என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
நெட்டப்பாக்கம் அருகே காதலியை திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்து வந்தததால் பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே மடுகரை முத்துநகரை சேர்ந்தவர் அய்யப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதி. இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவர்களது இளைய மகன் உதயபிரகாஷ் (வயது21). இவர் மதகடிப்பட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.பி.ஏ. படித்து விட்டுவீட்டில் இருந்து வந்தார்.
இதற்கிடையே உதயபிர-காஷ் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய விரும்புவதாக பெற்றோரிடம் கூறினார். அதற்கு அவரது பெற்றோர் மூத்த மகனுக்கும், மகளுக்கும் திருமணம் முடிந்த பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறி வந்தனர்.
ஆனால் அதனை உதயபிர-காஷ் ஏற்காமல் உடனடியாக அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரை வலியுறுத்தி வந்தார். இதனை பெற்றோர் ஏற்கவில்லை.
இதனால் உதயபிரகாஷ் மனமுடைந்த நிலையில் யாரிடமும் பேசாமல் விரக்தியுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை ஜோதி சமையல் செய்து வைத்து விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அய்யப்பனும் வெளியே சென்றிருந்தார். வீட்டில் உதயபிரகாஷ் மட்டும் இருந்தார்.
சிறிது நேரம் கழித்து அய்யப்பன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகுநேரமாக கதவை தட்டியும் உதயபிரகாஷ் கதவை திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அய்யப்பன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது உதயபிரகாஷ் சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் தூக்கில் இருந்து உதயபிரகாசை மீட்டு மடுகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே உதயபிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது தந்தை அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






