என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் 4 பகுதிகளையும் உதாசீனப்படுத்த மாட்டோம் என்று கவர்னர் தமிழிசை உறுதி அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    சுதந்திர இந்தியா அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக இமாச்சல பிரதேசம், சிம்லா நகரிலிருந்து பிரதமர் நரேந்திரமோடி, நாடு  முழுவதும் 14 மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் காணொலியில் கலந்துரையாடினார்.

    புதுவை, காரைக்காலில் உள்ள பயனாளிகள் பிரதமரோடு கலந்துரையாட கம்பன் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. புதுவையில் 600 பயனாளிகள் இதில் பங்கேற்றனர். மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பயனாளிகளை சென்றடைந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையிலும், விடுபட்டவர்களை இணைக்கும் நோக்கத்துடன்  கலந்துரையாடல் நடந்தது. 

    மாநில அளவில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் துறைகளின் கண்காட்சியும்  நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் வல்லவன் வரவேற்றார்.  கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, செல்வகணபதி எம்.பி., சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், கென்னடி எம்.எல்.ஏ., தலைமை செயலர் ராஜீவ்வர்மா, அரசு செயலர் ரவிபிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
    நிகழ்ச்சியில் புதுவை கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    பெண்கள் முன்னேறினால் வீடு முன்னேறும். நாடு முன்னேறும் என்பதால்  உஜ்வாலா என்ற இலவச எரிவாயு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்திலிருந்தே குடும்பத் தலைவரின் பெயரில் தான் திட்டங்கள் பதிவு செய்யப்பட்டது.  ஆனால் பிரதமரின் இலவச எரிவாயு திட்டம் குடும்ப தலைவரின் பெயரில் பதிவு செய்யப்படாமல் குடும்பத் தலைவியின் பெயரில் பதிவு செய்யப்படுகிறது. 

    பிரதமரின் வீடு கட்டும் திட்டம், முத்ரா வங்கி கடன் திட்டம் போன்றவை வழங்கப்படும் போது குறிப்பிட்ட சதவீதம் பெண்களுக்கும், அட்டவணை இனத்தவர் பழங்குடியினர் ஆகியோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. அதனால் இந்த திட்டங்கள் பரவலாக எல்லா பிரிவினருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது.

    திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாகச் சென்று சேர வேண்டும். நிர்வாகக் குறைபாடு காரணமாகவோ அல்லது நிறுவனத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாகவோ சில பயனாளிகளுக்கு கிடைப்பது தாமதமாகலாம். ஆனால், மறுக்கப்படாது. எந்த திட்டத்தின் பயனும் யாருக்கும் மறுக்கப் படாது என்பதை புதுவை மக்களுக்கு உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். 

    புதுவை எல்லா வகையிலும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பிரதமர், பெஸ்ட் புதுவை என்ற தாரக மந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.  நான் தலைமைச் செயலருடன் கூட்டம் நடத்தி பெஸ்ட் புதுவை, வேகமான புதுவையாக, பாஸ்ட் புதுவையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

    மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள், ஊக்கத்தொகை உள்ளிட்ட பயன்கள் அனைத்தும் மிக விரைவாக செயல்படுத்துவதற்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. 
    யார்-யாருக்கு திட்டங்கள் எந்த அளவுக்கு சென்று சேர்ந்திருக்கிறது எந்த அளவுக்கு குறைபாடு இருக்கிறது என்பதை அறிந்து குறைபாடுகளைக் களைந்து மக்களுக்கு சென்று சேர்வதற்கான அத்தனை முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. பிரதமர் தலைமை பொறுப்பேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்த 8 ஆண்டுகளில் 3  ஆண்டுகள் மிக-வும் சவாலான காலம். கொரோனா பெருந்தொற்றை சந்தித்தோம். 

    அண்மையில், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மாநாட்டில் உலக தலைவர்கள் எல்லாம் சொன்ன ஒரு செய்தி. மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், 140 கோடி மக்கள் நெருக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்திய திருநாட்டில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த நாடு மிக சிரமப்படும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், சரியான நேரத்தில் சரியான மருத்துவ உபகரணங்களை மற்றும் தடுப்பூசி கொடுத்து இந்திய மக்களை மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள பல நாடுகளில் உள்ள மக்களையும் காப்பாற்றிய பிரதமரின் முயற்சி  மிகுந்த பாராட்டுக்குரியது என்பதுதான். அவர்கள் அதனை இந்திய மாடல் என குறிப்பிட்டிருந்தனர். 

    இந்த தடுப்பூசி மாடல் உலகில் மிகப்பெரிய வெற்றியைத் தந்திருக்கிறது. தடுப்பூசி வந்தவுடன் எல்லோரும் பயன் அடைய வேண்டும் என்பதற்காக முதலில் மருத்துவர்கள் பின் மருத்துவத்துறையோடு சம்பந்தப்பட்ட துணை மருத்துவ ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், முதியவர்கள், இணை நோயாளிகள் என்ற படிப்படியாக அது சென்றடைய வேண்டும் என்று மிகத் தெளிவான மாடலை கடைப் பிடித்தார்கள். 
    அதுதான் இந்திய தடுப்பூசி மாடல். இது உலக அரங்கில் பாராட்டப்பட வேண்டியது என்று உலக நாடுகளின் தலைவர்கள் குறிப்பிட்டார்கள்.

    உலக நாடுகளால் பாராட்டப்பட்டது, ஏழைகளுக்கு உணவளிக்கும் கரீப் கல்யாண் யோஜனா திட்டம். கொரோனா காலத்தில் வளர்ந்த நாடுகள் கூட பொருளாதாரத்தில் பின்னடைவைச் சந்தித்தது. மக்கள் பசியால் வாடிக்கொண்டிருந்த நேரத்தில் இந்திய நாட்டில் மக்கள் பசியால் வாடவில்லை. அதற்கு இந்தத் திட்டம்தான் காரணம் என உலக பொருளாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

    எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா காலத்தில் பொருளாதாரம் சரிந்து விடக்கூடாது என்பதற்காக ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுத்த ஒரு அரசு மத்தியில் இருந்து கொண்டு இருக்கிறது.  அதற்காக பாரத பிரதமருக்கு நாம் தெரிந்து நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

    புதுவையை பொறுத்தமட்டில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது, உற்றுநோக்கி வருகிறது என்பதை பலமுறை தெரிவித்துள்ளனர். இளைஞர்களுக்காக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளும் உலக அரங்கில் மிகவும் பிரபலமானது. இதை புதுவைக்கு கொடுக்க வேண்டும். புதுவை இளைஞர்கள் பலரும் பயனடையும் விதத்தில் அது திட்டம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் இந்திய அளவில் கைவினை-ஞர்களும் அதிகமாக பயன்பெற வேண்டும். புதுவை கைவினைஞர்களும் அதில் பயன்பெற வேண்டும் என்பதற்கான நிகழ்ச்சியும் புதுவையில்தான் நடத்த வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

    புதுவை இன்று இந்திய வரைபடத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரதமர் புதுவைக்கு பல நல்ல திட்டங்களை வழங்க உள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுவைக்கு வந்த போதும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். முதல்-அமைச்சரின் ஒப்புதல் பெற்று ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். 

    காரைக்கால் ஒதுக்கப்படுகிறது என சிலர் கூறுகின்றனர். ஒரு வாரம் முன்புதான் காரைக்காலுக்கு சென்று தலைமைச்செயலருடன் சேர்ந்து கூட்டங்கள் நடத்தி அங்குள்ள திட்டங்கள் பற்றி தெரிந்துகொண்டோம். காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனைக்குத் தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஜிப்மர் மருத்துவ நிர்வாக குழுவினருடன் கூட்டம் நடத்தினோம். 

    எந்த வகையிலும் எந்த பிராந்தியத்தையும் உதாசீனம் அடையாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  புதுவை பல புதுமைகளை காண உள்ளது. தென்னிந்தியாவிலேயே பெட்ரோல்-டீசல் விலை புதுவையில் மிக குறைவு. புதுவை மக்களுக்காக மத்திய, மாநில அரசுகள் விலையை குறிப்பிட்ட அளவுக்கு குறைந்திருக்கின்றன. 

    சுற்றியுள்ள மாநிலங்கள் விலை குறைக்க தயங்கி-னாலும் மக்கள் நலன் கருதி பெட்ரோல்-டீசல் விலை புதுவையில் குறைக்கப்பட்டது என்றால் மக்கள் நலன் சார்ந்த மத்திய- மாநில அரசுகளின் சிந்தனையே அதற்கு காரணம். 

    ஒரு மருத்துவர் என்ற முறையில் பாரதப் பிரதமருக்கு எப்போதும் நன்றியைத்தெரிவிக்கிறேன். 
    பாரதப் பிரதமர் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொடுத்திருக்கிறார். 
    மருந்துகளுக்கு பணமில்லாமல் உயிரிழந்தவர்களை பார்த்திருக்கிறேன். ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தைப் பொறுத்தவரை புதுவை மக்கள் தலைநிமிர்ந்து சொல்லலாம். 
    இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பது புதுவை மாநிலம் தான். அதற்கான விருதினையும் இந்திய அரசிடமிருந்து பெற்று இருக்கிறோம். 

    அதேபோலத்தான் பிரதம மந்திரியின் மலிவு விலை மருந்தகங்கள் திட்டம். மலிவு விலை மருந்தகங்களில் மருந்துகள் 30 முதல் 70 சதவீதம் வரை குறைந்த விலையில் விற்கப்படுகிறது. மக்களுக்கான திட்டங்களை பிரதமர் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார். 

    உலக அரங்கில் கொரோனாவுக்கு பிறகு பொருளாதாரத்தை மீட்டு எடுத்த சில நாடுகளில் இந்தியா மிகச்சிறந்த இடத்தை பெறுகிறது என்றால் அதற்கு பாரத பிரதமரின் நிர்வாகத் திறமையும் கூட்டாகப் பணியாற்றிய அத்தனை மாநில அரசுகளும்தான் காரணம். 

    பாரத பிரதமர் 8 ஆண்டுகள் நிறைவு செய்து 9-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    காட்டுக்குப்பம் மின்துறை மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம்  அருகே  காட்டுக்குப்பம் மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

    இந்தக் முகாமிற்கு நுகர்வோர் குறைகள் தீர்வு அவையின் சேர்மன் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    உறுப்பினர்கள் ஜிஜேந்திர ராவ், கிருஷ்ணமூர்த்தி, தெற்கு பிரிவு செயற்பொறியாளர் பழனிச்சாமி, பாகூர் உதவி பொறியாளர் சக்திவேல், இளநிலை பொறியாளர் ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

    இந்த முகாமில் பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்று தங்கள் பகுதியில் உள்ள குறைகள், புகார் மற்றும் ஆலோசனைகளை எடுத்துக் கூறினர்.  மேலும் பல்வேறு தேவைகள் குறித்து மனுக்களாக வழங்கப்பட்டது.
     
    பொது மக்களின் கோரிக்கைக்கு மற்றும் வேண்டுகோளுக்கிணங்க வேண்டிய நடவடிக்கைகளை புதுவை அரசு எடுக்கும் என நுகர்வோர் குறைகள் தீர்வு அவையின் சேர்மன் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
    குறைகளை களைந்து அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம் என்று ரங்கசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    வாக்குறுதி அளித்து அறிவித்த திட்டங்கள் மக்களை சென்றடைந் துள்ளதா? அதனால் மக்கள் பயனடைந் துள்ளார்களா? என்பதை தெரிந்துகொள்ள இந்த கூட்டம் நடத்தப் படுகிறது. நேரடி மானியம் வழங்கிய பிறகு மக்கள் அதனை பெற்றுள்ளார்களா? என்று இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம். 

    இந்த கூட்டம் மனதுக்கு மகிழ்ச்சி, நெகிழ்ச்சி அளிக்கக்கூடியது. சில திட்டங்களை செயல்படுத் துவதில் குறைகள் இருக்கலாம், காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம். புதுவையை பொறுத்தவரை அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் நிறைவேற்றி வருகிறோம்.

    இலவச அரிசியை கூட சிகப்பு, மஞ்சள் கார்டு தாரர்களுக்கு வழங்கினோம். மீண்டும் விரைவில் வழங்க உள்ளோம். திட்டங்களில் உள்ள குறைகளை களைந்து அனைத்தையும் நிறைவேற்றுவோம். மத்திய, மாநில அரசுகளின் திட்டம், மத்திய அரசின் உதவி திட்டம் ஆகியவற்றையும் நிறைவேற்றுவோம். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    குரும்பாபேட்டில் எலி மருந்து தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை குரும்பாபேட் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மனோகர். இவரது மனைவி சுமதி (வயது 29). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

    கடந்த சில நாட்களாக சுமதி உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். டாக்டரிடம் காண்பித்தும் நோய் குணமாகவில்லை. 

    இந்த நிலையில் சம்பவத்தன்று நோய் கொடுமை அதிகமானதால் மனமுடைந்த சுமதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலிமருந்தை தின்று விட்டார். 

    இதனை அவர் தனது கணவரிடம் கூறவில்லை. மறுநாள் காலையில் சுமதி மயங்கி கிடப்பதை கண்டு அவரது கணவர் மனோகர் விசாரித்தார். அப்போது எலிமருந்து தின்று தற்கொலைக்கு முயன்றதை தெரிவித்தார். 

    உடனே சுமதியை சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக  ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், அதன் பின்னர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியிலும் சுமதி அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுமதி பரிதாபமாக இறந்து போனார். 

    இதுகுறித்து அவரது உறவினர் தயாளன் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெட்டப்பாக்கம் அருகே காதலியை திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்து வந்தததால் பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே மடுகரை முத்துநகரை சேர்ந்தவர் அய்யப்பன்.  கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதி. இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    இவர்களது இளைய மகன் உதயபிரகாஷ் (வயது21). இவர் மதகடிப்பட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.பி.ஏ. படித்து விட்டுவீட்டில் இருந்து வந்தார்.

     இதற்கிடையே உதயபிர-காஷ் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய விரும்புவதாக பெற்றோரிடம் கூறினார். அதற்கு அவரது பெற்றோர் மூத்த மகனுக்கும், மகளுக்கும்  திருமணம் முடிந்த பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறி வந்தனர்.

    ஆனால் அதனை உதயபிர-காஷ் ஏற்காமல் உடனடியாக அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரை வலியுறுத்தி வந்தார். இதனை பெற்றோர் ஏற்கவில்லை.

    இதனால் உதயபிரகாஷ் மனமுடைந்த நிலையில் யாரிடமும் பேசாமல் விரக்தியுடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை ஜோதி சமையல் செய்து வைத்து விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அய்யப்பனும் வெளியே சென்றிருந்தார். வீட்டில் உதயபிரகாஷ் மட்டும் இருந்தார்.

    சிறிது நேரம் கழித்து அய்யப்பன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகுநேரமாக கதவை தட்டியும் உதயபிரகாஷ் கதவை திறக்கவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த அய்யப்பன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது உதயபிரகாஷ் சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் தூக்கில் இருந்து உதயபிரகாசை மீட்டு மடுகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே உதயபிரகாஷ் இறந்து விட்டதாக  தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது தந்தை அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு கவர்னர் அனுமதி வழங்கக்கூடாது என்று வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தை பாலைவனமாக்கும்  மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க. அரசு முடிவு செய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம்  கடுமையாக பாதிக்கப்படும். இதனை புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
    4 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என்பதால், புதிய மதுபான தொழிற்சாலைகள் அனைத்தும் கிராமப்புற பகுதிகளில்தான் அமையும். 
     இதனால் விவசாய நிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவர். அரசுக்கு வருவாய்  கிடைக்கும், வேலைவாய்ப்பு பெருகும் என கூறுவதும் பொய்யான தகவல்தான். 

    புதுவையில் ஏற்கனவே இயங்கும்  5 மதுபான  தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் 70 சதவீத மதுபானங்கள் வெளிமாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 
    இதனால் புதுவை அரசுக்கு, மதுபான தயாரிப்பு  வரி மட்டுமே கிடைக்கிறது.  கலால் வரி வேறு மாநிலங்களுக்கே செல்கிறது.
     இதே விதிகள்தான் புதிய தொழிற் சாலைகளுக்கும் விதிக்கப்படும். எனவே வரி வருவாய் கிடைக்கும், வேலைவாய்ப்பு பெருகும் என்பதும் கண்துடைப்பு நாடகம்தான்.புதிதாக மதுபான ஆலைகள் திறக்கும் விஷயத்தில் மவுனம் காக்கும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்களை புதுவை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு கவர்னர்  அனுமதி வழங்கக்கூடாது. 

    இதுகுறித்து அ.தி.மு.க. சார்பில்  பசுமை தீர்ப்பாயம், பிரதமரின் நீர்நிலைகளை பாதுகாக்கும் பிரிவு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் செய்ய  உள்ளோம். இதனையும் மீறி மதுபான தொழிற்சாலைகளை கொண்டுவர முயற்சித்தால், புதுவை மாநில மக்கள் சார்பில், கட்சித்தலைமை  அனுமதி பெற்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும். மக்களை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். 
    இவ்வாறு அவர்  குறியுள்ளார்.
    திட்டங்களை விரைவுபடுத்த பாஸ்ட் புதுவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    உலக அமைதி மற்றும் நன்மைக்காக புதுவை திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் நடந்த யாகத்தில் கவர்னர்  தமிழிசை பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் எண்ணம் போல் ஆன்மீகம் தழைத்து ஓங்க வேண்டும் என்பதற்கு தகுந்தாற் போல் புதுவை கொரோனா இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. தடுப்பூசியால் நாம் கொரோனாவை வென்றுள்ளோம்.

    மாநில  வளர்ச்சிக்காக பல நல்ல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்து திட்டங்களையும் விரைவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி பெஸ்ட் புதுவையாக மாற்றுவோம் என்று தெரிவித்திருந்தார்.

    அதற்கான  வேலைகளில் அரசு ஈடுபட்டு உள்ளது. அரசு அனுப்பும் கோப்புகளை விரைவாக கையெழுத்திட்டு அனுப்புவதற்கும், திட்டங்களை  விரைவாக நிறைவேற்றுவதற்கும் பாஸ்ட் புதுவை என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிலர் குற்றம் சாட்டுவது போல் இல்லாமல்  புதுவை அமைதியாக உள்ளது. 

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    பேட்டியின்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக் குமார் ஆகியோர் உடனிருந்தனர்
    புதுவை ஆட்சியாளர்களால் காரைக்கால் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது.

    புதுச்சேரி:

    பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதுவை யூனியன் பிரதேசமாக திகழ்ந்து வருகிறது.

    மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது யூனியன் பிரதேசமான புதுவையை தமிழகத்தோடு இணைக்க முயற்சி நடந்தது. இதற்கு எதிராக இணைப்பு எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

    இதனால் இணைப்பு முயற்சி கைவிடப்பட்டது. இதனிடையே புதுவை ஆட்சியாளர்களால் காரைக்கால் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் காரைக்கால் மாவட்டத்தை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க கோரிக்கை எழுந்தது.

    இதற்காக தனி அமைப்பை உருவாக்கியும் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் தற்போது தமிழகத்தோடு காரைக்காலை இணைக்க வேண்டும் எனக்கோரி ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் சார்பில் காரைக்கால் முழுவதும் பிரதான சாலைகளில், மக்கள் கூடும் இடங்களில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

    இந்த சுவரொட்டியில் அசிங்கம், அவமானம், வெட்கம், புதுவை அரசே நாங்கள் என்ன அநாதைகளா? என தலைப்பிட்டு, காரைக்கால் மக்களுக்கு காலம்காலமாக எந்தவித அரசு நலத்திட்டங்களும் வழங்காத புதுவை அரசை நாங்கள் புறக்கணிக்கிறோம். காரைக்காலை தமிழ் நாட்டோடு இணைப்போம். பொது வாக்கெடுப்பு நடத்த புதுவை அரசே தயாரா? என கேள்வி எழுப்பி சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

    இது புதுவை அரசியல்கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணைப்புக்கு எதிரான போராட்டத்தில் காரைக்கால் மக்கள் துணைநின்றனர். ஆனால் இன்று காரைக்காலை தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக ஒரு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அரசியல்கட்சிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    4 பிராந்தியங்களையும் இணைந்து புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், காரைக்காலை தமிழகத்தோடு இணைப்போம் என இயக்கம் தொடங்கியிருப்பது மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    காவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஆட்சியை விட சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. ஆதாரப்பூர்வமாக வெளியிட தயாராக உள்ளோம். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் சட்ட ஒழுங்கு குறித்து பொது விவாதம் நடத்தவும் தயாராக உள்ளோம். ரவுடிகள் கட்டுப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  

    குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்படுகின்றனர். கடந்த ஆட்சியை விட குற்ற எண்ணிக்கை குறைவாக உள்ளது. கடந்த ஆட்சியில் போதைப்பொருள் கடத்தலை கண்டு கொள்ள வில்லை. நாங்கள் கடத்தலை தடுத்து குற்றவாளிகளை கைது செய்து வருகிறோம். 390 காவலர்களை நியமித்துள்ளோம். 
    நவீன வசதிகள் கொண்ட 
    வாகனங்கள் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.  600 ஊர்க்கால்நடை வீரர்கள், 200 காவலர்கள் என புதிதாக ஆயிரம் காவலர் பணியிடங்களை நிரப்ப உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    மின்துறை தனியார்மய கேள்வி எழுப்பியபோது, கருத்துச்சொல்ல விருப்பமில்லை என அமைச்சர் நமச்சிவாயம் மறுத்தார்.
    புதுவையில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்படும் என கலால் துறை அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் ஏற்கனவே 5 மதுபான தொழிற்சாலைகள், ஒரு பீர் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இந்நிலையில் புதுவை மாநில வருவாயை பெருக்க அரசு முடிவு செய்து மேலும் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதியளிக்க முடிவு செய்துள்ளது. 

    இதற்காக கலால்துறை நிபந்தனைகளுடன் விண்ணப்பிக்கலாம் என கலால்துறை இணை ஆணையர் சுதாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

     புதுவை கலால்விதிகள் சட்டம் 1970-ன்படி விண்ணப்பிக்க வேண்டும். மதுபான தொழிற்சாலை முதலீடு, சராசரி உற்பத்தி, தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும். ஆலை வளாக அமைப்பு, தண்ணீர் தேவைகள், சுத்திகரிப்பு முறை ஆகியவற்றை முழுமையாக குறிப்பிட வேண்டும். எந்த இ டத்தில் ஆலை அமைக்கப்பட உள்ளது. குறைந்தபட்சம் 4 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    எந்தவித குற்ற பின்னணியும் இல்லை, மாநில அரசுகளின் கருப்பு பட்டியலில் இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்த 3 ஆண்டு வருமான வரி தாக்கலை சமர்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு வருவாய் ரூ.100 கோடியாகவும், அதில் விண்ணப்பதாரரின் மதிப்பு குறைந்தபட்சம் ரூ.50 கோடியாகவும் இருக்க வேண்டும். 

    விண்ணப்பதாரர், இந்தியாவில் மதுபான உற்பத்தி தொழிலில் குறைந்தபட்சம் 5 ஆண்டு அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் கண்டிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 3 லட்சம் பெட்டிகள் மதுபானம் தயாரித்தவராக இருத்தல் வேண்டும். 

    இதுதவிர கலால் ஆணையர் நிபந்தனைகளை ஏற்க வேண்டும். கலால்துறைக்கு விண்ணப்பங்களை நிராகரிக்க உரிமையுண்டு. இந்த நிபந்தனைகளை ஏற்று மதுபான ஆலை நடத்த முன்வருவோருக்கு முதல்கட்ட அனுமதி வழங்கப்படும். ஓராண்டுக்குள் பிற துறைகளின் அனுமதி பெற்று ஆலையை தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் கலால்துறையின் அனுமதி ரத்தாகும் வாய்ப்புள்ளது. 

    இவ்வாறு அதில் குறிப்பிட்டு ள்ளார்.
    குறுவை சாகுபடிக்கு விதைநெல்-உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உறுதி அளித்தார்.
    புதுச்சேரி:

    வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளி யிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேட்டூர் அணை கடந்த 24-ந் தேதி  திறக்கப்பட்டு காவிரி நீர் பாசன மாவ ட்டங்களுக்கு கல்லணையில் இருந்து 27-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காரைக்கால்  மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் ஆழ்குழாய் பாசன வசதியுள்ள பகுதிகளில் மட்டும் ஆண்டுக்கு 700 எக்டேர் பரப்பில் குறுவை சாகுபடி பயிர்  செய்யப்பட்டு வந்தது. 

    இந்த ஆண்டு காவிரி நீர் குறுவை சாகுபடிக்கு வரும் சூழல் உள்ளதால் ஆயிரத்து 500 எக்டேர் பரப்பளவில் குறுவை  சாகுபடி இருக்கும் என எதிர்பார்க்க ப்படுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் விதை நெல் விற்பனைக்கு 26, அரசு மற்றும் தனியார் முகவர்கள்,  உர விற்பனைக்கு 24, பூச்சி மருந்து விற்பனைக்கு 18 முகவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    வேளாண்துறையால் தினமும் விதைகள்,  உரம், பூச்சி மருந்து இருப்பு கண்காணிக்கப்பட்டு தடையில்லாமல் விவசாய இடுபொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காரைக்கால் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக இந்த மாதம் 11 மெட்ரிக் டன் அளவுக்கு சான்று பெற்ற விதை முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

    இப்போது தேவையா நெல் விதைகள் இருப்பில் உள்ளது. மேலும் தேவைப்படும் பட்சத்தில் போதிய விதைகள்  இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 185 மெட்ரிக் டன் யூரியா, 62 மெட்ரிக் டன் டி.ஏ.பி. 63 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப் பில் உள்ளன. தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    2020-21-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்ததற்கு, இழப்பீடு தொகையை  விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காரைக்கால் மாவட்ட விவசாயிகள் காவிரிநீர்  வரவுள்ளதால் குறுவை நெல் சாகுபடியில் ஈடுபடலாம். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    உருளையன் பேட்டை முல்லை நகர் பகுதியில் ரூ.28 லட்சம் செலவில் தார் சாலை - வாய்க்கால் பணியை நேரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட முல்லை நகர் விரிவு   மூவேந்தர் வீதி, தாமரை வீதி ஆகிய 2 வீதிகளிலும் உள்ள பழைய தார் சாலையை மாற்றி புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் புதிதாக வாய்க்கால் கட்டைகள் கட்டும் பணி புதுவை நகராட்சி மூலம் நடைபெறுகிறது. 

    சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.28 லட்சம் செலவில் நடைபெறும் பணியை தொகுதி எம்.எல்.ஏ.வும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். 

    நிகழ்ச்சியில் புதுவை நகராட்சி ஆணையர். சிவக்குமார்,  ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் யஸ்வந்தய்யா நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம் மற்றும் மனித நேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களான.கராத்தே சுந்தர்ராஜன்   ராமலிங்கம்,கலியன், சிவராஜ், குணசேகரன், வேலாயுத சுந்தர்ராஜ், ஜெக விநாயகம், பூவராகவன், பீனாராணி, வேல்முருகன், ஜெயபாலன்,ஸ்ரீதர், வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×