என் மலர்
உள்ளூர் செய்திகள்

இயங்காமல் உள்ள ஏ.டி.எம். எந்திரம்.
ஏ.டி.எம். எந்திரம் இயங்காததால் வாடிக்கையாளர்கள் அவதி
மதகப்பட்டில் ஏ.டி.எம். எந்திரம் இயங்காததால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கி அருகில் ஏ.டிஎம். எந்திரம் உள்ளது.
வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கும் பணம் போடுவதற்கும் இந்த
ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக வங்கி விடுமுறை நாட்களில் பணம் போடுவதற்கு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.
தற்போது இந்த எந்திரம் கடந்த 6 நாட்களாக வேலை செய்யாமல் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும், பணம் போடவும் முடியாமல் சிரமத்தில் உள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து
ஏ.டி.எம். எந்திரத்தின் பழுதை நீக்கி வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதனை தடுக்க முயன்ற விமாலாவின் மகன் மூவேந்தனையும் சீத்தாராமன் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விமலா கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






