என் மலர்

  புதுச்சேரி

  டேபிள் டென்னிஸ் போட்டி பரிசளிப்பு விழா
  X

  டேபிள் டென்னிஸ் போட்டி பரிசளிப்பு விழாவின் போது எடுத்த படம்.

  டேபிள் டென்னிஸ் போட்டி பரிசளிப்பு விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதுவை மாநில டேபிள் டென்னிஸ் கழகத்தின் சார்பில் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் அமலோற்பவம் தொடக்க பள்ளியில் 4 நாட்கள் நடைபெற்றது.
  • 10 பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் புதுவையை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  புதுச்சேரி:

  புதுவை மாநில டேபிள் டென்னிஸ் கழகத்தின் சார்பில் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் அமலோற்பவம் தொடக்க பள்ளியில் 4 நாட்கள் நடைபெற்றது. 10 பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் புதுவையை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  இதனைத தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு புதுவை மாநில டேபிள் டென்னிஸ் கழகத்தின் தலைவர் நமசிவாயம் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு குண சேகரன் வரவேற்பு வழங்கினார். தமைமை விருந்தினராக போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன், சிறப்பு விருந்தினராக சுந்திரராஜன் பெர்ஜின், புதுவை மாநில டேபிள் டென்னிஸ் கழகத்தின் கவுரவ செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.

  நிகழ்ச்சியில் புதுவை மாநில டேபிள் டென்னிஸ் கழகத்தின் துணைத் தலைவர் சுந்தரவரதன், செயற்குழு உறுப்பினர் அலெக்ஸ் அன்புராஜ் சுரேஸ் மற்றும் நிர்வாகிகள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி,சதீஷ், பழனி, அய்யப்பன், சர்குருநாத் ஆகியோர் கலந்து கொண்டனார். முடிவில் வேலாயுதம் நன்றி கூறினார்.

  Next Story
  ×