என் மலர்
புதுச்சேரி
- புதுவை தொழிலாளர் துறை வாயிலாக, மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் ஆதிதிராவிடர் பழங்குடியினர் திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் அரசு போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
- புதுவை மூலகுளம் கேரியர் அகடாமி பயிற்சி மையத்தில் மாதாந்திர உதவித் தொகையுடனான இலவச பயிற்சியை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை தொழிலாளர் துறை வாயிலாக, மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் ஆதிதிராவிடர் பழங்குடியினர் திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் அரசு போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
புதுவை மூலகுளம் கேரியர் அகடாமி பயிற்சி மையத்தில் மாதாந்திர உதவித் தொகையுடனான இலவச பயிற்சியை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார். விழாவில், சிவசங்கரன் எம்.எல்.ஏ., மத்திய அரசின் ஆதிதிராவிடர் பழங்குடியினர் திறன் மேம்பாட்டுக் கழக துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி, புதுவை குளோபல் கேரியர் அகாடமி நிறுவனர் வெங்கடேசன், மற்றும் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
- நெட்டப்பாக்கம் தொகுதி நத்தமேடு கிராமத்தில் சமுதாய நலக்கூடம் மற்றும் குடிநீர் தேக்க தொட்டியை சுற்றியுள்ள இடங்கள் குப்பைகள் கொட்டப்பட்டும் புதர்கள் மண்டியும் இருந்தது.
- துணை சபாநாயகர் ராஜவேலு அந்த இடத்திற்கு நேரில் சென்று ஜே.சி.பி. எந்திரங்களை வரவைத்து உடனடியாக அந்த இடத்தை சரிசெய்தார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் தொகுதி நத்தமேடு கிராமத்தில் சமுதாய நலக்கூடம் மற்றும் குடிநீர் தேக்க தொட்டியை சுற்றியுள்ள இடங்கள் குப்பைகள் கொட்டப்பட்டும் புதர்கள் மண்டியும் இருந்தது. அதனை சரி செய்து தரவேண்டும் என தொகுதி மக்கள் துணை சபாநாயகர் ராஜவேலுவிடன் கோரிக்கை அளித்து இருந்தனர்.
அதனை ஏற்று உடனடியாக துணை சபாநாயகர் ராஜவேலு அந்த இடத்திற்கு நேரில் சென்று ஜே.சி.பி. எந்திரங்களை வரவைத்து உடனடியாக அந்த இடத்தை சரிசெய்தார்.
அப்போது நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
- புதுவை அருகே மொரட்டாண்டி டோல்கேட்டில் ஜல்லி ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து புதுவை நோக்கி ஜல்லி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. டோல்கேட் அருகே உள்ள டீக்கடை ஓரம் லாரியை நிறுத்திய டிரைவர் டீ குடிக்க சென்றார்.
புதுச்சேரி:
புதுவை அருகே மொரட்டாண்டி டோல்கேட்டில் ஜல்லி ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து புதுவை நோக்கி ஜல்லி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. டோல்கேட் அருகே உள்ள டீக்கடை ஓரம் லாரியை நிறுத்திய டிரைவர் டீ குடிக்க சென்றார்.
அப்பொழுது லாரியின் மேலே இருந்த தார்பாய் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ மளமளவென லாரியின் மேற்பரப்பில் வேகமாக எரியத் தொடங்கியதை கண்ட பொதுமக்கள் டிரைவரிடம் கூறினர். உடனே டீக்கடையில் இருந்த தண்ணீரை எடுத்து லாரியின் மேல் எரிந்து கொண்டிருந்த தீயை பொதுமக்கள் அணைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆரோவில் போலீசார் லாரி டிரைவர் ரவியிடம் நடத்திய நடத்திய விசாரணையில், திருவக்கரையில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு கடலூருக்கு சென்றதும் சாலையில் செல்லும் போது லாரியில் உள்ள ஜல்லியின் துகள்கள் வாகன ஓட்டிகள் மீது பறக்காமல் இருக்க தார்ப்பாய் கட்டியிருந்தார்.
லாரியின் பக்கவாட்டில் உள்ள சைலன்சர் சூட்டால் தார்ப்பாய் தீப்பிடித்தது தெரியவந்தது.
டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- வில்லியனூரில் ரவுடியை கொல்ல கத்தியுடன் பதுங்கியிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
- வில்லியனூர் கோபாலன் கடை பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற கலைக்குமார் (வயது22). ரவுடியான இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது.
புதுச்சேரி:
வில்லியனூரில் ரவுடியை கொல்ல கத்தியுடன் பதுங்கியிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர் கோபாலன் கடை பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற கலைக்குமார் (வயது22). ரவுடியான இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது.
இதற்கிடையே குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதற்கு அந்த பெண்ணின் தாயார் எதிர்ப்பு தெரிவித்து வில்லியனூர் கணுவாயப்பேட்டையை சேர்ந்த சசிதரன் என்பவரிடம் முறையிட்டார். இதையடுத்து சசிதரன் செல்போனில் தொடர்பு கொண்டு குமாரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த குமார், சசிதரனை கொல்ல திட்டமிட்டார். மாலை சசிதரனை கொலை செய்ய தனது கூட்டாளிகளுடன் அரசூர் காலனி பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து வீச்சரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சசிதரனை கொலை செய்ய திட்டமிட்டதை அறிந்த சசிதரன் எதிர் தாக்குதல் நடத்தி குமாரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக சசிதரன் தனது கூட்டாளிகளான கணுவாய்ப்பேட்டையை சேர்ந்த நூதேஷ்(வயது19), வில்லியனூர் சாமியார்தோப்பை சேர்ந்த ஹரிநாத்(19) மற்றும் பிரசாந்த் ஆகியோருடன் கோபாலன்கடை பகவத்சிங் நகரில் பதுக்கியிருப்பதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு முள்புதரில் பதுங்கியிருந்த சசிதரன் உள்பட 4 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்களி டமிருந்து 2 கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
- திருபுவனையில் மேம்பாலம் அமைக்கும் இடத்தில் உள்ள கடலூர் சாலையில் கட்டிடங்கள் நெருக்கமாக உள்ளதால் வாகனங்கள் திரும்ப முடியாமல் காலை அந்த வழியாக சென்ற லாரி நின்று போனது.
- சென்னை- நாகப்பட்டினம் நான்கு வழி விரிவாக்க சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
சென்னை- நாகப்பட்டினம் நான்கு வழி விரிவாக்க சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி திருபுவனை பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருபுவனையில் மேம்பாலம் அமைக்கும் இடத்தில் உள்ள கடலூர் சாலையில் கட்டிடங்கள் நெருக்கமாக உள்ளதால் வாகனங்கள் திரும்ப முடியாமல் காலை அந்த வழியாக சென்ற லாரி நின்று போனது.
இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் தேங்கி நின்றன. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், மருத்துவமனைக்கு அவசரமாக செல்லக்கூடிய வாகனங்கள் போக்கு வரத்தில் சிக்கி நின்றன.
சாலை விரிவாக்க பணிக்காக திருபுவனையில் இரண்டு புறமும் இருந்த கட்டிடங்கள் அகற்றப்பட்டன. இருந்த போதிலும் தற்போது சென்ட்ரல் திரையரங்கம் அருகில் செல்லும் சர்வீஸ் ரோடு மிகவும் குறுகலாக இருந்து வரும் நிலையில், இப்பகுதியில் இன்னும் சாலை விரிவாக்கம் செய்யாமல் உள்ளனர். இதனால் வேறு வழி இல்லாமல் இந்த குறுகிய சாலையில் வாகனங்கள் செல்லும் நிலை உள்ளது.
இந்த வழியாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வாகனங்கள் செல்கின்றன. திருபுவனை லிருந்து கடலூர் செல்லும் முக்கிய திருப்பமாக உள்ள இந்த சாலை தற்போது வாகனங்கள் செல்ல முடியாமல் குறுகிய சாலையாக அமைத்துள்ளனர்.
சர்வீஸ் ரோடு விரிவாக்க பணிக்காக இங்கு உள்ள கட்டிடங்கள் அகற்றப்படுமா..? அல்லது வேறு மாற்று வழியை சாலை போடும் ஒப்பந்தார்கள் ஏற்பாடு செய்வார்கள் என்று தெரியவில்லை. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இப்பகுதியில் உள்ள கட்டிடங்களை அகற்றி வாகனங்கள் செல்ல சாலை அமைக்குமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- புதுவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் மூலமாகபாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு ராயல் நகரில் ரூ.10 லட்சம் செலவில் சாலை அமைத்தல் பணி நடைபெற்றது.
- மூர்த்திக்குப்பம் சமுதாய நலக்கூடத்தில் விடுபட்ட பணிகளை ரூ.5 லட்சம் செலவில் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான தொடக்கவிழா நடந்தது.
புதுச்சேரி:
புதுவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் மூலமாகபாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு ராயல் நகரில் ரூ.10 லட்சம் செலவில் சாலை அமைத்தல், மூர்த்திக்குப்பம் சமுதாய நலக்கூடத்தில் விடுபட்ட பணிகளை ரூ.5 லட்சம் செலவில் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான தொடக்கவிழா நடந்தது. இதில் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில் குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.
இதில் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் முகுந்தன் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- புதுவை மாநில டேபிள் டென்னிஸ் கழகத்தின் சார்பில் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் அமலோற்பவம் தொடக்க பள்ளியில் 4 நாட்கள் நடைபெற்றது.
- 10 பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் புதுவையை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில டேபிள் டென்னிஸ் கழகத்தின் சார்பில் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் அமலோற்பவம் தொடக்க பள்ளியில் 4 நாட்கள் நடைபெற்றது. 10 பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் புதுவையை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு புதுவை மாநில டேபிள் டென்னிஸ் கழகத்தின் தலைவர் நமசிவாயம் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு குண சேகரன் வரவேற்பு வழங்கினார். தமைமை விருந்தினராக போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன், சிறப்பு விருந்தினராக சுந்திரராஜன் பெர்ஜின், புதுவை மாநில டேபிள் டென்னிஸ் கழகத்தின் கவுரவ செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் புதுவை மாநில டேபிள் டென்னிஸ் கழகத்தின் துணைத் தலைவர் சுந்தரவரதன், செயற்குழு உறுப்பினர் அலெக்ஸ் அன்புராஜ் சுரேஸ் மற்றும் நிர்வாகிகள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி,சதீஷ், பழனி, அய்யப்பன், சர்குருநாத் ஆகியோர் கலந்து கொண்டனார். முடிவில் வேலாயுதம் நன்றி கூறினார்.
- புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
- தொடர்ந்து சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
தொடர்ந்து சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் கூட்டத்தொடர் காலவரை யின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே பட்ஜெட்டுக்கு மத்திய நிதி, உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.
இதையடுத்து மீண்டும் சட்டசபை 18-ந் தேதி கூடும், 22-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் புதுவை சட்டசபை 12 நாட்களுக்கு பிறகு மீண்டும் 22-ந் தேதி கூட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு நிதிபொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதன்பின் அலுவல் ஆய்வுக்குழு கூடி பட்ஜெட் கூட்டத்தொடர் நாட்களை முடிவு செய்ய உள்ளது. இருப்பினும் 30-ந் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும் என தெரிகிறது. அதிகபட்சமாக பட்ஜெட் ஒரு வாரம் மட்டுமே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- விடுமுறை நாட்கள் என்பதால் சாலை ஓரம் குப்பைகள் சூழ்ந்தும் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கியது.
- இதுகுறித்து அந்த பகுதி மக்கள் நேரு எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை புதுப்பாளையம் வார்டு அய்யனார் நகர் பகுதியில் உள்ள சந்திரசேகர் வீதியில் கடந்த சில நாட்களாக விடுமுறை நாட்கள் என்பதால் சாலை ஓரம் குப்பைகள் சூழ்ந்தும் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கியது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் நேரு எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து நேரு
எம்.எல்.ஏ. அந்தபகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் புதுவை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.மேலும், அங்கு தேவையின்றி நிற்கும் வாகனங்கள் மற்றும் பழுதடைந்த வாகனங்களை அப்புறப்படுத்த அதிகாரி களை வலியுறுத்தினார்.
- இந்த கோவிலில் கடந்த 9-ந் கொடியேற்றுதல் விழா தொடங்கியது.
- மாரியம்மன் கோவிலில் கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், இரவில் சாமிகளின் வீதி உலாவும் நடக்கிறது.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கத்தை அடுத்த பனித்திட்டு மீனவ கிராமத்தில் மகாகாளியம்மன், விநாயகர், ஊத்துக்காட்டு மாரியம்மன், மகாசக்தி கங்கையம்மன், கங்காதீஸ்வரர், பாலமுருகன் கோவில்கள் இருந்து வருகிறது. இந்த கோவிலில் கடந்த 9-ந் கொடியேற்றுதல் விழா தொடங்கியது.
தொடர்ந்து 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், இரவில் சாமிகளின் வீதி உலாவும் நடக்கிறது. தொடர்ந்து 13-ந் தேதியிலிருந்து 15-ந் தி வரை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 8 மணிக்கு சாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு 11.30 மணியளவில் காளியம்மன் கடற்கரைக்கு சென்று ஜலம் திரட்டி வந்து பக்தர்கள் செடல் குத்துதல், சாகைவார்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் இரவில் முத்துப்பல்லக்கில சாமிகளின் வீதியுலா நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை பனித்திட்டு கிராம பஞ்சாயத்து தலைவர் அஞ்சாபுலி, நிர்வாகிகள் அன்பழகன், மாதவன், ஆறுமுகம், அய்யனாரப்பன், பலராமன், கோவிந்து, கலை வாணன், இளையராஜா, லெனின் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- தந்திர தினத்தையொட்டி தியாகிகளை கவுரவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.
- தியாகிகள் போரடியதால்தான் 75 ஆண்டாக சுதந்திரமாக வாழ்கிறோம்.
புதுச்சேரி:
புதுவை செய்தி விளம்பரத்துறை சார்பில் சுதந்திர தினத்தையொட்டி தியாகிகளை கவுரவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.
விழாவுக்கு அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி தியாகிகளுக்கு பழங்கள் அடங்கிய தொகுப்பு, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
தியாகிகள் போரடியதால்தான் 75 ஆண்டாக சுதந்திரமாக வாழ்கிறோம். சுதந்திரம் பெற்ற பிறகு நாடும், மாநிலமும் எவ்வளவு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
உலகம் வியக்கும் அளவுக்கு நம் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. இது மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே நம் எண்ணம். புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும், அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. ஆண்டுதோறும் ஏராளமான மருத்துவம், பொறியியல் பட்டங்களை மாணவர்கள் பெறுகின்றனர். பலர் வெளிநாடுகளில் பணியில் உள்ளனர்.
கல்வி, மருத்துவத்துக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்றம் அடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தியாகிகளுக்கு ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதை உடனடியாக உயர்த்த முடியாது. சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விரிவாக ஆலோசனை நடத்தி ஓய்வூதியம் உயர்த்துவது உட்பட பல முடிவுகள் எடுக்கப்படும்.
தியாகிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கலெக்டர் வல்லவன், செ ய்தித்துறை இயக்குனர் தமிழ்செல்வன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் 10 தியாகிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு இன்று முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆயிரத்து 418 தியாகிகள் பயனடைவர்.
- வெடிகுண்டு தயாரித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
- இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வாலிபரை கொல்ல வெடிகுண்டு தயாரித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர் அருகே அரசூர் காலனியில் ஒரு வெட்டவெளி பகுதியில் ஒரு கும்பல் வெடிகுண்டு தயாரிப்பதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது நாட்டு வெடிகுண்டு தயாரித்த 6 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் வில்லியனூர் கோபாலன் கடையை சேர்ந்த குமார் என்ற கலைக்குமார் (வயது22), சதீஷ்(21), சுரேஷ்(21), தீனா என்ற யுவராஜ்(21), சதீஷ்குமார் (23) மற்றும் வாழப்பட்டாம் பாளையத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.
குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலியை சந்திக்க அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் இதற்கு அந்த பெண்ணின் தாய் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த பெண்ணின் தாயார் இதுகுறித்து கணுவாயப்பேட்டையை சேர்ந்த சசிதரன் என்பவரிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து சசிதரன் செல்போனில் குமாரை தொடர்பு கொண்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமார் சசிதரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து தனது கூட்டாளிகளிடம் தெரிவித்தார். அதற்கு அவர்களும் சசிதரனை கொலை செய்ய ஒப்புகொண்டனர்.
அதன்படி சசிதரனின் செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்க வருமாறு குமார் கூறியுள்ளார். அதற்கு முன் வெடிகுண்டை தயாரித்து அதன் மூலம் சசிதரனை கொல்ல முடிவு செய்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களி டமிருந்து வீச்சரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தக்க நேரத்தில் போலீசார் தகவல் அறிந்து கொலை சதி திட்டத்தை முறியடித்ததால் அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டது.






