வந்தால் தோராயமான 8% வட்டி வருமானத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 60 லட்சம் கிடைக்கும்
எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ கடைசியில் கிடைக்கும் தொகை மாறக்கூடும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
- சந்ததி இல்லாத பிதாமகன் பீஷ்மருக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்வது என்பது குருவுக்குச் செய்யும் தர்ப்பணம் ஆகும்.
- பீஷ்ம தர்ப்பணத்தை மறக்காமல் செய்தால் மகா புண்ணியத்தை பெறலாம்.
பஞ்சபூதத்தில் நீரின் தன்மையை கொண்டது அஷ்டமி. தை மாத அமாவாசைக்கு பின்னர் 8-ம் நாளில் வரும் அஷ்டமி மிகவும் விசேஷமானது. இதனை பீஷ்மருக்கு உகந்தது என்கின்றனர்.
மகாபாரத்தில் கங்கை மைந்தன் பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இல்லை. அவர் தன் தந்தைக்காக செய்த தியாகத்தின் பலனாக பெறர்க்கரிய பேறு பெற்றார். அதாவது அவரே விரும்பாமல் அவரது உடலில் இருந்து உயிர் பிரியாது.
யாரும் பெறா வரத்தை பெற்ற பீஷ்மர் இறுதியில் விதியின் சூழ்ச்சியால் கவுரவர்கள் பக்கம் போரிட நேர்ந்தது. அவரின் கர்ம வினைப்படி அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை அனுபவிக்க வைத்தது விதி. இதன் பலனாக போரில் அம்புகளினால் வீழ்த்தப்பட்டார்.
போரில் யுத்தகளத்தில் அர்ஜூனன் தொடுத்த அம்புகளால் துளைக்கப்பட்ட நிலையில் பீஷ்மர் அம்பு படுக்கை மீது கிடந்தார். அவர் தன் தந்தையிடம் இருந்து தான் விரும்பியபடி இறக்கும் வரத்தை பெற்றிருந்தார். தான் பெற்ற வரத்தினால் மோட்ச காலமான உத்தராயண காலத்தில் உயிர் துறக்க விரும்பி அம்பு படுக்கையில் காத்திருந்தார். அவரை சுற்றி கவுரவர்களும், பாண்டவர்களும் வணங்கி நின்றனர்.
முள் படுக்கையில் அவருடைய உடல் வேதனையில் துடித்தது. அப்போது அங்கு வந்த வியாசரிடம் "நான் செய்த பாவம் என்ன? எதற்காக என் உடல் இவ்வளவு வேதனையில் இருக்கிறது? நான் விரும்பிய நேரத்தில் மரணிக்கலாம் என்ற என் தந்தையின் வரத்தின் படி நான் நினைத்தபோது என்னால் மரணிக்க முடியாதபடி இந்த வேதனை என்னை அச்சுறுத்துகிறதே" என்று பீஷ்மர் கேட்டார்.
அதற்கு வியாசர் "பீஷ்மா ஒருவர் தன் மனதாலும், உடலாலும் ஒருவருக்கு செய்வது மட்டுமே தீமை , அநீதி இல்லை. நம் முன்பாக ஒரு கெட்ட செயல் நடக்கும் போது அதனை தடுக்காமல் இருப்பதும் கூட பாவம் தான். அதற்கான தண்டனையையும் அந்த நபர் அனுபவித்தே ஆக வேண்டும். நீ அனுபவிக்கும் வேதனை அப்படிப்பட்ட ஒரு தண்டனைக்குரியதுதான்" என்றார்.
அப்போதுதான் பீஷ்மருக்கு புரிந்தது, துரியோதன சபையில் பாஞ்சாலிக்கு அநீதி நிகழ்ந்த போது அதனை கண்டும் காணாமல் இருந்ததன் விளைவு இது என்று. உடனே வியாசரிடம் இதற்கு என்ன பிராயச்சித்தம் என்று கேட்டார்.
"யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ, அப்போதே அந்த பாவம் அகன்று விடும் என்கிறது வேதம். நீ எப்போது வருந்தினாயோ அப்போதே அந்த பாவம் அகன்று விட்டது. ஆனாலும் துரியோதனன் அவையில் பாஞ்சாலி காப்பாற்றும் படி கதறியபோது கேட்கும் திறன் இருந்தும் அதைக் கேளாமல் இருந்த உன் செவிகள், கூர்மையான பார்வை இருந்தும் பாராதது போல் இருந்த உன் கண்கள், நீ சொன்னால் அனைவரும் கேட்பார்கள் என்ற நிலையிலும் தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் அளப்பரிய வீரம் இருந்தும் உபயோகமின்றி இருந்த உன் வலுவான தோள்கள், வாள் எடுத்து எச்சரிக்காத உன் கைகள், இருக்கையில் இருந்து எழாமல் இருந்த உன் கால்கள், நல்லது எது கெட்டது எது என்று சிந்திக்க தவறிய உன் புத்தி இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என்பது விதி. அதைத்தான் இப்போது அனுபவிக்கிறாய்" என்றார் வியாசர்.
பின்னர் "உன்னுடைய வேதனையை சுட்டெரிக்க சூரியனின் அனுகிரகம் தேவை என்று கூறிய வியாசர் தன்னிடம் இருந்த எருக்க இலைகளை கொண்டு பீஷ்மரை அலங்கரித்தார். இதனால் அவரது வேதனை குறைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதி அடைந்த பீஷ்மர், தியான நிலையிலே முக்தி அடைந்தார்.
அவர் மரணித்த தினம் ரதசப்தமி என்றும், அதற்கு அடுத்த நாளான அஷ்டமி திதி 'பீஷ்மாஷ்டமி' என்று அழைக்கப்படுகிறது. "பீஷ்மர் இறுதிவரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர். இதனால் அவருக்கு பித்ரு கடன் செய்வது யார்? "என்று தருமர் வருந்தினார்.
அப்போது வியாசர் "ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரிக்கும், தூய்மை விலகாத துறவிக்கும், பித்ருக்கடன் அவசியமே இல்லை. அந்த வகையில் பீஷ்மர் சொல் தவறாத நேர்மையாளர், தூய்மையானவர். வரும் காலத்தில் பீஷ்மருக்காக இந்த தேசமே பித்ரு கடன் செய்யும். அதற்கான புண்ணியத்தை அனைவரும் அடைவர்" என்றார் .
அதனால் ரத சப்தமிக்கு மறுநாள் பீஷ்மருக்கு எல்லா மக்களும் தர்ப்பணம் செய்கிறார்கள். அதுவே பீஷ்மாஷ்டமி. பிதாமகன் என்று போற்றப்படும் பீஷ்மர் இறந்த திதி நாளே பீஷ்டாஷ்டமி. எனவே சந்ததி இல்லாத பிதாமகன் பீஷ்மருக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்வது என்பது குருவுக்குச் செய்யும் தர்ப்பணம் ஆகும்.
இது நம் பித்ருக்கள் அனைவருக்கும் செய்யப்படுகிற தர்ப்பணம். பீஷ்ம தர்ப்பணத்தை மறக்காமல் செய்தால் மகா புண்ணியத்தை பெறலாம். இதன் மூலம் ஒட்டுமொத்த குருமார்களின் ஆசியையும் பித்ருக்களின் ஆசியையும் பெறலாம்.
இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். காலையில் நீராடி விட்டு, பித்தளை அல்லது செம்பு குவளையில் பால் கலந்த நீரை இடது கையில் எடுத்து கொள்ளவும். வலது கையில் அட்சதை, புஷ்பம், சந்தனம், குங்குமம் முதலியவற்றை வைத்து கொள்ளவும்.
கீழே தாம்பாளம் வைத்து மூன்று முறை "பீஷ்மாய நமக" என பீஷ்மர் நாமம் உச்சரித்தபடி இடக்கையில் உள்ள நீரை வலக்கையில் இருந்து தம்பாளத்தில் விடவும். அவ்வளவு தான். பீஷ்மாஷ்டமி அன்று புனித நீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும், மற்றும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாக கிடைக்கும் என்கின்றனர் பெரியவர்கள்.
- குரு நின்ற வீட்டை விட பார்த்த வீட்டை அதிக சக்தி உடையதாக மாற்றுவார்.
- குரு பகவான் கடக ராசியில் ஐந்தாவது டிகிரியில் பூச நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார்.
நவகிரகங்களில் முழு சுப கிரகமாக கருதப்படுபவர் குருபகவான். தனது பார்வை பலத்தால் ஒரு ஜாதகத்தில் உள்ள தோஷங்களையும் சாபங்களையும் நிவர்த்தி செய்யக்கூடிய வல்லமை பெற்றவர்.
சுய ஜாதக ரீதியாக ஒருவருக்கு இல்லாத யோகங்களையும் கோட்ச்சார காலங்களில் வழங்கும் தன்மை பெற்றவர். ஒரு ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் பலமிழந்து இருந்தாலும் குரு நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு அனைத்து விதமான நல்ல பலன்களும் கூடிவிடும். குருவிற்கு மூன்று விதமான பார்வைகள் உண்டு. அவர் தான் நின்ற வீட்டிலிருந்து 5, 7, 9ம் இடங்களை பார்ப்பார். குரு நின்ற வீட்டை விட பார்த்த வீட்டை அதிக சக்தி உடையதாக மாற்றுவார்.
குரு தனது ஐந்தாம் பார்வையால் குழந்தை, காதல், அதிர்ஷ்டம், பணம், பொருள், பூர்வீகத்தில் வாழும் அமைப்பு குலதெய்வ அனுகிரகம் போன்றவற்றை வழங்குவார். ஏழாம் பார்வையால் திருமணம், சமுதாய அங்கீகாரம் , நல்ல நட்பு ஆகியவற்றை ஏற்படுத்துவார். தனது ஒன்பதாம் பார்வையால் பேரன்,பேத்தி, வெளிநாட்டு வாழ்க்கை, தெய்வ கடாட்சம் போன்ற பாக்கிய பலன்களை நல்குவார். இத்தகைய சிறப்பு மிக்க குரு பகவான் கடக ராசியில் ஐந்தாவது டிகிரியில் பூச நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார். உச்சம் பெற்ற கிரகம் அனைவருக்கும் நல்ல பலனை வழங்குவது இல்லை. ஒரு கிரகம் தான் பெற்ற ஆதிபத்திய ரீதியாகவும் தான் நின்ற வீட்டு ரீதியாகவும் பலன் தரும் அந்த வகையில் உச்சம் பெற்ற குரு பகவான் எந்த லக்னத்திற்கு நன்மையையும் எந்த லக்னத்திற்கு தீமையையும் வழங்குவார் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மேஷ லக்னத்திற்கு 9,12-ம் அதிபதியான குருபகவான் 4-ம் மிடமான சுக ஸ்தானத்தில் உச்சம் பெறுவது அதிக சுபத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். தாயும் தந்தையும் உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் உள்ளவர்கள். தாய் தந்தை வழி சொத்து மிகைப்படுத்தலாக கிடைக்கும். சுய உழைப்பிலும் சிறப்பான வீடு மனை வாகன யோகம் உண்டு. வெளியூர் வெளிநாட்டு வாழ்க்கையை விரும்புவார்கள். கற்ற கல்வியால் பயன் உண்டு. அரசியலில் தனித்தன்மை தனித் திறமையுடன் மிளிர்வார்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் புகழ், அந்தஸ்துடன் கோடீஸ்வரராக வாழ்வார்கள்.
ரிஷப லக்கனத்திற்கு 8,11-ம் அதிபதியான குரு பகவான் உப ஜெய ஸ்தானமான 3ல் உச்சம் பெறுவார். 3,11-ம் இடங்கள் உப ஜெய ஸ்தான மாகும். 8,11ம்மிடங்கள் பண பர ஸ்தானமாகும்.ஒரு உப ஜெய ஸ்தான அதிபதி, மற்றொரு உப ஜெய ஸ்தானத்தில் உச்ச மடைவதால் ஜாதகருக்கு நல்ல வளர்ச்சியையும், வெற்றி மேல் வெற்றியையும் தரும். சீரான முன்னேற்றம் உண்டு. திட்டமிட்டு வெற்றிக் கனியை சுவைப்பவர்கள். பல வழிகளில் வருமானம் உண்டு. ஜாதகரின் எழுத்து உலகப் பிரசித்தி பெறும். தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் ஊடகங்களில் பெயர், புகழ் பரவும். நகைச்சுவை உணர்வு, இசை ஆர்வம் உண்டு. பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டு. சகோதர ஒற்றுமை, கூட்டுத் தொழில் உண்டு. மூத்த சகோதரம், சித்தப்பாவால் ஆதாயம் உண்டு.
மிதுன லக்னத்திற்கு 7, 10-ம் அதிபதியான குரு பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் அடைவது மிகச் சிறப்பான அமைப்பாகும். வாழ்க்கைத் துணை கவுரவ பதவியில் சுய கவுரவம் உள்ளவராக சமுதாய அந்தஸ்து நிரம்பியவராக இருப்பார். திருமணத்திற்குப் பிறகு பொருளாதார வளர்ச்சியும் புகழும் கிடைக்கும். நல்ல கல்வி அறிவு உண்டு. சொத்து சுகம் என சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்த திருமண வாழ்க்கை உண்டு. கூட்டுத் தொழிலில் வெற்றி உண்டு. புதிய தொழில் நண்பர்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள். தொழில், நட்பு மூலம் சம்பந்திகள் அமைவார்கள். மிதுன லக்னத்திற்கு குரு பகவான் பாதகாதிபதி என்பதால் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் கலகலப்பு குறையாது.
கடக லக்னத்திற்கு 6, 9-ம் அதிபதியான குரு பகவான் லக்னத்தில் உச்சம் அடைவார். ஆறாம் அதிபதியாக குருபகவான் உச்சம் அடைவது சிறப்பித்துச் சொல்லக்கூடிய பலன் அல்ல. அதே நேரத்தில் அவர் பாக்யாதிபதியாக லக்னத்தில் உச்சம் அடைவது ஜாதகருக்கு நன்மை தீமை இரண்டையும் இணைந்து வழங்கும். இவர்களுக்கு தீராத தீர்க்க முடியாத பிறவி கடனும் பொருள் கடனும் உண்டு. ஜாதகரின் தந்தை நோயாளியாகவோ கடனாளியாகவோ இருப்பார். அல்லது ஜாதகருக்கு தந்தையின் கடனை சுமக்க வேண்டிய நிலையில் உண்டாகும். தந்தைக்கு அறுவை சிகிச்சை அல்லது வைத்தியம் செய்து ஜாதகருக்கு கடன் உருவாகும். தந்தையால் வராக்கடன் வரலாம். குல கவுரவத்திற்காக தந்தை ஏற்படுத்திய கடனை அடைத்து அவதிப்படுகிறார்கள். இந்த அமைப்பு உடையவர்கள் கடனுக்கு பயந்து நோயை வரவழைத்துக் கொள்வார்கள்.
சிம்ம லக்னத்திற்கு குரு பகவான் 5, 8 எனும் பணபர ஸ்தானத்திற்கு அதிபதியாகும். லக்னத்திற்கு 12-ம் மிடமான அயன, சயன விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் பூர்வீக சொத்து, தந்தை, தந்தை வழி முன்னோர்களால் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் கிடைக்கும். ஆனால் ஜாதகர் அதை பயன்படுத்த முடியாமல் வெளியூர் வெளிநாடு வெளி மாநிலத்தில் வசிக்கக்கூடிய சூழ்நிலைகள் இருக்கும். பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களால் ஜாதகருக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன் உண்டாகும். பங்குச் சந்தையில் அதிகமான இழப்புகளை சந்திப்பார்கள். காலதாமதமான புத்திர பிரார்த்தம் உண்டாகும். தொழில் சார்ந்த நஷ்ட கடன், கஷ்டமான தொழில் செய்யும் சூழல், திடீர் விரயம் உண்டாகும். வெகு சிலருக்கு விபரீத ராஜயோகத்தையும் இந்த அமைப்பு ஏற்படுத்தும்.
கன்னியா லக்னத்திற்கு 4,7-ம் அதிபதியான குரு பகவான் 11-ம் மிடமான லாப ஸ்தானத்தில் உச்சம் அடைவது மிகச் சிறப்பான அமைப்பாகும். வாழ்நாள் எண்ணங்கள் லட்சியங்கள் கனவுகள் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். தன்னை சார்ந்தவர்களுக்கு தொழில் தொடர்பான ஆலோசனை வழங்கி வழி நடத்துபவர்கள். இந்த அமைப்பினருக்கு சொத்து வாங்குதல் விற்றல் இரண்டும் சுலபமாக நடைபெறும். நண்பர்களுடன் இணைந்து கூட்டாக ரியல் எஸ்டேட் தொழில் நடத்துவார்கள். இவர்கள் சுய தேவைக்கு வாங்கும் சொத்தை மனைவி அல்லது குடும்ப நபர்களின் பெயரில் இணைந்து வாங்குவார்கள். திருமணத்திற்கு பிறகு அடிக்கடி சொத்தை வாங்குவது விற்பது சுலபமாக நடந்து கொண்டே இருக்கும். வாழ்நாள் முழுவதும் வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும்.
துலாம் லக்னத்திற்கு 3,6-ம் அதிபதியான குருபகவான் 10ம் மிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் ஒப்பந்தம் அடிப்படையான தொழில்,கமிஷன் அடிப்படையான தொழில்கள் இவர்களுக்கு சிறப்பான பலனைத் தரும். யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் இவர்களுக்கு பல மடங்கு வருமானத்தை கொடுக்கும். ஜாமீன் கடன் இ.எம்.ஐ சார்ந்த பிரச்சினைகள் ஜாதகரின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் இந்த அமைப்பு உள்ளவர்கள் கடன் வாங்கி சுயதொழில் செய்வார்கள்.தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி இடம் பெயவார்கள். இந்த அமைப்பு உள்ளவர்கள் சுயதொழில் செய்வதை தவிர்ப்பது நல்லது. வெகு சிலருக்கு அரசு வேலை, அரசாங்க பதவி போன்றவைகளும் கிடைக்கும்.உச்சம் பெற்ற குரு பகவான் துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் சகோதரர்களுக்கு அதிக நற்பணி வழங்குவார்.
விருச்சிக லக்னத்திற்கு 2,5-ம் அதிபதியான குரு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் அடைவார். ஆனால் விருச்சிக லக்னத்திற்கு இது பாதகஸ்தானம் என்பதால் பாக்கியத்தை பாதகம் கலந்து வழங்குவார். அல்லது ஜாதகருக்கு பாக்கியமே பாதகமாகும். தந்தையால் ஜாதகருக்கு பெரிய நற்பலன் ஏற்படாது. அல்லது ஜாதகரும் தந்தையும் பிரிந்து வாழ நேரிடும். பூர்வீகம், குலதெய்வம், குழந்தை, அதிர்ஷ்டம், காதல் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு முன்னுக்கு பின் முரணான பலனை வழங்கும். ஜாதகருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் அனைத்தும் ஜாதகரை விட ஜாதகரின் குடும்பத்திற்கே பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில் ஜாதகர் பொதுக் காரியங்களில் அதிகமாக ஈடுபட்டால் புண்ணிய பலன்கள் பல மடங்கு அதிகரிக்கும். இந்த அமைப்பு இருப்பவர்கள் சுயநலத்தை விட பொதுநலத்துடன் இருப்பது சிறப்பாகும்.
தனுசு லக்னத்திற்கு ராசி அதிபதி மற்றும் சுகஸ்தான அதிபதியான குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் லக்னத்திற்கு எட்டாம் வீட்டில் உச்சம் அடைவார். ஜாதகர் உயர்ந்த குலத்தில் பிறந்த அதிர்ஷ்டசாலி. சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட பணம் பொருள் உயில் சொத்து போன்றவைகள் கிடைக்கும். குருவிற்கு வீடு கொடுத்த சந்திரன் தனுசு லக்னத்திற்கு ஒரே ஆதிபத்தியம் பெற்ற அஷ்டமாதிபதி என்பதால் நன்மையும் தீமையும் கலந்த பலன்களே ஜாதகருக்கு உண்டாகும். தொழில் உத்தியோக நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வார்கள். கடன், வம்பு, வழக்கு,நோய் தாக்கம், உத்தியோகத்தில் இடையூறு, போட்டித் தேர்வுகள் போன்றவற்றில் ஏமாற்றங்கள் உருவாகலாம். விரயத்தை தவிர்க்க முடியாத நிலை நீடிக்கும். நல்ல மதிப்பு வாய்ந்த சொத்துக்கள் ஜாதகரிடம் இருக்கும்.
மகர லக்னத்திற்கு 3,12-ம் அதிபதியான குரு பகவான் சம சப்தம ஸ்தானத்தில் உச்சமடைவார். அதாவது ராசிக்கு உச்ச குரு பகவானின் பார்வை கிடைக்கும். ஜாதகருக்கு பதிவு திருமணம் நடக்கும். திருமணத்திற்கு பிறகு வெற்றி வாய்ப்புகள் பொருளாதார முன்னேற்றம் தேடி வரும். முயற்சி, வெற்றி, திட்டமிடுதலுக்கு பின் வாழ்க்கை துணையின் பங்களிப்பு இருக்கும். சமுதாய மதிப்பு, மரியாதை நிறைந்த நல்ல வாழ்க்கைத் துணை அமையும். மனைவிவழி ஆதாயமும் உண்டு. இன்பம், துன்பம் என அனைத்து சூழ்நிலைகளிலும் மனைவியின் ஆதரவும், அரவணைப்பும் உண்டு. அதிக நண்பர்கள் உண்டு. நண்பர்களின் ஆதரவும், ஆதாயமும் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் உண்டாகும்
கும்ப லக்னத்திற்கு 2,11-ம் அதிபதியான குரு பகவான் லக்னத்திற்கு ஆறில் உச்சம் அடைவார். தன லாப கிரகம் ஆறாம் இடத்தில் உச்சம் பெறுவதால் கவுரவ பதவி அரசாங்க உத்தியோகம் அல்லது அரசாங்க உத்தியோகத்திற்கு இணையான வேலை கிடைக்கும். ஆனால் ஜாதகர் பணக்கார போர்வையில் வாழும் கடனாளியாக இருப்பார். தொழில் உத்தியோக ரீதியான மன உளைச்சல் உள்ளவர். வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய குடும்ப நோய் தாக்கம் இருக்கும். வருமானத்தை தக்க வைக்க முடியாத வகையில் இழப்புகள் இருக்கும். நேரத்திற்கு சாப்பிட முடியாமல் கடுமையாக உழைக்க நேரும். ஜாதகரால் பெரிய நற்பயனையும் அடைய முடியாது.
மீன லக்னத்திற்கு ராசி அதிபதி மற்றும் பத்தாம் அதிபதியான குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் இடத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். வாழ்வின் இறுதிகாலம் வரை சுகமாகவும் அமைதியாகவும் வாழ்க்கை இருக்கும். சுயதொழில் ஆர்வம் அதிகமாக இருக்கும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் நல்ல பொருள் வரவை பெற்றுத்தரும். சிறிய உழைப்பில் பெரிய வருமானம் கிடைக்கும். அரசியல் அரசாங்க பதவி அரசு உத்தியோகத்தை ஏற்படுத்தி தரும் நல்ல கிரக அமைப்பாகும். பெற்ற பிள்ளைகளால் மனநிறைவு இருக்கும். கர்மம் செய்ய புத்திரன் உண்டு. சிலர் முக்தியை போதிக்கும் ஆன்மீக இயக்கம், சங்கங்களில் சேர்ந்து பயனடைவார்கள். குலதெய்வ அனுக்கிரகம் முன்னோர்களின் நல்லாசி நிரம்பியவர்கள். குருபகவான் இயற்கை சுப கிரகம் என்பதால் ஒரு ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றால் ஏதாவது ஒரு நற்பலன் கண்டிப்பாக ஜாதகருக்கு உண்டாகும். 2026ல் குரு பகவான் உச்சம் அடையும் காலங்களில் பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலியாக திகழ்வார்கள்.
- தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
- தை அமாவாசை நீத்தார் வழிபாட்டின் பலன்கள் மிக மிக அதிகம்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் தினம் மிகவும் முக்கியமானது. அதிலும் ஆடி, புரட்டாசி, தை மாதம் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானது. ஆடி அமாவாசை அன்று பித்ருக்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோ கத்திற்கு கிளம்புவதாக ஐதீகம். மகாளய அமாவாசை என்று அழைக்கப்படும் புரட்டாசி அமாவாசை பித்ருக்கள் பூலோகம் வந்தடைந்து, மகாளய பட்ச காலத்தில் தங்கி இருந்து அருள் புரிவார்கள். தை அமாவாசை அன்று பித்ருக்கள் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவதாக ஐதீகம்.
புண்ணிய காலமாகிய உத்திராயணத்தின் முதல் மாதமாக இருப்பது தையின் சிறப்புகளில் ஒன்று. தை மாதம் சிறப்புடையது என்றால் தையில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்புடையது. தையில் வரும் பூச நட்சத்திரம் சிறப்புடையது.
மேலும் தையில் வரும் சப்தமி (ரத சப்தமி) அஷ்டமி (பீஷ்மாஷ்டமி) திதியும் சிறப்புடையது. அந்த வகையில் தையில் வரும் அமாவாசை மிக மிகச் சிறப்புடையது. தட்சணாயன காலத்தில் முதல் மாதமான ஆடி மாத அமாவாசை எத்தனை சிறப்புடையதோ, அதே போன்று உத்தராயன காலத்தின் முதல் மாதமான தை மாத அமாவாசையும் சிறப்புடையது.
பொதுவாக திதிகள் 15 இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது. மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் தோஷம் அடையும். ஆனால் அமாவாசை அன்று எந்த கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களைத் தொடங்கினால் அது வெற்றி பெறும்.

அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்துச் செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். இது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம். தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படைத்து விட்டு, சாப்பிடுவது, பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் அடங்கும். ஒருவர் இறந்தால் அவரை நினைத்து ஒவ்வொரு ஆண்டும், அவர் இறந்த அதே திதியில் நாம் வீட்டில் அல்லது கோவிலுக்கு சென்று செய்யும் வழிபாடு சிரார்த்தம் எனப்படும். இதில் பிண்டம் வைத்து வழிபடுவது சிறந்தது. குறிப்பாக அவர் இறந்த நாளின்போது வரும் திதியில் செய்வது சிரார்த்தம் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.
அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கான நாள் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. மறைந்த நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் ஒன்று சேர்ந்து தங்களின் சந்ததிகளை பார்க்க பூமிக்கு வருவதாக ஐதீகம். அப்படி பூமிக்கும் வரும் முன்னோர்கள் தங்களின் குடும்பத்தினர் அளிக்கும் தர்ப்பணம், தானம் ஆகியவற்றை ஏற்று தங்களின் பசி மற்றும் தாகத்தை தீர்த்துக் கொள்வார்கள். இதனால் அமைதி அடையும் முன்னோர்களின் ஆத்மாக்கள், தங்களின் சந்ததிகளை மனதார வாழ்த்தும் என நம்பப்படுகிறது. இதனாலேயே அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபட்டு, பித்ரு கடன் நிறைவேற்ற வேண்டும் என சொல்லப்படுகிறது. அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் போன்ற பித்ருகர்ம காரியங்கள் செய்யாதவர்களுக்கு பித்ருதோஷம், பித்ருசாபம் ஏற்படும். இவற்றில் இருந்து விடுபடுவதற்கு ஏற்ற நாளாக குறிப்பிட்ட சில அமாவாசைகள் சொல்லப்படுகிறது.
அப்படி மிக முக்கியமான அமாவாசைகளில் ஒன்று தான் தை அமாவாசை. உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதன்பின் வீட்டிற்கு வந்து, முன்னோர்களின் படத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை சூட்ட வேண்டும். படத்திற்கு முன்பாக முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களுக்குப் பிடித்த உணவுகளை படைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும்.
தை அமாவாசைக்கு முன்தினம் கோதுமை தவிடு, அகத்திக்கீரை ஆகியவற்றை ஊறவைத்து, அதை அமாவாசை அன்று பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, வீட்டில் வழிபாடு செய்து முடிக்கும் வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்தி வைப்பது நல்லது.
தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. தர்ப்பணம் செய்யும்போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது.
அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. கிழக்கு திசை பார்த்தபடி அமர்ந்துதான் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய தினம் வீட்டின் வாசலில் கோலமிடுதல் கூடாது.
தை அமாவாசை நீத்தார் வழிபாட்டின் பலன்கள் மிக மிக அதிகம். நீத்தார் வழிபாட்டை அமாவாசை அன்று முறையாக நிறைவேற்றினால் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கும், சுப காரியத் தடைகள் விலகும், சந்தான விருத்தி ஏற்படும், தொழில் அபிவிருத்தி அடையும், சொத்து சுகங்கள் அதிகரிக்கும், வாகன யோகம் ஏற்படும்.
நோய் நொடிகள் அகலும். அமானுஷ்யமான சக்திகள் அண்டாது. கெட்ட சக்திகள் விலகும். ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கி நன்மை ஏற்படும். இதுவரை செய்யாமல் இருந்ததால் ஏற்பட்ட கிரக சாபங்கள் நீங்கி, அவை வரங்களாக மாறி வற்றாத நற்பலன்களை அள்ளி அள்ளி வழங்கும்.
பூமியில் பிறந்தவர்கள் பாவ புண்ணியத்தில் இருந்து தப்பமுடியாது. பாவங்களில் மகா பாவமாக கூறப்படுவது பித்ரு கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். உயிருடன் இருக்கும் பெரியவர்களை மதிக்காமல், பலர் உள்ளனர். அந்த உயிர்கள் படும் துன்பம், பாவங்கள் ரூபத்தில் கவனிக்க தவறியவர்களையே வந்து சேரும்.
நாம் எங்கு சென்றாலும் உடன் வருவது பாவ புண்ணியங்கள் மட்டுமே. பித்ரு பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய ஏற்படுத்தப்பட்டது நம் முன்னோர்களுக்கு மறக்காமல் காரியம் நிறைவேற்ற வேண்டும்.
- பொதுவாக ஒரு கிரகத்தின் பலம் என்பது ஆட்சி, உச்சம், நட்பு மூலத்திரிகோணம் என்ற ரீதியில் எடுத்துக் கொள்ளலாம்.
- ஒரு கிரகம் தன் சொந்த வீட்டிலோ நட்பு வீட்டிலோ உச்சமடைவது சாதாரண விஷயமாகும்.
ஒருவரின் குண நலன்களை பிரதிபலிப்பதில் ஒரு ஜாதகத்தில் செவ்வாயின் பங்கு அளப்பரியது செவ்வாய் வலுப்பெற்றவர்கள் பிடிவாதம், அகங்காரம், துணிச்சல், கர்வம், அவசர புத்தி, கலகம், அதீத காம உணர்வு நிறைந்தவராக இருப்பார்கள். அதே நேரத்தில் செவ்வாய் வலுப்பெற்று இருந்தால் மட்டுமே ஒருவருக்கு தைரியம், வீரியம், சொத்துக்கள் சேருதல், உடன் பிறந்த சகோதரர்களின் அன்பு, விவசாயம் கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் ஆதாயம் போன்ற சுப பலன்கள் நடக்கும்.செவ்வாய் பலம் குறைந்தால் பிரஷர், மாதவிடாய் கோளாறு, சொத்துக்கள் இல்லாத நிலை, ஏமாற்றம் போன்ற அசுபங்கள் அதிகமாக இருக்கும். எந்த கிரகமாக இருந்தாலும் அதன் மூலம் நன்மையும் தீமையும் உண்டு.
இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் ஒரு ஆதிபத்திய ரீதியாக நன்மை செய்தால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக ஜாதகருக்கு ஏதாவது ஒரு பின்விளைவுகளை தரலாம். பலம் பெற்ற ஒரு கிரகத்தின் காரகத்துவத்தை ஜாதகர் எளிமையாக அடைய முடியும். பலம் இல்லாத கிரகத்தின் ஆதிபத்திய ரீதியான பலனை ஜாதகர் போராடி அடைவார்கள். அல்லது வாழ்நாள் லட்சியமாக கனவாகவே இருக்கும்.
பொதுவாக ஒரு கிரகத்தின் பலம் என்பது ஆட்சி, உச்சம், நட்பு மூலத்திரிகோணம் என்ற ரீதியில் எடுத்துக் கொள்ளலாம்.அத்துடன் ஒரு ஜாதகத்தில் செவ்வாயின் நட்சத்திரத்தில் ஏதாவது கிரகம் இருந்தாலும் அந்த தசா புத்தியில் ஜாதகருக்கு செவ்வாயால் ஏற்படக்கூடிய அனைத்து நன்மை தீமைகளும் நடக்கும். செவ்வாய் மகர ராசியில் 28 வது பாகையில் அவிட்டம் நட்சத்திரத்தில் உச்சமடைகிறார்.
ஒரு கிரகம் தன் சொந்த வீட்டிலோ நட்பு வீட்டிலோ உச்சமடைவது சாதாரண விஷயமாகும். தனது பகை வீட்டில் தனது சொந்த நட்சத்திரத்தில் ஒரு கிரகம் உச்சம் அடைவது செவ்வாயில் தைரியத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் அமைப்பாகும். மேலும் தற்போது கோட்ச்சாரத்தில் 16.1.2026 முதல் 23.2.2026 வரை மகரத்தில் உச்சம் பெறப் போகிறார். கடந்த வாரங்களில் சூரியன், சந்திரன் உச்சம் பெற்றால் என்ன பலன் தரும் என்ற கட்டுரையை பார்த்தோம் தற்போது செவ்வாய் உச்சம் பெற்றால் யாருக்கு நன்மை தரும் என்பதை இந்த வாரம் நாம் பார்க்கலாம்.
மேஷ லக்னத்திற்கு ராசி அதிபதி மட்டும் அஷ்டமாதிபதியான செவ்வாய் 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறும்போது ஜாதகருக்கு செவ்வாய் திசை புத்தி காலகட்டங்களில் விபரீத ராஜயோகமான பலன்கள் நடக்கும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் தேடி வரும். தொழில் ரீதியான சிந்தனை ஜாதகருக்கு மிகுதியாக இருக்கும், அரசியல் அரசாங்கம் அரசு சார்ந்த துறைகளில் ஆதாயம் மிகுதியாக இருக்கும் அவரே அஷ்டமாதிபதி என்பதால் ஒரு நல்லது நடந்தாலும் ஒரு அவச்சொல், அவமானம் ஒரு வம்பு, வழக்கு, அறுவை சிகிச்சை, வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நோய், அல்லது கடன் இருந்தே தீரும்.
ரிஷப லக்னத்திற்கு 7, 12-ம் அதிபதியான செவ்வாய் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். ஜாதகருக்கு தந்தையின் வழியில் அதிக சொத்து கிடைக்கும். திருமணத்திற்கு பிறகு சொத்து சேர்க்கை உண்டாகும்.பூர்வ ஜென்மத்து வாழ்க்கை துணை இந்த ஜென்மத்திற்கும் வாழ்க்கை துணையாக வருவார். தம்பதிகள் ஓர் உயிர் ஈர் உடலாக வாழ்வார்கள். கூட்டுத் தொழில் ஆர்வம் அதிகமாக இருக்கும். பரம்பரை கூட்டுத் தொழிலில் ஜாதகர் பங்குதாரராக இருப்பார். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண உறவு ஏற்படும். செவ்வாய் தசை, புத்தி நடப்பில் இருந்தால் வெளியூர் வெளிநாட்டில் வாழ்வார்கள் அல்லது அதிக வைத்தியம் செய்வார்கள்.
மிதுன லக்னத்திற்கு செவ்வாய் 6, 11-ம் அதிபதி என்பதால் உச்சம் பெறுவது சிறப்பல்ல. ஆறாமிடம் எனும் கடன், நோய் எதிரி ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெறும் போது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகமாகும். அதிர்ஷ்ட உயில் சொத்து, பணம், நகைகள், இன்சூரன்ஸ் காப்பீட்டு பணம் போன்றவைகள் கிடைக்கும். எதிரியை வெல்லக்கூடிய வலிமை உண்டாகும். அவரே லாப ஸ்தான அதிபதியாக இருப்பதால் செவ்வாய் சுப வலுப் பெற்றால் மிகப் பெரிய லாபம் கிடைத்து எவ்வளவு அதிகமான கடன் இருந்தாலும் விரைவில் தீர்ந்து விடும். செவ்வாயால் கடன், நோய் உருவாகினாலும் கடன், நோய் நிவர்த்தியாகும்.
கடக லக்னத்திற்கு செவ்வாய் 5, 10-ம் அதிபதி. செவ்வாய் இந்த லக்னத்திற்கு ஏக யோகாதிபதி என்பதால் ஜாதகருக்கு மிடுக்கான தோற்றம், ஆளுமைத் திறன் கூடும். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். நண்பர்கள், தொழில் கூட்டாளி வாடிக்கையாளர்கள், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டு.காதல் திருமணம் நடக்கும். உரிய வயதில் திருமணம் குழந்தை பேரு போன்ற நல்ல சம்பவங்கள் நடக்கும். கவுரவ பதவி உண்டு. ஜாதகருக்கு குலதெய்வமே குழந்தையாக பிறக்கும். குலதெய்வ இஷ்ட தெய்வம் வழிபாட்டில் ஜாதகருக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை வாழ்க்கைத் துணை மூலமாக அனுபவிப்பார்கள். சிம்ம லக்னத்திற்கு 4,9-ம் அதிபதியான செவ்வாய் 6-ல் உச்சம் பெறுவதால் நிலையான நிரந்தரமான உத்தியோகம் உண்டு. தாய், தந்தை வழி உறவுகளின் அன்பு, அனுசரனை இருக்கும். தாய் வழி, தந்தை வழி பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். தீர்த்த யாத்திரை செல்லுதல், தானதர்மம் செய்தல் போன்ற பாக்கிய பலன்கள் நடக்கும். அரச உத்தியோகம், அரச பதவி போன்ற பாக்கிய பலன்கள் நடக்கும். விவசாயம், கால்நடை வளர்த்தல், பண்ணை தொழில், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் ஆர்வம் மிகுதியாக இருக்கும்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
கன்னி லக்னத்திற்கு 3, 8-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 5-ல் உச்சம் பெறுவதால் பூர்வீகம், குலதெய்வம், குழந்தை, அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு மன உளைச்சல் இருக்கும். பாகப்பிரிவினையில் உடன் பிறந்தவர்களால் மனவருத்தம் ஏற்படும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் ஜாதகருக்கு செவ்வாய் தசை புத்தி காலங்களில் வரலாம். சிலருக்கு விபரீத ராஜ யோகமாக ஒரு விபரீதம் ஏற்பட்டு அதன் பிறகு அதிர்ஷ்ட சொத்து, உயில் பணம், காப்பீட்டு பணம் போன்ற வைகள் கிடைக்கலாம். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு, உடன் பிறந்தவர்களுடன் சொத்துத் தகராறு, ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை, விபத்து, கண்டம், சர்ஜரி வம்பு, வழக்கு ஏற்படலாம்.
துலாம் லக்னத்திற்கு 2-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 4-ல் உச்சம் பெறுவது மிக அதிர்ஷ்டமான யோகமான அமைப்பாகும். இளம் வயதில் காதல் திருமணம் நடக்கும். அல்லது உறவுகளில் வரன் வரும். சொத்துக்களால், கூட்டுத் தொழிலால், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும். வாழ்க்கைத் துணை மூலமாக உபரி வருமானம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் மூலமாக ஜாதகரின் எண்ணங்கள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அளவுக்கு அதிகமாக நேசிப்பார்கள்.சில ஆண்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக சென்று விடுவார்கள்.
விருச்சிக லக்னத்திற்கு 1,6-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 3-ல் உச்சம் பெறுவதால் ஜாதகரின் முயற்சி எளிதில் வெற்றி பெறும். உடன்பிறந்தவர்களின் அன்பும் அனுசரணையும் இருக்கும். ஒரு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதற்கு ஜாதரே காரணமாக இருப்பார். இடப்பெயர்ச்சி நடக்கும். மனதில் வெறுமை தேவையில்லாத கற்பனை பய உணர்வு நிரம்பும். ஞாபக சக்தி குறையும். கடன் தொல்லை அதிகரிக்கும். தேவையற்ற வழக்குகள் மற்றும் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட சொத்து, நகை, பணம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும்.
தனுசு லக்னத்திற்கு 5,12- அதிபதியான செவ்வாய் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் அடைவார். வாக்கு வன்மை பெறும். குடும்ப உறுப்பினர்கள் இவர்களின் கருத்திற்கு மதிப்பு கொடுப்பார்கள். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள் தொழிலில் வல்லவர்களாக வலம் வருவார்கள். பேங்கிங், ஆடிட்டிங், டீச்சிங், ஐடி, போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இது வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாகும். பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் இருந்தாலும் சில விரயங்களும் இருக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாட்டில் சென்று குடியேறக்கூடிய அமைப்பு இருக்கும்.கண், பல் போன்றவற்றிற்கு சிகிச்சை செய்வீர்கள்.
மகர லக்னத்திற்கு 3,12-ம் அதிபதியான செவ்வாய் ராசியில் தனது சொந்த நட்சத்திரத்தில் உச்சம் அடைவதால் முன் கோபத்தால் சொந்த செலவில் தனக்கு தானே சூன்யம் வைத்துக் கொள்வார்கள். அடிக்கடி உத்தியோக மாற்றம் செய்வது, கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.சிறு சிறு நோய் தாக்கம் இருக்கும். கடனால் கவலை, எதிரிகளால், உயர் அதிகாரிகளால் மன சஞ்சலம் இருக்கும். ஜாமீன் சார்ந்த பிரச்சினை இருக்கும். சமாளிக்க முடியாத வீண் விரயங்கள் இழப்புகள் நஷ்டங்கள் வரலாம். வெளியூர் வெளிநாட்டு வாழ்க்கை இவர்களுக்கு வரமாக இருக்கும்.
கும்ப லக்னத்திற்கு 3,10-ம் அதிபதியான செவ்வாய் விரய ஸ்தானத்தில் ராசிக்கு பன்னிரண்டாம் இடமான விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது தொழில், உத்தியோக ரீதியான உயர்வை நிச்சயம் தரும். தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி வாழ்வியல் மாற்றம் தரும் நல்ல இடப் பெயர்ச்சி நடக்கும். ஞாபகசக்தி கூடும். உயில் எழுதுதல், உயிலில் மாற்றம் செய்தல், கடனை புதுப்பித்தல் போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதாயம், ஆதரவு புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் வந்து மனதை மகிழ்விக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாக ஆதாயம் கிடைக்கும்
மீன லக்னத்திற்கு 2,9-ம் அதிபதியான செவ்வாய் 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது உயர்வான யோகமாகும். குழந்தை பேறு, குல தெய்வ அனுகிரகம், பங்குச் சந்தை ஆதாயம், பிள்ளைகளுக்கு நல்ல உத்தியோகம், சுப விசேஷங்கள் நடக்கும். பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாகும். மூத்த சகோதரம், சித்தப்பா, இளைய மனைவி போன்ற உறவுகளால் ஆதாயம் உண்டு. வங்கி, ஆசிரியப்பணி, ஜோதிடம், நிதி நிர்வாகம், அரசியல், ஆன்மீகம் போன்ற பணிகளில் தனித் திறமையுடன் மிளிர்வார்கள்.
இதில் ஆர்வம் ஆதாயமும். அதிகமாகும். முன்னோர்கள் வழிச் சொத்து முறையாக கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு, தீர்த்த யாத்திரை செல்லுதல் முன்னோர்களுக்கு பித்ரு சாந்தி செய்தல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றால் மட்டுமே உரிய வயதில் திருமணம் நடக்கும். பெண்களுக்கு ஆண்மை, தைரியம், நிறைந்த குடும்பத்தை கட்டுக் கோப்பாக வழிநடத்தும் கணவர் கிடைப்பார். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவராக இருப்பார்கள். செவ்வாய் பலம் குறைந்தால் உடன் பிறந்தவர்கள் கலகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கும். பெண்களுக்கு கணவரின் அன்பும், அனுசரனையும் இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
செல்: 98652 20406
- சந்திரன் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு திடகாத்திரமான மனநிலை உண்டு.
- ரிஷப லக்கனத்திற்கு 3-ம் அதிபதியான சந்திரன் ராசியில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும்.
சந்திரன் ரிஷப ராசியின் மூன்றாவது பாகையான கிருத்திகை நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார். கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான். ஒரு ஜாதகத்தில் சூரியன் ஆன்மாவையும் ஆன்ம பலத்தையும் குறிப்பவர். ஒரு ஜாதகத்தில் சந்திரன் உடலையும் மனதையும் குறிப்பவர்.
உடலையும் மனதையும் பற்றி கூறும் சந்திரன் ஆன்மாவை பற்றி கூறும் சூரியனின் நட்சத்திரத்தில் உச்சம் அடைந்தால் மனமும் ஆன்மாவும் புனிதம் அடையும். உடலாலும் உள்ளத்தாலும் ஒருவர் உயரும் போது லவுகீக உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அடைய முடியும். சந்திரன் உச்சம் பெற்றவர்கள் ஆன்ம பலம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இந்த தத்துவத்தின் அடிப்படையில் ஒரு ஜாதகத்தில் மனோகாரகன் எனப்படும் சந்திரன் சுப வலிமை பெற வேண்டும். சந்திரன் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு திடகாத்திரமான மனநிலை உண்டு. மதிநுட்பத்துடன் செயல்படுவார்கள். நல்ல தோற்ற பொலிவு உள்ளவர்கள். எந்த சூழ்நிலையிலும் அஞ்ச மாட்டார்கள். தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் தாய்மை உணர்வுடன் வழிநடத்துவார்கள்.
எளிதில் நோய்கள் அண்டாது. சந்திரன் காலபுருஷ நான்காம் அதிபதி என்பதால் சந்திரன் பலம் பெற்றால் ஸ்திர சொத்துக்கள் இருக்கும். இனி 12 லக்னங்களுக்கும் உச்ச சந்திரன் என்ன பலனை வழங்குவார் என்று பார்க்கலாம்.
மேஷ லக்னத்திற்கு 4-ம் அதிபதியான சந்திரன் 2ம்மிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். தாயின் அன்பும் ஆசீர்வாதமும் நிரம்பப் பெற்றவர்கள்.
தாயின் மூலமாக திரண்ட சொத்துக்கள் நகைகள் பணங்கள் கிடைக்கக்கூடிய அமைப்பு உண்டு. பலர் வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் உள்ளவராக இருப்பார்கள். கற்ற கல்வியின் மூலம் பயன் உண்டு. படித்ததை உடனே புரிந்து கொள்ளும் தன்மை இருக்கும். தான் கற்றதை பிறருக்கு உபதேசிக்கும் வல்லமை நிரம்பியவர்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பது பண்ணை தொழில் போன்றவற்றில் ஜாதகருக்கு ஆர்வம் மிகுதியாக உண்டாகும். பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழிலில் வல்லவராக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களின் அனுசரணை இருக்கும். இடத்திற்கு தகுந்தார் போல் தனது பேச்சை மாற்றுவார்கள்.
ரிஷப லக்கனத்திற்கு 3-ம் அதிபதியான சந்திரன் ராசியில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். ஜாதகர் பிறந்தவுடன் குடும்பத்திற்கு மாற்றம் தரக்கூடிய நல்ல இடப்பெயர்ச்சி நடக்கும். புகழ், கீர்த்தி, வெற்றி, சுய வருமானம், நேர்மை, திறமை, விருத்தி, மங்காத புகழ் உடையவர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
ஜாதகருக்கு உடன்பிறந்த இளைய சகோதர சகோதரிகள் இருப்பார்கள். உடன்பிறந்தவர்களின் நலனில் அதிக அக்கறை உள்ளவர்களாக இருப்பார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஜாதகருக்கு வருமானம் உண்டாகும். அடிக்கடி தொழில் வேலை உத்தியோகத்தை குடியிருப்பை மாற்றிக் கொண்டே இருப்பார். விடா முயற்சி, தன்நம்பிக்கை, துணிச்சல் மிகுந்தவர்கள். ஆன்மீக ஈடுபாடு உண்டு. அதிகார வர்க்கத்தின் தொடர்புடையவர்கள். வேலை ஆட்கள் யோகம் நிறைந்தவர்கள். பயணம் செய்வதில் விருப்பம் மிகுந்தவர்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
மிதுன லக்னத்திற்கு தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதியான சந்திரன் தன் வீட்டிற்குப் பின் வீடான 12ம் இடத்தில் உச்சம் பெற்றால் ஜாதகருக்கு மறைமுக வருமானம் அதிகமாக இருக்கும். ஜாதகர் கற்பனையில் கனவுகளில் வாழ்வார்கள். குடும்ப வாழ்க்கை ரகசியம் மர்மம் நிறைந்ததாக இருக்கும். சிலர் உண்ண உறங்க நேரமில்லாமல் கடுமையாக உழைத்துக் கொண்டே இருப்பார்கள். சிலர் எதை பற்றியும் கவலைப்படாமல் நேரத்திற்கு சாப்பிட்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டே இருப்பார்கள். கஞ்சத்தனம் அதிகமாக இருக்கும்.
ஆதாயம் இல்லாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். உலகில் அனுபவிக்க வேண்டிய இன்பங்களை அனுபவிக்காமல் பணத்தையும் சொத்து சுகத்தையும் கட்டிக் காத்துக் கொண்டு இருப்பார்கள். தானும் அனுபவிக்க மாட்டார்கள் தன்னை சார்ந்தவர்களையும் அனுபவிக்க விடமாட்டார்கள்.
கடக லக்னத்திற்கு ராசி அதிபதியான சந்திரன் 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் தன ஸ்தான அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் நின்றால் மிகப்பெரிய பொருளாதார அமைப்பு நிறைந்தவராக இருப்பார். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் உள்ளவர்கள். குடும்ப தேவைகளை உடனுக்குடன் நிறைவு செய்வார்கள். சிலருக்கு இரண்டாவது குடும்பம் அமைந்த பிறகு பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். கடக லக்னத்திற்கு 11ம்மிடம் பாதகஸ்தானம் என்பதால் எவ்வளவு பொருளாதாரம் இருந்தாலும் அது ஜாதகரை சார்ந்தவர்களுக்கு தான் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். நல்ல நட்புகள் உண்டு பேச்சில் பெருமிதம் இருக்கும். வாக்கு சம்பந்தமான தொழிலை அதிகம் விரும்புவார்கள்.
வாக்கு வன்மை உண்டு. கொடுத்த வாக்கை எந்த சூழ்நிலையிலும் தவற விட மாட்டார்கள். தாய் பாசம் பற்றி அடிக்கடி பேசுவார்கள்.
சிம்ம லக்னத்திற்கு விரயாதிபதியான சந்திரன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவது சிறப்பு அல்ல. சிம்ம லக்னத்திற்கு சந்திரன் உச்சம் பெறுவது சுமாரான பலன்களை தரும். எந்த தொழில் செய்தாலும் நஷ்டம். தொழிலுக்காக பிரயாணம் செய்ய நேரும் அல்லது அலைச்சல் மிகுந்த தொழில் செய்வார். உத்தியோகமே சிறந்தது என்றாலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இருக்காது. தொழில் தொடர்பான மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். அதிக முதலீடு உள்ள தொழில்களை தவிர்ப்பதால் வீண் விரயங்களை கட்டுப்படுத்த முடியும். இடது கண் பாதங்களில் பாதிப்பு இருக்கும். எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் இரவில் நிம்மதியாக உறங்குவார்கள். சிலர் கடைசி காலத்தில் படுத்த படுக்கையாக இருப்பார்கள். அயல்நாட்டு வாழ்க்கையை விரும்புவார்கள். சிலர் அந்திம காலத்தில் வெளியூர் வெளிநாடு வெளி மாநிலத்தில் பிள்ளைகளுடன் கழிப்பார்கள்.
கன்னி லக்னத்திற்கு லாப அதிபதியான சந்திரன் 9-ம் மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச்சிறந்த அமைப்பாகும். ஜாதகர் அந்தஸ்து, கவுரவம், உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் ஜாதகருக்கு வருமானம் வந்து கொண்டே இருக்கும். செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புடனே வசிப்பார்கள். பல தொழில் வல்லுநராக இருப்பார். பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை அதிகமாக இருக்கும். ஆயிரம் பேருக்கு மத்தியில் ஜாதகர் தனித் திறனுடன் மிளிர்வார்கள். எந்த சூழ்நிலையிலும் பிறரிடம் கையேந்தி வாழ மாட்டார்கள். இரண்டு குடும்ப வாழ்க்கை உண்டு. கூட்டுக் குடும்பத்தில் வசிப்பார். மூதாதையர்களின் சொத்து ஜாதகருக்கு அதிகமாக இருக்கும். ஜாதகரின் எண்ணங்களும் விருப்பங்களும் உடனுக்குடன் நிறைவேறும்.
துலாம் லக்னத்திற்கு தொழில் ஸ்தான அதிபதியான சந்திரன் 8ம் இடத்தில் உச்சம் பெறுவது நல்லது. முதலீடு உயர்ந்து கொண்டே இருக்கும். முதலீட்டை விட அதிக வருமானம் வந்து கொண்டே இருக்கும். குல கவுரவம் நிரம்பிய வாழ்க்கை துணை அமையும். இளம் வயதில் திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணை மூலமாக வருமானம் உண்டு. பேச்சில் கனிவு கவுரவம் இருக்கும். அறநெறி தவறாமல் வாழ்வார்கள். உயர் கல்வி வாய்ப்பு உண்டு. அறக்கட்டளை தர்ம ஸ்தாபனங்கள் நடத்தும் பாக்கியம் பெற்றவர்கள். தந்தைக்கு இருதார யோகம் உண்டு. ஜாதகர் தாய் வழி பாட்டி வீட்டில் வளர்ந்தவராக இருப்பார். தந்தையை விட தாத்தாவின் மேல் பிரியம் அதிகமாக இருக்கும். தாய்வழி தந்தை வழி சொத்து உண்டு. வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும் ஜாதகர் பிறந்த பிறகு தாய், தந்தைக்கு பொருளாதார மேன்மை உண்டாகும்.
விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதி பதியாகி ராசிக்கு ஏழாம் இடத்தில் பெறுவது சற்று சுமாரான பலனை தரும். பரம்பரை கூட்டுத் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் சம்பந்தம் இல்லாத நபர்களால் நிம்மதி குறைகிறது. ஏழில் சந்திரன் உச்சம் பெற்ற விருச்சிக லக்னத்தினர் திருமணம் ஏன் நடந்தது என்று வருந்தும் வகையில் திருமண வாழ்க்கை இருக்கிறது. பாதகாதிபதி ஏழில் உச்சம் பெறுவதால் கூட்டுத் தொழில் வஞ்சிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் குறைவுபடும். ஜாதகரின் சந்திர தசை காலங்களில் விருச்சிக லக்னத்தவரின் தாய், தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் என அனைத்தும் பாதிப்படைகிறது. பொதுவாக விருச்சிக லக்னம் கால புருஷ எட்டாமிடம் என்பதால் எளிதில் எந்தப் பிரச்சினையும் எளிதில் வெளியில் தெரிவிக்காத பிரச்சினை நன்றாக தீவீரமடைந்த பின்பே வெளியில் தெரியும். கடுமையான பாதகம் உருவாகும்.
தனுசு லக்னத்திற்கு அஷ்டமாதிபதியான சந்திரன் மற்றொரு மறைவு ஸ்தானமான ஆறாம் இடத்தில் உச்சம் பெறுவது சிறப்பு அல்ல. கெட்டவன் கெடுவது நல்லது. கெட்டவன் உச்சம் பெறுவது ஜாதகருக்கு உச்சகட்ட கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகளை அதிகம் அதிகப்படுத்தும். உத்தி யோகம் சிறப்பாக இருக்காது அல்லது அடிக்கடி உத்தியோகத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். சிலர் நடக்காததை நடந்ததாக நினைத்து கற்பனை பயத்தை வளர்த்துக் கொள்வார்கள். சந்திரனுக்கு ராகு கேது சம்பந்தம் இருந்தால் புத்தி தடுமாற்றம் மிகையாக இருக்கும். சிலர் அடிப்படை தேவைக்கு கூட போராட வேண்டிய நிலை இருக்கும். மிகச் சுருக்கமாக சந்திர தசை காலங்களில் ஜாதகரின் உடலில் உயிரை மட்டும் விட்டு வைத்து மனிதனை நிர்கதியாக்குகிறது. பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவில் சென்று குடியேறுவார்கள்.
மகர லக்னத்திற்கு சந்திரன் களத்திர ஸ்தான அதிபதியாகும். அவர் 5ம் மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால்
ஜாதகருக்கு மிகச்சிறப்பான வாழ்வியல் மாற்றத்தை ஏற்படும். பூர்வீகம், குலதெய்வம், குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு நன்மை தரும்.ஜாதகர் திறமையான அணுகு முறையுடன் கூடிய சாமார்த்தியசாலியாக திகழ்வார்கள். பேச்சில் நிதானமும், பொறுமையும் இருக்கும். ஜாதகர் உயர்ந்த குலத்தில் பிறந்தவராக இருப்பார். தன்னைத் தானே உணரும் வலிமை படைத்தவராக இருப்பார்கள். காதல் திருமணம் நடக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். குழந்தை பிறந்த பிறகு வாழ்வாதாரம் பல மடங்கு உயரும். கூட்டு தொழில் பல மடங்கு நன்மை தரும். குடும்ப உறவுகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பார்கள். நிச்சயமாக சொத்து வாகன வசதிகள் இருக்கும். இயல் இசை நாடகப் பிரியர்கள்.
கும்ப லக்னத்திற்கு 6ம் அதிபதியான சந்திரன் 4-ம்மிடத்தில் உச்சம் பெறுவது சிறப்பான பலன் அல்ல. கடன், நோய், வம்பு, வழக்கு எதிரியை உருவாக்கி தரக்கூடிய கிரகமான சந்திரன் நான்காம் இடத்தில் உச்சம் பெறுவதால் ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் இருக்கும். கல்வியில் தடை உண்டாகும். அல்லது அதிகமாக கல்லி கடன் பெற்று உயர் கல்வி படிப்பார்கள். நான்காம் அதிபதிக்கு ஆறாம் அதிபதி சம்பந்தம் இருந்தால் ஜாதகருக்கு முதல் சொத்து விரயமாகும் அல்லது சொத்தை விற்று கடன் தீர்ப்பார்கள். சொத்தின் மதிப்பை விட கடனின் மதிப்பு அதிகமாக இருக்கும். 6ம் இடத்திற்கு லாப ஸ்தானம் நான்காம் இடம் என்பதால் இது போன்ற அமைப்பு இருப்பவர்கள் சொத்து வாங்கும் முன்பு தாயிடம் அல்லது தாய் மாமாவிடம் யாசகம் பெற்று சொத்து வாங்க வேண்டும்.
மீன லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான சந்திரன் 3-ம் இடமான வெற்றி ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிக உயர்வான அமைப்பாகும். ஆன்மீக நாட்டம் தியாக சிந்தனை மிகுந்தவராக இருப்பார். பிறருக்கு உபதேசம் செய்து கொண்டே இருப்பார்கள். புனித யாத்திரை செய்யும் பாக்கியம் உள்ளவர்கள். முதலீடு இல்லாத கமிஷன் தொழில்கள் பல மடங்கு வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொடுக்கும். வயது கூட கூட ஜாதகருக்கு வருமானம் கூடிக் கொண்டே இருக்கும். குல கவுரவம் நிரம்பியவர்கள். முதல் குழந்தை பிறந்த பிறகு பூர்வீகத்தை விட்டு வெளியேறி முன்னேறுவார்கள் ஆதாயம் இல்லாத விஷயங்களில் ஈடுபட மாட்டார்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி இடம் மாறுவார்கள். சாதாரண மனிதனாக இருந்தால் கூட சாதனை மனிதனாக மாறுவார்கள். பொதுவாக ஒரு ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருப்பதால் ஜாதகரின் சிந்தனை ஓட்டம் நல்ல விதமாக இருக்கும். உச்ச சந்திரனால் இன்னல் களை அனுபவிப்பவர்கள் பவுர்ணமி அன்று பால் சாதம் தானம் வழங்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
செல்: 98652 20406
- கடன் இல்லாமல் வாழ்வதே மிகப்பெரிய பணக்காரராக இருப்பதாகும்.
- மது, புகை வேண்டவே வேண்டாம்.
2026-ம் ஆண்டினை நாம் நெருங்கி வருகின்றோம். ஒரு பேப்பர் எடுத்து 2025-ல் என்ன வெல்லாம் செய்தீர்கள் என 15 நிமிடங்கள் உங்களுக்காக செலவழித்து எழுதிப் பாருங்கள். அநேகருக்கு சில செய்திகளே இருக்கும். இந்த ஊருக்குப் போனேன், கோவிலுக்கு போனேன். டிரஸ் வாங்கினேன் என சிலரும் பல வகையான வேதனைகளை பகிரும் சிலரும் இருப்பர். மற்றும் சிலர் காலை முதல் இரவு வரை வேலை மட்டும் தான் இருந்தது என்பர். இப்படி பல பிரிவுகளில் சொல்லலாம்.
ஆனால் முன்னேற்றத்தினை அடைந்ததாக சிலரே கூறுவர். அநேகர் செல்போன், சீரியல், யூடியூப் என அன்றாட நேரத்தினை உபயோகமற்று செலவழித்து இருப்பர். பரவாயில்லை. எதுவும் குற்றம் இல்லை. ஆனால் கிடைக்கும் காலத்தினை நமக்காகவும், நம் ஆரோக்கியத்திற்காகவும், நம் குடும்பத்திற்காகவும் செலவழிக்கலாமே என்ற முறையில் எழுத முற்படுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.முயன்று பார்ப்போமே.
* உங்களுடைய உற்ற நண்பர் யாராக இருக்க வேண்டும் தெரியுமா? நீங்கள் தான். நீங்கள் மட்டும்தான். உங்களுக்கு உற்ற நண்பராக நீங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
* உங்கள் வாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். மாறாக சண்டை, விரோதம் வளர்ப்பதாக இருக்க வேண்டாம்.

* கணவன்-மனைவி, பிள்ளைகள், நல்ல உறவுகள் போன்ற உறவுகளை பொது இடத்தில் மட்டம் தட்டி பேசக் கூடாது. ஆறாத காயத்தினை இது ஏற்படுத்தும்.
* சிலரை பற்றி குறைவான எண்ணங்களில் மட்டுமே மூழ்க வேண்டாம். இது மனதில் ஆழப்பதிந்து அதனை நீக்குவது கடினமாகி விடும்.
* உங்கள் குழந்தைகளுடன் கட்டாயம் தினமும் பேச வேண்டும். நேரம் செலவழிக்க வேண்டும். சிறு குழந்தைகள் என்றால் விளையாட வேண்டும்.
* நம் குழந்தைகள் நம் வேலையினை விட முக்கியம்தான்.
* தினமும் உங்கள் நிதி நிலைமையினை வரவு செலவினை கணக்கு பார்க்க வேண்டும். இது நம்மை அறியாமல் எத்தனை தண்ட செலவினை தினமும் செய்கின்றோம் என்பதனைக் காட்டும்.
* முடிந்த வரை கடன்களை தீர்த்து விடுங்கள். கடன் இல்லாமல் வாழ்வதே மிகப்பெரிய பணக்காரராக இருப்பதாகும்.
* ஏதாவது சிறு முயற்சி செய்து சிறு தொழில் செய்து வருமானத்தினை கூட்ட முடியுமா? என்று யோசித்து செயல்படுங்கள்.
* வயதான காலத்திற்காக இன்றே சேமிக்க ஆரம்பிக்க வேண்டும்.
* வீட்டில் இருந்தே வேலை செய்ய முடிந்தால் நேரமும், பணமும் மிச்சமாகும்.
* எந்த ஒரு வேலையிலும் திறமையை கூட்டிக் கொள்ளுங்கள்.
* விழிப்புணர்வு ஒவ்வொரு நொடியும் இருக்க வேண்டும்.
* இந்த வாழ்வில் நாம் என்ன பெற வேண்டும் என்பதில் தெளிவு தேவை.
* 3 முதல் 6 வரை மாத வருமானம் இல்லாவிடினும் வீட்டை நடத்தும் அளவு தனி சேமிப்பு இருக்க வேண்டும்.
* அன்றாடம் 10 நிமிடங்களாவது தியானம் செய்வது அவசியம்.
* வாய் விட்டு சிரியுங்கள்.
* எந்த செயலிலும் முறையாகவும், ஒழுக்கமாகவும் இருங்கள்.
* அன்றைய நாளில் எது முக்கியமோ அதனை முதலில் செய்யுங்கள்.
உடல் நலம்- சாப்பிடுவதற்கு 10 நிமிடம் முன்பு உணவைப் பற்றி யோசித்தால் சத்தான உணவு கிடைக்காது. கிடைக்கும் எதனையோ கொண்டு வயிறு நிரப்பினால் ஆரோக்கியம் கெடும். முதல் நாளே மறுநாளைக்கான உணவு பட்டியலை தயார் செய்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உடல் நலம் இதிலேயே 50 சதவீதம் முன்னேற்றம் பெறும்.
* ஒருமுறை வறுத்த, பொரித்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது 24 மணி நேரத்திற்கு வயிறு சங்கடமாகவே உணர்வீர்கள். 24 மணி நேரம் வறுத்த, பொரித்த, மசாலா பொருட்களை தவிருங்கள். நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கின்றீர்கள் என்று உணர்வீர்கள்.
* உடற்பயிற்சி என்பதற்கு மனம் போனபடி லீவு கொடுக்க வேண்டாமே. பால், பால் சார்ந்த உணவுகள் அளவோடு இருந்தால் ஜீரணம் சீராக இருக்கும்.
* ஏதாவது ஒன்றினை விட்டு விடலாமே- அதிக காபி, டீ, மது போன்றவற்றை விட்டு விடலாமே.
* உடற்பயிற்சி செய்யுங்கள். எளிதாக ஒரு மாதத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தினை மேம்படச் செய்யலாம்.
* தினமும் சற்று வியர்க்கும் அளவு உடற்பயிற்சி செய்யுங்கள்.
* மது, புகை வேண்டவே வேண்டாம்.
* செல்போன் சார்ஜ் ஆவது உங்கள் படுக்கையில் இருந்து தள்ளி இருக்கட்டும்.
* ஒரு ரூமிலேயே அடைந்து கிடக்க வேண்டாம்.
* ஒவ்வொரு உணவிலும் நார்சத்து, புரதம் இல்லாமல் உண்ணாதீர்கள்.
* அன்றாடம் இறைவனுக்கு, பெற்றோர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.
* உங்கள் நாளை தினமும் காலையில் வரையறுத்து செயல்படுங்கள்.

கமலி ஸ்ரீபால்
* சுத்தமாக, நேர்த்தியாக உடை அணிபவர் மதிக்கப் படுகின்றார்.
* எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று இல்லாமல் எளிமையாய் இருந்தால் அவர் மதிக்கப்படுவார்.
* வெற்றி இருக்கும் இடத்திலேயே கூட்டம் கூடும்.
* எதிலும் அதிக ஆசை வைக்காது இருப்பது ஒருவரின் மரியாதையினை உயர்த்தும்.
* எங்கோ, யாரோ- மருத்துவ மனையில் இருக்கும் தன் உறவின் உயிருக்காக கடும் பிரார்த்தனை செய்கின்றனர். அப்படியென்றால் அந்த உயிரில் இருக்கும். அதன் அருமையினை நாம் உணர்ந்து வாழ வேண்டும்.
* சொன்ன சொல்லை, கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்.
* படிப்பை விட முக்கியமானது பண்பு.
* யாரை பற்றியும் குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டாம்.
* வெதுவெதுப்பான நீரில் ஒரு முறை நாள் ஒன்றுக்கு குளிக்கலாம்.
* 2 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது நமக்குத் தெரிந்தது தானே.
* 7000 முதல் 10000 அடிகள் அன்றாடம் உங்கள் நடையில் இருக்க வேண்டும்.
* 10 நிமிடமாவது சூரிய ஒளி உடலில் பட வேண்டும். இரவு 9 மணிக்கு தூங்கச் செல்கின்றீர்களா? நீங்கள் இளமையாய் இருப்பீர்கள்.
* 10 மணிக்கு தூங்கச் சென்றால் மூளை செயல்பாடு பாதிக்காது. சீராக இருக்கும்.
* 11 மணிக்கு தூங்கச் செல்பவர்களுக்கு முடி கொத்து கொத்தாய் கொட்டும்.
* 12 மணிக்கு தூங்கச் செல்பவர்களுக்கு எடை கூடுகின்றது.
* 1 மணிக்கு தூங்கச் செல்பவர்கள் அன்றாடம் சிறிது சிறிதாக நஞ்சு அருந்துவதற்கு சமம்.
நாம் எப்படி இருக்கின்றோம் என்பதனை நாமே அறிந்து கொள்ளலாம்.
* மிக அதிக நேரம் தூங்குபவர்களுக்கு மனதினுள் ஏதோ துக்கம், கவலை இருக்கும்.
* சின்ன ஜோக்குக்காக விழுந்து விழுந்து அதிகம் சிரிப்பவர்கள் மனதினுள் தனித்து இருக்கின்றார்கள்.
* டி.வி., சினிமா பார்த்து மற்றும் நிகழும் சிறு செயல்களுக்காக அழுது விடுபவர்கள் உள்ளத்தில் மிகவும் தூய்மையானவராக இருப்பர்.
* முறையற்று மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ சாப்பிடுபவர்கள் ஏதோ மன அழுத்தத்தில் இருக்கின்றார்கள்.
* சிறு நிகழ்வுகளில் சுணங்கி விடுபவர்கள் மனதில் அன்புக்காக ஏங்குகின்றனர்.
* ஒருவரது துன்ப காலத்தில் உடன் நிற்பவர் எப்போதும் அவருக்கு உண்மையாக இருப்பவர் ஆவார்.
இதனை அறிந்தால் நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளலாமே.
சிலவற்றினை நாம் கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.
* உடல் அளவில், மனதளவில், பண அளவில் நீங்கள் பலவீனமாக இருக்கும்போது யாரையும் எதிர்க்கக் கூடாது. நமது பலம் கூடட்டும்.
* நம்மை நாமே காயப்படுத்திக் கொள்ளக் கூடாது. திட்டிக் கொள்ளக் கூடாது.
* கண் மூடித்தனமாக யாரையும் முழுமையாய் நம்பக் கூடாது.
* தவறானவர்களுடன் நட்பினை தொடரவே கூடாது.
* யாராவது அழுகின்றார்கள் அல்லது சிரிக்க சிரிக்க பேசுகின்றார்கள் என்பதால் எல்லை மீறிய கருணை, எல்லை மீறிய நட்பு வேண்டாம்.
* யாரிடமும் இரண்டாம் முறையாக கெஞ்சி உதவி கேட்கக் கூடாது. உங்கள் சுய மரியாதை காக்கப்பட வேண்டும்.
* சோக பாட்டுகளை கேட்பதினை, ரசிப்பதனை தவிருங்கள்.
சில பழக்கங்கள் ஒருவரை அமைதியாய் கொல்கின்றன.
* போதுமான தூக்கமின்மை என்பது தொடர்ந்து தேவையான அளவு தூக்கம் இல்லாதது.
* அளவுக்கு அதிகமாக தொடர்ந்து தூங்கும் பொழுது உடலில் அதிக தாக்குதல்கள் நிகழும்.
* தொடர்ந்து காலை உணவினை தவிர்க்கும் பொழுது,
* தொடர்ந்து இரவில் மிக காலம் தாழ்த்தி உண்ணும் பொழுது.
*அதிகம் பதப்படுத்திய உணவுகள், துரித உணவுகள், நொறுக்கு தீனிகள் என ஓயாது உட்கொள்ளும் பொழுது.
* அதிகம் சர்க்கரை சேர்த்த பானங்களை அருந்தும் பொழுது.
* அதிக காபி, டீ, மது எடுத்துக் கொள்ளும் பொழுது.
* தேவையான அளவு அன்றாடம் நீர் எடுத்துக் கொள்ளாத பொழுது.
* அசையாது 'இடித்த புளி' போல் ஒரே இடத்தில் வெகுநேரம் அமரும் பொழுது.
* முறையற்று கோணல், மாணலாக அமரும் பழக்கம் கொண்டவராக இருக்கும் பொழுது.
* ஓய்வில்லாது வேலை செய்யும் பொழுது.
* உடற்பயிற்சி இல்லாத பொழுது, யோகா பயிற்சி இல்லாத பொழுது.
* 'ஸ்ட்ரெஸ்' அதிகம் உள்ளவர்களுக்கு
* விஷ உறவுகள், எதனையும் வெளியில் சொல்லாமல் மனதினுள் புழுங்குபவர்கள்.
* அஷ்டாவதானி போல் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்பவர்கள்.
* தனக்கு தானே அழிவுப்பூர்வமாக பேசிக் கொள்பவர்கள்.
* எதனையும் மிக மிக அதிகமாக யோசிப்பவர்கள்.
* தனக்கென நேரம் ஒதுக்காத–வர்கள்.
* எல்லாவற்றிற்கும் 'சரி, சரி' என தலையாட்டி வேலை செய்பவர்கள்.
* பழைய சோகங்களில் மூழ்கி கிடப்பவர்கள்.
* பணத்தினை முறையாக கையாளாதவர்கள்.
* 'பரபர'வென வேகமாக சாப்பிடுபவர்கள்.
* டாக்டர் பரிசோதனையினை தவிர்ப்பவர்கள்.
* எரிமலை போல் எப்பொழுதும் கோபமாக இருப்பவர்கள்.
* ஊர் வம்பு மட்டுமே பேசுபவர்கள்.
* உணவினை நன்குமென்று விழுங்காதவர்கள்.
* பிடிக்காத வேலையில் தொடர்ந்து இருப்பவர்கள்.
* எப்பொழுதும் பயத்தோடு வாழ்வது.
* சதா ஏதாவது சாப்பிடுவது.
* முறைப்படி அன்றாட வேலைகளை செய்யாது இருப்பது.
* நன்றி உணர்வு இல்லாது இருப்பது.
* ஏதோ வாழ்க்கை என வாழ்வது.
* மனநலம் இல்லாமல் இருப்பது.
இவை அனைத்துமே மெதுவாய் ஒருவரை கொல்லும் விஷங்கள். ஆக எத்தனையோ விஷயங்களை நம் வாழ்வில் நாம் மாற்ற வேண்டி உள்ளது. சில நீக்கப்பட வேண்டும். சில உருவாக்கப்பட வேண்டும். இந்த புது வருடத்தில் இவைகளை செயல்படுத்த ஆரம்பிக்கலாமா.
- பொய் என தெரிந்தும் சிலவற்றை நம்புவது கற்பனை உலகம் தரும் இன்பத்திற்காக
- டச்சு கலாச்சாரத்தில் 'சிண்டெர்கிலாஸ்' (Sinterklaas) என்று அழைக்கப்பட்ட இவர், அமெரிக்க கலாச்சாரத்தில் 'சாண்டா கிளாஸ்' ஆக மாறினார்.
உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்திருப்பர். பண்டிகை முடிந்தாலும், இனி வர இருப்பதாக இருந்தாலும் கிறிஸ்துமஸ் என்றாலே அதிகம் பேசப்படுபவர் கிறிஸ்துமஸ் தாத்தா. அதாவது சாண்டா கிலாஸ். கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது சாண்டா தாத்தா மான்பூட்டிய வண்டியில் வானத்தில் இருந்து இறங்கிவந்து நமக்கு பிடித்தவற்றை பரிசாக வழங்குவார் என்று நீண்டகாலம் பேசிவருகிறோம்.
சிறுவயதாக இருக்கும்போது மட்டுமில்லை, பரிசு கிடைக்காவிட்டாலும் பெரியவர்களாக ஆனாலும் நாம் அதை நம்பிக் கொண்டிருக்கிறோம். ஏன்? கிறிஸ்துமஸ் தாத்தா வரமாட்டார் என தெரிந்தும் அதை நாம் நம்புவது கற்பனை உலகம் தரும் இன்பம் மற்றும் நிஜ வாழ்க்கையின் அழுத்தத்திலிருந்து கிடைக்கும் விடுதலை.
அதாவது சுற்றி இருப்பவர்களே நம் தேவையை, ஆசையை உணராதபோது சாண்டா கிலாஸ் அதனை அறிந்து அதனை நிறைவேற்றும்போது ஒரு மகிழ்ச்சி. பொய்மையும் வாய்மையுடைத்து புரை தீர்க்கும் நன்மை பயக்கும் எனில், அந்தப் பொய் நன்மையை விளைவிப்பதாக இருந்தால் அதைக் கண்டு மகிழலாம் என வள்ளுவர் கூறுவது போல, சில கற்பனைகள் மனதிற்கு நிம்மதியைத் தருகின்றன. அதுபோலத்தான் இதுவும்.
சரி கதைக்கு வருவோம். உண்மையில் சாண்டா கிலாஸ் இருக்கிறாரா? ஆம். இப்போது இருக்கிறாரா என்றால் இருக்கிறார், இருந்தார். செயிண்ட் நிக்கோலஸ், இன்றைய துருக்கி நாட்டில் வாழ்ந்த ஒரு கிறித்தவ ஆயர். நிக்கோலஸ் இரக்கம், நல்லுணர்வு மற்றும் குழந்தைகளிடம் அதிக அன்பு காட்டும் குணம் நிறைந்தவர். மேலும் ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் ரகசியமாக பரிசுகளை வழங்கும் குணம் கொண்டவர். இவர் இறந்தபின் இவர்குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன. அதில் ஒன்றுதான் கிறிஸ்துமஸ் அன்று குழந்தைகளுக்கு பரிசுகொடுப்பது.
காலப்போக்கில், டச்சு கலாச்சாரத்தில் 'சிண்டெர்கிலாஸ்' (Sinterklaas) என்று அழைக்கப்பட்ட இவர், அமெரிக்க கலாச்சாரத்தில் 'சாண்டா கிளாஸ்' ஆக மாறினார். இப்போதும் அப்படியே தொடர்கிறார். ஆக சாண்டா கிளாஸ் இருந்தார். மேலே குறிப்பிட்டவாறு இப்போதும் இருக்கிறார். நம் தேவைகளை, நினைப்பவகளை பூர்த்தி செய்யும் அனைவரும் சாண்டா கிலாஸ்தான். பெண்களுக்கு அவரது தந்தை சாண்டா கிலாஸாக இருப்பதுபோல அனைவருக்கும் அவரவர்களது தாய் அல்லது அன்புக்குரியவர்கள் எப்போதும் சாண்டா கிலாஸ்தான்.
அப்படி சாண்டா கிலாஸ் மாற்று உருவத்தில் இல்லையென்றாலும், நம் தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ளும் நாமும் நமக்கான சாண்டாதான்.
- உள்ளுணர்வு சொல்வதை உற்றுக் கேளுங்கள்.
- வாழ்வில் கஷ்ட நேரத்தில் உதவியவர்களை எந்த நாளும் கைவிடக்கூடாது.
அனைவருக்குமே ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்பது தானே ஆசையாக இருக்கும். ஆனால் அதற்கான சில முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் அல்லவா? அந்த முயற்சிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.
* நல்ல வாழ்க்கைக்கு அடிப்படை நல்ல ஆரோக்கியம்தான். ஆக முதல் முயற்சியாக அன்றாடம் 20 முதல் 30 நிமிடங்கள் நடக்க ஆரம்பிக்கலாமே. சாதாரணமாகத் தெரிந்தாலும் இதன் பலன்கள் ஏராளம்.
* வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் ஒழுக்கம் அவசியம். பேசும் பேச்சு, உண்ணும் உணவு என அனைத்திலும் ஒழுக்கமும், கட்டுப்பாடும் அவசியம்.
* ஒருநாளில் ஒவ்வொரு நிமிடமும் எப்படி செலவழிக்கின்றோம் என்பதனைப் பொறுத்தே ஒருவரின் வருங்காலம் நிர்ணயிக்கப்படுகின்றது. இதனை ஒவ்வொரு நொடியிலும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
* அப்பா, அம்மா வாழ்வில் மிக முக்கியம். அவர்களோடு நேரம் செலவழியுங்கள். சேர்ந்து உணவு உண்ணுங்கள். அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
* மிஷின் போன்று ஒரே மாதிரியாக வாழாதீர்கள். வெளியில் செல்லுதல், படித்தல், நண்பர்கள் என வாழ்விற்கு சுவை சேருங்கள்.
* மருத்துவரிடம் எந்த பொய்யும் கூறாதீர்கள். எதனையும் மறைக்காதீர்கள்.
* நேரம், காலத்தில் நல்ல முதலீடு செய்தால் அதன் பலன் மிக சிறப்பாக இருக்கும்.
* உடற்பயிற்சி நல்ல மன நிலையினையும் தரும்.
* புன்னகையும் அவசியம்.
* தைரியம் அவசியம்.
* உள்ளுணர்வு சொல்வதை உற்றுக் கேளுங்கள்.

* பிறரது நேரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* ஒருவர் மன்னிப்பு கேட்ட பிறகு 2 மணி நேரம் அதைப் பற்றியே பேசாதீர்கள்.
* முக்கியமான குறிப்புகளை எழுதி வைக்கலாம்.
* நம்பிக்கையோடு இருங்கள்.
* ஒருவரால் நமக்கு எந்த உதவியும் இல்லை என்றாலும் அவரை மதிக்க வேண்டும்.
* எதிலும் அதிக 'துல்லியம்' என எதிர்பார்த்தால் அந்த செயலை முடிப்பது கடினமாகி விடும்.
* சொல்ல வேண்டியதனை தெளிவாக சொல்லப் பழகுங்கள். முயற்சி செய்வோமே.
சில மாற்றங்களை நாம் செய்தால் வாழ்க்கையும் மாறும்.
* சிறு சிறு அடிகளாக வைத்தாலும் சரியான பாதையில் சென்றால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். குறுக்கு வழி, முன்னேற்றம் என்ற பெயரில் எகிற குதித்து தவறான வழியில் சென்று விடாமல் இருப்பது நல்லது.
* நடைபயிற்சி என்பது வேறு, காலாற நிதானமாய் நடப்பது என்பது வேறு. நடைபயிற்சி என்பது கைகளை சற்று வீசி பேசாமல், துரித நடை செல்வது. காலாற நடப்பது என்பது நிதானமாய் இயற்கையை ரசித்து நம் உறவுகள், நண்பர்களோடு பேசிக் கொண்டோ அல்லது தனியாகவோ நடப்பது, காலாற நடப்பது மனதிற்கு அத்தனை மகிழ்ச்சி தரும்.
* வாழ்வில் திடீர் திடீர் என ஏதோ, எப்படியோ தடங்கல்கள் ஏற்படுகின்றது. வாழ்க்கை நன்கு செல்லும் பொழுதே இந்த தடங்கல்கள், தாக்குதல்களை மனதில் கொண்டு பாதுகாப்புகளை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
* ரொம்ப சவாலாக இருக்கும் செயல் என்றாலும் அதில் உடல், மனம் உறைந்து விட வேண்டாம். அதனையும் மனதில் சற்று எளிதாகவே எடுத்துக் கொண்டுதான் செயல்பட வேண்டும்.
* நல்ல மனம், திறந்த சிரிப்பு, அழகான சூரிய உதயம், மாலை நேர மென்மை இவைகளை அனுபவிக்க ஒருவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அனுபவியுங்கள்.
யார் நல்ல மன மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள்:
* அதிக பந்தா காண்பிக்க மாட்டார்கள்.
* அளவாக பேசுவார்கள்.
* தேவையானவர்களுக்கு உதவுவார்கள்.
* ஊர் வம்பு, தவறான செய்திகளுக்கு காது கொடுக்க மாட்டார்கள்.
* மனம் விட்டு சிரிப்பார்கள்.

கமலி ஸ்ரீபால்
* அன்றாடம் ஏதேனும் கற்பார்கள்.
* நம்மை நாமே பார்த்து பார்த்து செதுக்கிக் கொள்ளும் போது வாழ்க்கை அமைதியாய் இருக்கின்றது.
* நம் துன்பங்களை அதிகம் பகிராமல், புலம்பாமல் அனுபவிக்கும் போது வாழ்வின் நுணுக்கத்தினை நன்கு கற்றுக் கொள்கின்றோம்.
* யாராவது தேவையில்லாமல் உங்களை காயப்படுத்தினால் பதிலுக்கு தொண்டை கிழிய கத்தி சண்டை போட வேண்டாம். அழ வேண்டாம். முடங்க வேண்டாம். அவர்களைப் பார்த்து 'நீங்க நன்றாகத் தானே இருக்கின்றீர்கள். எந்த பிரச்சினையும் இல்லையே?' எனக் கேட்டு விட்டு நகர்ந்து விடுங்கள். எதிராளி புழுங்கி போய் விடுவார்.
* மிக அதிகமாக நண்பர்களை நம்ப வேண்டாம். இது இருவருக்குமே நல்லது. அதே போல் பகைவரையும் எதிரியாகவே நினைக்க வேண்டாம். அவர்களை ஏதேனும் ஒரு நல்ல செயலுக்கு பயன்படுத்துங்கள்.
* யாரேனும் பொய் சொன்னால் அவர்கள் கண்களை சில நொடிகள் உற்று பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் விட்டு விடுங்கள். இது அவர்கள் மனதினை மணல் போல் உறுத்தி விடும்.
* வாதமான பேச்சு வார்த்தையில் ஆக்ரோஷம் இல்லாமல் அமைதியாகவே பேசலாம்.
* செயல்களின் மூலம் உங்கள் திறமையினை, வெற்றியினை காண்பித்தால் உங்கள் மதிப்பு உயரும்.
* ஒருவர் எந்த மனவேதனையில் இருக்கின்றார் என்பது தெரியாது. ஆகவே யாரிடமும் பண்பாகவே பேசுங்கள்.
* வாழ்வில் கஷ்ட நேரத்தில் உதவியவர்களை எந்த நாளும் கைவிடக்கூடாது.
* நீங்கள் படிக்கும் புத்தகத்தின் தரம் உங்கள் பேச்சில் தெரியும்.
* நீங்கள் உண்ணும் உணவு உங்கள் சக்தியில் ஆரோக்கியத்தில் தெரியும்.
* உங்கள் கவனக் கூர்மை உங்கள் வேலையின் முடிவில் தெரியும்.
* குளிர்ந்த குழாய் நீரில் தினம் 2 முதல் 3 முறை முகத்தில் வேகமாக அடியுங்கள். உடனடியாக புத்துணர்ச்சி கிடைக்கும்.
* டென்ஷனா இருக்கா? ஆழ் மூச்சு பயிற்சி செய்யுங்கள். மனம் அமைதிப்படும்.
* கண்களை வேகமாய் ஒரு நிமிடம மூடி திறங்கள். தூக்கம் நன்கு வரும். முயற்சி செய்து தான் பார்ப்போமே.
சில நபர்களை இவர்கள் 'அரகண்ட்' என்று குறிப்பிடுவர். அதாவது 'திமிர் பிடித்தவர்' என்று பொருள் கொள்ளலாம். இந்த குணம் ஒருவரின் வெற்றியினை தடைப்படுத்தும். அவர்களுக்கே அவர்கள் இப்படி முரட்டுத்தனமாக இருக்கின்றார்கள் என்று தெரியாமல் இருக்கலாம்.
இந்த குணங்கள் ஒருவரிடம் இருந்தால் அவர்கள் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.
* அவர்கள் தகுதியானவர்கள் சொல்வதினை காது கொடுத்து கேட்க மாட்டார்கள்.
* அறிவுரை, ஆலோசனை இவர்களுக்குப் பிடிக்காது.
* இவர்கள் அகராதியில் 'Borry' என்ற வார்த்தையே இருக்காது.
* அவர்களது மூளை, உழைப்பை மட்டுமே கொண்டு வெற்றி பெற்றதாக கர்வம் கொள்வார்கள்.
* பிறருக்கு மரியாதை கொடுப்பது என்பது மருந்துக்கு கூட இவர்களிடம் இருக்காது.
* மற்றவர்களை விட தானே எல்லா விதத்திலும் உயர்ந்தவன் என்று நினைப்பார்கள்.
* தானே அனைத்திற்கும் தலைமை வகிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
* கோபம் மட்டுமே இருக்கும்.
* தற்பெருமை மிக அதிகம்.
* கேள்வி கேட்டாலே பிடிக்காது.
* உதவியாளர்களை உதறி எறிவார்.
* பிறரின் சாதனைகளை பாராட்டவே மாட்டார்.
இவைகள் எல்லாம் கண்டிப்பாய் ஒருவர் மாற்றிக் கொள்ள வேண்டிய குணங்கள் ஆகும்.
வாழ்க்கையில் அறிய வேண்டிய சில உண்மைகள்:
* பயம் மரணத்தினை நிறுத்தாது. ஆனால் வாழ்வினையே நிறுத்தி விடும்.
* நம் மன நிம்மதியினை கொடுக்கும் எதுவும் விஷ பாதிப்பே.
* நம்மால் பல விஷயங்களை செய்ய முடியும். ஆனால் பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்ய முடியாது. எனவே ஒவ்வொரு விஷயத்திலும் முழு கவனம் தேவை.
* நாம் எதிர்பார்த்தபடி வாழ்வில் அநேக நிகழ்வுகள் நடப்பதில்லை. ஆகவே கனவு, எதிர்பார்ப்புகள் அதிகம் வேண்டாம். இயல்பான வாழ்க்கையோடு ஒத்து செல்ல வேண்டும்.
* 20 வயதில் நிறைய கற்க வேண்டும். நிறைய முன்னேற வேண்டும்.
* அமைதியினை விட பேச்சு உதவும் என்றால் மட்டுமே பேச வேண்டும்.
* உங்கள் எண்ணங்கள் மிக வலிமையானவை. ஆகவே அவை ஆக்கப்பூர்வ மாகவே இருக்கட்டும்.
* நீங்கள் வேலை செய்யும் இடத்திலும், பழகும் இடத்திலும் அனைவரும் நண்பர்களாக இருப்பார்கள் என்று எதிர் பார்க்காதீர்கள்.
மனநலம் பெற்றவராக எப்படி மாற முடியும்?
* அனைவருக்கும் கவனம் கொடுங்கள். பக்கத்து வீட்டில் என்ன நடந்தால் நமக்கென்ன என இருக்கக் கூடாது.
* பிறர் பேச அதிகம் கேளுங்கள். இது பல விஷயங்களை புரிய வைக்கும்.
* துரோகங்களை தலை விதி என ஏற்கக் கூடாது. மன்னிக்கலாம். ஆனால் மறக்கக் கூடாது.
* அதிக உணர்ச்சி வசப்பட வேண்டாம்.
* சில கடின சூழ்நிலைகளில் வேலை செய்யும் போது உங்களை நீங்களே உணர முடியும்.
* குறைவாக பேசுங்கள். அதிகம் கவனம் செலுத்துங்கள்.
* உறுதியான மனநிலை வேண்டும்.
* கெட்ட நண்பர்கள் மட்டும் வேண்டாம். வாழ்வு வீணாகி விடும்.
* நல்ல சுத்தமான ஆடை, தோற்றத்துடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு நிமிட வாழ்வும் பரிசே.
* ஒருவரை திருத்த முடியவில்லை என்றால் அவர் அந்த எல்லையை மீறி விட்டார் என்றே பொருள்.
* நல்ல மனிதர்களோடு தொடரவும் தவறான மனிதர்களிடமிருந்து நகர்ந்து விடுவதையும் மன பலம் பெற்றவர்கள் செய்வார்கள். மேலும் முன்னேற்ற பாதையில் மட்டுமே செல்வார்கள். உணர்ச்சி வசப்படும் மன பலம் இல்லாதவர்கள் நிலை தடுமாறுவார்கள்.
* புகை பிடிக்கவே மாட்டார்கள்.
* முறையற்ற உணவு இருக்காது.
* புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கும்.
* மிக சத்தமாக இசை கேட்க மாட்டார்கள்.
* எப்போதும் மன உளைச்சல் என்று மூழ்க மாட்டார்கள்.
இவையெல்லாம் 'நல்ல வாழ்க்கை'க்காக கடை பிடித்து பயன் பெறலாமே.
- பூண்டு- ரத்த நாளங்களுக்கு நல்லது
- தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம்.
வாய் விட்டு மனதார சிரித்தால் நோய் எதிர்ப்பு சக்தி 20 சதவீதம் கூடுகின்றதாம்.
* குளிர்ந்த நீர் (சாதாரண நீரில்) ஷவர் முறையில் குளிக்கும் பொழுது உடலின் செயல்பாட்டுத் திறன் கூடுகிறது.
* சூயிங்கம் மெல்லுவது மூளையின் ஞாபகத்திறனை கூட்ட கூடுதலாக 35 சதவீதம் பலன் அளிக்கின்றது.
* வாழைப்பழம் சாப்பிட்டால் மன அமைதி, மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
* பாட்டு பாடுவது நுரையீரலுக்கான ஏரோபிக் பயிற்சி.
* சாப்பிடுவதற்கு முன்னால் ஒரு கிளாஸ் நீர் குடித்தால் 13 சதவீதம் உங்கள் உணவில் கலோரி சத்து அளவு குறையும் நிலை ஏற்படும்.
* பச்சை பசேல் என்ற இயற்கை சூழ்நிலையில் 20 நிமிடங்கள் இருந்தால் மன உளைச்சல் 20 சதவீதம் வரை குறைகின்றது.
* தினமும் மஞ்சள் உணவில் சேர்க்கப்படும் பொழுது வீக்கங்கள், உள் வலிகள் குறைகின்றன.
* மருத்துவர் ஆலோசனைப்படி மக்னீசியம் கிளைசினேட் எடுத்துக் கொள்ளும் பொழுது தசைகளின் டென்ஷன் நீங்கும். மைக்ரேன் பாதிப்பு குறைகின்றது.
* இஞ்சி டீ அஜீரண கோளாறுகளை சீர் செய்கின்றது.
* எளிதில் உடையும் நகம், முடி இவை பயோடின் குறைபாடாகக் கூட இருக்கலாம்.
* வாய் ஓரத்தில் வெடிப்பு, புண் இருந்தால் இரும்பு சத்து வைட்டமின் பி பிரிவு சத்துகள் குறைபாடாக இருக்கின்றதா என்பதனை அறிய வேண்டும்.
* அடிக்கடி தசை பிடிப்பு ஏற்படுகின்றதா? கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் குறைபாடு இருக்கின்றதா என மருத்துவர் மூலம் அறிய வேண்டும்.
* காயங்கள் மெதுவாக ஆறுகின்றதா? பல காரணங்களுடன் துத்தநாகம் குறைபாடு கூட காரணமாக இருக்கலாம்.
* இரவில் பார்வை குறைபாடு உள்ளவதற்கு வைட்டமின் 'ஏ' குறைபாடு முக்கிய காரணமாக இருக்கலாம்.
* வெளிறிய சருமம்- இரும்பு சத்து, குறைபாடும் காரணமாக இருக்கலாம்.

கமலி ஸ்ரீபால்
* ஈறுகளில் ரத்தம்- வைட்டமின் 'சி' குறைபாடாக இருக்கலாம்.
* அடிக்கடி கிருமி தாக்குதல்- சிங்க், வைட்டமின் 'சி' குறைபாடு இருக்கலாம்.
பார்லி தண்ணீர்:
நம் வீட்டில் பெரியவர்கள் இன்றும் பார்லி அரிசி தண்ணீர் குடிப்பதனை அடிக்கடி செய்வர். அவர்கள் என்ன காரணத்திற்காக செய்தனரோ- இன்று அதில் விஞ்ஞானப் பூர்வமாக அநேக நன்மைகள் கூறப்பட்டு உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இதனை அடிக்கடி குடிக்கின்றனர்.
* இது வைட்டமின் போலேட், இரும்பு, காப்பர்மங்கனீஸ் சத்து நிறைந்தது.
* கொலஸ்டிராலினை குறைக்கின்றது.
* ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவுகின்றது.
* எடை குறைப்பிற்கு உதவுகின்றது.
* புற்று நோய் தாக்குதல் அபாயத்தினை குறைக்கின்றது.
* உடல் கழிவுகள் வெளியேற உதவுகின்றது.
* குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது.
* நீர் சத்து குறைவதினை தடுக்கின்றது.
* சிறு நீரக நச்சுகளை வெளியேற்றுகின்றது.
சில குடல் பிரச்சினைகள், அலர்ஜி உள்ளவர்கள் பார்லி எடுத்துக் கொள்ளக் கூடாது. மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
* டீ, காபி என்பதனை விட சீரக தண்ணீர், பார்லி தண்ணீர் போன்றவை நன்மை பயப்பவை ஆகும். ஆனால் எதனையும் அளவோடு செய்வதே நல்லது.
* பார்லி கலோரி சத்து குறைந்தது. வைட்ட மின்கள் பி2, பி3, பி6 கொண்டது. நார்சத்து கொண்டது. ஓட்ஸ் பாஸ்பரஸ், சிங்க், காப்பர், மக்னீசியம், இரும்பு, பொட்டாசியம் வைட்டமின் பி1, பி5 கொண்டது. க்ளூடன் இல்லாதது. 'ஸ்டீல் கட் ஓட்ஸ்' என வாங்கி இதனையும் பயன்படுத்துங்கள்.
ரத்தக் கொதிப்பு- உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது.
கீரை வகைகள்- பொட்டாசியம் சத்து உள்ளது.
பீட்ரூட்- நைட்ரேட் சத்தை நைட்ரிக் ஆக்சைடாக மாற்றும்.
வாழைப்பழம்- சோடியம் முறைப்படும்
பூண்டு- ரத்த நாளங்களுக்கு நல்லது

மீன் உணவு- ஒமேகா 3
பொரி வகைகள்- ஆண்டி ஆக்சிடண்ட்
போன்றவற்றினை எடுத்துக் கொள்வோம். கீழ்கண்ட உணவுகளை தவிர்த்து விடுவோம்.
அதிக உப்பு, வறுத்த, பொறித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட அசைவம், சோடா, அதிக உப்பு சேர்த்த சீஸ் பேக்கரி உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றினை தவிர்த்து விடுவோம்.
பாதங்கள் சில்லென இருந்தால்- தைராய்டு பிரச்சினை, சர்க்கரை நோய், ரத்த சோகை இருக்கலாம்.
பாதம் எரிச்சலாக இருந்தால் - சர்க்கரை நோய், நரம்பு பாதிப்பு, வைட்டமின் குறைபாடு, பித்த வெடிப்பு, நீர் பற்றாகுறை, தைராய்டு பிரச்சினை, சரும பாதிப்பு, சத்து குறைபாடு இருக்கலாம்.
ஆறாத புண்
சர்க்கரை நோய், கிருமி தாக்குதல், சீரான ரத்த ஓட்டம் இன்மை, வலி ஆர்த்ரைட்டிஸ், பிற கோளாறுகள். உதாரணம் எலும்பு முறிவு என இவையெல்லாம் இருக்கக் கூடும். மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததுதானே.
* ஜீரண சக்தி சீராய் இயங்க
* ஒவ்வாத உணவுகளை ஒதுக்கிவிட வேண்டும்.
* நன்குமென்று, பொறுமையாய் உண்ண வேண்டும்.
* அமர்ந்து உண்ண வேண்டும். அந்நேரத்தில் அரட்டை, போன், டிவி, இவற்றினை தவிர்த்திட வேண்டும்.
* நார் சத்து அவசியம்.
* தேவையான அளவு நீர் அருந்த வேண்டும்.
* வேக வைத்த காய்கறிகள் சிறந்தது.
* 'ஸ்ட்ரெஸ்சில் மூழ்க கூடாது.
* வெறும் உடற்பயிற்சி மட்டுமே போதாது. நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும்.
தண்ணீர் இப்படியும் குடிக்கலாம்.
* தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம்.
* சில துளி இஞ்சி சாறு சேர்க்கலாம்.
* சில புதினா இலைகளை சேர்த்து குடிக்கலாம்.
* மோர் குடிக்கலாம்.
* வெள்ளரி சாறு எடுத்துக் கொள்ளலாம்.
* சுத்தமான தேன் ஒரு டீஸ்பூன் கலந்து குடிக்கலாம்.
* வெது வெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கலாம்.
* இளநீர் நல்லது.
* ஒரு டீஸ்பூன் சோம்பினை நன்கு நீரில் கொதிக்க வைத்து பருகலாம்.
* சீரகத் தண்ணி நாள் முழுவதும் குடிக்கலாம்.
உடல் உறுப்புகள்
* வெகு நேரம் பசியுடன் நீர் கூட அருந்தாமல் இருந்தால் ஜீரண மண்டலம் பாதிக்கப்படும்.
* போதுமான அளவுநீர், தாகம் எடுக்கும் பொழுது நீர் அருந்தாமல் இருந்தால் சிறு நீரகமும் பாதிக்கப்படலாம்.
* அதிக ஸ்ட்ரெஸ் அறிவுப் பூர்வமான எண்ணங்கள், மூளை நலத்தினை, மன நலத்தினை பாதிக்கும்.
* இருட்டில் போனில் பிரகாசமான ஒளி, டி.வி. இவற்றினை பார்ப்பது கண்களை பாதிக்கும்.
* துரித உணவு, மது- கல்லீரலை பாதிக்கும்.
* எண்ணெய், கொழுப்பு உணவு குடலை பாதிக்கும்.
* அதிக உப்பு, எண்ணை உணவு இருதயத்தினை பாதிக்கும்.
* தலையை பிளக்கும் சத்தத்தில் பாட்டு கேட்பது காதுகளை பாதிக்கும்.
* புகை பிடிப்பது நுரையீரலை அழித்து விடும்.
இவைகளும் நம் பழக்கத்தில் இருப்பவைதான்.
* சில்லென்ற நீரினை மருந்தோடு சேர்த்து அருந்துவதில்லை.
* மாலை 5 மணிக்கு பிறகு கனமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* சாப்பிட்ட உடன் படுக்கக் கூடாது.
* செல்போன் சார்ஜ் 10 சதவீதம் மட்டுமே இருந்தால் சார்ஜ் செய்யுங்கள். அந்த 10 சதவீதம் தீரும் வரை பேச வேண்டாம்.
* காலை உணவினை தவிர்க்கக் கூடாது. * உணவுக்குப் பின் உடனே டீ, காபி வேண்டாமே. * ஒரு மணி நேரம் அமர்ந்து இருந்தால் எழுந்து கை, கால்களை நீட்டி மடக்குங்கள். * உணவுக்குப் பின் பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். * உபயோகித்த எண்ணையை அடிக்கடி சூடு படுத்தி சமைப்பது நஞ்சு.
உறுப்புகள் பலம் பெற:
* வயிறு பலம் பெற- வயிற்று மசாஜ் செய்வது ஜீரண சக்தியினை அதிகரிக்கும். வயிறு உப்பிசம் குறையும்.
* நுரையீரல் பலம் பெற- வாய் விட்டு பாடுங்கள், இசை பயிலுங்கள், தினமும் பாட்டு பயிற்சி செய்யுங்கள், மூச்சும் சீராய் இயங்கும்.
* சிறுநீரகம் பலம் பெற- கால் விரல் நுனிகளில் நிற்கும்படி பாதத்தினை உயர்த்தி, இறக்கி பயிற்சி செய்யுங்கள். ரத்த ஓட்டம் முன்னேற்றம் தரும்.
* மூளை பலம் பெற- தினமும் 20 நிமிடம் தியானம் செய்யுங்கள்.
* கல்லீரல் பலம் பெற- தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது நடை பயிற்சி செய்யுங்கள். * இருதயம் பலம் பெற- ஆழ்மூச்சு பயிற்சியும் உதவும். * குடல் பலம் பெற- இடுப்பு பயிற்சிகளை முறையாய் கற்று பயிற்சி செய்ய வேண்டும். * கண்கள் பலம் பெற- கண் பயிற்சியும் அவசியம்.
இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை மட்டுமே பாதிப்பிற்கு தீர்வாக அமையாது. தீர்விற்கான பலம், தடுப்பு முறை சக்தி என விளங்கும். மருத்துவர் ஆலோசனை, சிகிச்சை என்பது அவசியம். ஆனால் நாம் அறிந்த வற்றினை ஞாபகப்படுத்தி செயல்படுத்துவோமே.
- ஒருவரின் ஆயுளைப் நிர்ணயிக்கும் சக்தியை பிரபஞ்சம் தனக்குள் ரகசியமாகவே வைத்துக் கொண்டு உள்ளது.
- 12-ம் பாவகம் என்பது ஒருவரின் சாபத்தால் ஏற்படும் துக்கம், துயரமாகும்.
ஜோதிடம் பல்வேறு புதிர்களையும் சூட்சுமங்களையும் தன்னுள் அடக்கி உள்ளது. மத்திம வயதிற்கு மேல் ஜாதகம் பார்க்க வருபவர்கள் அனைவரும் தமது ஆயுளைப் பற்றி கேட்காமல் போவது கிடையாது. தமது ஆயுட்காலம் பற்றிய பய உணர்வு அனைவருக்கும் உண்டு. அதேபோல் தனது ஆன்மா முக்தி அடையுமா மோட்சம் அடையுமா என்பதையும் அறிய விரும்புவார்கள். ஒருவரின் ஆயுளைப் பற்றி தீர்மானிப்பது மிகவும் சவாலான விஷயம். முக்தி மோட்சம் என்பது ஆராய்ச்சிக்கு உட்பட்ட மிகப்பெரிய தலைப்பு. இதில் பலருக்கும் பலவிதமான மாற்றுக் கருத்துக்கள் உள்ளது. எனினும் என் சிற்றறிவுக்கு எட்டிய சில தகவல்களை இந்த கட்டுரையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மறுபிறவி
ஒருவரின் ஆயுளைப் நிர்ணயிக்கும் சக்தியை பிரபஞ்சம் தனக்குள் ரகசியமாகவே வைத்துக் கொண்டு உள்ளது. அனைத்திற்கும் அப்பாற்பட்டு உள்ள பிரபஞ்ச சக்தியால் மட்டுமே ஒருவரின் ஆயுளை கூட்டவோ குறைக்கவோ முடியும். உலகில் ஒவ்வொரு நொடியும் விதவிதமான அரிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டே இருந்தாலும் மனிதர்களுடைய பிறப்பு மற்றும் இறப்பும் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அதே போன்று நம்முடைய மறு பிறவிகளும் எத்தனை என்பது நாம் அறிந்து கொள்ள இயலாதது. இந்து மதத்தைப் பொறுத்தவரை ஆன்மா என்பது அழியாதது மேலும் அது மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கக்கூடியது என்ற நம்பிக்கை ஆழமாக உள்ளது. கடந்த பிறவிகளில் ஒருவர் வாழ்ந்திருந்தால் கடந்த கால வாழ்க்கையினை உள்ளுணர்வால் அறிய முடியும்.ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு பன்னிரெண்டாம் இடமே ஒருவரின் முக்தியை மோட்சத்தை பற்றி உணர்த்தும் ஸ்தானமாகும்.
12-ம் பாவகம்
12-ம் பாவகத்தை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் செய்த பாவ புண்ணியத்தின் பலன் என்ன? என்பதை கூறுமிடமாகும். இதையே விரிவாக சொன்னால் முக்தி அல்லது மோட்சம் என்ற பிறவிப்பயனை அடைவாரா? மறுபிறவி உண்டா? படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் கிடைக்குமா? வெளிநாட்டு வேலை, தொழில் அமையுமா? போன்றவற்றை அறிய முடியும். அத்துடன் செலவினங்கள், நஷ்டங்கள், இல்லற இன்பம், இடது கண், தியாக சிந்தனை, தற்கொலை, ராஜ துரோகம், ஜாதிமாறுதல், தந்தையின் தாய், தாயின் தந்தை, பிரிவினை, தலைமறைவாகுதல் போன்றவற்றையும் அறிய முடியும். இதனை விரயஸ்தானம் அல்லது அயன, சயன போகஸ்தானம் என்றும் அழைக்கலாம். 12-ம் பாவகம் என்பது ஒருவரின் சாபத்தால் ஏற்படும் துக்கம், துயரமாகும். இது தலை முறைக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
12-ம் பாவகம் விரய ஸ்தானம்
12-ம் அதிபதி ஆட்சி உச்சம் பெறக்கூடாது. 12-ம் அதிபதி 12-ல் இருந்தால் கட்டுக் கடங்காத விரயம் இருந்து கொண்டே இருக்கும். தூர தேசத்தில் வாழும் நிலை ஏற்படும். 12-ம் பாவகத்தில் நின்ற கிரகத்தின் தசை நடந்தல், அந்த கிரகங்களுக்குரிய நோய்கள் தாக்கும், மரணம் அல்லது அதற்கு ஒப்பான கண்டத்தை சந்திப்பார்கள். 12-ம் அதிபதியுடன் சேர்ந்த கிரகங்களின் திசையும் நடக்கக் கூடாது. நோயின் தன்மையை எளிதில் அறிய முடியாது.
எந்த மருந்தை சாப்பிடுவது என்று தெரியாமல் குழம்புவார்கள். அந்த ஜாதகர் பரம்பரை நோயால் துன்பப்படுவார். இவர் செய்யும் வேலைகளின் மூலம் நோய்கள் தாக்கும். நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவு என்பதால் தொற்று நோய்கள் உடனே வரக்கூடும். மூட்டு வலி, முதுகு தண்டுவட வலி, மூல நோய், இரவில் உறக்கம் கெடுவதால் உண்டாகும் நோய்களும் ஏற்படும்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
எனவே ஒரு ஜாதகத்தில் 12-ம்மிடம் காலியாக இருப்பது நலம். 12-ல் சுப கிரகம் இருந்தால் சுப விரயமும் என்றும் அசுப கிரகம் இருந்தால் வீண் விரயமும் ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவி வருகிறது. அது தவறான கருத்து. 12-ல் லக்ன சுபர் அல்லது லக்ன சுபரின் சாரம் பெற்ற கிரகம் இருந்தால் 50 சதவீத பலனும், 12-ல் நிற்கும் கிரகம் லக்ன சுபர் அல்லது லக்ன சுபரின் சாரம் பெற்று குரு பார்வை பெற்றால் 100 சதவீதம் சுப விரயமும் ஏற்பட வாய்புள்ளது. மற்றபடி 12-ல் நிற்கும் கிரகம் என்றுமே மதில் மேல் பூனை தான். 12-ல் சுப கிரகம் இருந்தால் நிம்மதியான தூக்கம் அல்லது படுத்தவுடன் தூக்கம் வரும். அசுப கிரகம் இருந்தால் கண் மட்டும் மூடி இருக்கும். சிந்தனைகள் அலைபாயும். எண்ண ஓட்டங்கள் மிகுதியாக இருக்கும்.
ஏதாவது ஒரு கிரகம் 12-ம் இடத்தில் நின்றாலோ 12-ம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் நின்றாலோ அல்லது 12-ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலோ அந்த ஜாதகர் சொந்த ஊரை விட்டு வேறு இடங்களில் இருப்பார். சிலருக்கு வெளிநாட்டு வாழ்க்கை அமையும். வெளிநாட்டில் தங்கி வேலை, தொழில் செய்யும் நிலை உருவாகும். 12-ம் இடத்தின் அதிபதியை சுப கிரகங்கள் பார்த்தால் வெளிநாடு யோகம், வெளிநாடு தொழில் அமைக்கும் யோகம், வெளிநாட்டு பணம் சேர்ப்பது, வெளிநாடுகளுக்கு சென்று கொண்டே இருப்பது, வெளிநாட்டு குடியுரிமை பெற்று அங்கேயே செட்டிலாகுவது போன்ற பலன்கள் நடக்கும். முழுமையான தாம்பத்ய சுகம், நிம்மதியான தூக்கம், தூக்கத்தில் கனவில் தெய்வங்கள், மூதாதையர்கள் வந்து பேசுவது போன்ற பலன்கள் நடக்கும். இதற்கு அசுப கிரக பார்வை இருந்தால் சிறைவாசம் அல்லது தீராத நோய்கள் ஏற்படும். ஜாதகர் வரவுக்கு மீறி செலவு செய்வார். கட்டுக்கடங்காத விரயம் இருந்து கொண்டே இருக்கும். கடன் பெற்றும் வீண் செலவு செய்ய தயங்க மாட்டார். சோம்பேறியாக இருப்பதுடன் சொந்த ஊரை விட்டு அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செய்யும் தொழிலில் இருப்பார். வீண் வம்பு, வழக்கு, விரோதங்களை தானே உருவாக்குவார். கடன், வம்பு வழக்கிற்காக அடிக்கடி தலைமறைவாக வாழ்வார்கள். சிலருக்கு கடுமையான திருமணத் தடை உண்டாகும். திருமணம் நடந்தால் தொழில், உத்தியோகம் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். தர்மம், கர்மம், காமம், மோட்சம்.
ஒருவரின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருந்தால் துன்பம், கவலை, மறு ஜென்மம் பற்றிய எண்ணங்கள் இருக்காது. மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கை போராட்டமாக இருக்கும் போது மறுபிறவியே வேண்டாம் என்ற வகையில் வாழ்க்கையைப் பற்றிய ஒரு அவநம்பிக்கை இருக்கும். அதே போல் ஆன்மீக நாட்டம் அதிகமாக உள்ளவர்களுக்கும் மோட்சம் பற்றிய எண்ணம் மிகுதியாக இருக்கும். மனித வாழ்க்கை காசு, காமம், சொத்து என்ற மூன்று மாய வலைகளில் சுற்றிக் கொண்டே இருக்கும். இந்த மூன்று விஷயங்களில் உழன்று சலிப்படையும் மோட்சம் அடைய விரும்புவார்கள். ஒரு சிலர் எவ்வளவு துன்பம் அடைந்தாலும் அடுத்த பிறவியிலாவது எனது ஆசைகள் பூர்த்தி அடைய வேண்டும் என்று மறுபிறவி பற்றிய என்ற ஆர்வத்தில் இருப்பார்கள்.
ஒரு ஜாதக 12 கட்டங்கள் இருக்கும். இந்த 12 கட்டங்களும் ஒருவரின் வாழ்வியல் முறைகளையும் பலன்களையும் சம்பவ காலங்களையும் நிர்ணயிக்க மிக முக்கியமாகும். இந்த 12 கட்டங்களும் தர்மம்,கர்மம், காமம் மோட்சம் என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகளும் தர்ம (1, 5, 9 ) திரிகோணத்தில் அடங்கும்.இந்த பாவகங்கள் மூலமாக ஜாதகரின் எண்ணங்களையும் சிந்தனையும் அறிய முடியும். ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசிகளும் கர்ம (2, 6, 10) பலன்களை வெளிப்படுத்தும் ஸ்தானங்களாகும். இந்த பாவகங்கள் மூலம் ஜாதகரின் தொழில் மற்றும் பொருளீட்டுதல் பற்றி அறிய முடியும். மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளும் காமத் 3, 7, 11 திரிகோணத்தில் அடங்கும். ஒருவரின் ஆசையையும் விருப்பங்களையும் அடைய உதவும் ஸ்தானமாகும்.
கடகம் விருச்சகம் மீனம் மூன்று ராசி ஆகிய மூன்று ராசிகளும் மோட்சத்தை 4, 8, 12 பற்றி கூறுமடங்கள். இந்த ஸ்தானங்களின் மூலமாக பாவத்தில் இருந்து விடுபடுவதையும் மோட்சம் பற்றிய எண்ணங்களையும் அறிய முடியும். இதை மேலும் புரியும் படி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு மனிதன் தர்மத்தின் வழியில் வாழ்க்கை நடத்தி பொருளீட்டினால் அவனது விருப்பங்களும் லட்சியங்களும் நிறைவேறி எளிதாக மோட்சத்தை அடைய முடியும் என்பதாகும். அதர்மமாக வாழ்ந்து பொருள் ஈட்டி விருப்பங்களை நிறைவு செய்யபவர்கள் மறுபிறவி எடுத்து நற்கதி அடைய முயல வேண்டும். ஒருவரின் கர்மாவில் தனிப்பட்ட ஒருவரின் பாவ புண்ணியங்கள் மட்டும் இருக்காது. அதில் ஜாதகரைச் சார்ந்தவர்களின் கர்மாவும் இணைந்து இருக்கும்.
முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் அவர்களின் சந்ததிகள். அதாவது ஒருவரின் உடலில் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் மரபணுக்கள் தான் இருக்கிறது. பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல் பாடு, புத்தி சாலித்தனம் வெற்றி தோல்வி, நோய் , கர்மா ஆகிய அனைத்தும் மரபணு மூலம் சந்ததிகளுக்கு அனுப்படுகிறது. அவர்கள் வழியாக வந்த நமது தீய வினைகளை அனுபவிக்க ஏற்ற வகையிலேயே ஒருவரின் உடல் வடிவமைக்கப்படும்.
திரிகோணம்
திரிகோணம் என்பது ஒரு ஆத்மாவின் பிறவிப் பயனை விவரிக்க கூடிய ஸ்தானமாகும். கர்ம வினைகளின் அடிப்படையில் ஜாதகரின் சந்ததி விருத்தியை தீர்மானிப்பதால் மிக முக்கியமான ஸ்தானமாக ஐந்தாம் பாவகம் திகழ்கிறது. ஐந்திற்கு ஐந்தாமிடமான ஒன்பதாம் பாவகம் தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களையும் அவர்கள் செய்த கர்மவினையை பற்றிக் கூறுமிடம் என்பதால் மூன்றாவது திரிகோணமாகும். இந்த மூன்று திரிகோணஸ்தானங்களிலும் கேதுவின் நட்சத்திரம் உள்ளது.
அஸ்வினி மகம் மூலம் இந்த கேதுவின் நட்சத்திரங்களில் தான் ஒரு தலைமுறையின் மொத்த கர்மப் பிணைப்புகள் உள்ளது. இந்த நட்சத்திரங்கள் சென்ற ஜென்மத் தொடர்ச்சியே இந்த பிறவி என்பதை நமக்கு உணர்த்துகிறது. கடந்து வந்த ஜென்மத்தில் நிறைவேற்ற தவறிய நிறைவேற்ற முடியாமல் விட்டுப் போன கடமைகளை முடிக்கவே ஒரு ஜனனம் நிகழ்கிறது. அந்த விட்டுப் போன சம்பவங்களை தொடரும்போது புதிய சம்பவங்கள் பதிவாகும். கர்மா, கர்ம வினை, மறுபிறவி, மோட்சம் ஆகியவற்றிற்கும் சனி, ராகு கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால் தான் கோச்சாரங்களில் சனி ராகு கேது பெயர்ச்சி என்றால் அனைவரின் மனதிலும் ஒரு கலக்கம் வருகிறது. இந்த மூன்று கிரகங்களும் வினை ஊக்கிகள். பிறப்புக்கும், இறப்புக்கும், மறு பிறவிக்கும் சனி, ராகு, கேதுவின் சம்பந்தம் உண்டு.
செல்: 98652 20406
- சில அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் இருந்தால் நிச்சயமாக அந்த ஜாதகர் தனவானாக தர்ம பிரபுவாக கோடீஸ்வரனாக வாழ்வார்கள்.
- பிறவியில் ஏழையாக இருந்தாலும் அதீத பொருளாதார வளர்ச்சி உண்டு.
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது புத்தரின் வாக்காகும். ஆனாலும் ஆசைப்படாத மனிதர்களே உலகத்தில் இருக்க முடியாது. 50 ரூபாய் சம்பாதிப்பவர்களுக்கு ஐந்தாயிரம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வரும். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆசையும் விருப்பங்களும் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். ஒருவரின் ஆசையும் விருப்பமும் நிறைவுபெறுமா? என்பதை ஒரு ஜாதகத்தில் 11-ம் மிடமான லாப ஸ்தானத்தின் மூலமே அறிய முடியும். ஒருவர் தன் வாழ்வில் விரும்பிய அனைத்தையும் அடைய லாப ஸ்தானம் உதவ வேண்டும். எந்த ஒரு பாவக பலனை ஒரு ஜாதகர் அடைய விரும்புகிறாரோ அந்த பாவகத்திற்கு 11-ம்மிடம் சுபத்துவமாக இயங்கினால் மட்டுமே ஜாதகருக்கு கைமேல் பலன் கிடைக்கும். உதாரணமாக ஒரு ஜாதகரின் செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவம், தோற்றப் பொலிவு, வாழ்க்கை நிலை போன்றவற்றை லக்ன பாவகத்தின் மூலமே அறிய முடியும்.
லக்ன பாவத்திற்கு லாப ஸ்தானமான 11-ம்மிடம் வலிமையாக செயல்பட்டால் மட்டுமே ஜாதகருக்கு செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவம், போன்றவைகள் நிலைத்து நிற்கும். ஒருவரது விருப்பங்கள் லட்சியங்கள் கனவுகள் ஆசைகள், பலவிதமான வழிகளில், லாபங்கள், செல்வ செழிப்பு, நல்ல வருமானம் நிலை, பலமொழி தேர்ச்சி ஆகியவற்றை கூறுவது 11-ம்மிடமான லாப ஸ்தானமாகும். 11-ம் பாவக பலன்களை ஒருவர் பரிபூரணமாக அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு லாப ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் அதற்கான கொடுப்பினை பதியப்பட்டு இருக்க வேண்டும். அதாவது ஒன்பதாம் இடம் என்பது ஜாதகரின் பாக்கியஸ்தானம்.
ஜாதகரின் முன்னோரும் ஜாதகரும் கடந்து வந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருந்தால் இந்த ஜென்மத்தில் ஜாதகர் செல்வந்தராக பல தொழில் வித்தகராக வாழ முடியும். அதேபோல் ஒருவருக்கு குழந்தை பிராப்தம் இல்லை எனில் 5-ம், 9-ம்மிடத்தையும் குருவின் நிலையையும் பார்க்க கூடாது. இந்த 5,9-ம் பாவகம் மூலம் பூர்வ புண்ணிய ஸ்தானப்படி. பாக்கிய ஸ்தான பலப்படி இந்த ஜாதகருக்கு குழந்தை பாக்கியத்தை அனுபவிக்க கூடிய கொடுப்பினை உள்ளதா என்பதை அறிய முடியும். ஆனால் வீரியம் (3ம் பாவகம்) இருந்தால் மட்டுமே 5-ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய பலப்படி குழந்தை பிறக்கும். 5-ம் பாவகத்திற்கு லாப ஸ்தானம் 3-ம்மிடம் சிறப்பாக இயங்கினால் ஜாதகர் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். பல்வேறு சூட்சுமங்களையும் அடக்கியது ஜோதிடம். கீழ்கண்ட சில அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் இருந்தால் நிச்சயமாக அந்த ஜாதகர் தனவானாக தர்ம பிரபுவாக கோடீஸ்வரனாக வாழ்வார்கள்.
11-ம் அதிபதி சர ராசியில் நின்றால் தடையில்லாத பண வரவு இருக்கும். 11-ம் அதிபதி ஸ்திர ராசியில் நின்றால் லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் மாத வருமானம் அல்லது வருட வருமானமாக இருக்கும்.
11-ம் அதிபதி உபய ராசியில் நின்றால் வரக் கூடிய வருமானம் நிலையற்றதாக இருக்கும். 11-ம் அதிபதியின் சாரத்தில் ஏதாவது ஒரு கிரகம் நின்றால் ஜாதகருக்கு உபரியான சரளமான பணப்புழக்கம் உண்டு.
11-ம் பாவகத்தை ஏதாவது ஒரு கிரகம் பார்த்தாலும் நின்றாலும் தேவைக்கு அதிகமாக பணம் வரும். 11-ம் பாவக அதிபதி யோகியின் நட்சத்திரத்தில் இருந்தால் சிறப்பான பொருளாதாரம் உண்டு.

'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
11-ம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றால் தொடர்ச்சியாக நல்ல வருமானம் வந்து கொண்டே இருக்கும். 11-ம்மிடத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற கிரகம் நின்றாலும் தாராளமான தனவரவு இருக்கும்.
கிரகச் சேர்க்கையை பொருத்தவரை 11-ம்மிடமான லாப ஸ்தானத்திற்கு குரு+சுக்ரன், குரு+சந்திரன், சனி + சுக்ரன், சனி + குரு சேர்க்கை சம்பந்தம் இருந்தால் ஜாதகருக்கு பொருளாதாரத்தில் மேன்மையான பலன்கள் உண்டாகும். ஒருவருக்கு சுய ஜாதக ரீதியான பணம் வரக்கூடிய அமைப்பு இல்லை என்றால் கோட்ச்சார கிரகங்கள் 11-ம் மிடமான லாபஸ்தானத்திற்கு சம்பந்தம் வரும்போது பணவரவை ஏற்படுத்தி தரும்.
ஒரு கேந்திராதிபதியும் ஒரு திரிகோணாதி பதியும் சேர்ந்து 11-ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றால் அதன் தசா புத்தி காலங்களில் ஜாதகருக்கு அதிகப்படியான பணம் வரும். இதில் 11ம் மிடம் பாதகஸ்தானமாக இருந்தால் தேவைக்கு அதிகமாக பணம் இருந்தாலும் ஜாதகரால் அதை பயன்படுத்த முடிவதில்லை. அது ஜாதகரைச் சார்ந்தவர்களுக்கே பெரும்பான்மையாக பயன்படும்.
9-ல் குரு 11-ல் சுக்கிரன் ஜாதகர் மிகப்பெரிய தனவானாக இருப்பார். தன அதிபதி 11-ல் நின்றால் ஜாதகர் எப்பொழுதும் பணம் சம்பாதித்துக் கொண்டே இருப்பார்.
ஒருவர் எந்த ராசியாக இருந்தாலும் லக்னத்திற்கும் தனஸ்தானத்திற்கும் முன்பின் ராசிகளில் சுப கிரகங்கள் இருந்தால் வாழ்நாள் முழுவதும் உபரி லாபம் கிடைத்துக் கொண்டே இருக்கும். பல்வேறு வகையில் தனபிராப்தி, சொத்து சேருதல், எதிர்பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம், சொத்து பல வகையில் வருவாய், லாபம் போன்றவற்றை குறிப்பது 11-ம் மிடமான லாப ஸ்தானம்.
ஒரு ஜாதகத்தில் லாபாதிபதி சாரத்தில் அதிக கிரகம் இருக்கலாம். 11-ம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் பலம் பெற்ற கிரகம் நின்றால் ஜாதகர் அதிர்ஷ்டப்பிறவி. கூட்டுக் குடும்பத்தில் சித்தப்பா, மூத்த சகோதரருடன் வசதியான கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வாழ்வார்கள்.
அவர்களால் லாபமும், அதிர்ஷ்டமும் உண்டாகும். கோடீஸ்வர யோகம், சமுதாய அந்தஸ்து, அரசியல் ஆர்வம், அதிகாரம், கவுரவம் உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் நடத்துவார்கள். கூட்டுத் தொழில் வெற்றி தரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். அதிகமான ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். சிலருக்கு இரண்டாவது குடும்பம் அமைந்த பிறகு பண வரவு அதிகமாகும். ஜாதகருக்கு பணம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் லாபம் தரும். சிறுவயதிலேயே வருமானம் ஈட்டத் துவங்குவார்கள். வங்கித் தொழில், வட்டித் தொழில், பைனான்ஸ், சீட்டு பிடித்தல் போன்றவற்றில் நல்ல ஆதாயம் உண்டு. பேச்சை ழூலதனமாக கொண்ட தொழிலில் சாதனை படைப்பார்கள். அடுத்தவர் பிரச்சினையை தீர்த்து வைப்பவர். தன் சுய சம்பாத்தியத்தில் வீடு, வாகனம், சொத்து சுகம் போன்ற வசதிகளை அடைவார்கள். ஜாதகருக்கு மூத்த சகோதரத்தால், சித்தப்பாவால் ஆதாயம் உண்டு. பிறவியில் ஏழையாக இருந்தாலும் அதீத பொருளாதார வளர்ச்சி உண்டு.
லாப ஸ்தான அதிபதியின் நட்சத்திர சாரத்தை எந்த கிரகமும் பெறவில்லை எனில் பொது வாழ்க்கையில் பிரச்சினைகள், ஏமாற்றங்கள் வரும். தீய சகவாசத்தால் பெயர் கெடும். எவ்வளவு சம்பாதித்தாலும் இவர்களால் பணத்தை சேமித்து வைக்கவே முடியாது. பொருளாதாரத்தில் தன் நிறைவற்ற நிலையைத் தரும்.
இருதார யோகமும் லாப ஸ்தானமும் ஒரு காலத்தில் இலை மறைவு காய் மறைவாக நடந்த இரண்டாம் திருமணங்கள் அல்லது சட்டத்திற்கு உட்படாத மறைவான திருமண வாழ்க்கை இருந்து வந்தது. தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் வெகு சாதாரணமாகிவிட்டது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற மரபு மறைந்துவிட்டது.
இதற்குக் காரணம் சமூக சீர்கேடா அல்லது ஜாதகமா என்று ஆய்வு செய்தால் சமூகச் சீர்கேடு தான் என்பது என்னுடைய கருத்து. சுமார் 20 வருடங்களுக்கு குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் பெரியவர்களின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். தற்போது ஆண் பெண் இருவரும் படித்து வேலைக்கு செல்வதால் சுய முடிவு எடுத்து தமது வாழ்க்கை சீரழிவதற்கு தாமே காரணமாகிறார்கள்.
7-ம் அதிபதிக்கு லாப ஸ்தான சம்பந்தம் இருந்தால் தம்பதிகள் திரண்ட சொத்து, ககம் நிரம்பியவர்கள். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமும் அனுகூலமும் கிடைக்கும். செல்வம், செல்வாக்கு நிரம்பிய வாழ்க்கை துணை உண்டு. வருமானம் எந்த வழியில் வருகிறது என்று உணர முடியாத வகையில் குபேர சம்பத்து கிடைக்கும். பெரும்பாலும் கூட்டுக் குடும்பமாக வாழ்வார்கள். நல்ல வசதியான வாழ்க்கைத் துணை அமையும். அல்லது திருமணத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். நிலையான பொருளாதார வளர்ச்சி வீடு, வாகன யோகம் உண்டு. வாழ்க்கைத் துணை மற்றும் நண்பர்களுடன் இணைந்து கூட்டுத் தொழிலில் ஈடுபடுவார்கள்.
நல்ல வாடிக்கையாளர்கள் அமைவார்கள். ஏழாமிடம் பலம் குறைந்தால் இருதார யோகத்தைத் தந்து விடும். சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு பொருளாதார வளர்ச்சி உண்டாகும். சிலருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு இரண்டாம் திருமணம் நடக்கும். பொதுவாக 7,11 சம்பந்தம் உள்ளவர்கள் ஊருக்கு ஒன்று, உல்லாசத்திற்கு ஒன்று என்று தான் வாழ்கிறார்கள். இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் எத்தனை திருமணம் நடத்தாலும் திருமண வாழ்க்கை நரகமாகவே இருக்கும். ஊரார் மத்தியில் நன்றாக வாழ்வது போல் தோன்றினாலும் வெறுமையே மிஞ்சும்.
ஒரு ஜாதகத்தில் 7,11-ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் இருதார யோகம் உண்டாகும்.
7-ம் அதிபதி பலம் குறைந்து 11-ம் அதிபதி வலுப்பெறும் போது வெகு சுலபமாக மறு திருமணத்திற்கு அழைத்துச் செல்லும். 2,7-ம் அதிபதிகள் 11-ம் பாவகத்தோடு சம்பந்தம் பெறுதல்,11-ம் அதிபதி 2,7-ம் பாவகத்தோடு சம்பந்தம் பெறுவது, வலுவான தார தோஷம் ஆகும்.
11-ம் பாவகத்திற்கு திரிகோணதிபதிகள் சம்பந்தம் பெறும் போது சட்டப்படியான மறுமணமாகவும், அசுப மற்றும் லக்ன பாவிகள் சம்பந்தம் பெறும் போது சட்டத்திற்கு புறம்பான உறவும் ஏற்படுகிறது.
11-ல் இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் அமர்ந்தாலும் 1, 11-ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெறும் போது இரு தாரம் ஏற்படுகிறது.
7-ம் அதிபதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கிரகம் சம்பந்தம் பெறுவது இரண்டுக்கும் மேற்பட்ட திருமணத்தை கூட தரும். கூட்டுத் தொழிலும் லாப ஸ்தானமும் நான்காவது உப ஜெய ஸ்தானம் 11-ம் பாவகம். 3-ம் பாவகத்திற்கு பாக்கிய ஸ்தானம் 11-ம் பாவகம். 10-ம் பாவகத்திற்கு தன ஸ்தானம் 11-ம் பாவகம். லாப ஸ்தானம் பலம் பெற்றால் பல தொழில் வித்தகர்கள். அண்ணன், தம்பி என குடும்பமே முன்னேற்றத்திற்காக முயற்சி செய்வார்கள். கூட்டுக் குடும்பமாக இருந்து தொழில் முயற்சியில் வெற்றி பெற்றவர்களுடைய ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கும்.
தேவைக்கு அதிகமாக பணம் பொன், பொருள் உள்ளவர்கள் ஜாதகத்தில் 11ம் மிடமான லாப ஸ்தானம் வலிமையாக இயங்கும். ஒரு சிலர் குறுகிய காலத்தில் பணம், புகழ், அந்தஸ்து, வெற்றி பெறுவது 11-ம் அதிபதியின் தசை புக்தி காலங்களில் மட்டுமே என்றால் அது மிகையாகாது. கூட்டுத் தொழிலுக்கு உகந்த கிரக அமைப்பு. பொருளாதார அந்தஸ்து மிகுந்தவர்கள். பொதுச் சேவையில் ஆர்வம் அதிகம். அரசாங்க, அரசியல் ஈடுபாடு, ஆதாயம் அதிகம் உண்டு.
ஒரு ஜாதகத்தில் 11-ம்மிடமான லாப ஸ்தானம் பலம் பெற்று இருந்தால் தீராத நோய், தீர்க்க முடியாத கடன், வழக்கு போன்றவற்றிற்கு பரிகாரம் பலன் தரும். வாழ்க்கையில் வெற்றி பெற 11-ம் இடம் பலம் பெற வேண்டும். 11-ம்மிடமான லாபஸ்தானம் பலம் குறைந்தால் வாழ்க்கை நித்திய கண்டம் பூரண ஆயுளாகவே இருக்கும்.
மனிதனாக பிறந்தவர்கள் அனைவரின் பூர்வ புண்ணிய பலத்திற்கு ஏற்பத்தான் பணம் வரும். தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் விதி பயனுக்கு மீறிய பலன் யாருக்கும் நடக்கப்போவது இல்லை. எனவே அவரவரின் ஜாதகத்தில் 11-ம் பாவகத்திற்கு ஏற்ப திட்டமிட்டு நடந்து கொண்டால் வாழ்க்கை பயணம் இனிமையாக இருக்கும். சுய ஜாதக ரீதியாக 11-ம்மிடம் வலிமை இல்லாதவர்கள் வியாழக்கிழமை குபேரனை வழிபாடு செய்வதால் மேன்மையான பலன்களை பெற முடியும்.
செல்: 98652 20406






