என் மலர்

  புதுச்சேரி

  டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி  தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
  X

  தீப்பிடித்து எரிந்த லாரி

  டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதுவை அருகே மொரட்டாண்டி டோல்கேட்டில் ஜல்லி ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து புதுவை நோக்கி ஜல்லி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. டோல்கேட் அருகே உள்ள டீக்கடை ஓரம் லாரியை நிறுத்திய டிரைவர் டீ குடிக்க சென்றார்.

  புதுச்சேரி:

  புதுவை அருகே மொரட்டாண்டி டோல்கேட்டில் ஜல்லி ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து புதுவை நோக்கி ஜல்லி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. டோல்கேட் அருகே உள்ள டீக்கடை ஓரம் லாரியை நிறுத்திய டிரைவர் டீ குடிக்க சென்றார்.

  அப்பொழுது லாரியின் மேலே இருந்த தார்பாய் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ மளமளவென லாரியின் மேற்பரப்பில் வேகமாக எரியத் தொடங்கியதை கண்ட பொதுமக்கள் டிரைவரிடம் கூறினர். ‌ உடனே டீக்கடையில் இருந்த தண்ணீரை எடுத்து லாரியின் மேல் எரிந்து கொண்டிருந்த தீயை பொதுமக்கள் அணைத்தனர்.

  சம்பவ இடத்திற்கு வந்த ஆரோவில் போலீசார் லாரி டிரைவர் ரவியிடம் நடத்திய நடத்திய விசாரணையில், திருவக்கரையில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு கடலூருக்கு சென்றதும் சாலையில் செல்லும் போது லாரியில் உள்ள ஜல்லியின் துகள்கள் வாகன ஓட்டிகள் மீது பறக்காமல் இருக்க தார்ப்பாய் கட்டியிருந்தார்.

  லாரியின் பக்கவாட்டில் உள்ள சைலன்சர் சூட்டால் தார்ப்பாய் தீப்பிடித்தது தெரியவந்தது.

  டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  Next Story
  ×