என் மலர்
உள்ளூர் செய்திகள்

குறைதீர்ப்பு முகாம் நடந்த போது எடுத்த படம்.
மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம்
காட்டுக்குப்பம் மின்துறை மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அருகே காட்டுக்குப்பம் மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்தக் முகாமிற்கு நுகர்வோர் குறைகள் தீர்வு அவையின் சேர்மன் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
உறுப்பினர்கள் ஜிஜேந்திர ராவ், கிருஷ்ணமூர்த்தி, தெற்கு பிரிவு செயற்பொறியாளர் பழனிச்சாமி, பாகூர் உதவி பொறியாளர் சக்திவேல், இளநிலை பொறியாளர் ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
இந்த முகாமில் பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்று தங்கள் பகுதியில் உள்ள குறைகள், புகார் மற்றும் ஆலோசனைகளை எடுத்துக் கூறினர். மேலும் பல்வேறு தேவைகள் குறித்து மனுக்களாக வழங்கப்பட்டது.
பொது மக்களின் கோரிக்கைக்கு மற்றும் வேண்டுகோளுக்கிணங்க வேண்டிய நடவடிக்கைகளை புதுவை அரசு எடுக்கும் என நுகர்வோர் குறைகள் தீர்வு அவையின் சேர்மன் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
Next Story






