என் மலர்
புதுச்சேரி
- விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமை தாங்கினார். இதில், மத்திய மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிமுறைகளின்படி ரசாயனம் இல்லாத விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும்.
புதுச்சேரி:
விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமை தாங்கினார். இதில், மத்திய மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிமுறைகளின்படி ரசாயனம் இல்லாத விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும். மேலும் வழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை அருகில் விநாயகர் சிலையை வைக்க கூடாது.
10 அடி உயரத்திற்கு மேல் விநாயகர் சிலை வைக்கக்கூடாது. கீற்று கொட்டகை அமைத்த பந்தலில் விநாயகர் சிலையை வைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம முக்கியஸ்தர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் கோட்டக்குப்பம் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
- புதுவை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
- கூட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், பொதுச் செயலாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், பொதுச் செயலாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தனர்.
பா.ஜனதா, எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் துணைத் தலைவர்கள், செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக, மாநில பா.ஜனதா பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர்கள், நாட்டின் 75-வது சுகந்திர ஆண்டின் நிறைவாக மாநிலம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தெரிவித்தனர்.
மேலும், வீடுகள்தோறும் தேசியக் கொடி ஏற்றுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாரத மாதா சிலையை மாநிலம் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் யாத்திரையாக கொண்டு சென்றதையும், அதனை மக்கள் வரவேற்றது குறித்து யாத்திரை குழுவினர் தெரிவித்தனர்.
மாவணர்களுக்கான கட்டுரைப் போட்டி, தியாகிகள் பற்றிய கண் காட்சி, தேசத் தலைவர்களின் சிலைகளை சுத்தம் செய்தது மற்றும் தொகுதி தோறும் மரக்கன்றுக்ள நடப்பட்டதை தெரிவித்தனர். மேலும், தியாகிகளை வீடு தேடிச் சென்று சால்வை அணிவித்து கவுரவித்ததை பட்டியலிட்டனர்.
நிறைவாக, 3 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு, தேசியக் கொடியை வழங்கி ஊக்கப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை பற்றி தெரிவித்தனர்.
பின்னர் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ேபசும் போது, நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட பாடுபட்ட அனைத்து நிர்வாகிகளை பாராட்டினார்.
இதனை தொடர்ந்து பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது புதுவை அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம் உடனிருந்தனர்.
- அரியாங்குப்பத்தை அடுத்துள்ள வீராம்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது.
- இந்த கோவிலில் ஆடித் தேரோட்டம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுச்சேரி:
அரியாங்குப்பத்தை அடுத்துள்ள வீராம்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆடித் தேரோட்டம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை முன்னிட்டு தினசரி இரவு பல்வேறு வகையான அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நாளான (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. தேரினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், சம்பத், சிவசங்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த தேரோட்டத்திற்கு புதுவை, தமிழகப் பகுதியில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து கொண்டு இருக்கின்றனர்.
விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, போலீஸ் டி.ஜி.பி. மனோஜ்லால் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசித்தனர். தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
விழாவையொட்டி அரியாங்குப்பம் முதல் வீராம்பட்டினம் வரை தெருவெங்கும் பொதுமக்கள் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர், மக்கள் குழுவினர், விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் செய்து உள்ளனர்.
- லாஸ்பேட்டையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
- லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை போலீ சாருக்கு தகவல் வந்தது.
புதுச்சேரி:
லாஸ்பேட்டையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை போலீ சாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்த னர். அப்போது அங்கு போலீசாரை பார்த்ததும் 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். உடனே போலீசார் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர்.
அவர்களது சட்டை பையில் சோதனை நடத்திய போது சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தனர். மொத்தம் 200 கிராம் கஞ்சாவை அவர்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் புதுவை உருளையன் பேட்டை சுப்பையாநகர் தென்னஞ்சாலை ரோட்டை சேர்ந்த மணிய ழகன்(வயது19) மற்றும் குயவர்பாளையனம் கோவிந்தராசு நாயக்கர் தெருவை சேர்ந்த சேரன்(21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- புதுவை ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரில் பத்ரகாளியம்மன் கோவிலில் 28-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- திரளான ஆண், பெண் பக்தர்கள் பயபக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதுச்சேரி:
புதுவை ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரில் பத்ரகாளியம்மன் கோவிலில் 28-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷே கமும், இரவில் தீமிதி திருவிழாவும் நடை பெற்றது. திரளான ஆண், பெண் பக்தர்கள் பயபக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செ லுத்தினர். (வெள்ளிக்கிழமை ) காலை அபிஷே கமும், மதியம் 12 மணிக்கு சக்திகிரகம் வீதி உலா, கூழ் வார்த்தலும், இரவில் கும்ப படை யலும் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை ) அம்மன் வீதியுலாவும், 21-ந்தேதி மஞ்சள் நீராடலும் நடக்கிறது.
- போதை பொருள் எதிர்ப்பு குறித்து சைக்கிள் பயணம் செய்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
- பா.ஜனதா கட்சியின் மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம், போதைப் பழக்கமும், சமுதாய சீர்கேடும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
புதுச்சேரி:
மத்திய அரசின் நிதி ஆயோக்கில் பதிவு பெற்ற தேசிய குடியரசு மக்கள் பேரவை அமைப்பை சேர்ந்த, சென்னை புறநகர் அத்திப்பட்டு, புதுநகர் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் டாக்டர் மதன், தீபக் , சங்கீத் மற்றும் கோகுல் கண்ணன் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் எதிர்ப்பு குறித்து சைக்கிள் பயணம் செய்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக, இந்த சைக்கிள் பயணம் புதுவை தேங்காய் திட்டில் அமைந்துள்ள வித்யாபவன் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தது. அங்கு மாணவர்கள் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். பள்ளி முதல்வர் ரேகா ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
தேசிய குடியரசு மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் பிரேம் கணேஷ், துணை தலைவர் தியாகராஜன், பொது செயலாளர்கள் ராகவேந்திரன், ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜனதா கட்சியின் மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம், போதைப் பழக்கமும், சமுதாய சீர்கேடும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இதில் 500-க்கும் மேற்பட்பட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- பாரதிய புதுவை நியாயவிலைக்கடை ஊழியர்கள் முன்னேற்ற சங்கம்சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடந்தது.
- பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தது.
புதுச்சேரி:
பாரதிய புதுவை நியாயவிலைக்கடை ஊழியர்கள் முன்னேற்ற சங்கம்சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடந்தது.
பேரணிக்கு கவுரவ தலைவர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். தலைவர் முருகானந்தம், துணைத்தலைவர் வெற்றி வேல்முருகன், செயலாளர் பிரேம்ஆனந்த், இணை செயலாளர்கள் ரமேஷ், அருள், வினோத்குமார், சக்திவேல், தட்சிணாமூர்த்தி உட்பட ரேஷன்கடை ஊழியர்கள் பலர் பேரணியில் கலந்துகொண்டனர்.
பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தது. அங்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தரையில் அமர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
50 மாத சம்பள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலம் சம்பளம் வழங்க வேண்டும். சிறப்பு நிதி ஒதுக்கி ஓய்வூதிய பண பலன்களை அளிக்க வேண்டும். 10 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
- புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
- புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- புதுவையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணுவதற்கான நடவடிக்கைகள் ஏதும் அரசிடம் இல்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணுவதற்கான நடவடிக்கைகள் ஏதும் அரசிடம் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, புதுவை மக்களும் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணாததாலும், வாகனங்கள் நிறுத்த இட வசதி ஏற்படுத்தப்படாததாலும் வார இறுதி நாட்களில் புதுவை மக்கள் நடமாட முடியவில்லை.
நகரில் வாகனங்களை நிறுத்த இட வசதியில்லையே என்ற ஒரு காரணத்திற்காகவே பலர் விடுமுறை தினத்தில் வீட்டில் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் நேரு வீதியில் உள்ள பழைய சிறைச்சாலையில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்துள்ளனர். இது மேலும் மக்களின் போக்குவரத்திற்கும், வாகனங்கள் நிறுத்து வதற்கும் பிரச்சனை களையே உருவாக்கும்.
ஏற்கனவே முதல்- அமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டபடியே குறைந்த பட்சம் 5 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்தத்தை கட்டி புதுவை நேரு வீதியில் வாகனங்கள் நிறுத்தும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஐகோர்டு தீர்ப்புக்கு பிறகு இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை வரவேற்கிறோம்.
- கட்சிக்கு துரோகம் செய்து, சட்ட விதிகளை மீறி எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஓ.பி.எஸ்.சுடன் எந்த ஒட்டும், உறவும் இல்லை. இணைந்து செயல்படலாம் என அழைக்கும் தகுதியும் அவருக்கு இல்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஐகோர்டு தீர்ப்புக்கு பிறகு இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை வரவேற்கிறோம். கட்சிக்கு துரோகம் செய்து, சட்ட விதிகளை மீறி எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஓ.பி.எஸ்.சுடன் எந்த ஒட்டும், உறவும் இல்லை. இணைந்து செயல்படலாம் என அழைக்கும் தகுதியும் அவருக்கு இல்லை.
ராணுவ கட்டுப்பாடு மிகுந்த அ.தி.மு.க.வில் தன் சுயநலத்துக்காக பல முறை பிளவுகளை ஏற்படுத்தி கட்சியை பலவீனப்படுத்தியவர். உட்கட்சி பிரச்சினைகளுக்கு கோர்ட்டை அனுகாதீர்கள் என ஐகோர்டு நீதிபதி ரமணா ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறை பிரச்சினையின் போதும் கோர்ட்டை நாடி கட்சியை பலவீனப்படுத்தி வருகிறார். ஐகோர்டு அளித்துள்ள தீர்ப்பில் பல்வேறு கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. நீதிமன்றத்தை விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் ஒன்றரை கோடி தொண்டர்களின் கருத்துக்களை 2 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவு செய்யலாமா? என நீதிமன்றம் கேள்வி எழுப்புகிறது.
பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தான் சட்டங்களை நிறைவேற்றுகின்றனர்.அதேபோல கிளை, வட்டம், மாவட்டம், மாநிலம், எம்.எல்.ஏ., எம்.பி. ஆகியோரால் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் பொதுக்குழு உறுப்பினர்கள். அவர்கள் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல.
ஒற்றை தலைமை அவசியம் என்பது கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் கருத்து. ஏனெனில் ஒவ்வொரு முறையும் போட்டி ஏற்படுத்தி கட்சியில் பிளவை உண்டாக்கி தி.மு.க.வின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ஓ.பி.எஸ். செயல்படுகிறார். அதோடு அ.தி.மு.க. தொண்டர்கள் கோவிலாக நினைக்கும் கட்சி தலைமை அலுவலகத்தை காலால் எட்டி உதைத்து, ரவுடிகள் மூலம் அங்கிருந்த ஆவணங்களை அள்ளி சென்றவரை எப்படி ஏற்க முடியும்?
இந்த தீர்ப்பு இறுதி தீர்ப்பல்ல, மறு ஆய்வுகுட்பட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். கட்சிக்கு துரோகம் செய்தவர்களோடு இணைந்து செயல்பட யாரும் செயல்பட நிர்பந்தம் செய்ய முடியாது. தீர்ப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 4 ½ ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி நல்லாட்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டு கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்கு அளித்த சான்று. இதை தி.மு.க.வினர் உணர வேண்டும். ஊழல் ஆட்சி என கூறுவதை கைவிட வேண்டும். அப்படி கூறுவது நீதிமன்ற அவமதிப்பாகும்.
கருணாநிதியை பாராட்டுவது தான் ஜெயலலிதா விசுவாசமா..? கட்சிக்கு களங்கம் விளைவித்த
அ.தி.மு.க. தொண்டர்களிடம் ஓ.பி.எஸ். பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவை மாநிலத்தில் ரூ.ஆயிரத்து 850 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. .
- ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் ஒரு சில பணிகளே முடிக்கப்பட்டுள்ளது. பல பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது ரூ.300 கோடி மதிப்பில் பணிகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் ரூ.ஆயிரத்து 850 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் ஒரு சில பணிகளே முடிக்கப்பட்டுள்ளது. பல பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது ரூ.300 கோடி மதிப்பில் பணிகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இதை தேசிய கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் சட்டசபை வளாகத்தில் நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் நேரு, பிரகாஷ்குமார், ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை செயலாக்க அதிகாரி அருண், இணை அதிகாரி சுதாகர், தேசிய கட்டுமான கழக தலைமை பொது மேலாளர் ராவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், குபேர் மார்க்கெட் பகுதியில் 50 ஆயிரம் சதுர அடியில் நவீன வணிக வளாகம் கட்டுதல், பஸ்நிலையத்தை 25 ஆயிரம் சதுர அடி வணிக வளாகத்துடன் நவீனப்படுத்துதல், கிழக்கு கடற்கரை சாலையில் புதிய புறநகர் பஸ்நிலையம் அமைத்தல், தாவரவியல் பூங்காவை மேம்படுத்துதல், பழைய சிறை வளாகத்தில் வணிக வளாகம் கட்டுதல் உட்பட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பெரியவாய்க்காலை 3 கி.மீ. புனரமைத்து அழகுபடுத்துதல், நடைபாதை, மிதிவண்டி பாதைஅமைத்தல், இருக்கை, உணவு விடுதி அமைத்தல், சுதேசி மில் வளாகத்தில் சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து திட்டமதிப்பீடு முன் வைக்கப்பட்டது.
இந்த திட்டங்களுக்கு விரைவில் டெண்டர் கோரப்பட்டு பணிகளை தொடங்க முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒப்புதல் அளித்தார்.
- மிகுந்த ஆர்வத்துடன் கற்று வரும் துருக்கி நாட்டு மாணவர்கள் தங்களது நாட்டிற்கு சென்று களிமண் கொண்டு பொம்மைகளை செய்ய மற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிப்போம் என தெரிவித்தனர்.
- அழிவின் விளிம்பில் உள்ள சுடுமண் சிற்ப கலையை மீட்டெடுக்கும் வகையில் உள்ளூர், வெளிநாட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என பயிற்சியாளர் முனுசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவையில் டெரகோட்டா எனப்படும் சுடுமண் சிற்பக்கலை பாரம்பரிய கலையாக உள்ளது.
சிற்பக்கலை குறித்து வில்லியனூர் கணுவாப்பேட்டை கிராமத்தில் தனி பயிற்சி கூடம் அமைத்து பயிற்சி அளித்து வருகிறார் பத்மஸ்ரீ விருது பெற்ற முனுசாமி.
துருக்கி நாட்டை சேர்ந்த மாணவர்கள் தற்போது பயிற்சி முகாமில் பங்கேற்று உள்ளனர். துருக்கி நாட்டில் உயர்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார பயணமாக புதுவை வந்துள்ளனர். இவர்கள் இடையன்சாவடி கிராமத்தில் அங்குள்ள மாணவர்களுடன் 11 நாட்கள் தங்கி புதுவையின் கல்வி மற்றும் கலாச்சாரத்தை பயில்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பாரம்பரிய கலையான சுடுமண் சிற்பங்களை செய்வது எப்படி என ஆர்வத்துடன் பயின்றனர்.
மிகுந்த ஆர்வத்துடன் கற்று வரும் துருக்கி நாட்டு மாணவர்கள் தங்களது நாட்டிற்கு சென்று களிமண் கொண்டு பொம்மைகளை செய்ய மற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிப்போம் என தெரிவித்தனர்.
அழிவின் விளிம்பில் உள்ள சுடுமண் சிற்ப கலையை மீட்டெடுக்கும் வகையில் உள்ளூர், வெளிநாட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என பயிற்சியாளர் முனுசாமி தெரிவித்தார்.
- கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான மகளிர் கூடைப்பந்து விளையாட்டு போட்டி புதுவை ஜிப்மர் வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
- போட்டியில் தமிழ்நாடு, புதுவையை சேர்ந்த கேந்திர வித்யாலயா பள்ளி மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
புதுச்சேரி:
கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான மகளிர் கூடைப்பந்து விளையாட்டு போட்டி புதுவை ஜிப்மர் வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
போட்டியில் தமிழ்நாடு, புதுவையை சேர்ந்த கேந்திர வித்யாலயா பள்ளி மாணவிகள் கலந்து கொள்கின்றனர். போட்டியின் முதல் நாளான இன்று கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வர் ஜோஸ்மேத்யு வரவேற்றார். புதுவை கூடைப்பந்து சங்க செயலாளர் ரகோத்தமன் வாழ்த்துரை வழங்கினார்.
புதுவை பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி துறை பேராசிரியை சுல்தானா போட்டியை தொடங்கி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி பெறுவார்கள். போட்டிக்கான ஏற்பாடுகளை கேந்திரிய வித்யாலயா பள்ளியின் உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் குமார், வீரா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் செய்துள்ளனர்.






