என் மலர்
புதுச்சேரி
- புதுவை காராமணி குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
- போட்டியில் புதுவை மற்றும் தமிழ்நாடு அளவிலான 28 அணிகள் கலந்து கொண்டன.
புதுச்சேரி:
கால்பந்து நண்பர்கள் கழகத்தின் சார்பில் 20-ம் ஆண்டு கால்பந்தாட்ட போட்டிகள் புதுவை காராமணி குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
போட்டியில் புதுவை மற்றும் தமிழ்நாடு அளவிலான 28 அணிகள் கலந்து கொண்டன.
இந்த போட்டியில் உப்பளம் சிவாஜி அணியினர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்தனர். நெய்வேலி ரூனி கால்பந்தாட்ட அணியினர் 2-ம் இடம் பிடித்தனர்.
இந்த போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நெல்லித்தோப்புதொகுதி எம்.எல்.ஏ. ரிச்சர்ட் ஜான்குமார் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தொழிலதிபர் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பையை வழங்கினர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கால்பந்து நண்பர்கள் கழகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
- வியாபாரியின் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- இவர் மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ. ரோட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார்
புதுச்சேரி:
மேட்டுப்பாளையத்தில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த காய்கறி வியாபாரியின் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுவை மேட்டுப்பாளையம் சிந்து வீதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 52). இவர் மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ. ரோட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் தனது காய்கறி வியாபாரத்துக்காக ஒரு காரை வாங்கி உபயோகித்து வந்தார். அந்த காரை வேல்முருகன் தனது வீட்டு வாசல் முன்பு நிறுத்தி விட்டு தூங்க செல்வது வழக்கம் அதுபோல் வேல்முருகன் காரை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
நள்ளிரவு 11 மணியளவில் கார் தீப்பற்றி எரிவதை கண்டு வேல்முருகன் அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர்கள் யாரோ கார் கண்ணாடியை உடைத்து இருக்ககையில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து வேல்முருகன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் காரை தீ வைத்த எரித்து சென்றது பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது வேல்முருகனின் மகன் சிவபிரியன் (22) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இதற்கு பயந்து வேல்முருகன் தனது மகன் சிவபிரியனை சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். ஆனாலும் ஆத்திரம் தீராத எதிர் தரப்பினர் காருக்கு தீ வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து காருக்கு தீ வைத்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான 25-ம் ஆண்டு கபடி போட்டி நடந்தது.
- மாரியம்மன் கோவில் திடலில் நடந்த கபடி போட்டிக்கு இடையஞ்சாவடி கிராம நாட்டாமைகள் தலைமை தாங்கினர்.
புதுச்சேரி:
75-வது ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி ஆரோ கிரஸன்ட் கபடி கிளப் சார்பில் புதுவை மாநில கபடி சங்க அனுமதியுடன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான 25-ம் ஆண்டு கபடி போட்டி நடந்தது.
மாரியம்மன் கோவில் திடலில் நடந்த கபடி போட்டிக்கு இடையஞ்சாவடி கிராம நாட்டாமைகள் தலைமை தாங்கினர். இரும்பை ஊராட்சி மன்ற தலைவர் வசந்திகபாலி, அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்க விழாவில் ஆரோவில் பவுண்டேஷன் செயலர் ஜெயந்திரவி, கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு மித்ரன், ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தனர்.
மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர். இறுதிப் போட்டியில். ஆண்கள் பிரிவில் திருபுவனை வேலழகன் அணியினர் முதல் பரிசு வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.
2-ம் பரிசை கூடப்பாக்கம் நியூ ஆதம்ஸ் அணியினர் தட்டிச் சென்றனர். பிச்சவீரன்பட் ஒய்.எம்.சி அணியினர் 3-ம் இடத்தையும் அரியாங்குப்பம் ஜெய் பார்ட்னர் அணி 4-ம் இடத்தையும் பெற்றனர். மகளிர் கபடியில் வில்லியனூர் மறவர் அணியினர் முதல் இடத்தைப் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.
அரியூர் தனசேகர் அணி 2-ம் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. பரிசளிப்பு விழாவில் புதுவை கபடி சங்க தலைவர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், செயலாளர் ஆரியசாமி, பா.ஜனதா விழுப்புரம் மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.கே ராஜன், திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல் பரிசினை பா.ஜனதா மாவட்ட பொது செயலாளர் ஜி.கே ராஜன் வழங்கினார், கவுன்சிலர் ஜெயந்தி ரமேஷ் 2-ம் பரிசையும், அய்யப்பன் 3-வது பரிசையும், பா.ஜனதா மாவட்ட செயலாளர் மூர்த்தி 4-வது பரிசையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இடையஞ்சாவடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், விக்கி சுரேஷ், முத்தமிழ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ராஜேஷ், தமிழ் ஆயிரம் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு சீருடை மற்றும் உணவு வழங்கினர். ஆரோ கிரசன்ட் கபடி கிளப் தலைவர் விஸ்வநாதன் கபடி போட்டியை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
- இந்த கம்பெனியின் வளாகத்தில் குடோன் அமைந்துள்ளது.
- பல லட்சம் எலக்ட்ரிக் பொருட்கள் திருட்டு போயிருந்ததை கண்டு நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி:
சேதராப்பட்டு அருகே துத்திப்பட்டு மெயின் ரோட்டில் சிமெண்ட் கம்பெனி இயங்கி வருகிறது.
இந்த கம்பெனியின் வளாகத்தில் குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த பல லட்சம் எலக்ட்ரிக் பொருட்கள் திருட்டு போயிருந்ததை கண்டு நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ நடந்த இடத்திற்கு வந்த சேதராப்பட்டு போலீசார் அங்கு பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சி.சி.டி.வி.யி.ல் பதிவாகி இருந்த காட்சியில், சம்பவம் நடந்த கட்டிடத்தின் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து பட்டப்பகலில் புகுந்த மர்ம ஆசாமி சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஆவார்.
இவர் முதல் தளத்தில் உள்ள வளாகத்திற்கு வருகிறார். அப்போது அங்கு பூட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு அறையை சிறிய துவாரத்தின் வழியே நோட்டமிடுகிறார். பின்னர் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே செல்லும் அவர் அங்கிருந்த பொருட்களை ஒவ்வொன்றாக தூக்கிச் சென்று கொல்லைபுறம் வழியாக வீசிவிட்டு வருகிறார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அறையில் இருந்த கனமான எலக்ட்ரிக் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக திருடி செல்கிறார். உயரத்தில் இருந்த சி.சி.டி.வி.யை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் கையில் இருந்த பொருளால் சி.சி.டி.வி. கேமராவை அடித்து நொறுக்குகிறார். சி.சி.டி.வி. கேமராவில் ஹார்ட் டிஸ்க் உயரத்தில் இருந்ததால் அந்த வாலிபரால் அதனை எடுக்க முடியவில்லை.
எனவே பொருட்களை திருடிவிட்டு தப்பி செல்லும் காட்சி சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகி உள்ளது.இந்த காட்சியை வைத்து கொள்ளையனை போலீசார் தேடினர்.
அப்போது அந்த வாலிபர் கம்பெனியை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர் என்பதை உறுதி செய்தனர்.
அவரை போலீசார் தேடி வருகின்றனர். சமீப நாட்களாக சேதராப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் கம்பெனி நடத்தி வருபவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
- பெண் கடத்தப்பட்டதாக தந்தை போலீசில் புகார் கூறியுள்ளார்.
- குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பட்டதாரி பெண் கடத்தப்பட்டதாக தந்தை போலீசில் புகார் கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராமன் குமார் (வயது 53) இவர் கடந்த 20 ஆண்டுகளாக அரியாங்குப்பம் பெரிய இருசாம்பாளையம் ரோட்டில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
ராமன்குமார் ஒரு தனியார் கம்பெனியில் பொருப்பாளராக வேலை செய்து வருகிறார். இவரது இளைய மகள் பிட்டு குமாரி (வயது 24) இவர் புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பி.காம் படித்து முடித்து விட்டு கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து வந்தார்.
ராமன்குமார் தனது மனைவி ரேணுதேவி மற்றும் மகள்களுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் பார்த்த போது தூங்கிக் கொண்டிருந்த பிட்டுகுமாரி காணாமல் போனது கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பிட்டு குமாரியை பல இடங்களில் சென்று தேடினர். ஆனால் எங்கும் பிட்டுகுமாரி இல்லை. இதையடுத்து ராமன்குமார் தனது மகள் மாயமானது குறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
புகாரில் தனது மகள் பிட்டுகுமாரியை செஞ்சியை சேர்ந்த சிவக்குமார் என்ற வாலிபர் கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
- குறும்பட மற்றும் நாடக விழா புதுவை ஆந்திர மகா சபையில் நடந்தது.
- புதுவை மாநில தி.மு.க அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
புதுவை கண்மணி கிரியேஷன் சார்பில் 44-ம் ஆண்டு விழா குறும்பட மற்றும் நாடக விழா புதுவை ஆந்திர மகா சபையில் நடந்தது.
விழாவில் திருச்சி, சேலம், கோவை, நாமக்கல், ஈரோடு, தஞ்சாவூர், மதுரை, சென்னை மற்றும் புதுவையைச் சேர்ந்த பல்வேறு நாடக குழுக்களும், குறும்பட இயக்குனர்களும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். புதுவை மாநில தி.மு.க அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
தமிழக அரசு கொறடா கோவி.செழியன் 45 கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். விழாவில் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், என்.ஆர்.காங்., பொது செயலாளர் என்.எஸ்.ஜே. ஜெயபால், தி.மு.க. உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால், புதுவை தமிழ்ச்சங்க தலைவர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை புதுவை கண்மணி கிரியேஷன் தலைவர் எம்.எஸ்.ராஜா செய்திருந்தார்.
- புதுச்சேரி கலை விழா திருக்கனூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெறுகிறது.
- மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எம்.ஏ.வுமான நமச்சிவாயம் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி:
புதுவை அரசு கலை பண்பாட்டு துறையும், தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து நடத்தும் புதுச்சேரி கலை விழா திருக்கனூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெறுகிறது.
விழாவை உள்துறை அமைச்சரும், மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எம்.ஏ.வுமான நமச்சிவாயம் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
முதல் நாள் மங்கல இசையும் அதனை தொடர்ந்து லயம் நாட்டியாலயாவின் சிலம்பாட்டம் நிகழ்ச்சியும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்களின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மற்றும் மேற்கு வங்காளம் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன.
நேற்று 2-ம் நாள் தெலுங்கானா மாநில நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், தமிழக கரகம், சிலம்பாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்து ரசித்தனர்.
அரியானா மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.
கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலை பண்பாட்டுத்துறை ஊழியர்கள் மாறன், முருகையன், முருகானந்தம், சுப்ரமணியன் மற்றும் அவுட் சோர்சிங் ஊழியர்கள் கார்த்திகேயன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
- அரசு மற்றும் தனியார் நிகழ்வுகளுடன் வழிபாட்டு தலங்களிலும் இந்த முறை சுதந்திர தின விழா களைகட்டியது.
- லாஸ்பேட்டை சிவசுப்ரமணியன் கோவிலில் 110 அடி உயரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
புதுச்சேரி:
நாட்டின் 76-வது சுதந்திர தின விழா புதுவையில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
அரசு மற்றும் தனியார் நிகழ்வுகளுடன் வழிபாட்டு தலங்களிலும் இந்த முறை சுதந்திர தின விழா களைகட்டியது.
அனைத்து கோவில்களிலும் கொடி ஏற்ற வேண்டும் என்று அரசின் இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது.
இதன்படி லாஸ்பேட்டை சிவசுப்ரமணியன் கோவிலில் 110 அடி உயரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதமாக தேசிய கொடி நிறத்தில் பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
- சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி வீடு தோறும் தேசிய கொடி ஏற்ற வலியுறுத்தி அமலோற்பவம் மேல்நிலைபள்ளி சார்பில் பிரம்மாண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.
- பள்ளியின் என்.எஸ்.எஸ். குழுவினர் ஒருங்கிணைத்து நடத்திய இப்பேரணியை முதுநிலை முதல்வர் லூர்துசாமி வாழ்த்துரை வழங்கி கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
புதுச்சேரி:
சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி வீடு தோறும் தேசிய கொடி ஏற்ற வலியுறுத்தி அமலோற்பவம் மேல்நிலைபள்ளி சார்பில் பிரம்மாண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பள்ளியின் என்.எஸ்.எஸ். குழுவினர் ஒருங்கிணைத்து நடத்திய இப்பேரணியை முதுநிலை முதல்வர் லூர்துசாமி வாழ்த்துரை வழங்கி கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
அமலோற்பவம் ஆரம்பப் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியில் 300-க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
புதுவையின் பிரதான வீதிகள் வழியாக சென்று 5 கி.மீ. தூரம் நடைபெற்ற இப்பேரணியில் நாட்டுப் பற்றை வளர்க்கும் விதமாக வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் போன்ற வீர முழக்கங்களை மாணவர்கள் எழுப்பினர்.
இப்பேரணியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்ததுடன் மாணவர்களோடு சேர்ந்து அவர்களும் முழக்கமிட்டும், புகைப்படம் எடுத்தும் மாணவர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தினர்.
- தவளக்குப்பம் அருகே மது குடிக்க பணம் தர மறுத்த வாலிபரை அரிவாளால் வெட்டி விட்டு அதனை தடுக்க முயன்ற தந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
- கிருமாம்பாக்கத்தில் கட்டிட வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அருகே மது குடிக்க பணம் தர மறுத்த வாலிபரை அரிவாளால் வெட்டி விட்டு அதனை தடுக்க முயன்ற தந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பம் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்பன்(வயது46). இவர் தவளக்குப்பம்-கடலூர் மெயின் ரோட்டில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் பிரவீன்குமார் (22). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.
பிரவீன்குமாரும், பூரணாங்குப்பம் திடீர் நகரை சேர்ந்த அரவிந்த், ராகுல்காந்தி மற்றும் ரோஜா நகரை சேர்ந்த விஸ்வா ஆகியோரும் நண்பர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் பிரவீன்குமார் கிருமாம்பாக்கத்தில் கட்டிட வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பூரணாங்குப்பம்-கடலூர் ரோடு சந்திப்பில் வந்த போது அரவிந்த், ராகுல்காந்தி மற்றும் விஸ்வா ஆகிய 3 பேரும் பிரவீன்குமாரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். ஆனால் பிரவீன்குமார் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அரவிந்த் உள்பட 3 பேரும் பிரவீன்குமாரை தாக்கினர். இந்த தாக்குதலில் பிரவீன்குமாருக்கு நெற்றி மற்றும் கையில் காயம் ஏற்பட்டது.
இந்த தகவல் அறிந்த பிரவீன்குமாரின் தாய் அஞ்சாலாட்சி விரைந்து வந்து பிரவீன்குமாரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்.
பின்னர் இதுதொடர்பாக நேற்று காலை தவளக்குப்பம் போலீசில் பிரவீன்குமார் புகார் செய்தார். பின்னர் பிரவீன்குமார் வீடு திரும்பினார். போலீசில் புகார் தெரிவித்ததால் ஆவேசமடைந்த அரவிந்த், ராகுல்காந்தி மற்றும் விஸ்வா ஆகிய 3 பேரும் பிரவீன்குமாரின் வீட்டுக்கு வந்தனர். இதனால் பயந்து போன பிரவீன்குமார் வீட்டின் உள்ளே சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.
ஆனாலும் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று எங்கள் மீது போலீசில் புகார் கொடுக்கிறாயா? என்று கூறியபடி அரிவாளால் பிரவீன்குமாரை வெட்டினர். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த பிரவீன்குமாரின் தந்தை குப்பனை அவர்கள் ஜல்லி கரண்டியால் வெட்டினர்.
மேலும் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் மினிவேன் ஆகியவற்றை தடியால் அடித்து உடைத்து சேதப்படுத்தியதோடு பிரவீன்குமாரையும், அவரது தந்தை குப்பனையும் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு அந்த கும்பல் தப்பியோடி விட்டது.
இந்த தாக்குதலில் காயமடைந்த பிரவீன்குமார் மற்றும் அவரது தந்தை குப்பன் ஆகியோர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து குப்பன் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்த், ராகுல்காந்தி, விஸ்வா ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
- புதுவையில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது.
- லாஸ்பேட்டையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுவையில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது. மாணவர்களை குறி வைத்து வியாபாரிகள் கஞ்சா விற்பனை செய்கி றார்கள். அவ்வப்போது போலீசார் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்தும் வருகிறார்கள்.
ஆனால் முற்றிலுமாக கஞ்சா விற்பனையை தடுக்க முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி என்ஜினீயர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் லாஸ்பேட்டையில் பெத்தி செட்டிபேட் மைதானத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்றுக்கொண்டி ருந்த ஒரு வாலிபர் சட்டை பையில் சோதனை நடத்தினர்.
சோதனையில் அவர் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிட மிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகரை சேர்ந்த சிவசக்தி என்ற கொக்கி சிவா என்பது தெரியவந்தது. இதையடுத்து சிவசக்தியை போலீசார் கைது செய்தனர்.
- புதுவை அரசு சார்பு நிறுவனமான பாண்லே நிறுவனத்தில் நாம் தமிழர் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
- வ.உ.சி பெயரில் கல்வெட்டு பதியப்பட்டு நாம் தமிழர் கட்சியின் கொடியினை சீமான் ஏற்றினார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பு நிறுவனமான பாண்லே நிறுவனத்தில் நாம் தமிழர் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பா ளர் சீமான்கொடியேற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார் நெல்லித்தோப்பு தொகுதி சாரத்தில் வ.உ.சி பெயரில் கல்வெட்டு பதியப்பட்டு நாம் தமிழர் கட்சியின் கொடியினை சீமான் ஏற்றினார்.
நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க பேரவை தலைவர் அன்புதென்னரசன், வக்கீல் பாசறை தலைவர் சேவியர்பெலிக்ஸ், கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன், ராஜேந்திரன், புதுவை மாநிலச் செயலாளர் சிவக்குமார், தொழிற்ச ங்கத்தின் மாநிலச் செயலாளர் ரமேசு தலைவர் தமிழ்ச்செல்வன் நிர்வாகிகள்இளங்கோவன் கவுரி ப்ரியன், திருமுருகன், மகளிர் பாசறை தேவிகா, திலகா, சசிக்குமார்,இளைஞர் பாசறை செயலாளர் மணிபாரதி, தொகுதி செயலாளர்கள் காமராஜ், அய்யனார், முத்துக்குமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






