என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிலஅளவை துறை இயக்குனரிடம் நேரு எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.
நிலஅளவை துறை இயக்குனருடன் நேரு எம்.எல்.ஏ ஆலோசனை
நிலஅளவை துறை இயக்குனருடன் நேரு எம்.எல்.ஏ ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு நில அளவை பதிவேடுகள் துறை அலுவலகத்தில் இயக்குனர் ரமேஷ் மற்றும் தாசில்தார், நில ஆய்வாளருடன் ஆலோசனை நடத்தினர்.
உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட அரசு மனை பட்டாவில் பெயர் மாற்றம் செய்தல் வாரிசு பட்டா பெயர் மாற்றம் செய்தல், யாரும் உரிமை கோராத இடத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு மனை பட்டா வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆலோசனையின் போது மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் ராமலிங்கம், கலியன், சிவராஜ், குணசேகரன், வேலாயுதம், ஆதி, குப்புசாமி, கோவிந்தராஜ், ரெனோ, சிவராமன், காமராஜ், தர்மேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






