என் மலர்
புதுச்சேரி
- கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய பாபு சமுத்திரத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- ஒரு நாள் கூலியாக அரசு 271 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளது ஆனால் வேலைக்கான சம்பளம் 120 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய பாபு சமுத்திரத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் பணி வழங்கப்பட்டது இதில் பொது மக்களுக்கு 4 நாட்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான ஒரு நாள் கூலியாக அரசு 271 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளது ஆனால் வேலைக்கான சம்பளம் 120 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் தங்களுக்கு 100 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்றும் அரசு நிர்ணயித்த ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கண்டமங்கலம் செல்லிப்பட்டு சாலையில் பெரிய பாபு சமுத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தின சபாபதி சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் .
மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டை புதுவை அ.தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன்.
- அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று அரசின் மாதாந்திர உதவி பெறாத 21 வயதிலிருந்து 55 வயது உள்ளவரை உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ. ஆயிரம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள பட்ஜெட் மீதான கருத்தில் கூறியிரு ப்பதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டை புதுவை அ.தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன்.
கடுமையான நிதி நெருக்கடியிலும் முற்போக்கு சிந்தனையுடன் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு மத்திய அரசு ரூ.ஆயிரத்து 684 கோடி வெளிக்கடன் வாங்கி கொள்ள அனுமதி அளித்தும் முதல்-அமைச்சர் ரூ.525 கோடி மட்டுமே கடன் பெற்று மாநிலத்தின் பொருளாதார நிலையை கட்டுக்குள் நிலைநாட்டியுள்ளார்.
அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று அரசின் மாதாந்திர உதவி பெறாத 21 வயதிலிருந்து 55 வயது உள்ளவரை உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ. ஆயிரம் அறிவித்துள்ளது. பாராட்டுதலுக்குரிய அற்புதமான திட்டம் ஆகும். அனைத்து பிராந்தியங்களும் சம வளர்ச்சி அடையும் விதத்தில் காரைக்கால், மாகி, ஏனாம், புதுவை பகுதிகளில் அடிப்படை திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த இந்த பட்ஜெட் ஏழை, எளியோருக்கான, மாநில உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான, உயிரோட்டமுள்ள உன்னதமான பட்ஜெட்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கவர்னர் உரையில் மத்திய அரசின் கூடுதல் நிதி உட்பட மிகப்பெரிய எதிர்பார்ப்போடு மக்கள் இருந்தனர், ஆனால் எதுவும் இல்லை.
- அனைத்து மாநிலத்திலும் சாலை, கழிவுநீர் ஆகியவைகளில் என்னென்ன திட்டங்கள் ஸ்மார்ட் சிட்டியில் செய்யப்போகின்றோம் என்பதை முன்பே திட்டமிட்டு விடுகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது:-
கவர்னர் உரையில் மத்திய அரசின் கூடுதல் நிதி உட்பட மிகப்பெரிய எதிர்பார்ப்போடு மக்கள் இருந்தனர், ஆனால் எதுவும் இல்லை. மாநில அந்தஸ்து பற்றிய அறிவிப்பு இல்லை. கவர்னர் மத்தியில் இருந்து நிதியை கொண்டு வராவிட்டாலும், திட்டங்களையாவது கொண்டு வரலாம்.
அனைத்து மாநிலத்திலும் சாலை, கழிவுநீர் ஆகியவைகளில் என்னென்ன திட்டங்கள் ஸ்மார்ட் சிட்டியில் செய்யப்போகின்றோம் என்பதை முன்பே திட்டமிட்டு விடுகின்றனர். ஆனால் புதுவையில் இதுவரை என்னென்ன திட்டங்கள் செய்யப்போகிறோம் என்பதை கூட இறுதி செய்யவில்லை.
தொழில்துறையில் புது கொள்கையை அறிவியுங்கள். நிலம், ஜி.எஸ்.டி., வருமான வரி உள்ளிட்ட ஏதேனும் ஒன்றில் சலுகை தாருங்கள். இல்லாவிட்டால் தொழிற்சாலைகள் வெளியேறி வேலை வாய்ப்பபின்மை ஏற்படும். பாப்ஸ்கோ, பாசிக் அனைத்தும் நலிவடைந்து உள்ளது. பி.சி., கார்ப்ரேஷன் செயல்படவில்லை. பாட்கோவில் கடன் தருவதில்லை. கடந்த 10 ஆண்டாக ஏழைகள், ஆதிதிராவிடர்கள் என யாருக்கும் மனைப்பட்டா தரவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- விநாயகம்பட்டு கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியுடன் கூடிய குடிநீர் திட்டத்துக்காக ரூ.2.85 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
- நபார்டு வங்கியில் கடன்பெற்று த்தான் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-
அங்காளன் (சுயே):- விநாயகம்பட்டு கிராமத்து க்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதா? எந்த திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது? இந்த ஆண்டு கட்டி தரப்படுமா?
அமைச்சர் லட்சுமி நாராயணன்:- விநாயகம்பட்டு கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியுடன் கூடிய குடிநீர் திட்டத்துக்காக ரூ.2.85 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அங்காளன்:- கடந்த சட்டமன்ற கூட்டத்திலும் கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள்? அடுத்த கூட்டம் வந்தும் கட்டித்தர வில்லை. திருபுவனை தொகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர்:- நபார்டு வங்கியில் கடன்பெற்றுத்தான் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதில் சில சிக்கல்கள் இருந்தது. தற்போது அனைத்தும் நீங்கியுள்ளது.
சாலை, குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் கூறியுள்ளார். இனி காலதாமதம் ஏற்படாது. விரைவில் கட்டித்தருவோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- வீட்டில் தனியாக இருந்த துணை தாசில்தார் தாயாரிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்து நகை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- வாணரப்பேட்டையை சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் அவருடன் ஒருவர் அடிக்கடி அம்சாவிடம் உணவு யாசகம் பெற்று சாப்பிட்டு வந்தனர்.
புதுச்சேரி:
வீட்டில் தனியாக இருந்த துணை தாசில்தார் தாயாரிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்து நகை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுவை ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி அம்சா(வயது67). இவர்களுக்கு கணேசன் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். கணேசன் ஏனாமில் துணை தாசில்தாரராக பணிபுரிந்து வருகிறார்.
குப்புசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் அம்சா தனது மகள் விஜய லட்சுமியுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக வாணரப்பேட்டையை சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் அவருடன் ஒருவர் அடிக்கடி அம்சாவிடம் உணவு யாசகம் பெற்று சாப்பிட்டு வந்தனர்.
இந்த நிலையில் விஜயலட்சுமி வெளியே சென்றிருந்தார். வீட்டில் அம்சா மட்டும் தனியாக இருந்தார். அப்போது இதனை நோட்டமிட்ட குடி போதையில் அம்சாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர்.
அம்சா வீட்டுக்குள் தண்ணீர் எடுத்து வர சென்ற போது பின் தொடர்ந்து சென்ற அந்த நபர்கள் அம்சா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அம்சா அலறல் சத்தம் போட்டார்.
இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் அம்சாவை தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த அம்சா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை தாக்கி நகையை பறிக்க முயன்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
- நாட்டிலேயே சுகாதாரத் துறைக்கு பட்ஜெட் நிதியில் 9 சதவீதம் நிதி ஒதுக்கிய முதல் மாநிலம் என்ற சிறப்பு புதுவைக்கு உண்டு.
- ஏழை எளிய மக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் ஒரு சிறப்பம்சம் உள்ள பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டிலேயே சுகாதாரத் துறைக்கு பட்ஜெட் நிதியில் 9 சதவீதம் நிதி ஒதுக்கிய முதல் மாநிலம் என்ற சிறப்பு புதுவைக்கு உண்டு. மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதி புதுவைக்கு வரும்போது மாநிலம் மேலும் மேலும் வளர்ச்சி பெறும். முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது.
அதற்கான தொகை உடனடியாக வழங்கப்படும். நடப்பு ஆண்டுக்கு கல்வித்துறைக்கு தேவையான கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் ஒரு சிறப்பம்சம் உள்ள பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார்.
அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும், காகிதம் இல்லா அரசு துறைகளை உருவாக்க பட்ஜெட்டில் அறிவித்துள்ளது சிறப்பு வாய்ந்தது. அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும், கடந்த 5 ஆண்டு கஷ்டங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும் பட்ஜெட் உள்ளது.
மக்களை நேரடியாக சென்றடையும் திட்டங்களை தீட்டுவதன் மூலம் மக்களின் நுகர்வோர் சக்தி அதிகரிக்கும். மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் விமானநிலைய விரிவாக்க நிதி, புதிய சட்டசபைக்கான நிதி, இந்திராகாந்தி சிலை மேம்பாலம் கட்ட நிதி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிதி ஆகியவை ஒதுக்கப்படும்.
இவை பட்ஜெட்டில் சேர்க்காதது. மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக ஊக்குவிப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளதால், பட்ஜெட் தொகையுடன் கூடுதலாக நிதி கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கருவடிக்குப்பத்தில் மொட்டைமாடியில் இருந்து தவறி விழந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
- தங்கராசு இரவு சாப்பிட்டு விட்டு வீட்டின் மொட்டை மாடியில் தூங்குவது வழக்கம்.
புதுச்சேரி:
கருவடிக்குப்பத்தில் மொட்டைமாடியில் இருந்து தவறி விழந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
புதுவை கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகரை சேர்ந்தவர் தங்கராசு (வயது 67). கட்டிட தொழிலாளி இவருக்கு கமலா என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். மகன்கள் மற்றும் மகளுக்கு திருமணமாகி விட்டது.
தங்கராசு இரவு சாப்பிட்டு விட்டு வீட்டின் மொட்டை மாடியில் தூங்குவது வழக்கம். அதுபோல் இரவு தங்கராசு சாப்பிட்டு விட்டு வீட்டின் மொட்டை மாடியில் தூங்க சென்றார்.
நள்ளிரவில் சிறுநீர் கழிக்க எழுந்து நடந்து வந்த போது தூக்க கலக்கத்தில் தங்கராசு எதிர்பாரதவிதமாக தவறி மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமயடைந்த தங்கராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
அரியாங்குப்பம் அருகே ேநாணாங்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி வயது 53 மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு பொற்கிளை என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சம்பவதன்று கோவிந்தசாமி லாஸ்பேட்டை நாவற்குளம் ரோட்டில் ஒரு வீட்டில் மரத்தில் ஏறி கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது திடீரென தடுமாறி மரத்தில் இருந்து கீேழ விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி கோவிந்தசாமி பரிதாபமாக இறந்து போனார்.
இந்த 2 சம்பவங்கள் குறித்து கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஏழைகளின் வளர்ச்சிக்காக வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.
- ஏழை மக்களுக்கு மிகவும் பயன ளிக்கக்கூடிய வகையிலும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய முறையில் பட்ஜெட் தயாரித்து வழங்கி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஏழைகளின் வளர்ச்சிக்காக வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. ஏழை மக்களுக்கு மிகவும் பயன ளிக்கக்கூடிய வகையிலும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய முறையில் பட்ஜெட் தயாரித்து வழங்கி உள்ளார்.
கல்வித்துறையுடன் உள்ள விளையாட்டு துறையை தனியாக பிரித்து, தனி துறை உருவாக்கப்படும். தீயணைப்பு துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.
புதுவையில் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் எனவும், கடற்கரையில் மிதக்கும் படகுத்துறை அமைக்கப்படும் என்பது உட்பட பல்வேறு சிறப்பான திட்டங்களை பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
50 புதிய பஸ்கள் வாங்க ரூ.25 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 25 எலக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்படும் என தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. மக்களுக்கான சிறப்பான பட்ஜெட்டை வழங்கிய முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பா.ஜனதா நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மடுகரையில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு எம்.ஆர்.சுப்புராயன் அரசு தொடக்கப்பள்ளி என கடந்த ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு நடை முறையில் உள்ளதை சுப்புராய கவுண்டர் அரசு தொடக்கப்பள்ளி என திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்படுமா?
- புதிய கல்வி கொள்கை அடிப்படையில் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் எவ்வளவு? இது அரசு, தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கப்படுகிறதா? இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதா?
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-
ஏ.கே.டி. ஆறுமுகம்(என்.ஆர்.காங்கிரஸ்):- மடுகரையில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு எம்.ஆர்.சுப்புராயன் அரசு தொடக்கப்பள்ளி என கடந்த ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு நடை முறையில் உள்ளதை சுப்புராய கவுண்டர் அரசு தொடக்கப்பள்ளி என திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்படுமா? புதிய கல்வி கொள்கை அடிப்படையில் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் எவ்வளவு? இது அரசு, தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கப்படுகிறதா? இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதா?
அமைச்சர் நமச்சிவாயம்: அமைச்சரவையின் முடிவுக்கு ஏற்ப பெயர் திருத்தம் செய்யப்படும். தேசியகல்வி கொள்கையில் மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரம் 30:1 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப் படாததால் அனைத்து பள்ளிகளிலும் கல்வி உரிமை சட்ட விதிமுறைகளை கடைபிடிக்க அறி வுறுத்தப்பட்டுள்ளனர். இதை கண்காணிக்க அமைப்பும், நெறிமுறையும் வரையறுக்கப்படும்.
கல்யாண சுந்தரம்(பா.ஜனதா): சமுதாய தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் ஜாதி இடம் பெற்றிருக்கும். புதுவையில் 60 சதவீதம் வன்னியர்கள் வசித்து வருகின்றனர். பல சமுதாய தலைவர்களின் பெயர்களில் உள்ள பள்ளிகளில் ஜாதியும் இடம்பெற்றுள்ளது. கவுண்டர் மட்டும் எடுப்பது ஏன்?
ஏ.கே.டி. ஆறுமுகம்: பிறந்த பதிவு சான்றிதழில் கூட சுப்புராய கவுண்டர் என்றே பெயர் இடம்பெற்றுள்ளது. அது மட்டுமின்றி அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் எம்.ஆர்.சுப்புராய கவுண்டர் என்ற பெயரில்தான் இருந்தார்.
அமைச்சர் நமச்சிவாயம்:- இதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. அமைச்சரவை முடிவெடுத்து பெயர் மாற்றம் செய்யப்படும். கடந்தகாலத்தில் ஒரு அமைப்பு புகார் செய்ததால்தான் அரசாணை திரும்பப்பெறப்பட்டது. நிச்சயமாக பெயர் மாற்றம் செய்யப்படும்.
கல்யாணசுந்தரம்: கல்வி உரிமை சட்டம் ஏன் தனியார் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தாமல் உள்ளீர்கள்?
அமைச்சர் நமச்சிவாயம் :- கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் மாணவர்களுக்கு அரசே முழுமையாக செலவு செய்ய வேண்டும். நாம் ஏற்கனவே கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.
பிற மாநிலங்களை போல ஒரு பள்ளிக்கும், மற்றொரு பள்ளிக்கும் தூரமும் இல்லை. கூடுதல் செலவாகும் என்பதால் நிறைவேற்றாமல் உள்ளோம்.
கென்னடி: தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும்.
அமைச்சர் நமச்சிவாயம் : கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு ரூ.40 கோடி கூடுதலாக செலவாகும். தேசிய கல்வி கொள்கை திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராகும் சூழலில் உள்ளோம். அத்திட்டத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம்.
ஏ.கே.டி. ஆறுமுகம்:- கொரோனாவுக்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த காலத்தைவிட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை.
அமைச்சர் நமச்சிவாயம் :- அரசின் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என முதல்-அமைச்சர் உறுதியளித்துள்ளார். ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளோம். புதிதாக 73 ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து காலி பணியிடங்களை கணக்கிட்டு நிரப்புவோம்.
கல்யாணசுந்தரம்: சமீபத்தில் என் தொகுதியில் உள்ள பள்ளிக்கு சென்றேன். அங்குள்ள மாணவர்கள் அடிப்படை வசதியில்லை என புகார் தெரிவித்தனர். கழிப்பறை சுத்தம் செய்யப்படாமல் சீர்கேடாக இருந்தது. உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. இதற்கு குரூப் டி பணியில் ஆட்களை எடுக்காததுதான் காரணம்.
அமைச்சர் நமச்சி வாயம்:- ரொட்டி, பால் ஊழியர்கள்தான் பள்ளிகளை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். 10 ஆண்டு பணி முடித்தவர்கள் நிரந்தரம் செய்யப்பட உள்ளனர்.
அத்திட்டத்தின் கீழ் ரொட்டி, பால் ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்து அவர்களுக்கு கூடுதலாக இந்த பணி வழங்க உள்ளோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உப்பளம் தொகுதியில் 5 பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆட்டுப்பட்டியில் குடியிருப்புகள் கட்ட ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- சம்பந்தப்பட்ட இடம் கையகப்படுத்தப்பட்ட பின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம் வருமாறு:-
கென்னடி(தி.மு.க.): ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உப்பளம் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் எத்தனை? ஆட்டுப்பட்டி பகுதியில் குடியிருப்பு கட்ட இத்திட்டத்தில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? சம்பந்தப்பட்ட அரசு துறையில் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளதா? எப்போது பணிகள் தொடங்கப்படும்?
முதல்-அமைச்சர் ரங்கசாமி:-
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உப்பளம் தொகுதியில் 5 பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆட்டுப்பட்டியில் குடியிருப்புகள் கட்ட ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தடையில்லா சான்று இன்னும் பெறப்படவில்லை. சம்பந்தப்பட்ட இடம் கையகப்படுத்தப்பட்ட பின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
கென்னடி: தடையில்லா சான்று பெறப்பட்டதா? என்ற கேள்விக்கு தவறான தகவல் அளித்துள்ளனர். நகர பகுதியில் உள்ள மிகவும் மோசமான குடியிருப்பு ஆட்டுப்பட்டி. இங்கு வசிக்கும் மக்கள் மிக குறுகிய இடத்தில் வசிக்கின்றனர். அவர்களுக்கு அரசு அடுக்குமாடி குடியிருப்பை கட்டித்தருவதாக ஏற்கனவே உறுதியளித்தது. முதல்-அமைச்சரும் உறுதியளித்தார். இதை நிறைவேற்றித்தர வேண்டும்.
முதல்-அமைச்சர்: குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என்ற எண்ணம்தான் அரசுக்கும் உள்ளது. எல்.ஜி.ஆர். பட்டா பெற்றவர்கள் இதற்கு சம்மதிப்பார்களா? என தெரிய வேண்டும். அதோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிலத்தை கையகப்படுத்த முடியாது. நகராட்சி நிலம் என்பதால் நகராட்சிக்கு பணம் கொடுத்து நிலத்தை ஆர்ஜிதம் செய்ய வேண்டும். நகராட்சிக்கு வருவாய் வரும் வகையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வாடகைக்கு விடலாமா? என்ற எண்ணமும் உள்ளது. நிலத்தை கையகப்படுத்த சுமார் ரூ.12 கோடி தேவைப்படுகிறது.
எதிர்கட்சித்தலைவர் சிவா:- நகர பகுதியில் இதுபோன்ற இடங்களில் வசிக்கும் மக்கள் கடும் கஷ்டத்தில் உள்ளனர். நீண்டகாலமாக குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அரசு இதை கட்டித்தர வேண்டும். இதேபோல திடீர் நகரில் உள்ள மக்களுக்கும் குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும்.
நேரு(சுயே): திடீர் நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு குடியிருப்பு கட்டித்தருவதாக வாக்குகளை பெற அரசியல் செய்து ஏமாற்றினர்.
ஆனால் கடைசிவரை வீடு கட்டித்தரவில்லை. தற்போது இப்பகுதி பன்றி மேய்க்கும் இடமாகவும், கஞ்சா விற்பனை செய்யும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. இங்குள்ள மக்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி:- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நில ஆர்ஜிதம் செய்ய முடியாது. நகராட்சிக்கு சொந்தமான நிலத்தை பணம் கொடுக்காமல் மாற்றவும் முடியாது.
சிவா: தமிழகத்தில் இதுபோன்ற இடங்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆர்ஜிதம் செய்து வீடு கட்டி தருகின்றனர்.
கென்னடி: அப்பகுதியில் 155 பேருக்கு வீடு தேவை. 200 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வம்பாகீரப்பாளையத்தில் வீடின்றி வசிப்பவர்களுக்கும் வீடு அளிக்கலாம்.
முதல்-அமைச்சர்: வீடற்ற ஏழை மக்களுக்கு வீடு அளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். இதற்காகத்தான் அரசு பல்வேறு திட்ங்களை செயல்படுத்தி வருகிறது. ஆட்டுப்பட்டி மக்களுக்கு எந்த வகையில் வீடு கட்டித்தரலாம் என ஆலோசித்து முடிவெடுத்து குடியிருப்பு கட்டி தரப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- புதுவை தவளக்குப்பம் அருகே தனியார் நிறுவன அதிகாரி-மகனை தாக்கிய ஓட்டல் ஊழியர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தாக்குதலில் காயமடைந்த அல்போன்ஸ் மற்றும் அவரது மகன் மேத்யு ஆகியோர் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
புதுச்சேரி:
சென்னை மவுண்ட்ரோடு பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ்(வயது45). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் புதுவையில் நடந்த நண்பரின் புதுமனை புகுவிழாவுக்கு தனது மகன் மேத்யுவுடன் புதுவை வந்தார்.
பின்னர் தவளக்குப்பம் அருகே புதுக்குப்பம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு அல்போன்ஸ் மகனுடன் சென்றார்.
அங்குள்ள தனியார் பீச் ஓட்டலுக்கு செல்வதற்கு நுழைவு கட்டணம் கேட்டதால் அல்போன்ஸ் 500 ரூபாய் நோட்டை கொடுத்தார். அதற்கு அங்கிருந்த பெண் ஊழியர் சில்லரையாக கொடுக்கும்படி கூறினார். ஆனால் தன்னிடம் சில்லரை இல்லை என்று அல்போன்ஸ் தெரிவித்தார்.
அப்போது அங்கிருந்த ஓட்டல் காவலாளி நான் வேண்டுமானால் சில்லரை பொறுக்கி எடுத்து வரட்டுமா? என்று கிண்டலாக தெரிவித்தார்.
இதுபற்றி அல்போன்ஸ் தட்டிக்கேட்ட போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. உடனே ஒட்டல் காவலாளி வாக்கி-டாக்கி மூலம் மற்ற ஓட்டல் ஊழியர்களை அழைத்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து அல்போன்சையும், அவரது மகன் மேத்யுவையும் கையாலும், இரும்பு கம்பியாலும் தாக்கினர்.
மேலும் இருவரையும் உயிருடன் இங்கேயே புதைத்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த அல்போன்ஸ் மற்றும் அவரது மகன் மேத்யு ஆகியோர் அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பின்னர் இதுகுறித்து அல்போன்ஸ் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை மிக காலதாமதமாக தாக்கல் செய்துள்ளனர்.
- ரூ.12 ஆயிரம் கோடி இருந்தால்தான் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி, டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.பட்ஜெட் குறித்து எதிர்கட்சித்தலைவர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-புதுவையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை மிக காலதாமதமாக தாக்கல் செய்துள்ளனர். புதுவையின் பொருளா தாரம் வீழ்ந்து கிடக்கிறது என்பது பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.12 ஆயிரம் கோடி இருந்தால்தான் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி, டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
ஆனால் இதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ரூ.11 ஆயிரம் கோடிக்கு போட்ட திட்ட மதிப்பீடு, ரூ.10 ஆயிரத்து 696 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நேரடியாக புதுவைக்கு பணம் தரவில்லை. கடன் வாங்க மட்டுமே அனுமதிதரப்பட்டுள்ளது. இந்த கடன் பெற கால அவகாசம் இல்லை. 5 மாதம் வேலை செய்யாமல் முடங்கிவிட்டது. இனி வரும் மழை காலத்திலும் திட்டங்களை செயல்படுத்த முடியாது.
புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. துறைகளுக்கும் நிதிஒதுக்கீடு செய்யவில்லை. முழுமையான ஏமாற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் எதிர்பார்த்த தொழில்புரட்சி இல்லை. வியாபாரம், தொழில்கள், சுற்றுலா, தகவல் தொழில்நுட்ப பூங்கா, ஆதிதிராவிடர்களுக்கு இலவச குடியிருப்புகள், மனைகள் என எதிர்பார்த்த எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.
பூஜ்ய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். சோர்வான நிலையில் முதல்-அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
இது புதுவையின் வளர்ச்சிக்கு பேராபத்தை தந்துள்ளது. எந்த துறையின் கீழ் பெண்களுக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கவில்லை. இது புதுவை வளர்ச்சிக்கான பட்ஜெட் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






