என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பஸ், ஆட்டோ, டாக்சிகள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது. ஆனால், புதுவை அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் கடந்த 7-ந் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது.

    மதுக்கடை உட்பட அனைத்துக்கடைகளையும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது.

    பஸ், ஆட்டோ, டாக்சிகள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது. ஆனால், புதுவை அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு பஸ், தனியார் பஸ்கள் இயங்கவில்லை. பூங்கா, தியேட்டர், நூலகம் செயல்பட அனுமதி இல்லை. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று 14-ந் தேதி முடிகிறது. ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் மேலும் தளர்வுகள் குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில்  புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது
    புதுவையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் மேலும் தளர்வுகள் குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் கடந்த 7-ந் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது.

    மதுக்கடை உட்பட அனைத்துக்கடைகளையும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது.

    பஸ், ஆட்டோ, டாக்சிகள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது. ஆனால், புதுவை அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு பஸ், தனியார் பஸ்கள் இயங்கவில்லை. பூங்கா, தியேட்டர், நூலகம் செயல்பட அனுமதி இல்லை.

    இந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று 14-ந் தேதி முடிகிறது. ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் மேலும் தளர்வுகள் குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ளது.

    புதுவையில் பயிற்சி மையம் நடத்தி பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் ராணுவ வீரர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மசேஷாத்திரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்ததையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதுபோல் சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சென்னை பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் ஆகியோரும் பாலியல் தொந்தரவு புகாரில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் சென்னை அண்ணாநகர் கிளையில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

    இதுபோல் தமிழகத்தில் பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் புதுவையிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    வில்லியனூரை சேர்ந்த 20 வயது மாணவி புதுவை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் சீருடை பணியாளராக (ஐ.பி.எஸ்.) விருப்பம் கொண்டதால் அவரை பெற்றோர் வடமங்கலத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் சிவக்குமார் என்பவர் நடத்தி வரும் பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டனர்.

    பயிற்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே அந்த மாணவியிடம் சிவக்குமார் பாலியல் தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளார். மாணவியை வர்ணித்து ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி அந்த மாணவியை பயிற்சியாளர் சிவக்குமார் உல்லாசத்துக்கு வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் மன ரீதியாக பாதிக்கப்பட்ட அந்த மாணவி நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூற தயங்கி தான் பயிற்சிக்கு செல்ல விரும்பவில்லை என்று அடிக்கடி சொல்லி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை பயிற்சியாளர் சிவக்குமார் அந்த மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி ஆசைக்கு இணங்குமாறு அழைத்துள்ளார். இதற்கு உடன்படாவிட்டால் அவதூறு பரப்பி விடுவேன் என்று பயிற்சியாளர் சிவக்குமார் மாணவியை மிரட்டி உள்ளார். இதுபற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் வில்லியனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து உள்ளதால் தடுப்பூசி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை செயலர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொரோனா ஒரு நாள் பாதிப்பு 2 ஆயிரமாக இருந்தது.

    தற்போது கொரோனா ஒரு நாள் பாதிப்பு 500-க்கும் கீழ் வந்துள்ளது. இது நல்ல வி‌ஷயம் தான். ஆனால், முற்றிலும் கொரோனா நம்மை விட்டு போகவில்லை.

    ஆகவே, முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் முக்கியமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசியால் மட்டும் தான் கொரோனா 3-வது அலையை நம்மால் தடுக்க முடியும்.

    சமீபத்தில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வில் 97 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் தான் வெண்டிலேட்டர் மற்றும் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டவர்கள். ஆகவே, தடுப்பூசியால் மட்டும்தான் கொரோனா பாதிப்பை தடுக்க முடியும். எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து உள்ளதால் தடுப்பூசி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்தப்பட உள்ளது. இது கவர்னருடனான ஆலோசனை கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன் வர வேண்டும். 100 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதற்காக அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து செய்து வருகிறோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அருண் கூறினார்.

    உள்ளாட்சித்துறை செயலர் வல்லவன் கூறும் போது, கொரோனா தடுப்பூசி திருவிழாவை 100 இடங்களில் நடத்த 9 மூத்த பி.சி.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு பகுதியிலும் வீடு வீடாகச் சென்று, தடுப்பூசி போடாத நபரை அடையாளம் கண்டு, அவர்களை தடுப்பூசி முகாம்களுக்கு அழைத்து வந்து, தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அரசின் இந்த முயற்சிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.’’என்றார்.

    துணை கலெக்டர்(தெற்கு) கிரிசங்கர் கூறியதாவது:-

    தடுப்பூசி திருவிழாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கடந்த ஒருவாரத்தில் 10 கிராமங்களில் தடுப்பூசி திருவிழா நடத்தியுள்ளோம். இந்த கிராமங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 80 முதல் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    தடுப்பூசி போடப்பட்ட யாருக்கும் எந்தவிதமான ஒவ்வாமையும் ஏற்படவில்லை. அனைவரும் நலமுடன் இருக்கின்றனர். ஆகவே தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பயப்படத் தேவையில்லை.

    சில கிராமங்களில் 80 வயதுடைய சர்க்கரை நோய், இருதயநோய் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

    அவர்களுக்கும் எந்த விதமான ஒவ்வாமையும் இல்லை. தடுப்பூசி போடப்பட்டவர்கள் கொரோனா தீவிரத்தில் இருந்து பாதுகாக்கப்படுகின்றனர். எனவே அனைவரும் ஆர்வத்துடன் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    புதுவையில் கோரத்தாண்டவமாடி வந்த கொரோனா தொற்றின் 2-வது அலையானது, பல்வேறு நடவடிக்கை காரணமாக படிப்படியாக குறைந்து வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இன்று கொரோனா தொற்று புதிதாக 442 பேருக்கு உறுதியானது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து, 93.38 சதவீதமாகி உள்ளது.

    புதுவையில் இதுவரை 3.14 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதுவையில் கோரத்தாண்டவமாடி வந்த கொரோனா தொற்றின் 2-வது அலையானது, பல்வேறு நடவடிக்கை காரணமாக படிப்படியாக குறைந்து வருகிறது.

    கடைசியாக கடந்த ஏப்ரல் 14-ந்தேதி 413 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன் பிறகு தினமும் 500 பேர், 1000 பேர் என தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    இதில் புதிய உச்சமாக மே 11-ந்தேதி 2 ஆயிரத்து 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா ஒரு நாள் பாதிப்பு 500-க்கு கீழ் குறைந்துள்ளது.

    இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் 9 ஆயிரத்து 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை-321, காரைக்கால்-97, ஏனாம்-10, மாகி-14 பேர் என மொத்தம் 442 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 7 பேர், காரைக்காலில் 2 பேர் என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,677 ஆகவும், இறப்பு விகிதம் 1.50 சதவீதமாகவும் உள்ளது. தற்போது ஜிப்மரில் 276 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 230 பேரும், கோவிட் கேர் சென்டரில் 199 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 4861 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    மாநிலம் முழுவதும் மொத்தம் 5745 பேர் சிகிச்சையில் உள்ளனர். 844 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் சதவீதம் 93.38 ஆக உயர்ந்துள்ளது.

    சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 3,14,831 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    தேர்தல் முடிவு வெளியாகி 40 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்று புதுவை சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியின் முதல்- அமைச்சராக ரங்கசாமி பதவியேற்றும், அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் அமைச்சர்கள் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி ஏற்பட்டதாலும், ரங்கசாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும் அமைச்சர்கள் பதவியேற்பு காலதாமதமானது.

    பா.ஜனதா மேலிடத்திடம் ரங்கசாமி நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார். இதில் பா.ஜனதாவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர், என்.ஆர்.காங்கிரசுக்கு முதல்-அமைச்சர் தவிர்த்து 3 அமைச்சர்கள், துணை சபாநாயகர் என பங்கீடு முடிவடைந்தது.

    ஆனாலும், பா.ஜனதா மேலிடம் அதிகாரப்பூர்வமாக அமைச்சர்கள், சபாநாயகர் பதவிக்குரியவர்களை பரிந்துரை செய்யவில்லை. இதனால் பதவியேற்பு மேலும் தள்ளிப்போனது. இந்நிலையில் நேற்று பா.ஜனதா மேலிடம் சபாநாயகர் பதவிக்கு மணவெளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏம்பலம் செல்வத்தை தேர்வு செய்து அதிகாரப்பூர்வ கடிதம் அளித்தது.

    இதையடுத்து சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பு இன்று வெளியானது.

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதுவை சட்டசபை செயலர் முனிசாமி வெளியிட்டார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் புதுவை 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வருகிற 16-ந் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை மன்றத்தில் கூட்டப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், கவர்னர் அன்றைய தினம் 15-வது சட்டப்பேரவையின் பேரவை தலைவருக்கான தேர்தல் நடத்தும் தேதியையும் நிர்ணயித்துள்ளார். சட்டசபை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின்கீழ் நியமன சீட்டுகள் வருகிற 15-ந் தேதி 12 மணி வரை பேரவை செயலாளரால் பெற்றுக்கொள்ளப்படும்.

    நியமன சீட்டுகளை பேரவை செயலாளரிடம் பெற்றுக்கொள்ளலாம். நியமன சீட்டுகளை அளிப்பதற்கான அறிவிப்பு ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இதன்படி புதுவை சட்டமன்ற சபாநாயகருக்கான தேர்தல் வருகிற 16-ந் தேதி நடக்கிறது. இதற்காக சட்டமன்றம் கூடி புதுவை சபாநாயகரை தேர்வு செய்கிறது. சபாநாயகர் பதவிக்கு ஒருவருக்கு மேல் மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் தேர்தல் நடைபெறும்.

    தேர்தலை தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் நடத்துவார். குரல் ஓட்டெடுப்பு, ஓட்டுச்சீட்டு என தேர்தல் நடத்தும் முறையை அவரே முடிவு செய்வார்.

    ஒருவர் மட்டும் மனுதாக்கல் செய்திருந்தால் அவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார். 16-ந் தேதி கூடும் சட்டமன்றத்தில் அவர் சபாநாயகராக பதவியேற்பார்.

    தேர்தல் முடிவு வெளியாகி 40 நாட்கள் கடந்துள்ள நிலையில் புதுவை சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் நீண்டநாட்களாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

    கணவர், மகள் பிரிந்து சென்ற வேதனையில் அரசு பள்ளி ஆசிரியை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    ரெட்டியார்பாளையம் கம்பன்நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது 2-வது மகள் சங்கரி (வயது36). இவருக்கும் பேட்டையான்சத்திரம் திலகர்நகரை சேர்ந்த கோபி என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    கோபி தட்டாஞ்சாவடி வி.வி.பி.நகரில் உள்ள கூட்டுறவு அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். சங்கரி கதிர்காமம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கோபி சங்கரியை விட்டு பிரிந்து சென்று விட்டார். மேலும் கோபி தனது மகளையும் அழைத்து சென்று விட்டார். இதனால் சங்கரி வில்லியனூர் ரங்கசாமி நகரில் புதிதாக வீடு வாங்கி தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது சங்கரியை அவரது தந்தை முனுசாமி பார்த்து விட்டு செல்வார்.

    இதற்கிடையே கணவர்- மகள் பிரிந்து சென்றதால் சங்கரி விரக்தியுடன் இருந்து வந்தார். தற்போது கொரோனா காரணமாக பள்ளி விடுமுறையால் சங்கரி வீட்டிலேயே இருந்து வந்தார். கொரோனா காரணமாக கடந்த 10 நாட்களாக சங்கரியை பார்க்க அவரது தந்தை வீட்டுக்கு வரவில்லை.

    இந்த நிலையில் நேற்று முனுசாமி தனது மகள் சங்கரியை பார்க்க வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டு வாசல் கதவு பாதி திறந்த நிலையில் இருந்தது. காலிங்பெல்லை அடித்து பார்த்த போது சங்கரி வராததால் சந்தேகமடைந்து அவரது தந்தை முனுசாமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டின் அறையில் கட்டில் மேல் மல்லாந்த நிலையில் சங்கரி பிணமாக கிடப்பதை கண்டு முனுசாமி அதிர்ச்சியடைந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்தது.

    கணவர்-மகள் பிரிந்து சென்ற வேதனையால் சங்கரி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து முனுசாமி வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    புதுவையில் இருந்து சென்னைக்கு ஆம்புலன்சில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 3 பேரை வில்லியனூரில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் 42 நாட்களாக மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.

    ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மதுபான கடைகள் கடந்த 8-ந் தேதி திறக்கப்பட்டது.

    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. மதுபார்கள், சுற்றுலா பிரிவு பார்களை திறக்க அனுமதி இல்லை.

    42 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை மது பிரியர்கள் வாங்கிச் சென்றனர்.

    இதனால் மதுக்கடைகளில் விற்பனையும் அதிகமாக இருந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்ததால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மது பிரியர்கள் புதுவை வந்து மது பானங்களை வாங்கி சென்றனர்.

    கடலூர் - புதுவை எல்லையான சோரியாங்குப்பத்தில் மது விற்பனை அதிக அளவில் இருந்தது. அங்கு சமூக இடைவெளியை கடைபிடித்து மது வாங்கி செல்கிறார்களா? என போலீசார் கண்காணித்தனர்.

    மேலும் பொது இடங்களில் மது அருந்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். வழக்கமாக ஒரு நாளில் புதுவை மாநிலம் முழுவதும் சுமார் ரூ.4 கோடிக்கு மதுபானம் விற்பனையாகும்.

    கடந்த 8-ந்தேதி ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.

    9-ந்தேதி ரூ.6 கோடிக்கும், 10-ந்தேதி ரூ.7 கோடிக்கும் மது விற்பனை ஆகி உள்ளது. 3 நாட்களில் ரூ.20 கோடிக்கு மது விற்கப்பட்டுள்ளது.

    மதுக்கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு தான் மது விற்பனை செய்ய வேண்டும் என கலால்துறை அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் மதுக்கடை ஊழியர்களும் முக கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    கலால்துறை துணை ஆணையர் சுதாகர் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மது கடைகளில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என கண்காணிக்க கேட்டுக் கொண்டார்.

    புதுவையில் மது கடைகள் திறக்கப்பட்டதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    மது கடைகளால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    புதுவையில் இருந்து சென்னைக்கு ஆம்புலன்சில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 3 பேரை வில்லியனூரில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் திருச்சியை சேர்ந்த சசிகுமார், வடலூர் கார்த்திக், சென்னை சபரிநாதன் என்பது தெரிய வந்தது.

    அவர்களிடம் இருந்து ரூ.77 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பாட்டில்கள் கலால்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
    புதுவை மாநிலம் முழுவதும் வழக்கமாக ஒரு நாளில் சுமார் ரூ.4 கோடிக்கு மதுபானம் விற்பனையாகும்.
    புதுச்சேரி:

    புதுவையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மதுபான கடைகள் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது.

    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. மதுபார்கள், சுற்றுலா பிரிவு பார்களை திறக்க அனுமதியில்லை.

    42 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை மது பிரியர்கள் வாங்கிச் சென்றனர்.

    இதனால் மதுக்கடைகளில் விற்பனையும் அதிகமாக இருந்தது. வழக்கமாக ஒரு நாளில் புதுவை மாநிலம் முழுவதும் சுமார் ரூ.4 கோடிக்கு மதுபானம் விற்பனையாகும். நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.

    புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் 4வது சகோதரி மனோன்மணி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் 4-வது சகோதரி மனோன்மணி (வயது 76). இவர் திண்டிவனம் அருகே உள்ள பேராவூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    அவருக்கு சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று (சனிக்கிழமை) பேராவூரில் நடக்கிறது. மனோன்மணிக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.
    புதுச்சேரியில் தாயை பணி நீக்கம் செய்த ஆத்திரத்தில் துணிக்கடை உரிமையாளரை மகன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    வில்லியனூரை சேர்ந்த பாலமுருகன், கோட்டைமேடு பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரின் கடையில் வேலை பார்த்த சத்யா என்ற பெண்ணை பாலமுருகன் வேலையை விட்டு அனுப்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சத்யாவின் மகன் ராம்குமார் தன் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து கடை உரிமையாளர் பாலமுருகனை தாக்கினார். 

    இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் போலீசார் இதனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கொரோனா 3-வது அலையில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா 2-வது அலையில் அதிகளவு சிறுவர்கள் பாதிக்கப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

    வீடுகளில் பெரியவர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று வீட்டில் உள்ள குழந்தைகள், சிறுவர்களுக்கும் பரவியது.

    கடந்த ஜனவரி முதல் ஜூன் 6-ந் தேதி வரை 6 மாத காலத்தில் 12 வயதுக்குட்பட்ட 2 ஆயிரத்து 353 சிறுவர்களுக்கும், 12 வயது முதல் 17 வயது வரை உள்ள 2 ஆயிரத்து 366 சிறுவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒட்டுமொத்தமாக கடந்த 6 மாதத்தில் 17 வயதுக்குட்பட்ட 4 ஆயிரத்து 719 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் பெரும்பாலான சிறுவர்கள் சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளனர்.

    இப்போது கொரோனா 3-வது அலையில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. ராஜீவ்காந்தி குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    ×