என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரன் பரிகாரம்"

    • சந்திரன் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு திடகாத்திரமான மனநிலை உண்டு.
    • ரிஷப லக்கனத்திற்கு 3-ம் அதிபதியான சந்திரன் ராசியில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும்.

    சந்திரன் ரிஷப ராசியின் மூன்றாவது பாகையான கிருத்திகை நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார். கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான். ஒரு ஜாதகத்தில் சூரியன் ஆன்மாவையும் ஆன்ம பலத்தையும் குறிப்பவர். ஒரு ஜாதகத்தில் சந்திரன் உடலையும் மனதையும் குறிப்பவர்.

    உடலையும் மனதையும் பற்றி கூறும் சந்திரன் ஆன்மாவை பற்றி கூறும் சூரியனின் நட்சத்திரத்தில் உச்சம் அடைந்தால் மனமும் ஆன்மாவும் புனிதம் அடையும். உடலாலும் உள்ளத்தாலும் ஒருவர் உயரும் போது லவுகீக உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அடைய முடியும். சந்திரன் உச்சம் பெற்றவர்கள் ஆன்ம பலம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இந்த தத்துவத்தின் அடிப்படையில் ஒரு ஜாதகத்தில் மனோகாரகன் எனப்படும் சந்திரன் சுப வலிமை பெற வேண்டும். சந்திரன் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு திடகாத்திரமான மனநிலை உண்டு. மதிநுட்பத்துடன் செயல்படுவார்கள். நல்ல தோற்ற பொலிவு உள்ளவர்கள். எந்த சூழ்நிலையிலும் அஞ்ச மாட்டார்கள். தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் தாய்மை உணர்வுடன் வழிநடத்துவார்கள்.

    எளிதில் நோய்கள் அண்டாது. சந்திரன் காலபுருஷ நான்காம் அதிபதி என்பதால் சந்திரன் பலம் பெற்றால் ஸ்திர சொத்துக்கள் இருக்கும். இனி 12 லக்னங்களுக்கும் உச்ச சந்திரன் என்ன பலனை வழங்குவார் என்று பார்க்கலாம்.

    மேஷ லக்னத்திற்கு 4-ம் அதிபதியான சந்திரன் 2ம்மிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். தாயின் அன்பும் ஆசீர்வாதமும் நிரம்பப் பெற்றவர்கள்.

    தாயின் மூலமாக திரண்ட சொத்துக்கள் நகைகள் பணங்கள் கிடைக்கக்கூடிய அமைப்பு உண்டு. பலர் வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் உள்ளவராக இருப்பார்கள். கற்ற கல்வியின் மூலம் பயன் உண்டு. படித்ததை உடனே புரிந்து கொள்ளும் தன்மை இருக்கும். தான் கற்றதை பிறருக்கு உபதேசிக்கும் வல்லமை நிரம்பியவர்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பது பண்ணை தொழில் போன்றவற்றில் ஜாதகருக்கு ஆர்வம் மிகுதியாக உண்டாகும். பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழிலில் வல்லவராக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களின் அனுசரணை இருக்கும். இடத்திற்கு தகுந்தார் போல் தனது பேச்சை மாற்றுவார்கள்.

    ரிஷப லக்கனத்திற்கு 3-ம் அதிபதியான சந்திரன் ராசியில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். ஜாதகர் பிறந்தவுடன் குடும்பத்திற்கு மாற்றம் தரக்கூடிய நல்ல இடப்பெயர்ச்சி நடக்கும். புகழ், கீர்த்தி, வெற்றி, சுய வருமானம், நேர்மை, திறமை, விருத்தி, மங்காத புகழ் உடையவர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

    ஜாதகருக்கு உடன்பிறந்த இளைய சகோதர சகோதரிகள் இருப்பார்கள். உடன்பிறந்தவர்களின் நலனில் அதிக அக்கறை உள்ளவர்களாக இருப்பார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஜாதகருக்கு வருமானம் உண்டாகும். அடிக்கடி தொழில் வேலை உத்தியோகத்தை குடியிருப்பை மாற்றிக் கொண்டே இருப்பார். விடா முயற்சி, தன்நம்பிக்கை, துணிச்சல் மிகுந்தவர்கள். ஆன்மீக ஈடுபாடு உண்டு. அதிகார வர்க்கத்தின் தொடர்புடையவர்கள். வேலை ஆட்கள் யோகம் நிறைந்தவர்கள். பயணம் செய்வதில் விருப்பம் மிகுந்தவர்.


    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி



     

    மிதுன லக்னத்திற்கு தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதியான சந்திரன் தன் வீட்டிற்குப் பின் வீடான 12ம் இடத்தில் உச்சம் பெற்றால் ஜாதகருக்கு மறைமுக வருமானம் அதிகமாக இருக்கும். ஜாதகர் கற்பனையில் கனவுகளில் வாழ்வார்கள். குடும்ப வாழ்க்கை ரகசியம் மர்மம் நிறைந்ததாக இருக்கும். சிலர் உண்ண உறங்க நேரமில்லாமல் கடுமையாக உழைத்துக் கொண்டே இருப்பார்கள். சிலர் எதை பற்றியும் கவலைப்படாமல் நேரத்திற்கு சாப்பிட்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டே இருப்பார்கள். கஞ்சத்தனம் அதிகமாக இருக்கும்.

    ஆதாயம் இல்லாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். உலகில் அனுபவிக்க வேண்டிய இன்பங்களை அனுபவிக்காமல் பணத்தையும் சொத்து சுகத்தையும் கட்டிக் காத்துக் கொண்டு இருப்பார்கள். தானும் அனுபவிக்க மாட்டார்கள் தன்னை சார்ந்தவர்களையும் அனுபவிக்க விடமாட்டார்கள்.

    கடக லக்னத்திற்கு ராசி அதிபதியான சந்திரன் 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் தன ஸ்தான அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் நின்றால் மிகப்பெரிய பொருளாதார அமைப்பு நிறைந்தவராக இருப்பார். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் உள்ளவர்கள். குடும்ப தேவைகளை உடனுக்குடன் நிறைவு செய்வார்கள். சிலருக்கு இரண்டாவது குடும்பம் அமைந்த பிறகு பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். கடக லக்னத்திற்கு 11ம்மிடம் பாதகஸ்தானம் என்பதால் எவ்வளவு பொருளாதாரம் இருந்தாலும் அது ஜாதகரை சார்ந்தவர்களுக்கு தான் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். நல்ல நட்புகள் உண்டு பேச்சில் பெருமிதம் இருக்கும். வாக்கு சம்பந்தமான தொழிலை அதிகம் விரும்புவார்கள்.

    வாக்கு வன்மை உண்டு. கொடுத்த வாக்கை எந்த சூழ்நிலையிலும் தவற விட மாட்டார்கள். தாய் பாசம் பற்றி அடிக்கடி பேசுவார்கள்.

    சிம்ம லக்னத்திற்கு விரயாதிபதியான சந்திரன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவது சிறப்பு அல்ல. சிம்ம லக்னத்திற்கு சந்திரன் உச்சம் பெறுவது சுமாரான பலன்களை தரும். எந்த தொழில் செய்தாலும் நஷ்டம். தொழிலுக்காக பிரயாணம் செய்ய நேரும் அல்லது அலைச்சல் மிகுந்த தொழில் செய்வார். உத்தியோகமே சிறந்தது என்றாலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இருக்காது. தொழில் தொடர்பான மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். அதிக முதலீடு உள்ள தொழில்களை தவிர்ப்பதால் வீண் விரயங்களை கட்டுப்படுத்த முடியும். இடது கண் பாதங்களில் பாதிப்பு இருக்கும். எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் இரவில் நிம்மதியாக உறங்குவார்கள். சிலர் கடைசி காலத்தில் படுத்த படுக்கையாக இருப்பார்கள். அயல்நாட்டு வாழ்க்கையை விரும்புவார்கள். சிலர் அந்திம காலத்தில் வெளியூர் வெளிநாடு வெளி மாநிலத்தில் பிள்ளைகளுடன் கழிப்பார்கள்.

    கன்னி லக்னத்திற்கு லாப அதிபதியான சந்திரன் 9-ம் மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச்சிறந்த அமைப்பாகும். ஜாதகர் அந்தஸ்து, கவுரவம், உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் ஜாதகருக்கு வருமானம் வந்து கொண்டே இருக்கும். செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புடனே வசிப்பார்கள். பல தொழில் வல்லுநராக இருப்பார். பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை அதிகமாக இருக்கும். ஆயிரம் பேருக்கு மத்தியில் ஜாதகர் தனித் திறனுடன் மிளிர்வார்கள். எந்த சூழ்நிலையிலும் பிறரிடம் கையேந்தி வாழ மாட்டார்கள். இரண்டு குடும்ப வாழ்க்கை உண்டு. கூட்டுக் குடும்பத்தில் வசிப்பார். மூதாதையர்களின் சொத்து ஜாதகருக்கு அதிகமாக இருக்கும். ஜாதகரின் எண்ணங்களும் விருப்பங்களும் உடனுக்குடன் நிறைவேறும்.

    துலாம் லக்னத்திற்கு தொழில் ஸ்தான அதிபதியான சந்திரன் 8ம் இடத்தில் உச்சம் பெறுவது நல்லது. முதலீடு உயர்ந்து கொண்டே இருக்கும். முதலீட்டை விட அதிக வருமானம் வந்து கொண்டே இருக்கும். குல கவுரவம் நிரம்பிய வாழ்க்கை துணை அமையும். இளம் வயதில் திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணை மூலமாக வருமானம் உண்டு. பேச்சில் கனிவு கவுரவம் இருக்கும். அறநெறி தவறாமல் வாழ்வார்கள். உயர் கல்வி வாய்ப்பு உண்டு. அறக்கட்டளை தர்ம ஸ்தாபனங்கள் நடத்தும் பாக்கியம் பெற்றவர்கள். தந்தைக்கு இருதார யோகம் உண்டு. ஜாதகர் தாய் வழி பாட்டி வீட்டில் வளர்ந்தவராக இருப்பார். தந்தையை விட தாத்தாவின் மேல் பிரியம் அதிகமாக இருக்கும். தாய்வழி தந்தை வழி சொத்து உண்டு. வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும் ஜாதகர் பிறந்த பிறகு தாய், தந்தைக்கு பொருளாதார மேன்மை உண்டாகும்.

    விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதி பதியாகி ராசிக்கு ஏழாம் இடத்தில் பெறுவது சற்று சுமாரான பலனை தரும். பரம்பரை கூட்டுத் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் சம்பந்தம் இல்லாத நபர்களால் நிம்மதி குறைகிறது. ஏழில் சந்திரன் உச்சம் பெற்ற விருச்சிக லக்னத்தினர் திருமணம் ஏன் நடந்தது என்று வருந்தும் வகையில் திருமண வாழ்க்கை இருக்கிறது. பாதகாதிபதி ஏழில் உச்சம் பெறுவதால் கூட்டுத் தொழில் வஞ்சிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் குறைவுபடும். ஜாதகரின் சந்திர தசை காலங்களில் விருச்சிக லக்னத்தவரின் தாய், தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் என அனைத்தும் பாதிப்படைகிறது. பொதுவாக விருச்சிக லக்னம் கால புருஷ எட்டாமிடம் என்பதால் எளிதில் எந்தப் பிரச்சினையும் எளிதில் வெளியில் தெரிவிக்காத பிரச்சினை நன்றாக தீவீரமடைந்த பின்பே வெளியில் தெரியும். கடுமையான பாதகம் உருவாகும்.

    தனுசு லக்னத்திற்கு அஷ்டமாதிபதியான சந்திரன் மற்றொரு மறைவு ஸ்தானமான ஆறாம் இடத்தில் உச்சம் பெறுவது சிறப்பு அல்ல. கெட்டவன் கெடுவது நல்லது. கெட்டவன் உச்சம் பெறுவது ஜாதகருக்கு உச்சகட்ட கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகளை அதிகம் அதிகப்படுத்தும். உத்தி யோகம் சிறப்பாக இருக்காது அல்லது அடிக்கடி உத்தியோகத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். சிலர் நடக்காததை நடந்ததாக நினைத்து கற்பனை பயத்தை வளர்த்துக் கொள்வார்கள். சந்திரனுக்கு ராகு கேது சம்பந்தம் இருந்தால் புத்தி தடுமாற்றம் மிகையாக இருக்கும். சிலர் அடிப்படை தேவைக்கு கூட போராட வேண்டிய நிலை இருக்கும். மிகச் சுருக்கமாக சந்திர தசை காலங்களில் ஜாதகரின் உடலில் உயிரை மட்டும் விட்டு வைத்து மனிதனை நிர்கதியாக்குகிறது. பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவில் சென்று குடியேறுவார்கள்.

    மகர லக்னத்திற்கு சந்திரன் களத்திர ஸ்தான அதிபதியாகும். அவர் 5ம் மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால்

    ஜாதகருக்கு மிகச்சிறப்பான வாழ்வியல் மாற்றத்தை ஏற்படும். பூர்வீகம், குலதெய்வம், குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு நன்மை தரும்.ஜாதகர் திறமையான அணுகு முறையுடன் கூடிய சாமார்த்தியசாலியாக திகழ்வார்கள். பேச்சில் நிதானமும், பொறுமையும் இருக்கும். ஜாதகர் உயர்ந்த குலத்தில் பிறந்தவராக இருப்பார். தன்னைத் தானே உணரும் வலிமை படைத்தவராக இருப்பார்கள். காதல் திருமணம் நடக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். குழந்தை பிறந்த பிறகு வாழ்வாதாரம் பல மடங்கு உயரும். கூட்டு தொழில் பல மடங்கு நன்மை தரும். குடும்ப உறவுகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பார்கள். நிச்சயமாக சொத்து வாகன வசதிகள் இருக்கும். இயல் இசை நாடகப் பிரியர்கள்.

    கும்ப லக்னத்திற்கு 6ம் அதிபதியான சந்திரன் 4-ம்மிடத்தில் உச்சம் பெறுவது சிறப்பான பலன் அல்ல. கடன், நோய், வம்பு, வழக்கு எதிரியை உருவாக்கி தரக்கூடிய கிரகமான சந்திரன் நான்காம் இடத்தில் உச்சம் பெறுவதால் ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் இருக்கும். கல்வியில் தடை உண்டாகும். அல்லது அதிகமாக கல்லி கடன் பெற்று உயர் கல்வி படிப்பார்கள். நான்காம் அதிபதிக்கு ஆறாம் அதிபதி சம்பந்தம் இருந்தால் ஜாதகருக்கு முதல் சொத்து விரயமாகும் அல்லது சொத்தை விற்று கடன் தீர்ப்பார்கள். சொத்தின் மதிப்பை விட கடனின் மதிப்பு அதிகமாக இருக்கும். 6ம் இடத்திற்கு லாப ஸ்தானம் நான்காம் இடம் என்பதால் இது போன்ற அமைப்பு இருப்பவர்கள் சொத்து வாங்கும் முன்பு தாயிடம் அல்லது தாய் மாமாவிடம் யாசகம் பெற்று சொத்து வாங்க வேண்டும்.

    மீன லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான சந்திரன் 3-ம் இடமான வெற்றி ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிக உயர்வான அமைப்பாகும். ஆன்மீக நாட்டம் தியாக சிந்தனை மிகுந்தவராக இருப்பார். பிறருக்கு உபதேசம் செய்து கொண்டே இருப்பார்கள். புனித யாத்திரை செய்யும் பாக்கியம் உள்ளவர்கள். முதலீடு இல்லாத கமிஷன் தொழில்கள் பல மடங்கு வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொடுக்கும். வயது கூட கூட ஜாதகருக்கு வருமானம் கூடிக் கொண்டே இருக்கும். குல கவுரவம் நிரம்பியவர்கள். முதல் குழந்தை பிறந்த பிறகு பூர்வீகத்தை விட்டு வெளியேறி முன்னேறுவார்கள் ஆதாயம் இல்லாத விஷயங்களில் ஈடுபட மாட்டார்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி இடம் மாறுவார்கள். சாதாரண மனிதனாக இருந்தால் கூட சாதனை மனிதனாக மாறுவார்கள். பொதுவாக ஒரு ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருப்பதால் ஜாதகரின் சிந்தனை ஓட்டம் நல்ல விதமாக இருக்கும். உச்ச சந்திரனால் இன்னல் களை அனுபவிப்பவர்கள் பவுர்ணமி அன்று பால் சாதம் தானம் வழங்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.

    செல்: 98652 20406

    • சந்திரன் ஜெனன காலத்தில் எங்கு இருக்கிறாரோ அதை ஜென்ம ராசி என்கிறோம்.
    • நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலக அந்தந்த பரிகார ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்வது நல்லது.

    ஒருவருக்கு கற்பனை வளம் அதிகரித்து அவரை கவிஞராக்கும் பலம் சந்திரனுக்கு உண்டு. சந்திரன் மனநிலைக்கு காரகனாகிறார். அழகும், கவர்ச்சியும் கொண்ட சந்திரனை அழகான எதற்கு வேண்டுமானாலும் ஒப்பிடலாம். பொதுவாக பெண்களின் அழகை வர்ணிப்பதற்கு சந்திரன் மிகவும் உறுதுணையாக இருப்பார். வட்ட நிலா போன்ற முகம், பிறை போன்ற நெற்றி, புருவம் என பல உவமைகள் உண்டு. பெண்களும் தன் தலைவன் பிரிந்து ஏக்கத்தை யாரிடமும் கூறமுடியாமல் இரவில் நிலாவுடன்தான் பகிர்ந்து கொள்வார்கள். ஆண்களும் நிலவை ஒரு பெண்ணாக நினைத்து காதலிக்கு தூது விடுவார்கள். எத்தனை எத்தனை கவிஞர்களை கற்பனை திறன் மிக்கவர்களாக உருவாக்கிய பெருமை நிலாவிற்கு உண்டு தெரியுமா? நிலவையே கையில் பிடித்ததாக நினைத்து கொஞ்சி விளையாடும் காதலர்களும் உண்டு.

    நிலாவைக் காட்டி தாய் தன் பிள்ளைக்கு சோறுட்டுவாள். பாட்டி தன் பேத்திகளுக்கு நிலவில் ஆயா வடை சுட்டதாக கதைகள் சொல்லுவாள். இதையெல்லாம் தாண்டி விஞ்ஞானம் நிலவிற்கு சென்று மனிதனால் வாழ முடியும் என்றும் பனிக்கட்டிகள் உள்ளதாக சான்றுகள் உள்ளது என்றும் உலகிற்கு உணர்த்தி உள்ளது. நாம் நிலாவிற்கு ஜோதிடத்தில் உள்ள பங்கையும் பற்றி பார்ப்போம்.

    சந்திரன், நிலா, திங்களன், வதனமதி, மதிவதனன், மாதுர்காரகன், மனோகாரகன் என வர்ணிக்கப்படும் சந்திரன் நவக்கிரகங்களில் இரண்டாம் இடத்தை வகிப்பவர். சந்திரன் ஒரு பெண் கிரகமாவார் ஒருவரின் ஜாதகத்தை கணிப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர் சந்திரன். சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரமே ஒருவரின் ஜெனை கால நட்சத்திரமாகிறது. அதனைக் கொண்டுதான் அவருக்கு ஏற்படக்கூடிய தசாபுக்திகளையும் கணக்கிடுகிறோம். இதன் மூலமே அவரின் முழு ஜாதகப் பலனை அறியமுடியும்.

    சந்திரன் ஜெனன காலத்தில் எங்கு இருக்கிறாரோ அதை ஜென்ம ராசி என்கிறோம். சந்திரன் ஒருவருக்கு பலம் பெற்றிருந்தால் மற்றவர்களிடம் பாசமாக நடக்கும் பண்பு, நல்ல மனநிலை, கவிதை, கற்பனைத் திறன், கௌரவம், புகழ், நிம்மதியான உறக்கம், அரசு வழியில் ஆதரவுகள் உண்டாகும்.

    சந்திரன் மனோகாரகன் என்பதால் அவர் பலமிழந்திருந்தால் மனக்குழப்பம், மன நோய், மற்றவர்களிடம் ஒத்துப்போக முடியாத நிலை, எதிம் தோல்வி போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும்.

    சந்திரன் கோட்சார ரீதியாக 1,3,6,7,10,11 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும் நாட்களில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். சந்திரன் ஜென்ம ராசிக்கு 8 ல் சஞ்சரிப்பதை சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன் மனோகாரகன் என்பதால் இந்த சந்திராஷ்டம நாட்களில் தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும். சந்திரனின் இந்த கோட்சார சஞ்சாரத்தைக் கொண்டுதான் தினப்பலன் ஜோதிடர்களால் கணிக்கப்படுகிறது.

    சந்திர திசை 10 வருடங்கள் நடைபெறும். சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் சஞ்சரிக்கிறார். ராசி மண்டலத்தை சுற்றிவர 27 நாட்கள் ஆகிறது. சூரியன், சந்திரன் ஆகிய இருவரும் இணைந்திருக்கும் நாளை அமாவாசை என்கிறோம். சூரியனுக்கு 7 ல் சந்திரன் சஞ்சரிக்கும் நாளை பௌர்ணமி என்கிறோம். சூரியன் இருக்கும் இடம் முதல் 7ம் வீடு வரை சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களை வளர்பிறை என்கிறோம். 7ம் வீடு முதல் 12ம் வீடுவரை சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களை தேய்பிறை என்கிறோம். இந்த இடைவெளி நாட்களை கொண்டுதான் திதி நிர்ணயம் செய்யப்படுகிறது. அதே போல சந்திரனுக்கும், சூரியனுக்கும், இடையில் பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது சந்திர கிரகணம் உண்டாகிறது. சந்திரனின் பலத்தைக் கொண்டுதான் திருமண முகூர்த்தங்களும் நிர்ணயம் செய்யப்படுகிறது. சந்திரன் ஜெனன காலத்தில் நின்ற ராசியை ஜென்ம ராசி என்பதுபோல ஜென்ம ராசியைக் கொண்டுதான் கோட்சார ரீதியாக மற்றகிரகங்களின் சஞ்சாரபலனை அறியமுடியும்.

    சந்திரன் ரிஷபத்தில் உச்சமும், விருச்சகத்தில் நீசமும், கடகத்தில் ஆட்சியும் பெறுகிறார். சந்திரனுக்கு பகை வீடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரனுக்கு மூல திரிகோண வீடு ரிஷபமாகும்.

    சந்திரன் பெண் கிரகமாவான். பாஷை தமிழ், நிறம் வெண்மை, ஜாதி வைசியம், திசை தென்கிழக்கு, ரத்தினம் முத்து, தானியம் நெல், புஷ்பம் வெள்ளை அல்லி, வாகனம் நரி, சுவை தித்திப்பு, உலோகம் ஈயம், வஸ்திரம் வெள்ளை, தேவதை பார்வதி, குணம் வளர்பிறை, சௌமியர் தேய்பிரை, குரூரர் சமித்து எருக்கன் கள்ளியாகும்.

    சந்திரனின் நட்பு வீடு மிதுனம், சிம்மம், கன்னி. சமவீடுகள் மேஷம், துலாம், தனுசு, மகம் கும்பம், மீனம், நீசவீடு விருச்சிகம். நட்பு கிரகங்கள் சூரியன், குரு.

    சந்திரனின் காரகத்துவங்கள்

    மாதுர்காரகனாகிய சந்திரன் தாயார் பராசக்தி, கணவதி, சுவையான விருந்து, உபசரிப்புகள், ஆடம்பரமான ஆடைகள், குதிரை, தூக்கம், ஏற்றத்தாழ்வான பொருளாதார நிலை, உடல்நிலைகள், சீதள நோய்கள், இடது கண்புருவம், உத்தியோகம், கூழ், முத்து, வெண்கலம், வெண்ணெய் அரிசி, உப்பு, மீன், உழவர்கள், உப்பு காய்ச்சுபவர், வண்ணான், தர்ம சத்திரங்கள், சாமரம், அந்நிய நாட்டு பயணங்கள் கடல் கடந்து செல்லுதல் போன்றவற்றிற்கு காரகம் வகிக்கிறார்.

    சந்திரனால் உண்டாகக்கூடிய நோய்கள்

    தூக்கமின்மை, சோம்பேறித்தனம், மன நிலை பாதிப்பு, மஞ்சள் காமாலை, ஜல தொடர்புடைய நோய்கள், சீதபேதி, உணவு செரிக்காத நிலை, குடல் புண், முகப்பரு, சுவையை அறியும் தன்மையை இழக்கும் நிலை, தைரிய குறைவு, ஜலத்தால் கண்டம், தண்ணீரில் உள்ள மிருகத்தால் கண்டம், பெண்களால் பாதிப்பு, ரத்தத்தில் தூய்மையில்லாத நிலை, சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் சந்திரனால் ஏற்படும்.

    ஒருவருடைய ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் சுபராகவும், தேய்பிறை சந்திரன் பாவியாகவும் விளங்குகிறார். வளர்பிறை சந்திரன் கேந்திர திரிகோணத்திலோ 2,11 லோ அமைந்து திசை நடைபெற்றால் நற்பலன்கள் உண்டாகும். தேய்பிறை சந்திரனாக இருந்தாலும் 3,6,10, 11 ல் இருந்து திசை நடைபெற்றால் நற்பலன்களை வழங்குவார். சந்திரன் ராகு, கேது சேர்க்கை பெற்று அமைவது கிரகண தோஷமாகும். கிரகண தோஷம் ஏற்பட்டு திசை நடைபெற்றால் மனக்குழப்பம், மன சஞ்சலம் தாய்க்கு கண்டம் உண்டாகும்.

    சந்திரன் தான் நின்ற வீட்டிலிருந்து 7ம் வீட்டை மட்டுமே பார்வை செய்வார். வளர்பிறை சந்திரன் வளமான யோகத்தை தருவது போல தேய்பிறை சந்திரன் தருவதில்லை.

    சந்திரனால் உண்டாகக்கூடிய யோகங்கள்

    சந்திராதியோகம், சந்திரமங்கள யோகம், சகடயோகம், அமாவாசையோகம், கேமத்துருவ யோகம், அனபாயோகம், சுனபாயோகம்.

    சந்திராதியோகம்

    சந்திரனுக்கு 6,7,8 ல் சுபகிரகம் இருப்பது. இதனால் தைரியம், துணிவு, நீண்ட ஆயுள், எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.

    சந்திர மங்கள யோகம்

    சந்திரனுக்கு 1,4,7,10 ல் செவ்வாய் இருப்பது. இதனால் வீடு, வானம், செல்வம், செல்வாக்கு யாவும் உண்டகும்.

    சகடயோகம்

    சந்திரனுக்கு 6,8,12 ல் குரு இருப்பது. வாழ்வில் இன்பமும் துன்பமும் சரிசமமாக இருக்கும்.

    அமாவாசை யோகம்

    சந்திரனும், சூரியனும் இணைந்து இருப்பது. இதனால் சுறுசுறுப்பாகவும், கல்வியில் சிறந்தவராகவும், வாழ்வில் சாதனைகள் செய்யக்கூடியவராகவும் இருப்பார்கள்.

    மேத்ரும யோகம்

    சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இல்லாமல் இருப்பது. இதனால் வாழ்வில் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும்.

    அனபாயோகம்

    சந்திரனுக்கு 2ல் சுபகிரகம் இருப்பது. இதனால் சொந்த முயற்சியால் முன்னேற்றம், உயர் பதவி உண்டாகும்.

    சுனபா யோகம்

    சந்திரனுக்கு 12 ல் சுபகிரகம் இருப்பது. இதனால் செல்வம், செல்வாக்கு, புகழ், பதவி யாவும் உண்டாகும்.

    சந்திர ஓரையில் செய்ய வேண்டியவை

    பெண் பார்த்தல், நகைகள் செய்தல், உறவினரைக் காணுதல், பசு, கன்று வாங்குதல், இசை பயில, கல்வி கற்க, ஜலத்தில் பிராயாணம் செய்ய, வியாபாரம் செய்ய உத்தமம்.

    நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலக அந்தந்த பரிகார ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்வது நல்லது.

    சந்திரனுக்குரிய திருத்தலங்கள் இரண்டு 1. திங்களூர், 2. திருப்பதி

    திங்களூர்

    திங்கள் என்றால் சந்திரன். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய அப்பூதியடிகளின் சொந்த ஊராகும். தமிழ்நாட்டிலுள்ள சைவத் திருப்பதிகளுள் தேவார பாடல் பெற்ற திருத்தலம் இத்திங்களூராகும். இது சந்திரனுக்கு உரிய ஸ்தலமாதலால் இப்பெயர் பெற்றது. இத்தலம் திருவையாற்றிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    திருப்பதி

    இது சந்திரன் பூஜித்து பெரும்பேறு பெற்ற ஸ்தலமாகும். இது ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மலையடிவாரத்திலிருந்து நடந்தும் பஸ் மூலமும் செல்லலாம். திருப்பதி சென்று வந்தாலே வாழ்வில் ஒரு திருப்புமுனை உண்டாகும். இக்கோவிலில் எம்பெருமான் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    சந்திரனை வழிபடும் முறைகள்

    திங்கட்கிழமைகளில் விரதம் இருத்தல் (சோம வார விரதம்), பௌர்ணமி நாட்களில் சாதத்தில் தேனும் சர்க்கரையும் கலந்து செப்பு பாத்திரத்தில் சந்திரனுக்கு படைப்பது, செம்பருத்தி பூவால் அர்ச்சனை செய்வது, முத்து பதித்த மோதிரம் அணிவது, வெங்கடாசலபதியை தரிசிப்பது, திருப்பதி சென்று வருவது, சந்திரனின் அதிதேவதையான பார்வதி தேவியை திங்களன்று வணங்குவது, ஸ்ரீபராசக்தி, துர்க்கா தேவியை வழிபடுவது, இரண்டு முகங்கள் கொண்ட ருத்ராட்சையை அணிந்து கொள்வது,

    நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் பெண்களுக்கு தானம் தருவது, வெள்ளி பாத்திரங்களை உபயோகிப்பது, வெள்ளை நிற ஆடை அணிவது, எப்போதும் வெள்ளை நிற கைக்குட்டை வைத்திருப்பது.

    அதுபோல ஓம் ஷரம் ஸ்ரீம் ஷெளரம் சந்திராய நமஹ என சந்திரனின் மூல மந்திரங்களை 40 நாட்களுக்கு தினம் 250 வீதம் 10,000 தடவை ஜெபிப்பது.

    சந்திராயன விரதம் என்ற முறையில் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை அன்று 1 கவளம் அடுத்த நாள் 2 கவளம் என வரிசையாக ஒவ்வொரு நாளுக்கு ஒரு கவளம் மட்டும் உணவு சேர்த்து மறுபடியும்

    பௌர்ணமியன்று முழு உபவாசம் இருப்பது.

    ×