என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மண்டல அளவிலான யோகா போட்டியில் 165 மாணவர்கள் பங்கேற்றனர்.
    புதுச்சேரி:

    பாலாஜி வித்யாபீத், யோகா சிகிச்சை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் யோகா போட்டி நடந்தது. இதில் புதுவை சுற்றுலாத் துறையின் முதுநிலை மேலாளர் சிதம்பரம், யோகாவுக்கு ஆற்றிய சேவைகளை பாராட்டி ‘யோகா சேவகா விருது’ வழங்கப்பட்டது.

    ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் டீன் ஆனந்த கிருஷ்ணன், பதிவாளர் சீனிவாசன், யோகா சிகிச்சை கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஆனந்த பாலயோகி பவனானி ஆகியோர் விருது வழங்கி பாராட்டினர். மண்டல அளவிலான ேயாகா போட்டகளில் 165-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திறமையை வெளிப்படுத்தினர். சித்திர்பூமி புதுவை யோகாசன விளையாட்டு சங்கத்தின் யோகா நடுவர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    சங்க மூத்த துணைத் தலைவர் கஜேந்திரன் துணைத் தலைவர் தேவசேனா பவனானி, பொருளாளர் சண்முகம், இணைச் செயலாளர் சதீஷ்குமார், மூத்த உறுப்பினர்கள் செந்தில் குமார், லலிதா சண்முகம், கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட்டனர்.

    ஏற்பாடுகளை யோகா சிகிச்சை கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் தயாநிதி மற்றும் யோகா ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
    எம்.ஐ.டி கல்லூரியில் புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடந்தது.
    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் நாட்டு நலப்பணித் திட்டம்  மற்றும் சி.ஐ.ஐ, ஒய்.ஐ-யுவா புதுவை வாழும் கலை ஆகியவை இணைந்து நடத்திய ‘உலக புகையிலை ஒழிப்பு தின விழா’ எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் நடந்தது.
     
    கல்லூரி தலைவர் மற்றும்  நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி  முதல்வர் டாக்டர். மலர்க்கண் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி விஜயபிரசாத் வரவேற்புரையாற்றினார்.

    இதில் சிறப்பு விருந்தினர் களாக தேசிய வாய்வழி சுகாதாரத் திட்டத்தின் மாநில திட்ட அலுவலர்  டாக்டர்.கவிப்பிரியா உத்தமன், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்ட மாநில ஆலோசகர் டாக்டர் சூரியகுமார்,  ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புகையிலையினால் ஏற்படும் நோய்கள், அதனால் உருவாகும் பாதிப்புகள் குறித்து பேசினர்.

    கிராமப்புற மாணவர் களுக்கும், மக்களுக்கும் புகயைிலை பழக்கத்தை விடுவிக்கும் விழிப்புணர்வு முறைகளையும், பொது இடங்களில் பயன் படுத்தும்போது அதை சரியான முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கும் அலைபேசி எண்களையும் மாணவர்களுக்கு வழங்கினர்.

    பிற்பகல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பல் மருத்துவர் மற்றும் வாழும் கலை பயிற்சியாளர் செல்வநாதன் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு பழக்கம், பிணைப்பு, வாழ்க்கை ஆகியவற்ைற  தியானத்தின் மூலம் ஒன்றிணைக்கும் முறைகளையும், மன கட்டுப்பாட்டையும், வளர்க்கும் செய்முறை பயிற்சி முறைகளை அளித்தார்.

    நாட்டு நலப்பணி திட்ட மாணவ செயலாளர் ஜெகதீஷ் நன்றி கூறினார்.
    புதுவையில் பிரியாணி கடையை சூறையாடி வியாபாரியை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை குயவர்பாளையம் சுபாஷ்சந்திரபோஸ் வீதியை சேர்ந்தவர் வேலு(43). இவர் புதுவை காமராஜர் சாலையில் பல ஆண்டுகளாக பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் வேலு பிரியாணி கடையில் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு கடையில் வேலை பார்க்கும் மணி என்ற கணேசன், மோகன், புருசோத்தம்மன் மற்றும்  அவர்களது நண்பர்கள் சிலர் பிரியாணி கடைக்கு வந்தனர். அவர்கள் நாங்கள் பிறந்தநாள் விழா கொண்டாட உள்ளோம். 

    எனவே பிரியாணி வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு வேலு சிறிது நேரம்  பொறுத்திருங்கள். பிரியாணி தயார் செய்து பார்சல் கட்டி தருகிறேன் என்றார். ஆனால் அவர்கள் உடனடியாக எங்களுக்கு பிரியாணி வேண்டும் என்று வேலுவிடம் தகராறு செய்தனர். 

    அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் மோகன் என்பவர் அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து வேலுவை தாக்கினார்.

    மேலும் மணி தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேலுவை குத்தி கொலை செய்து விடுவதாக  மிரட்டினார்.
    அதோடு அவர்களுடன் வந்தவர்கள் பிரியாணிக்கடையில் இருந்து தட்டுக்கள் மற்றும் அடுப்பை அடித்து உடைத்து சேதப்படுத்தினார்கள். நாற்காலிகளை தூக்கி வீசி பிரியாணிக் கடையை சூறையாடியதுடன் மீண்டும் வேலுவை தாக்கினர்.

    இதனால் வலி தாங்காமல் வேலு அலறவே பிரியாணிக்கடையில் இருந்தவர்களும் மற்ற கடைக்காரர்களும் திரண்டு வந்தனர்.  இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

    இந்த தாக்குதலில் காயமடைந்த வேலு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாணிக் கடையை சூறையாடி வியாபாரியை தாக்கிய கும்பலை தேடி வருகிறார்கள்.
    ரெட்டியார்பாளையத்தில் மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகர் முதல் தெருவை சேர்ந்தவர் குரு. இவரது மனைவி ராணி. இவரது தாயார் கந்தம்மாள் (வயது77).  இவரது கணவர் வேலுசாமி தேவர் இறந்து விட்ட நிலையில் தூத்துக்குடி கோவில்பட்டியில் தனியாக வசித்து வந்த கந்தம்மாள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கையில் அடிப்பட்டு காயமடைந்தார்.

    இதையடுத்து கந்தம்மாளை ராணி தனது வீட்டுக்கு அழைத்து வந்து ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்தவுடன் தனது வீட்டிலேயே தாயாரை பராமரித்து வந்தார்.

    இந்த நிலையில் அதிகாலை 2 மணியளவில் கந்தம்மாள் கை வலிப்பதாக தனது மகள் ராணியிடம் கூறி வருத்தப்பட்டார். அப்போது கந்தம்மாள் கையில் தைலத்தை தடவி விடிந்த பின்னர் ஆஸ்பத்திரிக்கு செல்லலாம் என்று சமாதானம் செய்து ராணி தூங்க சென்று விட்டார்.

    பின்னர் காலை 7 மணியளவில் ராணி குளியல் அறைக்கு சென்ற போது அங்கு தனது தாய் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    காரைக்கால் அருகே கஞ்சா விற்றது தொடர்பாக வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் அருகே நிரவி ஆற்றங்கரைத் தெரு பகுதியில் நிரவி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (எ) படையப்பா (வயது 22) என்பதும், இளைஞர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவை கடற்கரையில் 4 நாள் கோடை விழாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறையும், தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து கோடை விழாவை நடத்துகிறது.

    புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில்  2-ந் தேதி  தொடங்கி 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 4 நாட்கள் கோடை விழா நடக்கிறது. 

    இதன் தொடக்க விழா   மாலை 6.30 மணிக்கு கடற்கரை சாலை காந்தி திடலில் நடக்கிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி விழாவை தொடங்கி வைக்கிறார்.  சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் சந்திரபிரியங்கா, லட்சுமி நாராயணன், புதுவை அரசு செயலர் நெடுஞ்செழியன், தஞ்சை தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் தீபக்கெய்வட்கர், புதுவை கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் சிவராசன்  ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    தொடர்ந்து முத்து குழுவினரின் மங்கள இசை, உதயம் நாட்டியாலயா, காளியம்மன் கலைக்குழு, யூனஸ் மெல்லிசைக்குழுவின் பரதநாட்டியம், காளியாட்டம், நாட்டுப்புற இசை நடக்கிறது. 

    (3-ந் தேதி) மாலை 6.30 மணிக்கு முதலில் பொம்மலாட்டம், பாரதியார் பல்கலைக்கூடத்தின் நாட்டுப்புற நடனம், மருது சகோதரர்கள் வீர சிலம்பாட்டக்குழுவின் சிலம்பாட்டம், யாழ் கிராமிய கலைக்குழுவின் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம் நடக்கிறது. 

    4-ந் தேதி மாலை 6.30 மணிக்கு முதலில் வள்ளுவர் வில்லிசை குழுவின் வில்லுப்பாட்டு, சுந்தர நாட்டியேகேந்திராவின் பரதநாட்டியம், முனீஸ்வரன் கலைக்குழுவின் பம்பை உடுக்கை, ஹைடெக் சினி ஆர்கெஸ்ட்ரா மெல்லிசை நடக்கிறது.

    5-ந் தேதி மாலை 6.30 மணிக்கு முதலில் கலைமாமணி பொன்சண்முகம் குழுவின் நாதசங்கமம், யாத்ரா கலை பண்பாட்டு சங்கத்தின் நாட்டுப்புற நடனம், சப்தகிரி கிரியேஷன்ஸ் சிவன், பார்வதி நடனம், முகில் மெல்லிசை குழுவின் மெல்லிசை ஆகியவை நடக்கிறது. 
    புதுவையில் அக்னி நட்சத்திரத்துக்கு பிறகும் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த பிப்ரவரி முதல் கோடை வெயில் வாட்டி வருகிறது.

    சில மாதமாக ரோட்டில் நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் தகித்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கியபோது புதுவை மக்கள் மிகுந்த அச்சம் கொண்டனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அக்னி நட்சத்திர காலத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்தது. 

    இதனால் வறண்ட வானிலை மாறி குளிர்ந்த காற்றும் வீசியது. அக்னி நட்சத்திர காலத்தில் ஓரளவு மக்கள் தப்பிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அக்னி நட்சத்திரம் முடிந்துள்ள நிலையில் தற்போது புதுவையில் கடும் வெப்பம் நிலவுகிறது. 

    கடந்த 2 நாட்களாக வெயில் தகித்து வருகிறது. பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் சிரமப்படுகின்றனர். வாகனத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூட முடியாத நிலை நிலவியது. இருப்பினும் வானிலை மையம் முன்கூட்டிய பருவமழை தொடங்கும் என அறிவித்துள்ளதால் இம்மாதத்தில் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.

    நிலஅளவை துறை இயக்குனருடன் நேரு எம்.எல்.ஏ ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை  தொகுதி எம்.எல்.ஏ. நேரு   நில அளவை பதிவேடுகள் துறை அலுவலகத்தில் இயக்குனர்  ரமேஷ் மற்றும் தாசில்தார், நில ஆய்வாளருடன் ஆலோசனை நடத்தினர்.

    உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட அரசு மனை பட்டாவில் பெயர் மாற்றம் செய்தல் வாரிசு பட்டா  பெயர் மாற்றம் செய்தல், யாரும் உரிமை கோராத இடத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு மனை பட்டா வழங்குதல்  போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    ஆலோசனையின் போது மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் ராமலிங்கம், கலியன், சிவராஜ், குணசேகரன், வேலாயுதம், ஆதி, குப்புசாமி, கோவிந்தராஜ், ரெனோ, சிவராமன், காமராஜ்,  தர்மேஷ்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    சாரதா கங்காதரன் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து இலவச ரத்ததான முகாமை நடத்தியது. 

    கல்லூரியின் முதல்வர் உதயசூரியன், பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் சித்ராதேவி, துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முகாமினை தொடங்கி வைத்தனர். 

    ரத்ததான முகாமில் பேராசிரியர்கள் மாணவர்கள் உள்பட 57 பேர் ரத்ததானம் வழங்கினர். தொடர்ந்து அதிக அளவில் ரத்ததான முகாமினை நடத்திவரும் இந்த கல்லூரியின் சேவையினைப் பாராட்டி புதுவை  இந்திராகாந்தி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி  2019-2021-ம் ஆண்டிற்கான பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளார்.  

    கல்லூரியில் முதுகலை படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும் வணிகவியல் மாணவர் பிரேம்குமார் தொடர்ந்து 10 முறை ரத்ததானம் வழங்கி உள்ளார். 

    விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி, இணை ஒருங்கிணைப்பாளர் கணேஷ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மரியசெல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.
    மதகப்பட்டில் ஏ.டி.எம். எந்திரம் இயங்காததால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்.
    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கி அருகில் ஏ.டிஎம். எந்திரம் உள்ளது. 

    வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கும் பணம் போடுவதற்கும் இந்த 
    ஏ.டி.எம். எந்திரத்தை  பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக வங்கி விடுமுறை நாட்களில் பணம் போடுவதற்கு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

    தற்போது இந்த எந்திரம் கடந்த 6 நாட்களாக வேலை செய்யாமல் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும், பணம் போடவும் முடியாமல் சிரமத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து 
    ஏ.டி.எம். எந்திரத்தின்  பழுதை நீக்கி வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இதனை தடுக்க முயன்ற விமாலாவின் மகன் மூவேந்தனையும் சீத்தாராமன் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விமலா கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஏம்பலம் அருகே சொத்து தகராறில் தாய்-மகனை தாக்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    ஏம்பலம் அருகே புதுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன்.  இவருடன் உடன் பிறந்தவர்கள் 4 பேர். இவர்களுக்கு பொதுவான சொத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சரிசமமாக பிரித்து கொடுக்கப்பட்டது.

    இதற்கிடையே ராமச்சந்திரனின் சகோதரர் முருகனின் மகன் சீத்தாராமன் அவருக்கு சொந்தமான இடத்தில் கூரை கொட்டகை அமைத்து வசித்து வந்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடும் மழையினால் கூரை கொட்டகை சேதமடைந்ததால் சீத்தாராமனை புதிய வீடு கட்டும் வரை  ராமச்சந்திரன் தனக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருக்குமாறு கூறினார்.

    இந்த நிலையில்  ராமச்சந்திரனும், அவரது மனைவி விமலாவும் வீட்டை காலி செய்யுமாறு சீத்தாராமனிடம் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த சீத்தாராமன் தகாத வார்த்தைகளால் திட்டி விமலாவை தாக்கினார்.  மேலும் இதனை தடுக்க முயன்ற விமாலாவின் மகன் மூவேந்தனையும் சீத்தாராமன் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விமலா கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    புதுவையில் கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சேர்ந்தவர் முத்துகுமாரசாமி(வயது55). இவரது அண்ணன் மகள் திருமணம் புதுவையில் இன்று காலை ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க குமாரசாமி தனக்கு சொந்தமான காரில் இன்று அதிகாலை வீட்டில் இருந்து புறப்பட்டார்.

    காரை அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் முத்து (50) ஓட்டி வந்தார்.

    ரெட்டியார் பாளையம் போலீஸ் நிலையம் அருகே கார் வந்த போது எதிரே புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி கண்டெய்னர் லாரி வந்தது. அப்போது கண்டெய்னர் லாரி முன்பு மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென குறுக்கே பாய்ந்தார். இதனால் அவர் மீது மோதாமல் இருக்க கண்டெய்னர் லாரி டிரைவர் லாரியை வலது புறமாக திருப்பினார்.

    அப்போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கட்டையில் மோதி எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரில் வந்த முத்துகுமாரசாமி மற்றும் காரை ஓட்டி வந்த முத்து ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள். மேலும் கண்டெய்னர் லாரி டிரைவரும், மோட்டார் சைக்கிளில் வந்தவரும் லேசான காயமடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெட்டியார்பாளையம் போலீசார் கோரிமேடு போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்தில் பலியான இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    அண்ணன் மகள் திருமணத்தில் பங்கேற்க வந்த சித்தப்பா மற்றும் அவரது நண்பர் பலியான சம்பவம் வளவனூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×