search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாணவர்கள் வீடு திரும்ப பஸ் வசதி-வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    மாணவர்கள் வீடு திரும்ப பஸ் வசதி-வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்

    • புதுவை மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரை கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கை நடவடிக்கைகளை அரசு எடுக்காமல் உள்ளது.
    • என்ஜினீயரிங், மருத்துவம், விவசாயம், கால்நடை போன்ற தொழில் சார்ந்த கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கைக்கு உண்டான கலந்தாய்வு இதுவரை நடத்தவில்லை.

    புதுச்சேரி:

    வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரை கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கை நடவடிக்கைகளை அரசு எடுக்காமல் உள்ளது. குறிப்பாக கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதேபோல என்ஜினீயரிங், மருத்துவம், விவசாயம், கால்நடை போன்ற தொழில் சார்ந்த கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கைக்கு உண்டான கலந்தாய்வு இதுவரை நடத்தவில்லை. இதனால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    எனவே, அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து, மாணவர்கள் சேர்க்கையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

    தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் மாநில அரசின் இட ஒதுக்கீடாக 50 சதவீதத்தை மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மாநில அரசு கல்லூரிக்கு நிர்ண யித்துள்ள கட்டணத்தில் அரசு பெற்று தர வேண்டும். கலை கல்லுரிகளில் காலியாக உள்ள பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

    காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு கல்லூரி 2 ஷிப்டாக இயங்குவதால் மாலை நேரத்தில் படிக்கக்கூடிய மாணவர்கள் நேரத்தோடு வீட்டிற்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே மாணவர் பஸ்களை இயக்கி மாலை நேர கல்லூரி மாணவர்கள் கிராமப்புறத்திற்கு செல்ல பஸ் வசதியை செய்து தர வேண்டும்.

    இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×