என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம் - ரங்கசாமி உறுதி
குறைகளை களைந்து அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம் என்று ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
வாக்குறுதி அளித்து அறிவித்த திட்டங்கள் மக்களை சென்றடைந் துள்ளதா? அதனால் மக்கள் பயனடைந் துள்ளார்களா? என்பதை தெரிந்துகொள்ள இந்த கூட்டம் நடத்தப் படுகிறது. நேரடி மானியம் வழங்கிய பிறகு மக்கள் அதனை பெற்றுள்ளார்களா? என்று இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த கூட்டம் மனதுக்கு மகிழ்ச்சி, நெகிழ்ச்சி அளிக்கக்கூடியது. சில திட்டங்களை செயல்படுத் துவதில் குறைகள் இருக்கலாம், காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம். புதுவையை பொறுத்தவரை அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் நிறைவேற்றி வருகிறோம்.
இலவச அரிசியை கூட சிகப்பு, மஞ்சள் கார்டு தாரர்களுக்கு வழங்கினோம். மீண்டும் விரைவில் வழங்க உள்ளோம். திட்டங்களில் உள்ள குறைகளை களைந்து அனைத்தையும் நிறைவேற்றுவோம். மத்திய, மாநில அரசுகளின் திட்டம், மத்திய அரசின் உதவி திட்டம் ஆகியவற்றையும் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story






