search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடிநீர் குழாய்-முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    X

    குடிநீர் குழாய்கள் அமைத்தல், வடிகால் வாய்க்கால் கட்டும் பணிக்கான பூமி பூஜையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்த காட்சி.

    குடிநீர் குழாய்-முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

    • முதலியார்பேட்டை தொகுதி சுதானா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் குடிநீர் குழாய்கள் நீர் வந்து குழாய்கள் மற்றும் சாலைகள் மறுசீரமைப்பு பணி ரூ.14.28 கோடி மதிப்பில் மத்திய அரசின் அம்ருத் நிதி உதவியுடன் நடைபெற உள்ளது.
    • முதலி யார்பேட்டை தொகு திக்குட்பட்ட உழந்தை ஏரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பூமி பூஜையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி சுதானா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் குடிநீர் குழாய்கள் நீர் வந்து குழாய்கள் மற்றும் சாலைகள் மறுசீரமைப்பு பணி ரூ.14.28 கோடி மதிப்பில் மத்திய அரசின் அம்ருத் நிதி உதவியுடன் நடைபெற உள்ளது.

    அதற்கான பூமி பூஜை முதலியார்பேட்டை நாகாத்தம்மன் கோவில் அருகே நடைபெற்றது. முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், சம்பத் எம்.எல்.ஏ. ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

    இந்த திட்டத்தின் மூலம் சுதானா நகர், முருங்கப்பாக்கம், துலுக்கானத்தம்மன் நகர், சுகாதார ஊழியர்கள் காலனி, திவான் கந்தப்பா நகர், வள்ளலார் நகர், மறைமலைநகர், அரவிந்தர் நகர், பாரதியார் நகர் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு தரமான உரிய அழுத்துத்துடன் குடிநீர் வினியோகிக்கப்படும்.

    இதேபோல் முதலி யார்பேட்டை தொகு திக்குட்பட்ட உழந்தை ஏரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பூமி பூஜையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்ப ணித்துறை செயலர் அருண், தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் ரங்கராஜ் மற்றும் முதலியார் பேட்டை தொகுதி முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×