என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீடுகளை புதுப்பிக்கும் பணி-ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    X

    அரசு குடியிருப்பு வீடுகளை புதுப்பிக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி. 

    வீடுகளை புதுப்பிக்கும் பணி-ரங்கசாமி தொடங்கி வைத்தார்

    • உருளையன்பேட்டை தொகுதி கோவிந்தசாலை பிரியதர்ஷினி நகர், கண்டாக்டர் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய அரசு குடியிப்புகளை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ 4 ¼ கோடி செலவில் நடைபெற உள்ளது.
    • பொதுப்பணித்துறை கட்டிடங்கள் சிறப்பு பிரிவு மூலம் பணிகள தொடங்குவதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதி கோவிந்தசாலை பிரியதர்ஷினி நகர், கண்டாக்டர் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய அரசு குடியிப்புகளை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ 4 ¼ கோடி செலவில் நடைபெற உள்ளது.

    பொதுப்பணித்துறை கட்டிடங்கள் சிறப்பு பிரிவு மூலம் பணிகள தொடங்குவதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், நேரு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    விழாவில் ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலர் அருண், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை தொழில்நுட்ப அதிகாரி ரவிச்சந்திரன், பொதுப்பணித் துறை கட்டிடங்கள் சிறப்பு பிரிவு செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், பொது சுகாதார பிரிவு செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் உதயகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பொறியாளர்களும் மேலும் குடிசைமாற்று வாரிய அதிகாரிகளும், பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

    மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அனைத்து வீட்டிற்கும் தரை டைல்ஸ் பதித்தல், சிதைந்த ட்ரைனேஜ் மற்றும் மழைநீர் வெளியேறும் குழாய்களை மாற்றி புதிதாக அமைத்தல், சிதலமடைந்த கட்டுமானங்களை கொத்தி பூசு வேலைகள் செய்தல், புதிதாக வண்ணம் தீட்டுதல் போன்ற மறு சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    Next Story
    ×