என் மலர்

  புதுச்சேரி

  ரவுடியை கொல்ல கத்தியுடன் பதுங்கியிருந்த 4 பேர் கைது
  X

  கோப்பு படம்.

  ரவுடியை கொல்ல கத்தியுடன் பதுங்கியிருந்த 4 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வில்லியனூரில் ரவுடியை கொல்ல கத்தியுடன் பதுங்கியிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • வில்லியனூர் கோபாலன் கடை பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற கலைக்குமார் (வயது22). ரவுடியான இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது.

  புதுச்சேரி:

  வில்லியனூரில் ரவுடியை கொல்ல கத்தியுடன் பதுங்கியிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

  வில்லியனூர் கோபாலன் கடை பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற கலைக்குமார் (வயது22). ரவுடியான இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது.

  இதற்கிடையே குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதற்கு அந்த பெண்ணின் தாயார் எதிர்ப்பு தெரிவித்து வில்லியனூர் கணுவாயப்பேட்டையை சேர்ந்த சசிதரன் என்பவரிடம் முறையிட்டார். இதையடுத்து சசிதரன் செல்போனில் தொடர்பு கொண்டு குமாரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

  இதனால் ஆத்திரமடைந்த குமார், சசிதரனை கொல்ல திட்டமிட்டார். மாலை சசிதரனை கொலை செய்ய தனது கூட்டாளிகளுடன் அரசூர் காலனி பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தார்.

  இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து வீச்சரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

  இந்தநிலையில் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சசிதரனை கொலை செய்ய திட்டமிட்டதை அறிந்த சசிதரன் எதிர் தாக்குதல் நடத்தி குமாரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக சசிதரன் தனது கூட்டாளிகளான கணுவாய்ப்பேட்டையை சேர்ந்த நூதேஷ்(வயது19), வில்லியனூர் சாமியார்தோப்பை சேர்ந்த ஹரிநாத்(19) மற்றும் பிரசாந்த் ஆகியோருடன் கோபாலன்கடை பகவத்சிங் நகரில் பதுக்கியிருப்பதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

  இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு முள்புதரில் பதுங்கியிருந்த சசிதரன் உள்பட 4 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்களி டமிருந்து 2 கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

  Next Story
  ×