என் மலர்
புதுச்சேரி
வாணரப்பேட்டையில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்ய முயற்சித்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் சீனிவாசன் (வயது 30). சுமை தூக்கும் தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திவாகர் என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது திவாகரை, சீனிவாசன் தாக்கி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த திவாகர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் சீனிவாசன் தலைமறைவானார். பின்னர் திவாகர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுவை திரும்பிய சீனிவாசன் ராசுஉடையார் தோட்டம் பகுதியில் உள்ள தனது அக்கா மேரியின் வீட்டிற்கு சென்றார். இதனை அறிந்த திவாகர், தனது நண்பர்கள் விக்கி, போஸ்கோ உள்பட 3 பேருடன் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு சென்றார். அவர்களை பார்த்த உடன் சீனிவாசன் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அவர்கள் அவரை ஓட ஓட விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டினர். இதில் சீனிவாசனுக்கு தலை, கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்தனர். இதனை பார்த்த உடன் அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
வெட்டுக்காயம் அடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து திவாகர் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தவளக்குப்பத்தில் ஆன்லைன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 34). இவர் புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் ஸ்ரீநிவாசா அவின்யூ பகுதியில் வீடு வாங்கி குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்யும் தொழில் செய்துவந்தார். இவருக்கு தேன்மொழி (32) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தேன்மொழி தோழி ஒருவருடன் கோவிலுக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு பூட்டப்பட்டிருந்ததால், தான் வைத்திருந்த மற்றொரு சாவியால் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது சமையல் அறையில் ஜெயக்குமார் தூக்கில் தொங்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேன்மொழி, கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, ஜெயக்குமாரை மீட்டு பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜெயக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆன்லைன் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் மணல் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு சங்கராபரணி ஆற்று பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஆயில் நிறுவனம் அருகே ஆற்றில் இருந்து 3 பேர் மினி லாரியில் மணல் திருடிக்கொண்டிருந்தனர்.
இதை பார்த்தவுடன் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உத்திரவாகிணிபேட்டை சேர்ந்த சிவா, பாஸ்கர், ஜனா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
வெளிமார்க்கெட்டில் ரூ.300 கோடி கடன் வாங்க கவர்னர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரசிடம் இருந்து கடந்த மாதம் 27-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை கவர்னர் மாளிகைக்கு 37 கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
ஏனாம் பெருந்தலைவர் காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியை ஜூனியர் கல்லூரியாக தரம் உயர்த்துதல், நிதித் துறையின் கீழ் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்காக வெளி மார்க்கெட்டில் ரூ.300 கோடி கடன் வாங்குதல், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தாழ்த்தப்பட்டோருக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 597 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு 2 தவணையாக மத்திய பங்குத்தொகை ரூ.3 கோடியே 45 லட்சத்து 60 ஆயிரம் வழங்குதல், மடுகரை மரகதவள்ளி அம்மாள் கோவிலில் அறங்காவல் குழு அமைத்தல், மகளிர் மேம்பாட்டுதுறையின் கீழ் 1 லட்சத்து 54 ஆயிரத்து 847 முதியோருக்கு செப்டம்பர் மாத முதியோர் பென்ஷனுக்காக ரூ.29 கோடியே 65 லட்சம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளார்.
இந்த தகவலை கவர்னர் சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் தெரிவித்துள்ளார்.
மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்கவேண்டும், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை புதுவையில் அமல்படுத்தவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்துள்ள ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதம் ஆகும். இந்த திட்டத்தின்படி, சொந்த மாநிலத்தில் இருந்து இடம்பெயரும் போது தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் படி தங்களுக்குரிய உணவு தானியங்களை அவரவர் வசிக்கும் இடத்தில் வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்பட்டு உள்ளது.
நமது அண்டை மாநிலமான தமிழகத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மற்றும் இலவசமாக பொருட்கள் வழங்கும் ரேஷன் கடைகளை மூடி சாதனை புரிந்துள்ளது. ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசியை அல்லது அதற்கான பணத்தை பலமாதங்களாக கொடுக்காமல் ஏமாற்றி வருகிறது.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளபடி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் 1 கிலோ அரிசி ரூ.3-க்கும், 1 கிலோ கோதுமை ரூ.2-க்கும் வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்த வேண்டும். மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்க வேண்டும், அங்கு வேலை செய்த ஊழியர்களுக்கு சம்பள பாக்கி முழுவதும் அரசு வழங்க வேண்டும். இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்தவில்லை என்றால் பா.ஜ.க. சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சூடு, சொரணை இல்லாமல் இருப்பதாக அமைச்சரே பேசி இருப்பது வெட்கக் கேடானது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. போராட்டம் நடத்துவது அவர்களது உரிமை. அதை நான் எதிர்க்கவில்லை. போராட்டங்கள் நடத்துவதற்காக மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பில்லாத வகையில் பல இடங்களை மாவட்ட நிர்வாகமே தேர்வு செய்து வைத்துள்ளது.
அந்த இடங்களில் நடத்தாமல் பழைய பஸ் நிலையம் அருகில், உழவர் சந்தைக்காக மக்கள் கூடும் பிரதான சாலையை மறித்து உண்ணாவிரதம் இருக்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுபோல் மற்ற எந்த அரசியல் கட்சிக்காவது அங்கு சாலையை மறைத்து போராட்டம் நடத்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அனுமதி வழங்குமா?
மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாத காங்கிரஸ் ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பது வேதனையானது. இந்த சூழ்நிலையில் உண்ணாவிரதத்தில் பேசிய அமைச்சர் சூடு, சொரணை இல்லாமல் இருக்கிறோம் என்று பேசி இருப்பது வெட்க கேடானது. இவ்வாறு அமைச்சர் கூறுவது இந்த அரசின் பலவீனத்தை காட்டுகிறது.
முதல்-அமைச்சராக உள்ள நாராயணசாமி மக்கள் நலனை கருத்தில் கொண்டு தேவையில்லாத பிரச்சினைகளையும் மோதல் போக்கை கடைபிடிக்காமல் கவர்னர், மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி மாநில வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும்.
தனிப்பட்ட கோப தாபங்களை தவிர்த்து, மக்கள் நலன், கொரோனா சிகிச்சைக்கு தேவையான நிதியுதவி ஆகியவற்றுக்காக கவர்னரை முதல்-அமைச்சர் சந்தித்து பேச வேண்டும். தற்போது மருத்துவ துறைக்கு அதிகப்படியான நிதி தேவை. எனவே பட்ஜெட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தேவையற்ற திட்ட நிதிகளை மக்கள் உயிர் காக்க எம்.எல்.ஏ.க்கள் அனுமதியோடு சுகாதாரத்துறைக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முத்தியால்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை மெயின்ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் சின்னகோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்கிற வெங்கடேஷ் (வயது 22) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு ஓட்டி வந்ததும் அம்பலமானது. இதையடுத்து வெங்கடகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில் பள்ளிகளை திறப்பது என்பது ஏற்புடையதல்ல என்று புதுவை அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வருகிற 8-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்து இருப்பது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு:-
தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக் குமார்:-
பாடங்களில் உள்ள சந்தேகங்களை மாணவர்கள் நிவர்த்தி செய்து கொள்வதற்காகவே வகுப்புகள் திறக்கப்படுவதாகவும், வருகைப்பதிவு கட்டாயமல்ல என்று அரசு தெரிவித்துள்ளது. அப்புறம் எதற்கு பள்ளிகள் திறப்பு அறிவிப்பு. ஆன்லைனில் வகுப்புகள் நடக்கும் போது, அதில் சந்தேகம் கேட்பது தடை செய்யப்பட்டுள்ளதா? கொரோனாவால் அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது, பிள்ளைகள் எப்படி தன்னிச்சையாக பாதுகாப்பு முறைகளை கையாள்வார்கள்.
பள்ளிகளுக்கு வரும் வழியில் கடைகளுக்கோ, வேறு இடங்களுக்கோ செல்ல மாட்டார்கள் என்பதை யார் உறுதி சொல்ல முடியும். பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு சந்தேகம் கேட்க வந்தால் கொரோனா தொற்றாதா? அப்படித் தொற்றினால் அந்த பழியை போடுவதற்காகத் தான் பெற்றோர் அனுமதியை அரசு கேட்கிறதா. தற்போதைய சூழலில் பிள்ளைகளுக்கு தேவையான மடிக்கணினி, இலவச இண்டர்நெட் சேவை போன்றவை பற்றித்தான் யோசிக்க வேண்டுமே தவிர உயிரோடு விளையாடும் முடிவுகளை எடுக்கக் கூடாது.
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர்:-
கொரோனா அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. இந்த சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பு என்பது தொற்றை அதிகரிக்கத்தான் செய்யும். எனவே அரசு தமிழகத்தின் நடைமுறைகளை பின்பற்றி புதுவையில் கொரோனா தாக்கத்தை குறைக்க வேண்டும். பள்ளிகளை திறக்கும் போது வளாகம் மற்றும் வகுப்பறைகள் என்ன நிலையில் இருக்கும் என்பதை அரசு ஆய்வு எதுவும் செய்யவில்லை. தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் கொரோனா தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த விஷயத்தில் அரசு அவசரப்படக் கூடாது. தற்போதைய சூழ்நிலைகளை ஆராய்ந்து பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டு அதன்பின் பள்ளிகளை திறப்பதே சிறந்தது.
என்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் என்.எஸ்.ஜெ. ஜெயபால்:-
கொரோனா கொடிய நோய். அது வேகமாக பரவி மக்களை பாதிக்கிறது. இதற்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழகத்தில் கூட முதலில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தனர். அதன்பின் அந்த முடிவை தள்ளி வைத்து விட்டனர்.
பள்ளிகள் திறக்கும் போது மாணவ-மாணவிகளிடையே வேகமாக பரவி பாதிப்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அரசு இதுபோன்ற சூழ்நிலையில் அவசரப்படாமல் அனைத்து கட்சியினரையும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். தற்போது உள்ள சூழலில் பள்ளிகளை திறப்பது சரி இல்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ஏம்பலம் செல்வம்:-
புதுவை மாநிலத்தில் விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பது இல்லை. முதல்-அமைச்சர், அமைச்சர்களே சமூக இடைவெளி இல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றால் அவர்களை கட்டுப்படுத்துவது யார்?
9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை கட்டுப்படுத்துவது எளிதல்ல. தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் சூழலில் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்பது ஏற்புடையதாக இருக்காது. டிசம்பர் மாதத்திற்கு பின்னர் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு ஆலோசிக்கலாம்.
அ.ம.மு.க. மாநில செயலாளர் வக்கீல் வேல்முருகன்:-
தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறந்தால் மாணவர்களுக்கு அரசு பாதுகாப்பு கொடுக்குமா என்பது விடை கிடைக்காத கேள்வி. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து வரும் வரை ஆன்லைன் வகுப்பு முறையையே கடைபிடிக்க வேண்டும்.
கொரோனாவை தடுக்க முககவசம், சமூக இடைவெளி மற்றும் சானிடைசர் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் மாணவர்களுக்கு இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு இருக்காது. அரசால் மாணவர்களுக்கு பாதுகாப்பும் வழங்க முடியாது. எனவே தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகளை திறக்காமல் இருப்பது நல்லது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பாகூர் அருகே பணியில் இருந்த சுகாதார துறை ஊழியர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகூர்:
புதுச்சேரி மாநிலம் பாகூர் தெற்கு வீதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 27). புதுச்சேரி சுகாதார துறையில் தற்காலிக ஊழியரான இவர் குருவிநத்தம் துணை சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம் போல் அரவிந்தன் பணிக்கு சென்றுள்ளார். காலை 9 மணியளவில் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு அவரது உடலை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அரவிந்தன் திடீரென இறந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். இடங்கள் 249 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவ கல்லூரி உள்ளது.
இக்கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்தது. இது வருகிற 2020-2021-ம் கல்வியாண்டில் 249 இடங்களாக உயர்த்தப்பட்டு உள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய இடஒதுக்கீடு 10 சதவீதம் வழங்குவதையொட்டி இந்த இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
புதுவை ஜிப்மர் கல்லூரியில் 150 இடங்கள் இருந்தது. தற்போது 37 இடங்கள் அதிகரித்து 187 ஆக உயர்ந்து உள்ளது. காரைக்கால் ஜிப்மர் கல்லூரியில் 50 இடங்கள் இருந்தது.
தற்போது 12 இடங்கள் அதிகரித்து 62 ஆக உயர்ந்துள்ளது. புதுவை மாணவர்களுக்கு இதுவரை 54 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்து வந்த நிலையில் சீட் அதிகரித்ததன் மூலம் 65 இடங்கள் இனிமேல் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கிடைக்கும்.
பல்வேறு மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் ஜிப்மரில் எம்.பி. பி.எஸ். இடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததற்காக கவர்னர், முதல்- அமைச்சர், தலைமை செயலாளர், ஜிப்மர் இயக்குனர் ஆகியோருக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
புதுவையில் மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவ கல்லூரி உள்ளது.
இக்கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்தது. இது வருகிற 2020-2021-ம் கல்வியாண்டில் 249 இடங்களாக உயர்த்தப்பட்டு உள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய இடஒதுக்கீடு 10 சதவீதம் வழங்குவதையொட்டி இந்த இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
புதுவை ஜிப்மர் கல்லூரியில் 150 இடங்கள் இருந்தது. தற்போது 37 இடங்கள் அதிகரித்து 187 ஆக உயர்ந்து உள்ளது. காரைக்கால் ஜிப்மர் கல்லூரியில் 50 இடங்கள் இருந்தது.
தற்போது 12 இடங்கள் அதிகரித்து 62 ஆக உயர்ந்துள்ளது. புதுவை மாணவர்களுக்கு இதுவரை 54 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்து வந்த நிலையில் சீட் அதிகரித்ததன் மூலம் 65 இடங்கள் இனிமேல் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கிடைக்கும்.
பல்வேறு மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் ஜிப்மரில் எம்.பி. பி.எஸ். இடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததற்காக கவர்னர், முதல்- அமைச்சர், தலைமை செயலாளர், ஜிப்மர் இயக்குனர் ஆகியோருக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி அருகே சேதாரப்பட்டில் உள்ள தனியார் வயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே சேதாரப்பட்டில் உள்ள தனியார் வயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலை முழுவதும் எரிவதால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள், பொருட்கள் எரிந்து சேதமானது.
தொழிற்சாலையில் எரியும் தீயை அணைக்கும் பணியில் 8க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி அருகே சேதாரப்பட்டில் உள்ள தனியார் வயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலை முழுவதும் எரிவதால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள், பொருட்கள் எரிந்து சேதமானது.
தொழிற்சாலையில் எரியும் தீயை அணைக்கும் பணியில் 8க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 8-ந்தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி புதுவை, காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கியுள்ளனர். ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 5-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.
இதையொட்டி அன்றைய தினம் வகுப்பறைகளை சுத்தம் செய்வது கிருமிநாசினி தெளித்தல், சமூக இடைவெளியை கடைபிடித்து மாணவர்களை அமரச் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 8-ந் தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களை சந்தித்து பாடங்களில் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
முன்பு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் தான் பள்ளிகள் செயல்பட்டன. தற்போது ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும். திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களை சந்தித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். மாணவர்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும்தான் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
தனியார் பள்ளிகள் முழு நேரம் வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை. இதனை கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடும். தனியார் பள்ளிகள் அரசின் விதிமுறைகளை மீறி வகுப்புகள் நடத்தினால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளை முழுமையாக திறப்பது குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி புதுவை, காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கியுள்ளனர். ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 5-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.
இதையொட்டி அன்றைய தினம் வகுப்பறைகளை சுத்தம் செய்வது கிருமிநாசினி தெளித்தல், சமூக இடைவெளியை கடைபிடித்து மாணவர்களை அமரச் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 8-ந் தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களை சந்தித்து பாடங்களில் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
முன்பு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் தான் பள்ளிகள் செயல்பட்டன. தற்போது ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும். திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களை சந்தித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். மாணவர்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும்தான் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
தனியார் பள்ளிகள் முழு நேரம் வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை. இதனை கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடும். தனியார் பள்ளிகள் அரசின் விதிமுறைகளை மீறி வகுப்புகள் நடத்தினால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளை முழுமையாக திறப்பது குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






