என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை சட்டசபையில் ரூ.10,696 கோடி பட்ஜெட்-  ரங்கசாமி தாக்கல் செய்தார்
    X

    புதுவை சட்டசபையில்  பட்ஜெட் ரங்கசாமி தாக்கல் செய்த காட்சி. 

    புதுவை சட்டசபையில் ரூ.10,696 கோடி பட்ஜெட்- ரங்கசாமி தாக்கல் செய்தார்

    • 2022-23-ம் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்பிக்க உள்ளேன்.
    • புதுவை ஆட்சிப்பரப்பானது நல்லாட்சி, அமைதி, நல்லிணக்கம், பொருளாதார முன்னேற்றம் ஆகிய இலக்குகளை நோக்கி உறுதியுடன் முன்னேறி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சட்ட சபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதாவது:-

    பெருமைவாய்ந்த இந்த அவையில்

    2022-23-ம் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்பிக்க உள்ளேன். 15-வது சட்டமன்றத்தில் 2-வது வரவு செலவு திட்டத்தை சமர்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய புதுவை மக்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

    புதுவை ஆட்சிப்பரப்பானது நல்லாட்சி, அமைதி, நல்லிணக்கம், பொருளாதார முன்னேற்றம் ஆகிய இலக்குகளை நோக்கி உறுதியுடன் முன்னேறி வருகிறது.

    பிரதமர் மோடியின் நோக்கப்படி வணிகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா ஆகிய துறைகளில் பெஸ்ட் புதுவையாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    கடுமையான நிதி நெருக்கடி இருந்த போதிலும், எனது அரசு பல நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

    2021-22-ம் நிதியாண்டில் நமது செலவினம் ரூ.9,793.29 கோடியாகும். இது திருத்திய மதிப்பீட்டின்படி 94.04 சதவீதமாகும்.

    2022-23-ம் நிதியா ண்டின் பட்ஜெட் மதிப்பீடு ரூ.10,696.61 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.8,675.65 கோடி வருவாய் செலவீனங்களாகும். ரூ.2,020.96 கோடி மூலதன செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதில் சொந்த வருவாய் ரூ.6,557.23 கோடியாகும். மத்திய அரசின் நிதியுதவி ரூ.1,729.77 கோடியாகும். மத்திய சாலை நிதி ரூ.20 கோடி, மத்திய அரசு திட்டங்களின்கீழ் வழங்கும் நிதி ரூ.500 கோடி இருக்கும்.

    மேலும் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.1,889.61 கோடியை கடன் மூலம் திரட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆட்சிப்பரப்பில் 31.3.2022 வரை மொத்த நிலுவைக்கடன் ரூ.9,859.20 கோடியாகும்.

    அரசின் நிதி ஒதுக்கீட்டில் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், கடன், வட்டி செலுத்த செலவிடப்படுகிறது. இந்த நிதியாண்டின் திட்டமதிப்பீடான ரூ.10,696 கோடியில் ரூ.2,312.77 கோடி சம்பளத்திற்காகவும், ரூ.1,122.22 கோடி ஓய்வூதியத்திற்காகவும், ரூ.2,311.61 கோடி கடன் மற்றும் வட்டிசெலுத்தவும், ரூ.1,440 கோடி மின்சாரம் வாங்கவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அரசின் மற்ற முக்கிய செலவீனங்களான முதியோர் ஓய்வூதியம், பிற நலத்திட்டங்களுக்கு ரூ.1,400 கோடியும், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சி, உயர்கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானிய கொடையாக ரூ.1,333.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×