என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை ஜிப்மர் பாரதிய ஊழியர்கள் சங்கம் சார்பில் பாரதிய மஸ்தூர் சங்க தின விழா மற்றும் கொரோனாவின் போது சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் சாய்.ஜெ.சவரணன்குமார், செல்வகணபதி எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் பாரதிய ஊழியர்கள் சங்கம் சார்பில் பாரதிய மஸ்தூர் சங்க தின விழா மற்றும் கொரோனாவின் போது சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் சாய்.ஜெ.சவரணன்குமார், செல்வகணபதி எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பி.எம்.எஸ். மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், பொதுச்செயலாளர் விமேஸ்வரன், செயற்குழு உறுப்பினர் சிதம்பர சாமி ஆகியோர் கலந்துகொண்டு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். தலைவர் செல்வம், செயலாளர் உதயனன், பொருளாளர் சர்குணன், சண்முகம், முகமது அலி, ஞானசீலன், சிவகாமணி, ஜெயராமு, பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நெல்லித்தோப்பு தொகுதி குயவர்பாளையம் ஆனந்த முத்துமாரி அம்மன் வீதி மக்கள் பயன்பாடு இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்தது.
    • பொதுப்பணித்துறை மூலம் நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டாலும் சாலை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

    புதுச்சேரி:

    நெல்லித்தோப்பு தொகுதி குயவர்பாளையம் ஆனந்த முத்துமாரி அம்மன் வீதி மக்கள் பயன்பாடு இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்தது.

    இதனால் இந்த சாலையில் அங்கன்வாடி மையம், நீர் உந்து நிலையம் அமைக்க அப்போதைய எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் நடவடிக்கை எடுத்தார்.

    பொதுப்பணித்துறை மூலம் நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டாலும் சாலை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

    இதனால் இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளாக சமூக விரோதிகள் கூடாரமாகவே மாறிவிட்டது.கழிவு நீர் வெளியேறும் வீதியாகவும், மது குடிக்கும் இடமாகவும் மாறி விட்டது. இரவு நேரங்களில் திறந்த வெளி மதுபாராக செயல்டுகிறது

    இதனை களைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருக்கனூர் அருகே மகன் இறந்த விரக்தியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே மகன் இறந்த விரக்தியில்

    தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு பெரமன்னார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது45). விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென இறந்து போனார். மகன் மீது அதிக பாசம் கொண்டிருந்த குமார் மகன் இழப்பை தாங்காமல் மனவேதனையில் இருந்து வந்தார். அவருக்கு அவரது மனைவி சரசு ஆறுதல் கூறி வந்தார். ஆனாலும், குமார் மன விரக்தியில் சோகத்துடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி சரசு கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவையில் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • மது குடித்து விட்டு ரகளை செய்பவர்களையும் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொள்ப வர்களையும் போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    மது குடித்து விட்டு ரகளை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுவையில் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மது குடித்து விட்டு ரகளை செய்பவர்களையும் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொள்ப வர்களையும் போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

    ஒரே நாளில் நெட்டப்பாக்கம், திருக்கனூர், திருபுவனை, வில்லியனூர் ஆகிய பகுதிகளில் ரகளை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் மது குடித்து விட்டு ரகளை செய்த மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு:-

    நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் பெட்ரோல் பங்க் அருகே மது குடித்து விட்டு ரகளை செய்த கீழுர் மூகாம்பிகை நகர் விசுவநாதன்(42), ஏரிப்பாக்கம் மெயின் ரோட்டில் மது குடித்து விட்டு பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்த சூரமங்கலத்தை சேர்ந்த அருள்குமார்(35), கொத்தம்பாக்கத்தை சேர்ந்த வினோத்(29) மற்றும் நெட்டப்பாக்கம் வடகொள்ளி ரோட்டில் குடித்து விட்டு ரகளை செய்த பண்டசோழநல்லூர் வி.வி.ஆர். நகரை சேர்ந்த ராம்குமார் (35) ஆகிய 4 பேரை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் திருக்கனூர் அருகே கே.ஆர்.பாளையம்-திருவண்ணாமலை ரோட்டில் மது குடித்து விட்டு ரகளை செய்த திருவக்கரையை சேர்ந்த ராஜகுரு என்பவரை திருக்கனூர் போலீசாரும், வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட கோலியனூர் கூட்டுரோடு பகுதியை சேர்ந்த அசோக்(28) என்பவரை வில்லியனூர் போலீசார் கைதுசெய்தனர்.

    • புதுவை மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரை கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கை நடவடிக்கைகளை அரசு எடுக்காமல் உள்ளது.
    • என்ஜினீயரிங், மருத்துவம், விவசாயம், கால்நடை போன்ற தொழில் சார்ந்த கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கைக்கு உண்டான கலந்தாய்வு இதுவரை நடத்தவில்லை.

    புதுச்சேரி:

    வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரை கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கை நடவடிக்கைகளை அரசு எடுக்காமல் உள்ளது. குறிப்பாக கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதேபோல என்ஜினீயரிங், மருத்துவம், விவசாயம், கால்நடை போன்ற தொழில் சார்ந்த கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கைக்கு உண்டான கலந்தாய்வு இதுவரை நடத்தவில்லை. இதனால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    எனவே, அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து, மாணவர்கள் சேர்க்கையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

    தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் மாநில அரசின் இட ஒதுக்கீடாக 50 சதவீதத்தை மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மாநில அரசு கல்லூரிக்கு நிர்ண யித்துள்ள கட்டணத்தில் அரசு பெற்று தர வேண்டும். கலை கல்லுரிகளில் காலியாக உள்ள பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

    காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு கல்லூரி 2 ஷிப்டாக இயங்குவதால் மாலை நேரத்தில் படிக்கக்கூடிய மாணவர்கள் நேரத்தோடு வீட்டிற்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே மாணவர் பஸ்களை இயக்கி மாலை நேர கல்லூரி மாணவர்கள் கிராமப்புறத்திற்கு செல்ல பஸ் வசதியை செய்து தர வேண்டும்.

    இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. அறிக்கையில் கூறியுள்ளார்.

    • உப்பளம் தொகுதிக்குட் பட்ட வம்பாகீரபாளையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ப வடிவ வாய்க்காலில் அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் இருந்தது.
    • சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வழக்கம்போல் அங்கு ப-வடிவ வாய்க்காலில் கழிவு நீர் நிரம்பி வீட்டு வாசல்களில் தேங்கி நிற்க தொடங்கியது.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்குட் பட்ட வம்பாகீரபாளையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ப வடிவ வாய்க்காலில் அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் இருந்தது.

    சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வழக்கம்போல் அங்கு ப-வடிவ வாய்க்காலில் கழிவு நீர் நிரம்பி வீட்டு வாசல்களில் தேங்கி நிற்க தொடங்கியது.

    இது குறித்து உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு துப்புரவு பணியாளர்ளுடன் வந்த நகராட்சி அதிகாரிகள் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்புகளை கழிவு நீரை உறிந்து எடுக்கும் நவீன எந்திரம் கொண்ட வாகனத்தின் உதவியுடன் சரிசெய்தனர். இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. உடன் இருந்து பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியின் போது தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • புதுவை மாநில பா.ம.க. நிர்வாகிகள் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் இன்று புதுவை சட்ட சபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
    • இதனை கருத்தில் கொண்டு வருகிற சட்ட மன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்க சட்டம் இயற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ம.க. நிர்வாகிகள் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில்  புதுவை சட்ட சபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் கொண்டு வரவேண்டும் என்று பா.ம.க. சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் வலியுறுத்தி வருகிறோம். தற்போது புதுவை மாநிலத்தில் அதிக அளவில் ஆன்லைன் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் எத்தனையோ பேர் தற்கொலை முடிவை எடுத்து கொள்கிறார்கள். மேலும் இளைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்ப தோடு பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு வருகிற சட்ட மன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்க சட்டம் இயற்ற வேண்டும். இதனை உடனடியாக பரிசீலித்து ஆன்லைன் சூதாட்டத்தை புதுவையில் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • புதுவை அரசின் சார்பில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.
    • கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி காந்தன், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சார்பில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி காந்தன், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை நடந்தது. தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியும் ஏற்றனர்.

    காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன் தலைமை யில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், நீலகங்காதரன், கார்த்தி கேயன், நிர்வாகிகள் இளையராஜா, தனுசு, ரகுமான் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சி அலுவ லகத்தில் நடந்த விழாவில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குங்பூ சாம்பியன்ஷிப் போட்டியில்புதுவை குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 12 வீரர்கள்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.
    • 2 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

    புதுச்சேரி:

    சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குங்பூ சாம்பியன்ஷிப் போட்டியில்புதுவை குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 12 வீரர்கள்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இவர்கள் 2 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். புதுவைக்கு திரும்பிய வீரர்கள் முன்னாள் துணைசபாநாயகர் டி.பி.ஆர். செல்வம் தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் ஞானசேகரன், பழனிராஜ், புருஷோத்தமன் மற்றும் அணி நிர்வாகிகள் ரகுநாதன், முருகானந்தம், லோகேஷ், ரவிக்குமார், சந்தோஷ், பொற்செல்வன் மற்றும் பயிற்சியாளர்கள் தனசேகரன், அஸ்வின், கிருபைராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • வினோத்சங்கரிடமிருந்து ஏ.டி.எம். கார்டை பறித்து அதன்மூலம் ரூ.1 லட்சத்து 5ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டனர்.
    • கைது செய்யப்பட்ட ரோல் அந்தோணி மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    புதுச்சேரி:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியை சேர்ந்தவர் வினோத்சங்கர் (வயது46). சித்த மருத்துவ தொழில் செய்து வரும் இவர் அறக்கட்டளை நடத்தி வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெட்டப்பாக்கம் அருகே சூரமங்கலத்தை சேர்ந்த வினோதன் என்பவர் வினோத் சங்கருக்கு பழக்கமானார். அப்போது வினோதன் தன்னிடம் சக்திவாய்ந்த பச்சைநிற மூலிகை கல் இருப்பதாக வினோத்சங்கரிடம் கூறினார். இதனை நம்பி அந்த மூலிகை கல்லை ஏராளமாக பணம் கொடுத்து வினோத் சங்கர் வாங்கினார்.

    ஆனால், போலி மூலிகை கல் என தெரியவந்ததும் அந்த கல்லை வினோத்சங்கர் திருப்பி கொடுத்து விட்டார்.

    இதனையடுத்து வினோதன் மீண்டும் தனக்கு தெரிந்த நபரிடம் சக்தி வாய்ந்த கலசம் இருப்பதாக வினோத்சங்கரிடம் தெரிவித்தார். இதையடுத்து அதனை வாங்க வினோத்சங்கர் தனது அறக்கட்டளையில் பணிபுரியும் 4 பேருடன் புதுவைக்கு காரில் வந்தார். மரப்பாலம் சந்திப்பில் வந்தபோது வினோதன் உள்பட 9 பேர் காரை நிறுத்தினர்.

    பின்னர் கத்தியை காட்டி வினோத்சங்கரையும், அவருடன் வந்தவர்களையும் கடத்தி சென்று தாக்கி அவர்களிடமிருந்த ரூ.24 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.

    மேலும் வினோத்சங்கரிடமிருந்து ஏ.டி.எம். கார்டை பறித்து அதன்மூலம் ரூ.1 லட்சத்து 5ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டனர். அதுமட்டுமில்லாது வினோத்சங்கரின் அறக்கட்டளை நிர்வாகி முத்துக்குமாருக்கு போன் செய்து ரூ.4 லட்சத்தை கொடுத்தால் வினோத்சங்கரையும், அவருடன் வந்தவர்களையும் விடுவிப்போம் என்று கூறி மிரட்டினர்.

    இதையடுத்து முத்துகுமார் திருக்கோவிலூரில் வைத்து ரூ.4 லட்சத்தை வினோதன் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கொடுத்து வினோத்சங்கரையும், அவருடன் வந்தவர்களையும் மீட்டு சென்றார்.

    இதுகுறித்து வினோத்சங்கர் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வினோதன், வேல்ராம்பட்டை சேர்ந்த கல்விசெல்வம், முகமது பரூக், மகேஷ், பிரபு, அதிகைவாணன் ஆகிய 6 பேர் உடனடியாக கைது செய்தனர்.

    அதன்பிறகு அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்த அறிவு என்ற அறிவழகன் (28), வேல்ராம்பட்டு விமல் (23) மற்றும் கொம்பாக்கத்தை சேர்ந்த சந்துரு என்ற ஜெயசந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய புதுவை ரோடியர்பேட் கொளத்தார் தோப்பு பகுதியை சேர்ந்த ரவுடி ரோல் அந்தோணி (35) என்பவரை தேடி வந்த நிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரோல் அந்தோணி மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வில்லியனூர் அருகே மனைவி மனநிலை பாதிக்கப்பட்ட வேதனையில் முதியவர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    • மேல் சிகிச்சைக்காக சாரங்க பாணியை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    புதுச்சேரி

    வில்லியனூர் அருகே மனைவி மனநிலை பாதிக்கப்பட்ட வேதனையில் முதியவர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் அருகே பங்கூர் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் அன்பழகன். ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவருடன் இவரது தந்தை சாரங்கபாணி (வயது86). தாய் கோவிந்தம்மாள்(81) ஆகியோர் வசித்து வந்தனர்.

    இதற்கிடையே கோவிந்தம்மாள் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மனைவி மீது பாசமாக இருந்து வந்த சாரங்கபாணி மனவேதனையில் இருந்து வந்தார்.

    இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சாரங்கபாணி சம்பவத்தன்று எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சாரங்க பாணியை ஜிப்மர் ஆஸ்பத்தி ரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாரங்கபாணி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருபுவனையில் கொரோனாவால் வேலை இழந்ததால் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • கொரோனா காரணமாக விபூஷணன் வேலை இழந்து வீட்டில் இருந்து வந்தார்.

    புதுச்சேரி:

    திருபுவனையில் கொரோனாவால் வேலை இழந்ததால் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பம் கிழக்கு மணவெளி வீதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது இளைய மகன் விபூஷணன்(வயது38). இவருக்கு திருமணமாகி ஜெய என்ற மனைவி யும், 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. என்ஜினீயரான விபூஷணன் சென்னையில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இதற்கிடையே கொரோனா காரணமாக விபூஷணன் வேலை இழந்து வீட்டில் இருந்து வந்தார். பல இடங்களில் சென்று வேலை தேடியும் விபூஷணனுக்கு சரியான வேலை அமைய வில்லை. இதனால் அவருக்கும் அவரது மனைவி ஜெயக்கும் அவ்வப்போது வாய்த்தகராறு ஏற்படும். அதன்பிறகு இருவரும் சமாதானம் ஆகி விடுவார்கள்.

    இந்த நிலையில் வேலை இல்லாததால் விபூஷணன் தனது மனைவி குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இரவு இது தொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் ஜெய தனது குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்த போது திடீரென விபூஷணன் சமையல் அறைக்கு சென்று மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனை கண்டதும் ஜெயயும் மற்றும் விபூஷணன் தந்தை பெருமாளும் கோணி சாக்கை தண்ணீரில் நனைத்து தீயை அணைத்தனர். பின்னர் உடல் கருகிய நிலையில் விபூஷணனை அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், அங்கிருந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அதிகாலை சிகிச்சை பலனின்றி விபூஷணன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தந்தை பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×