என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் 42 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மதுபான கடைகள் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது.

    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. மதுபார்கள், சுற்றுலா பிரிவு பார்களை திறக்க அனுமதியில்லை.

    42 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை மது பிரியர்கள் வாங்கிச் சென்றனர்.

    இதனால் மதுக்கடைகளில் விற்பனையும் அதிகமாக இருந்தது. வழக்கமாக ஒரு நாளில் புதுவை மாநிலம் முழுவதும் சுமார் ரூ.4 கோடிக்கு மதுபானம் விற்பனையாகும். நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.

    புதுவையில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டது. நீண்டநாட்களாக கடைகள் பூட்டப்பட்டு கிடந்ததால் கடைகளை சுத்தப்படுத்தி காலதாமதமாக திறந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.

    ஊரடங்கில் நேற்று பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அனைத்து கடைகளையும் மாலை 5 மணி வரை திறக்கவும், மத வழிபாட்டு தலங்களை திறக்கவும், பஸ், ஆட்டோ, டாக்சிகளை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

    மதுபான கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டது. கடற்கரை சாலை காலை 5 முதல் 9 மணி வரை நடைபயிற்சிக்காக திறக்கப்பட்டது. உணவகங்களில் பார்சல் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நேற்று புதுவையில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டது. நீண்டநாட்களாக கடைகள் பூட்டப்பட்டு கிடந்ததால் கடைகளை சுத்தப்படுத்தி காலதாமதமாக திறந்தனர். இன்னும் சிலர் நல்ல நாள் பார்த்து இன்று கடைகளை திறந்தனர்.

    கொரோனா விதி முறைகளுக்கு உட்பட்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. எல்லையோர மதுபான கடைகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மது வாங்க வந்ததால் கூட்டம் அலைமோதியது. நீண்ட நாட்களாக முடங்கிக்கிடந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்ததால் காலை முதல் சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    அதேநேரத்தில் ஊரடங்கு தளர்வில் பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டும், தனியார் பஸ்கள் முழுமையாக இயங்கவில்லை. 2 அரசு பஸ்கள் மட்டும் இயங்கியது. இன்று 2-வது நாளாக தனியார் பஸ்கள் முழுமையாக இயங்கவில்லை. அரசு போக்குவரத்துக்கழகத்தின் டவுன்பஸ்கள், மினி பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது. இதனால் புதிய பஸ்நிலையம் வெறிச்சோடியே காணப்பட்டது.

    மாலை 5 மணி வரை மட்டுமே பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டதாலும், தமிழக பகுதிக்கு பஸ்களை இயக்க முடியாததாலும், நஷ்டம் ஏற்படும் என்பதால் பஸ்களை இயக்க தனியார் உரிமையாளர்கள் முன் வரவில்லை.

    நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டதால் பஸ்களை பழுதுபார்க்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக கிராமபகுதிகளில் இருந்து நாள்தோறும் பஸ்களில் பயணித்து புதுவை நகர பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு அதிகளவில் பயணிகள் வருவது வாடிக்கை.

    கடைகள், தொழிற்சாலைகள் இயங்க தொடங்கிய நிலையில் பஸ்களை இயக்காததால் சொந்த வாகனங்களில் பணிக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பெரிய தொழிற்சாலைகள் மட்டும் சொந்த வாகனங்களை பயன்படுத்தி தொழிலாளர்களை அழைத்து சென்றனர்.

    இதனால் பொதுமக்களும், பஸ் பயணிகளும் கடும் அவதிக்கு ஆளாகினர். ஊரடங்கில் பெரும்பாலான தளர்வுகள் அளிக்கப்பட்டும் மக்களிடையே இயல்வு வாழ்க்கை திரும்பாத நிலையே நிலவுகிறது.

    கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் பட்சத்தில் பொது மக்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் கொரோனா பரிசோதனை அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு அனுமதி பெற்ற சில தனியார் பரிசோதனை கூடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    தனியார் பரிசோதனை மையங்களில் பரிசோதனை கட்டணம் ஆர்.டி.பி.சி.ஆருக்கு ரூ.500-ம், ரட்டுக்கு ரூ.200-ம் மற்றும் பாதுகாப்பு கவச உடை, போக்குவரத்து, மாதிரிகள் சேகரிப்புக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் பட்சத்தில் பொது மக்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம். புகாருக்கு 0413-2229350 என்று எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

    குறிப்பிட்ட தொகைக்கு மேல் வசூலிக்கும் மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள் மீதும் அரசு அனுமதி பெறாமல் பரிசோதனை செய்யும் தனியார் பரிசோதனை கூடங்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுக்கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் 15 நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
    புதுச்சேரி:

    கலால்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மதுக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெப்ப பரிசோதனையும் செய்ய வேண்டும்.

    கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு பேனர் மதுக்கடைகளில் வைக்க வேண்டும். மதுக்கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் 15 நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
    புதுச்சேரியில் தினசரி பாதிப்பு 2 ஆயிரமாக இருந்த தொற்று பாதிப்பு தற்போது 500-க்கு கீழ் சரிந்தது. உயிரிழப்பும் குறைந்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தாக்கம் கோரத் தாண்டவமாடிய நிலையில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் கட்டுக்கடங்காததால் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால் ஜூன் 1 முதல் 7 வரை மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

    இதற்கிடையே, புதுச்சேரியில் ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், புதுச்சேரியில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீடிப்பதுடன் சில தளர்வுகளும் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி புதுச்சேரியில் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் பழக் கடைகள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். ஓட்டல்களில் மாலை 5 மணி வரை பார்சல் வினியோகம் செய்யலாம்.

    அனைத்து தனியார் அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

    பெரிய மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் வழக்கம்போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா விதிகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்.

    முதலமைச்சர் ரங்கசாமி

    சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பதுடன் பொது போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. அதாவது, அரசு மற்றும் தனியார் பஸ்கள் மாலை 5 மணி வரை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆட்டோ, கார்களும் இயங்கலாம். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படலாம்.

    கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சி செல்ல அனுமதிக்கப்படும். அங்கு நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்லவேண்டும்.

    அனைத்து வழிபாட்டு தலங்களும் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் செயல்பட பல்வேறு வழிமுறைகள் காட்டப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் 14-ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

    ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளின்படி இன்று முதல் சாராயம், கள், மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாராயம், கள், மதுக்கடைகள் செயல்படலாம். அதே நேரத்தில் மது பார்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

    இதற்கான உத்தரவை அரசு செயலாளர் அசோக்குமார் பிறப்பித்துள்ளார்.

    புதுச்சேரியில் மதுக்கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    38 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் இன்று திறக்கப்பட இருப்பதால், அங்குள்ள மது பிரியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    அரியாங்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதால் கோர்ட்டு ஊழியர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    வில்லியனூர்-மணவெளி திருவேணி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது51). இவர் புதுவை கோர்ட்டில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் முருகையனை பின்னால் அமர வைத்துக்கொண்டு அரியாங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அரியாங்குப்பம் மாதாகோவில் வீதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக செல்வராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் செல்வராஜுயும், அவரது நண்பர் முருகையனும் தடுமாறி கீழே விழுந்தனர். இதில் செல்வராஜ் படுகாய மடைந்தார். முருகையன் காயமின்றி தப்பினார்.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் செல்வராஜை மீட்டு அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் செல்வராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தற்போது செல்வராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மூலக்குளம் அருகே கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மூலக்குளம் மோதிலால்நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சாதிக்பாஷா. இவர் திலாஸ்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மகன் பீர்முகமது (வயது26). இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கும் சேலத்தை சேர்ந்த ஆஜராபேகம் என்ற பெண்ணுக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

    இதற்கிடையே பீர்முகமதுவின் மனைவி தனது சகோதரர் திருமணத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்துக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து வந்தார்.

    இந்த நிலையில் திருமணம் முடிந்து 10 மாதங்கள் ஆகியும் மனைவி கர்ப்பம் அடையாததால் பீர்முகமது மன வருத்தத்தில் இருந்து வந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர்.

    ஆனாலும் பீர்முகமது விரக்தியுடன் காணப்பட்டு வந்தார். நேற்று மதியம் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த பீர்முகமதுவை அவரது தாயார் சாப்பிட அழைத்தார். ஆனால் தனக்கு பசியில்லை என்று கூறிவிட்டு தூங்க செல்வதாக மாடி படிக்கட்டில் ஏறி செல்ல முயன்றார்.

    அப்போது திடீரென பீர்முகமது மயங்கி சாய்ந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக பீர்முகமதுவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பீர்முகமது இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் பீர்முகமது வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து அவரது தந்தை சாதிக்பாஷா கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    தமிழகத்தை பின்பற்றி புதுவையில் மாலை 5 மணி வரை கடைகளை திறக்க அனுமதிப்பதா? அல்லது மதியம் 2 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்கலாமா? என ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    கொரோனா 2-வது அலை புதுவையில் அதிவேகமாக பரவியது.

    கொரோனா பரவலை தடுக்க கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மதியம் 12 மணி வரை அத்தியவாசிய கடை களை மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது.

    பொது போக்குவரத்து, வணிக வளாகங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டது. மதுபான கடைகளும் அடைக்கப்பட்டது.

    கொரோனா பரவல் அதிகரித்து வந்தததால் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த 31-ந் தேதியுடன் முடிந்த ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளித்து ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு நிறைவுபெறுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. தெலுங்கானாவுக்கு சென்ற கவர்னர் தமிழிசை இன்னுமு புதுவை திரும்பவில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் கொரோனா மேலாண்மை கூட்டத்தை காணொலியில் நடத்தினார். அப்போது ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். புதுவை சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன், கவர்னர் தமிழிசை போனில் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் தொற்று பரவல் அதிகமுள்ள மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி மாலை 5 மணி வரை கடைகளை திறக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஆனால், மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்கவில்லை.

    தமிழகத்தை பின்பற்றி புதுவையில் மாலை 5 மணி வரை கடைகளை திறக்க அனுமதிப்பதா? அல்லது மதியம் 2 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்கலாமா? என ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அரசுக்கு வரி வருவாய் தரக்கூடிய மதுபான கடைகளை குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே சாராயம், கள், மதுபான கடைகளை மூடியதால் கள்ளச்சாராயம், எரி சாராயம் விற்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களிலிருந்து மது பானங்கள் கடத்தி வரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதை தடுக்கும் வகையில் மதுபான கடைகளை திறப்பது? குறித்தும் ஆலோசித்து வருகின்றனர். அதேநேரத்தில் மதுபான கடைகளை திறந்தால் அண்டை மாநிலத்தில் இருந்து மதுபானங்களை வாங்க புதுவைக்கு மதுபான பிரியர்கள் படையெடுக்கக்கூடும். இதனால் தொற்று பரவும் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

    இதுதொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி இன்று மாலை ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது.


    தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் புதுச்சேரியிலும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து மாநில பாடத்திட்டங்களின் கீழ் படிக்கும் மாணவர்களின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதா, நடத்துவதா என்பது குறித்து பல்வேறு மாநிலங்களும் ஆலோசித்து முடிவுகளை அறிவித்துவருகின்றன.

    உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன.


    இதையடுத்து தமிழகத்திலும் பிளஸ்2  பொதுத்தேர்வு ரத்து செய்து கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

    முக ஸ்டாலின்

    இந்நிலையில் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து முதலமைச்சர் ரங்கசாமி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரியில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் தொற்று பாதிப்பு குறையவில்லை. நாள்தோறும் சராசரியாக 2 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி வந்தனர்.

    இதையடுத்து கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் வகையில், கடந்த மாதம் 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. ஜவுளிக்கடை, வணிக நிறுவனங்களை திறக்க அனுமதியில்லை. பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தொற்று பாதிப்பு எதிர்பார்த்த அளவு குறையவில்லை. எனவே ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டது. அதாவது ஜூன் 1-ந் தேதி முதல் 7-ந்தேதி (இன்று) வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சுய தொழில் செய்பவர்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதாவது மின்சாரம், குடிநீர் குழாய், குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் வாகனங்கள் பழுது நீக்குதல் போன்ற பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டன.

    தற்போதைய ஊரடங்கு நீட்டிப்பு இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவுடன் முடிவடைகிறது. ஊரடங்கால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை 1000-க்கு கீழ் சென்றது. இறப்பு விகிதமும் சரிந்தது.

    எனவே புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது தளர்வுகள் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்தார். தற்போது தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதுவையிலும் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படலாம். இதுதொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தை பின்பற்றி புதுவையில் பிளஸ்-2 தேர்வை ரத்து செய்து அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.  இந்தநிலையில், வகுப்புகள் ‘ஆன்லைனில்’ மட்டுமே நடத்தப்பட்டு வந்தன.

    மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏற்கனவே 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வையும், 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வையும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது.

    பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண், உயர்கல்விக்கு மிகவும் முக்கியம் என்பதால் அந்த தேர்வை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்ற முயற்சியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வந்தது.

    கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் ஏற்கனவே மே 3- ந்தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, நோய்த்தொற்றின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

    அந்த அறிவிப்பை தொடர்ந்து குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்கள், மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தும் பிளஸ்-2 பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டன.

    இந்தநிலையில் மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு, சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடக்கவிருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஏற்கனவே ரத்து செய்துள்ளது. பல்வேறு மாநிலங்களும் இதே காரணத்திற்காக, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளன.

    தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து, கடந்த 3 நாட்களாக பள்ளி அளவில் தொடங்கி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், ஊடகவியலாளர்கள், பொது சுகாதாரம் மற்றும் உளவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் கருத்துகள் கவனமுடன் கேட்டறியப்பட்டன.

    பல்வேறு தரப்பினரும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆதரவாகவும், மறுத்தும் கருத்துகளை தெரிவித்திருந்தாலும், அனைத்து தரப்பினரும் மாணவர்களின் உடல் மற்றும் மன நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளனர்.

    மாநில கல்வித்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மட்டுமே உயர்கல்வி வாய்ப்புகளுக்கான தகுதியாக கருதப்படவேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இந்த அரசு உறுதியாக இருந்தாலும், தேர்வினை மேலும் தள்ளி வைப்பது, மாணவர்களை மனதளவில் பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்று டாக்டர்கள் கருதுவதால், அவர்களது அறிவுரை மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் வரப்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது.

    இந்தநிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை முடிவு செய்ய, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில், உயர்கல்வித்துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோரை கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.

    இந்த குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இந்தக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.

    அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களை கொண்டு மட்டுமே, தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும்.

    பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அகில இந்திய அளவில் நடத்தப்படும் 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று தமிழக அரசு கருதுகிறது.

    இதுகுறித்த அறிவிப்புகள் இதுவரை எதுவும் வெளிவராத நிலையில், உயர்கல்விக்காக நடத்தப்படும் பல்வேறு நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புதுவை மாநிலத்திற்கு என்று தனியாக கல்வி வாரியம் எதுவும் கிடையாது. எனவே புதுவை காரைக்கால் பிராந்தியத்திற்கு தமிழக கல்வி வாரியத்தின் நடைமுறைகள் மற்றும் பாடத்திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மாகி பிராந்தியத்திற்கு கேரளம், ஏனாம் பிராந்தியத்திற்கு ஆந்திர கல்வி வாரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

    இதேபோல் தான் தேர்வு நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அந்தந்த கல்வி வாரியத்தின் மூலமாக புதுச்சேரி மாணவர்களுக்கு தேர்வில் கலந்து கொண்டதற்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் தற்போது தமிழகத்தில் மாணவர்கள் நலன் கருதி பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். மேலும் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்குவது என்பது பற்றி குழு அமைத்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் சுமார் 14 ஆயிரத்து 674 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 படித்து வருகின்றனர். தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைப் பின்பற்றி புதுவை, காரைக்காலில் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது.

    இந்த மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று தமிழக கல்வி வாரியம் கொடுக்கும் வழிகாட்டுதலின்படி இங்கும் மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவையில் 9, 458 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 712 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 826 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 712 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 826 ஆக உயர்ந்துள்ளது. 1,215 பேர் குணமடைந்துள்ளனர்.

    ஆஸ்பத்திரிகளில் 1,368 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 8 ஆயிரத்து 126 பேரும் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 18 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,601 ஆக உயர்ந்துள்ளது.

    அதாவது தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தமிழ்த்தாய் நகரை சேர்ந்த 65 வயது மூதாட்டி, திருக்கனூரை சேர்ந்த 30 வயது பெண், வேல்ராம்பட்டை சேர்ந்த 59 வயது ஆண், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுல்தான்பேட்டையை சேர்ந்த 49 வயது பெண், பங்கூரைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, லாஸ்பேட்டையை சேர்ந்த 71 வயது மூதாட்டி, நேதாஜி நகரை சேர்ந்த 65 வயது முதியவர், அம்பேத்கர் சாலையை சேர்ந்த 42 வயது ஆண், மூலக்குளத்தை சேர்ந்த 72 வயது முதியவர், உடையார்பாளையத்தை சேர்ந்த 85 வயது முதியவர், சோலை நகரை சேர்ந்த 71 வயது மூதாட்டி ஆகியோர் பலியாகி உள்ளனர்.

    ஜிப்மரில் கொம்பாக்கத்தை சேர்ந்த 64 வயது முதியவர், அன்னை தெரசா நகரை சேர்ந்த 37 வயது பெண், வில்லியனூர் மணவெளியை சேர்ந்த 40 வயது பெண், பிள்ளை மேஸ்திரி வீதியை சேர்ந்த 57 வயது ஆண், ஏனாமில் 66 வயது மூதாட்டி, காரைக்காலில் வண்டிக்கார வீதியைச் சேர்ந்த 68 வயது முதியவர், டி.கே.நகரை சேர்ந்த 45 வயது ஆண் ஆகியோர் இறந்துள்ளனர்.

    புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும் குணமடைவது 89.71 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 90 பேரும், முன்கள பணியாளர்கள் 91 பேரும், பொதுமக்கள் 3 ஆயிரத்து 13 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை 2 லட்சத்து 76 ஆயிரத்து 442 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    ×