என் மலர்
புதுச்சேரி
- அ.தி.மு.க. மேற்கு மாநில அவைத்தலைவர் பேராசிரியர் ராமதாஸ், பெண்களின் ஆடை குறித்து கருத்துக்கள் வெளி யிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
- அவர் வெளியிட்டுள்ள கருத்துகளுக்காக ராமதாஸ் இந்தியப் பெண்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
புதுச்சேரி:
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநில செயலாளர் விஜயா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. மேற்கு மாநில அவைத்தலைவர் பேராசிரியர் ராமதாஸ், பெண்களின் ஆடை குறித்து கருத்துக்கள் வெளி யிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அவர் வெளியிட்டுள்ள கருத்துகளுக்காக ராமதாஸ் இந்தியப் பெண்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவர் தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் அவர் கருத்துகளுக்கு எதிராக அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் போராட்டத்தில் ஈடுபடும்.
புதுவைக்கு சுற்றுலா வரும் பெண்கள் ஆடை பற்றி கொச்சையான விமர்சனம் செய்திருப்பதற்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2022-23-ம் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்பிக்க உள்ளேன்.
- புதுவை ஆட்சிப்பரப்பானது நல்லாட்சி, அமைதி, நல்லிணக்கம், பொருளாதார முன்னேற்றம் ஆகிய இலக்குகளை நோக்கி உறுதியுடன் முன்னேறி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை சட்ட சபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதாவது:-
பெருமைவாய்ந்த இந்த அவையில்
2022-23-ம் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்பிக்க உள்ளேன். 15-வது சட்டமன்றத்தில் 2-வது வரவு செலவு திட்டத்தை சமர்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய புதுவை மக்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.
புதுவை ஆட்சிப்பரப்பானது நல்லாட்சி, அமைதி, நல்லிணக்கம், பொருளாதார முன்னேற்றம் ஆகிய இலக்குகளை நோக்கி உறுதியுடன் முன்னேறி வருகிறது.
பிரதமர் மோடியின் நோக்கப்படி வணிகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா ஆகிய துறைகளில் பெஸ்ட் புதுவையாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
கடுமையான நிதி நெருக்கடி இருந்த போதிலும், எனது அரசு பல நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
2021-22-ம் நிதியாண்டில் நமது செலவினம் ரூ.9,793.29 கோடியாகும். இது திருத்திய மதிப்பீட்டின்படி 94.04 சதவீதமாகும்.
2022-23-ம் நிதியா ண்டின் பட்ஜெட் மதிப்பீடு ரூ.10,696.61 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.8,675.65 கோடி வருவாய் செலவீனங்களாகும். ரூ.2,020.96 கோடி மூலதன செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் சொந்த வருவாய் ரூ.6,557.23 கோடியாகும். மத்திய அரசின் நிதியுதவி ரூ.1,729.77 கோடியாகும். மத்திய சாலை நிதி ரூ.20 கோடி, மத்திய அரசு திட்டங்களின்கீழ் வழங்கும் நிதி ரூ.500 கோடி இருக்கும்.
மேலும் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.1,889.61 கோடியை கடன் மூலம் திரட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆட்சிப்பரப்பில் 31.3.2022 வரை மொத்த நிலுவைக்கடன் ரூ.9,859.20 கோடியாகும்.
அரசின் நிதி ஒதுக்கீட்டில் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், கடன், வட்டி செலுத்த செலவிடப்படுகிறது. இந்த நிதியாண்டின் திட்டமதிப்பீடான ரூ.10,696 கோடியில் ரூ.2,312.77 கோடி சம்பளத்திற்காகவும், ரூ.1,122.22 கோடி ஓய்வூதியத்திற்காகவும், ரூ.2,311.61 கோடி கடன் மற்றும் வட்டிசெலுத்தவும், ரூ.1,440 கோடி மின்சாரம் வாங்கவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசின் மற்ற முக்கிய செலவீனங்களான முதியோர் ஓய்வூதியம், பிற நலத்திட்டங்களுக்கு ரூ.1,400 கோடியும், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சி, உயர்கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானிய கொடையாக ரூ.1,333.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- 2022-23-ம் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்பிக்க உள்ளேன்
- புதுவை ஆட்சிப்பரப்பானது நல்லாட்சி, அமைதி, நல்லிணக்கம், பொருளாதார முன்னேற்றம் ஆகிய இலக்குகளை நோக்கி உறுதியுடன் முன்னேறி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை சட்ட சபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதாவது:-
பெருமைவாய்ந்த இந்த அவையில்
2022-23-ம் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்பிக்க உள்ளேன். 15-வது சட்டமன்றத்தில் 2-வது வரவு செலவு திட்டத்தை சமர்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய புதுவை மக்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.
புதுவை ஆட்சிப்பரப்பானது நல்லாட்சி, அமைதி, நல்லிணக்கம், பொருளாதார முன்னேற்றம் ஆகிய இலக்குகளை நோக்கி உறுதியுடன் முன்னேறி வருகிறது.
பிரதமர் மோடியின் நோக்கப்படி வணிகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா ஆகிய துறைகளில் பெஸ்ட் புதுவையாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
கடுமையான நிதி நெருக்கடி இருந்த போதிலும், எனது அரசு பல நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
2021-22-ம் நிதியாண்டில் நமது செலவினம் ரூ.9,793.29 கோடியாகும். இது திருத்திய மதிப்பீட்டின்படி 94.04 சதவீதமாகும்.
2022-23-ம் நிதியா ண்டின் பட்ஜெட் மதிப்பீடு ரூ.10,696.61 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.8,675.65 கோடி வருவாய் செலவீனங்களாகும். ரூ.2,020.96 கோடி மூலதன செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் சொந்த வருவாய் ரூ.6,557.23 கோடியாகும். மத்திய அரசின் நிதியுதவி ரூ.1,729.77 கோடியாகும். மத்திய சாலை நிதி ரூ.20 கோடி, மத்திய அரசு திட்டங்களின்கீழ் வழங்கும் நிதி ரூ.500 கோடி இருக்கும்.
மேலும் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.1,889.61 கோடியை கடன் மூலம் திரட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆட்சிப்பரப்பில் 31.3.2022 வரை மொத்த நிலுவைக்கடன் ரூ.9,859.20 கோடியாகும்.
அரசின் நிதி ஒதுக்கீட்டில் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், கடன், வட்டி செலுத்த செலவிடப்படுகிறது. இந்த நிதியாண்டின் திட்டமதிப்பீடான ரூ.10,696 கோடியில் ரூ.2,312.77 கோடி சம்பளத்திற்காகவும், ரூ.1,122.22 கோடி ஓய்வூதியத்திற்காகவும், ரூ.2,311.61 கோடி கடன் மற்றும் வட்டிசெலுத்தவும், ரூ.1,440 கோடி மின்சாரம் வாங்கவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசின் மற்ற முக்கிய செலவீனங்களான முதியோர் ஓய்வூதியம், பிற நலத்திட்டங்களுக்கு ரூ.1,400 கோடியும், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சி, உயர்கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானிய கொடையாக ரூ.1,333.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவை நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்கள் கூட்டு பேராட்டக்குழுவினர் முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- ஆம்பூர் சாலை அருகே நடந்த தர்ணா போராட்டத்துக்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் விநாய கவேல் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
புதுவை நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்கள் கூட்டு பேராட்டக்குழுவினர் முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் சாலை அருகே நடந்த தர்ணா போராட்டத்துக்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் விநாய கவேல் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தகணபதி, வேளாங்கண்ணிதாசன், அய்யப்பன், சகாயராஜ், உதயகுமார், மண்ணாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியத்தை நேரடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த தொடர் விடுப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
- புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த அரசியல் விவகார குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் வழிமறித்தனர்.
- மாநில தலைவரை ஏன் மாற்றவில்லை? என கேட்டு அவரின் காரை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த அரசியல் விவகார குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் வழிமறித்த–னர்.
மாநில தலைவரை ஏன் மாற்றவில்லை? என கேட்டு அவரின் காரை முற்றுகையிட்டனர். இது–தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கருணா–நிதி, அப்துல்ரகுமான், செயலாளர்கள் சரவணன், சிவாஜி, சேவாதள துணைத்தலைவர் ஆகிய 5 பேர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணி–யன் அவர்களுக்கு அனுப்பி–யுள்ள கடிதத்தில், கட்சியின் மேலிட பொறுப்பாளரை தடுத்து, அவமானப்படுத்தி, காரில் ஏறிய பின் கண்ணாடி, கதவுகள், டயர்களை சேதப்படுத்தி, மண்ணை வாரி இறைத்த நீங்கள் நடந்துகொண்ட விதம் கட்சியின் கண்ணியத்துக்க விரோதமானது.
இவை அனைத்தும் முன்னாள் அமைச்சர்கள், பொதுமக்கள் முன்னிலை–யில் நடந்தது.
எனவே நீங்கள் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறீர்கள். ஏன் உங்களை நிரந்தரமாக நீக்கக்கூடாது? என்ற பதிலை 7 நாட்களுக்குள் கட்சி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை கணவர் தூக்கி வீசியதால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- குழப்பு காரமாக இருப்பதாக கூறி சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை சுந்தரமூர்த்தி வெளியே வீசி விட்டார்.
புதுச்சேரி:
சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை கணவர் தூக்கி வீசியதால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழநல்லூரை அடுத்த சிவன்படபேட் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகள் கீதா(வயது26) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று கீதா ஆட்டுக்கறி குழம்பு சமைத்து வைத்திருந்தார். மதியம் கீதா கணவருக்கு அதனை பறிமாறினார். அப்போது குழப்பு காரமாக இருப்பதாக கூறி சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை சுந்தரமூர்த்தி வெளியே வீசி விட்டார். இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கி டையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படு கிறது. இதனால் கீதா மனவேதனை அடைந்தார்.
பின்னர் சுந்தரமூர்த்தி அருகில் உள்ள கடைக்கு சென்றார். அந்த நேரத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கீதா கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.
கடைக்கு சென்று திரும்பிய சுந்தரமூர்த்தி வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்ததார். அப்போது மனைவி தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று மனைவியை தூக்கில் இருந்து மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்து க்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கீதாவை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கீதா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதா பமாக இறந்து போனார்.
இதுகுறித்து கீதாவின் தாய் வாசுகி கொடுத்த புகாரின் பேரில் நெட்டப் பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முதலியார்பேட்டை தொகுதி சுதானா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் குடிநீர் குழாய்கள் நீர் வந்து குழாய்கள் மற்றும் சாலைகள் மறுசீரமைப்பு பணி ரூ.14.28 கோடி மதிப்பில் மத்திய அரசின் அம்ருத் நிதி உதவியுடன் நடைபெற உள்ளது.
- முதலி யார்பேட்டை தொகு திக்குட்பட்ட உழந்தை ஏரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பூமி பூஜையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை தொகுதி சுதானா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் குடிநீர் குழாய்கள் நீர் வந்து குழாய்கள் மற்றும் சாலைகள் மறுசீரமைப்பு பணி ரூ.14.28 கோடி மதிப்பில் மத்திய அரசின் அம்ருத் நிதி உதவியுடன் நடைபெற உள்ளது.
அதற்கான பூமி பூஜை முதலியார்பேட்டை நாகாத்தம்மன் கோவில் அருகே நடைபெற்றது. முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், சம்பத் எம்.எல்.ஏ. ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
இந்த திட்டத்தின் மூலம் சுதானா நகர், முருங்கப்பாக்கம், துலுக்கானத்தம்மன் நகர், சுகாதார ஊழியர்கள் காலனி, திவான் கந்தப்பா நகர், வள்ளலார் நகர், மறைமலைநகர், அரவிந்தர் நகர், பாரதியார் நகர் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு தரமான உரிய அழுத்துத்துடன் குடிநீர் வினியோகிக்கப்படும்.
இதேபோல் முதலி யார்பேட்டை தொகு திக்குட்பட்ட உழந்தை ஏரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பூமி பூஜையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்ப ணித்துறை செயலர் அருண், தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் ரங்கராஜ் மற்றும் முதலியார் பேட்டை தொகுதி முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்கால் பிராந்தியத்தில் 24 மணி நேரமும் பால் விற்பனை செய்யப்படும்.
- லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சக்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் மீண்டும் இயக்கப்படும்.
புதுவை சட்ட சபை இன்று கூடியது. நிதி பொறுப்பை வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் வருமாறு:-
புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடை, காலை சிற்றுண்டி, மதிய உணவு, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் தொடரும்.
21 வயது முதல் 57 வயது வரை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத குடும்ப பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இந்தாண்டு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.
ஏனாம் பிராந்தியத்தில் உள்ள டாக்டர் அப்துல்கலாம் அரசு கல்லூரியில் புதிய வகுப்புகள் தொடங்கப்படும் புதுவை லாஸ்பேட்டை அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, மகளிர் பொறியியல் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுவையில் சட்ட பல்கலைக்கழகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தடையில்லா மின் விநியோகம் வழங்கப்படும். துணை மின் நிலையங்கள் புனரமைக்கப்படும். நலிவடைந்த கூட்டுறவு சங்கங்கள் மேம்படுத்தப்படும். லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சக்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் மீண்டும் இயக்கப்படும்.
காரைக்கால் பிராந்தியத்தில் 24 மணி நேரமும் பால் விற்பனை செய்யப்படும். கலைஞர்களுக்கு கலைமாமணி, தமிழ்மாமணி விருதுகள் வழங்கப்படும்.
புதுவையில் மேலும் 4 சுகாதார மையங்கள் அமைக்கப்படும். காரைக்காலில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மத்திய அரசு ஒப்புதல் அளித்ததால் ரூ.10,600 கோடிக்கு புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல்.
- கால்நடை மையம், காரைக்காலில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2022- 23க்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். சட்டப்பேரவை கூடியதும் நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மத்திய அரசு ஒப்புதல் அளித்ததால் ரூ.10,600 கோடிக்கு புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மாநிலத்தில் கால்நடை மையம், காரைக்காலில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
- ஜூலை 26-ந் தேதி குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு புகாரின்படி, பள்ளூர் போலீசார் தொழிலாளி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளியை சுமார் 2 ஆயிரம் கி.மீ. தூரம் தேடி சென்று 25 நாட்களில் கைது செய்த மாகி போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தின் மாகி பிராந்தியம் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே அமைந்துள்ளது.
மாகியில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மாகியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர்.
இவர்களது மைனர் பெண்ணை அதே பகுதியில் வேலை செய்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த சுதேசி சஞ்ய்த் ஷீல் (வயது 23) என்ற தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து ஜூலை 26-ந் தேதி குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு புகாரின்படி, பள்ளூர் போலீசார் தொழிலாளி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளி மேற்கு வங்காளத்தில் பங்களாதேஷ் எல்லையில் பெடாய் என்ற கிராமத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மேற்கு வங்காளம் சென்ற மாகி தனிப்படை போலீசார் அங்கேயே 3 வாரங்ககளாக முகாமிட்டு தேடினர்.
பின்னர் பங்களாதேஷ் எல்லையில் பெடாய் கிராமத்தில் பதுங்கி இருந்த சுதேசி சஞ்ய்த் ஷீலை கைது செய்தனர்.
அவனை மேற்கு வங்க கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து மாகிக்கு அழைத்து வந்து புதுவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளியை சுமார் 2 ஆயிரம் கி.மீ. தூரம் தேடி சென்று 25 நாட்களில் கைது செய்த மாகி போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
- அரசியல் விவகார குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் இன்று புதுவை வந்தார்.
- காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு காலை வந்த அவரை முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் பேச வேண்டும் என வலியுறுத்தினர்.
புதுச்சேரி:
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு புதுவை காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் பகிரங்கமாக வலுத்து வருகிறது.
மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் ஆகியோர் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
மாநில தலைவரை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உடனே மாற்ற வேண்டும், புதுவை காங்கிரஸ் கட்சியில் நாராயணசாமியின் தலையீட்டை அனுமதிக்க கூடாது என்று முன்னாள் அமைச்சர்கள் தரப்பினர் போர் கொடி தூக்கினர்.
மேலும், இவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு புகார் கடிதமும் அனுப்பினர், இந்நிலையில் அரசியல் விவகார குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் இன்று புதுவை வந்தார்.
காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு காலை 9.30 மணிக்கு வந்த அவரை முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் பேச வேண்டும் என வலியுறுத்தினர். அவர் கூட்டத்தில் பங்கேற்று மீண்டும் வந்து பேசுவதாக கூறினார். இதையடுத்து அவர் கூட்டத்திற்கு செல்ல அதிருப்தியாளர்கள் அனுமதித்தனர்.
இதனையடுத்து தினேஷ் குண்டுராவ் 2 மணி நேரம் ஆகியும் கூட்டம் முடிந்து வெளியில் வரவில்லை. இதனிடையே தினேஷ் குண்டுராவை வழிமறித்த விஷயம் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் ஆதரவாளர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வர தொடங்கினர்.
இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்ப்பட்டது. இதனிடையே, அலுவலகத்தின் வெளியில் இருந்தவர்கள் தினேஷ் குண்டுராவை வெளியில் வர சொல்லி கோஷங்களை எழுப்பினர். மதியம் 12 மணிக்கு அவர் வெளியில் வந்தார். உடனே அவரை சூழ்ந்து கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு அவர் சோனியா மேடத்திடம் தகவல் தெரிவித்திருப்பதாகவும், அறிக்கை கொடுப்பது மட்டும் தான் வேலை என கூறினார். அதற்கு அதிருப்தியாளர்கள் ராகுல்காந்தியை சந்திக்க நேரம் பெற்றுத்தரும்படி கேட்டனர். அதற்கு பதில் கூறாமல் அவர் காரில் ஏறினார். இதனால் கூடியிருந்த அதிருப்தியாளர்கள் ஆத்திரத்தில் காரை வழிமறித்து போக விடாமல் தடுத்தனர்.
கார் கண்ணாடியை கையால் தட்டியும், காரின் முன்பகுதியில் கையால் குத்தியும் காரை செல்லவிடாமல் தடுத்தனர். அப்போது முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் ஆகியோர் கார் செல்ல வழி ஏற்படுத்தி தந்தனர்.
இதனையடுத்து கார் அங்கிருந்து சென்றது. அப்போது அதிருப்தியாளர்கள் காரின் மீது மண்ணை தூவினர். காங்கிரஸ் கட்சி அலுவலகம் பரபரப்பும் பதற்றமுமாக காணப்பட்டது.
- உருளையன்பேட்டை தொகுதி கோவிந்தசாலை பிரியதர்ஷினி நகர், கண்டாக்டர் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய அரசு குடியிப்புகளை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ 4 ¼ கோடி செலவில் நடைபெற உள்ளது.
- பொதுப்பணித்துறை கட்டிடங்கள் சிறப்பு பிரிவு மூலம் பணிகள தொடங்குவதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை தொகுதி கோவிந்தசாலை பிரியதர்ஷினி நகர், கண்டாக்டர் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய அரசு குடியிப்புகளை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ 4 ¼ கோடி செலவில் நடைபெற உள்ளது.
பொதுப்பணித்துறை கட்டிடங்கள் சிறப்பு பிரிவு மூலம் பணிகள தொடங்குவதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், நேரு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலர் அருண், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை தொழில்நுட்ப அதிகாரி ரவிச்சந்திரன், பொதுப்பணித் துறை கட்டிடங்கள் சிறப்பு பிரிவு செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், பொது சுகாதார பிரிவு செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் உதயகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பொறியாளர்களும் மேலும் குடிசைமாற்று வாரிய அதிகாரிகளும், பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அனைத்து வீட்டிற்கும் தரை டைல்ஸ் பதித்தல், சிதைந்த ட்ரைனேஜ் மற்றும் மழைநீர் வெளியேறும் குழாய்களை மாற்றி புதிதாக அமைத்தல், சிதலமடைந்த கட்டுமானங்களை கொத்தி பூசு வேலைகள் செய்தல், புதிதாக வண்ணம் தீட்டுதல் போன்ற மறு சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.






