search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுவையில் கொரோனாவுக்கு 9 பேர் பலி- 442 பேருக்கு தொற்று

    புதுவையில் கோரத்தாண்டவமாடி வந்த கொரோனா தொற்றின் 2-வது அலையானது, பல்வேறு நடவடிக்கை காரணமாக படிப்படியாக குறைந்து வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இன்று கொரோனா தொற்று புதிதாக 442 பேருக்கு உறுதியானது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து, 93.38 சதவீதமாகி உள்ளது.

    புதுவையில் இதுவரை 3.14 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதுவையில் கோரத்தாண்டவமாடி வந்த கொரோனா தொற்றின் 2-வது அலையானது, பல்வேறு நடவடிக்கை காரணமாக படிப்படியாக குறைந்து வருகிறது.

    கடைசியாக கடந்த ஏப்ரல் 14-ந்தேதி 413 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன் பிறகு தினமும் 500 பேர், 1000 பேர் என தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    இதில் புதிய உச்சமாக மே 11-ந்தேதி 2 ஆயிரத்து 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா ஒரு நாள் பாதிப்பு 500-க்கு கீழ் குறைந்துள்ளது.

    இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் 9 ஆயிரத்து 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை-321, காரைக்கால்-97, ஏனாம்-10, மாகி-14 பேர் என மொத்தம் 442 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 7 பேர், காரைக்காலில் 2 பேர் என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,677 ஆகவும், இறப்பு விகிதம் 1.50 சதவீதமாகவும் உள்ளது. தற்போது ஜிப்மரில் 276 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 230 பேரும், கோவிட் கேர் சென்டரில் 199 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 4861 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    மாநிலம் முழுவதும் மொத்தம் 5745 பேர் சிகிச்சையில் உள்ளனர். 844 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் சதவீதம் 93.38 ஆக உயர்ந்துள்ளது.

    சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 3,14,831 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    Next Story
    ×