என் மலர்
புதுச்சேரி

குப்பைமேடாக கட்சியளிக்கும் ஆனந்த முத்துமாரியம்மன் வீதி.
சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிய சாலை
- நெல்லித்தோப்பு தொகுதி குயவர்பாளையம் ஆனந்த முத்துமாரி அம்மன் வீதி மக்கள் பயன்பாடு இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்தது.
- பொதுப்பணித்துறை மூலம் நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டாலும் சாலை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.
புதுச்சேரி:
நெல்லித்தோப்பு தொகுதி குயவர்பாளையம் ஆனந்த முத்துமாரி அம்மன் வீதி மக்கள் பயன்பாடு இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்தது.
இதனால் இந்த சாலையில் அங்கன்வாடி மையம், நீர் உந்து நிலையம் அமைக்க அப்போதைய எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் நடவடிக்கை எடுத்தார்.
பொதுப்பணித்துறை மூலம் நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டாலும் சாலை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.
இதனால் இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளாக சமூக விரோதிகள் கூடாரமாகவே மாறிவிட்டது.கழிவு நீர் வெளியேறும் வீதியாகவும், மது குடிக்கும் இடமாகவும் மாறி விட்டது. இரவு நேரங்களில் திறந்த வெளி மதுபாராக செயல்டுகிறது
இதனை களைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






