என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கணவர் தூக்கி வீசியதால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
- சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை கணவர் தூக்கி வீசியதால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- குழப்பு காரமாக இருப்பதாக கூறி சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை சுந்தரமூர்த்தி வெளியே வீசி விட்டார்.
புதுச்சேரி:
சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை கணவர் தூக்கி வீசியதால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழநல்லூரை அடுத்த சிவன்படபேட் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகள் கீதா(வயது26) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று கீதா ஆட்டுக்கறி குழம்பு சமைத்து வைத்திருந்தார். மதியம் கீதா கணவருக்கு அதனை பறிமாறினார். அப்போது குழப்பு காரமாக இருப்பதாக கூறி சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை சுந்தரமூர்த்தி வெளியே வீசி விட்டார். இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கி டையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படு கிறது. இதனால் கீதா மனவேதனை அடைந்தார்.
பின்னர் சுந்தரமூர்த்தி அருகில் உள்ள கடைக்கு சென்றார். அந்த நேரத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கீதா கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.
கடைக்கு சென்று திரும்பிய சுந்தரமூர்த்தி வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்ததார். அப்போது மனைவி தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று மனைவியை தூக்கில் இருந்து மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்து க்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கீதாவை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கீதா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதா பமாக இறந்து போனார்.
இதுகுறித்து கீதாவின் தாய் வாசுகி கொடுத்த புகாரின் பேரில் நெட்டப் பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






