என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மக்களின் எதிர்பார்ப்பு கவர்னர் உரையில் இல்லை-எதிர்கட்சித்தலைவர் சிவா குற்றச்சாட்டு
    X

    சிவா எம்.எல்.ஏ.

    மக்களின் எதிர்பார்ப்பு கவர்னர் உரையில் இல்லை-எதிர்கட்சித்தலைவர் சிவா குற்றச்சாட்டு

    • கவர்னர் உரையில் மத்திய அரசின் கூடுதல் நிதி உட்பட மிகப்பெரிய எதிர்பார்ப்போடு மக்கள் இருந்தனர், ஆனால் எதுவும் இல்லை.
    • அனைத்து மாநிலத்திலும் சாலை, கழிவுநீர் ஆகியவைகளில் என்னென்ன திட்டங்கள் ஸ்மார்ட் சிட்டியில் செய்யப்போகின்றோம் என்பதை முன்பே திட்டமிட்டு விடுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது:-

    கவர்னர் உரையில் மத்திய அரசின் கூடுதல் நிதி உட்பட மிகப்பெரிய எதிர்பார்ப்போடு மக்கள் இருந்தனர், ஆனால் எதுவும் இல்லை. மாநில அந்தஸ்து பற்றிய அறிவிப்பு இல்லை. கவர்னர் மத்தியில் இருந்து நிதியை கொண்டு வராவிட்டாலும், திட்டங்களையாவது கொண்டு வரலாம்.

    அனைத்து மாநிலத்திலும் சாலை, கழிவுநீர் ஆகியவைகளில் என்னென்ன திட்டங்கள் ஸ்மார்ட் சிட்டியில் செய்யப்போகின்றோம் என்பதை முன்பே திட்டமிட்டு விடுகின்றனர். ஆனால் புதுவையில் இதுவரை என்னென்ன திட்டங்கள் செய்யப்போகிறோம் என்பதை கூட இறுதி செய்யவில்லை.

    தொழில்துறையில் புது கொள்கையை அறிவியுங்கள். நிலம், ஜி.எஸ்.டி., வருமான வரி உள்ளிட்ட ஏதேனும் ஒன்றில் சலுகை தாருங்கள். இல்லாவிட்டால் தொழிற்சாலைகள் வெளியேறி வேலை வாய்ப்பபின்மை ஏற்படும். பாப்ஸ்கோ, பாசிக் அனைத்தும் நலிவடைந்து உள்ளது. பி.சி., கார்ப்ரேஷன் செயல்படவில்லை. பாட்கோவில் கடன் தருவதில்லை. கடந்த 10 ஆண்டாக ஏழைகள், ஆதிதிராவிடர்கள் என யாருக்கும் மனைப்பட்டா தரவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×