search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுச்சேரியில் கோடை விழா

    புதுவை கடற்கரையில் 4 நாள் கோடை விழாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறையும், தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து கோடை விழாவை நடத்துகிறது.

    புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில்  2-ந் தேதி  தொடங்கி 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 4 நாட்கள் கோடை விழா நடக்கிறது. 

    இதன் தொடக்க விழா   மாலை 6.30 மணிக்கு கடற்கரை சாலை காந்தி திடலில் நடக்கிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி விழாவை தொடங்கி வைக்கிறார்.  சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் சந்திரபிரியங்கா, லட்சுமி நாராயணன், புதுவை அரசு செயலர் நெடுஞ்செழியன், தஞ்சை தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் தீபக்கெய்வட்கர், புதுவை கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் சிவராசன்  ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    தொடர்ந்து முத்து குழுவினரின் மங்கள இசை, உதயம் நாட்டியாலயா, காளியம்மன் கலைக்குழு, யூனஸ் மெல்லிசைக்குழுவின் பரதநாட்டியம், காளியாட்டம், நாட்டுப்புற இசை நடக்கிறது. 

    (3-ந் தேதி) மாலை 6.30 மணிக்கு முதலில் பொம்மலாட்டம், பாரதியார் பல்கலைக்கூடத்தின் நாட்டுப்புற நடனம், மருது சகோதரர்கள் வீர சிலம்பாட்டக்குழுவின் சிலம்பாட்டம், யாழ் கிராமிய கலைக்குழுவின் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம் நடக்கிறது. 

    4-ந் தேதி மாலை 6.30 மணிக்கு முதலில் வள்ளுவர் வில்லிசை குழுவின் வில்லுப்பாட்டு, சுந்தர நாட்டியேகேந்திராவின் பரதநாட்டியம், முனீஸ்வரன் கலைக்குழுவின் பம்பை உடுக்கை, ஹைடெக் சினி ஆர்கெஸ்ட்ரா மெல்லிசை நடக்கிறது.

    5-ந் தேதி மாலை 6.30 மணிக்கு முதலில் கலைமாமணி பொன்சண்முகம் குழுவின் நாதசங்கமம், யாத்ரா கலை பண்பாட்டு சங்கத்தின் நாட்டுப்புற நடனம், சப்தகிரி கிரியேஷன்ஸ் சிவன், பார்வதி நடனம், முகில் மெல்லிசை குழுவின் மெல்லிசை ஆகியவை நடக்கிறது. 
    Next Story
    ×