என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை
ரெட்டியார்பாளையத்தில் மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகர் முதல் தெருவை சேர்ந்தவர் குரு. இவரது மனைவி ராணி. இவரது தாயார் கந்தம்மாள் (வயது77). இவரது கணவர் வேலுசாமி தேவர் இறந்து விட்ட நிலையில் தூத்துக்குடி கோவில்பட்டியில் தனியாக வசித்து வந்த கந்தம்மாள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கையில் அடிப்பட்டு காயமடைந்தார்.
இதையடுத்து கந்தம்மாளை ராணி தனது வீட்டுக்கு அழைத்து வந்து ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்தவுடன் தனது வீட்டிலேயே தாயாரை பராமரித்து வந்தார்.
இந்த நிலையில் அதிகாலை 2 மணியளவில் கந்தம்மாள் கை வலிப்பதாக தனது மகள் ராணியிடம் கூறி வருத்தப்பட்டார். அப்போது கந்தம்மாள் கையில் தைலத்தை தடவி விடிந்த பின்னர் ஆஸ்பத்திரிக்கு செல்லலாம் என்று சமாதானம் செய்து ராணி தூங்க சென்று விட்டார்.
பின்னர் காலை 7 மணியளவில் ராணி குளியல் அறைக்கு சென்ற போது அங்கு தனது தாய் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






