என் மலர்
நீங்கள் தேடியது "Theni Jayakumar confirmed"
குறுவை சாகுபடிக்கு விதைநெல்-உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உறுதி அளித்தார்.
புதுச்சேரி:
வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளி யிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
மேட்டூர் அணை கடந்த 24-ந் தேதி திறக்கப்பட்டு காவிரி நீர் பாசன மாவ ட்டங்களுக்கு கல்லணையில் இருந்து 27-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் ஆழ்குழாய் பாசன வசதியுள்ள பகுதிகளில் மட்டும் ஆண்டுக்கு 700 எக்டேர் பரப்பில் குறுவை சாகுபடி பயிர் செய்யப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு காவிரி நீர் குறுவை சாகுபடிக்கு வரும் சூழல் உள்ளதால் ஆயிரத்து 500 எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி இருக்கும் என எதிர்பார்க்க ப்படுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் விதை நெல் விற்பனைக்கு 26, அரசு மற்றும் தனியார் முகவர்கள், உர விற்பனைக்கு 24, பூச்சி மருந்து விற்பனைக்கு 18 முகவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
வேளாண்துறையால் தினமும் விதைகள், உரம், பூச்சி மருந்து இருப்பு கண்காணிக்கப்பட்டு தடையில்லாமல் விவசாய இடுபொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக இந்த மாதம் 11 மெட்ரிக் டன் அளவுக்கு சான்று பெற்ற விதை முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இப்போது தேவையா நெல் விதைகள் இருப்பில் உள்ளது. மேலும் தேவைப்படும் பட்சத்தில் போதிய விதைகள் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 185 மெட்ரிக் டன் யூரியா, 62 மெட்ரிக் டன் டி.ஏ.பி. 63 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப் பில் உள்ளன. தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2020-21-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்ததற்கு, இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காரைக்கால் மாவட்ட விவசாயிகள் காவிரிநீர் வரவுள்ளதால் குறுவை நெல் சாகுபடியில் ஈடுபடலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






