என் மலர்
புதுச்சேரி
- வில்லியனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் ரூ.4½லட்சம் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- தற்போது ஆலை இயங்காததால் அருள்மொழி வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
புதுச்சேரி:
வில்லியனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் ரூ.4½லட்சம் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வில்லியனூர் கோபாலன்கடை பெரம்பை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (வயது56). இவர் லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
தற்போது ஆலை இயங்காததால் அருள்மொழி வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதற்கிடையே அருள்மொழியின் மூத்த மகளுக்கு திருமணம் ஏற்பாடாகி இருந்ததால் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை நடந்து வருகிறது.
இதற்காக வீட்டில் இருந்து கட்டில், பீரோ போன்ற பொருட்களை வீட்டின் வெளி பக்கமுள்ள குளியல் அறை அருகே வைத்திருந்தனர். பீரோ சாவிகளை எப்போதுமே அதிலேயே தொங்க விட்டு இருந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அருள்மொழியின் மனைவி பத்மாவதி பீரோவை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த 11 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோவை திறந்து நகைகளை கொள்ளை யடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.4½ லட்சம் ஆகும்.
இதுகுறித்து அருள்மொழி வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வீட்டில் பெயிண்ட் வேலை செய்தவர்கள் யாரேனும் நகைகளை கொள்ளை யடித்து சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- புதுவை யுவர்பேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் ஏழைகளுக்குஉணவு வழங்குதல், துப்புரவு பணிகளை மேற்கொள்ளுதல், கடற்கரையோரம்,கடலின் உள்ளே சென்று பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துவது உள்பட பல்வேறு சமூகசேவைகளை செய்து வருகிறது.
- 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யுவர்பேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சியை பாண்டி மெரினாவில் நடத்தியது.
புதுச்சேரி:
புதுவை யுவர்பேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் ஏழைகளுக்குஉணவு வழங்குதல், துப்புரவு பணிகளை மேற்கொள்ளுதல், கடற்கரையோரம்,கடலின் உள்ளே சென்று பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துவது உள்பட பல்வேறு சமூகசேவைகளை செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யுவர்பேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சியை பாண்டி மெரினாவில் நடத்தியது.
வீராம்பட்டினத்திலிருந்து தொடங்கி 75 படகுகளில்,75 தேசிய கொடிகளுடன் நடுக்கடலின் உள்ளே சென்று கடலில் கிடக்கும் குப்பைகளை 75 நிமிடங்கள் சேகரிக்கும் நிகழ்ச்சியை நடத்தியது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விழாவில் 75 சின்னத்திரை நட்சத்திரங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக கவர்னர் தமிழிசையை யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
- சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய விடுதலை வீரர்களின் தியாகத்தால் அடிமை விலங்கை உடைத்தெறிந்தோம்.
- தேசத்தின் மாண்பை கட்டிக்காக்கும் பெருமைக்குரிய எல்லா தருணங்களிலும் புதுவை எப்போதும் முன்னணியில் இருந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்றி முதல்-அமைச்சர் ரங்கசாமி உரையாற்றினார்.
அவர் ஆற்றிய உரையின் முக்கியம்சங்கள் வருமாறு:-
நாடு முழுவதும் அமுத பெருவிழாவை கொண்டாடி வரும் இத்தருணத்தில் 75 ஆண்டுக்கு முன் நம் தேசம் இருந்த நிலையை எண்ணிப்பார்க்கிறேன். தங்களை தாங்களே ஆண்டுகொள்ளும் திறமை இந்தியர்களுக்கு இல்லை என்றும், ஆங்கிலேயர் ஆட்சி மறைந்தால் அவர்கள் உருவாக்கிய முற்போக்கு நாகரீம் ஓர் இரவில் அழிந்துவிடும் என்றும் விடுதலைக்கு முன்பு நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் கூறினார்கள்.
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய விடுதலை வீரர்களின் தியாகத்தால் அடிமை விலங்கை உடைத்தெறிந்தோம். நம் உணர்வில் ஊறிய தேசபக்தியால் இந்திய திருநாட்டை தனித்தன்மை மிக்க நாடாக உலகரங்கில் உயர்த்தியுள்ளோம்.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற மந்திர சொல் நம்மிடையே சமுதாய கூட்டுறவை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டுறவினால்தான் எந்த ஒரு கற்பனையாலும், செயற்கையான சூழ்ச்சியாலும் பிரிக்கவோ, பிளக்கவோ முடியாத ஒரு பொது சாதனையாக இந்தியாவை வளமாக்கியுள்ளோம்.
நாடு சுதந்திரம் பெறுவதற்காக தன் இன்னுயிரை ஈந்து அரும்பாடுபட்ட ஆயிரக்கணக்கான விடுதலை வீரர்களின் வீர தியாகத்தையும், நாட்டை உலகரங்களில் ஒப்பற்ற நாடாக உயர்த்த அயராது பாடுபட்ட தேச தலைவர்களையும் நன்றியோடு நினைத்து போற்றுவது நம் அனைவரின் கடமையாகும்.
அதனடிப்படையில்தான் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இல்லம்தோறும் தேசியக்கொடி ஏற்றி உள்ளம்தோறும் தேச பக்தியை வெளிப்படுத்தினோம். தேச பக்தி என்பது நம் ஒவ்வொருவரின் உணர்விலும், கலந்தது என்பதை பெருமிதத்தோடு உலகிற்கு உணர்த்தியுள்ளோம்.
தேசத்தின் மாண்பை கட்டிக்காக்கும் பெருமைக்குரிய எல்லா தருணங்களிலும் புதுவை எப்போதும் முன்னணியில் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாது, வளர்ச்சியில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறது. அந்த சாதனையை எமது அரசு எப்போதும் போல முன்னெடுத்துச்செல்வதில் பெருமிதம் கொள்கிறது.
புதுவை மக்களின் ஏகோபித்த ஆதரவோடு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை புதுவையில் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியோடு, பொறுப்பேற்ற எனது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த ஓராண்டில் ஆக்கப்பூர்வமான பல வளர்ச்சி பணிகளை செய்துள்ளது.
விவசாயிகளின் வருமானத்தை பெருக்க சீர்மிகு வேளாண்மைக்கு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
அனைத்து சுகாதார வசதிகளும் மக்களுக்கு எளிதாக கிடைக்க முனைப்போடு செயல்பட்டு வருகிறோம். கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதியும், நிதியும் மத்திய அரசிடம் கோரியுள்ளோம். பள்ளி, கல்லூரி தரவரிசையில் புதுவை 4-ம் இடத்தில் உள்ளது.
ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக 12 திட்டங்களும், அந்த சமுதாய மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த 12 திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.மீன் உற்பத்தியை பெருக்கவும், மீனவர் நலனை மேம்படுத்தவும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செம்மையாக செயல்படுத்தி வருகிறது.
மகளிர் முன்னேற்றத்திற்காக ஒருங்கிணைந்த பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நிலமற்ற ஏழை மக்களுக்கு கடந்த ஓராண்டில் 115 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இலவச அரிசி திட்டத்தின் நேரடி பண பரிமாற்றம் மூலம் அரிசிக்கு பதிலாக பணமாக மானியத்தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகு சுற்றுலா, விருந்தோம்பல் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.
பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான தளத்தை விரிவுபடுத்த தமிழக பகுதியிலிருந்து 395 ஏக்கர் நிலமும், புதுவை பகுதியில் 30 ஏக்கர் நிலமும் கையகப்படுத்த வேண்டும்.
இதற்காக ரூ.425 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம். இத்திட்டம் நிறைவேறும்போது உலக வரைபடத்தில் புதுவை ஒரு முக்கிய இடத்தை பெறும். மாநில அமைதிக்கு மகத்தான காவல்சேவையை அரசு வழங்கி வருகிறது. காவலர் பணியிடங்கள் வெளிப்படையாக, நேர்மையாக நிரப்பப்பட்டுள்ளன.
அரசு எந்திரம் தொய்வின்றி இயங்க அரசு ஊழியர்கள் நலனிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். 7-வது ஊதியக்குழு சம்பளம், நிலுவைத்தொகை, காலகட்ட பதவி உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை வழங்கியுள்ளோம். மக்களின் நலன் கருதியும், மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்லவும் எனது அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வரும்காலத்திலும் இதுபோன்ற புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு முனைப்பாக உள்ளது. மீண்டும் ஒரு முறை மாநில மக்கள் அனைவருக்கும் என் உளம்நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க பாரதம், வளர்க புதுவை மாநிலம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆகஸ்டு 14-ம் நாள் பாகிஸ்தான் பிரிவினையை கண்டித்து புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கண்டன மவுன ஊர்வலம் நடைபெற்றது.
- பா.ஜ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
ஆகஸ்டு 14-ம் நாள் பாகிஸ்தான் பிரிவினையை கண்டித்து புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கண்டன மவுன ஊர்வலம் நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற ஊர்வலத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட, தொகுதி, அணி, பிரிவு, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் லாஸ்பேட்டை தொகுதியில் உழவர் சந்தை அருகில் இருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டது.
3 கிலோமீட்டர் தூரம் சென்று மீண்டும் உழவர் சந்தை அருகிலேயே நிறைவு செய்தனர்.இந்த ஊர்வலத்தில் செல்வகணபதி, எம்.பி. லாஸ்பேட்டை தொகுதி தலைவர் சோமசுந்தரம், தொகுதி பொதுச் செயலாளர்கள் பாலாஜி, ரமேஷ், மாநில செயலாளர் லதா, மகளிர் அணி பொதுச் செயலாளர் கனகவல்லி, வணிகர் பிரிவு இணை அமைப்பாளர் சீனிவாச பெருமாள், மாநில பொருளாதார பிரிவு இணை அமைப்பாளர் ஆசிர்வாத ரமேஷ், உழவர்கரை மாவட்ட மகளிர் அணி தலைவி வள்ளி திருமால், வெங்கடேஷ், ஆனந்த் ,மணிமேகலை, சுரேஷ், நடராஜ், சத்யா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
- அரவிந்தரின் 150-வது பிறந்த நாளையொட்டி அரவிந்தர் ஆசிரமம் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
- உலக மக்கள் வேறுபாடுகளை மறந்து ஒரே இடத்தில் வசிக்க வேண்டும் என்பது அரவிந்தரின் கனவு.
புதுச்சேரி:
1872-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்் தேதி கொல்கத்தாவில் பிறந்தவர் அரபிந்த கோஷ்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரராக சிறையில் அடைக்கப்பட்டு, விடுதலைக்கு பின்னர் புதுவைக்கு வந்து ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
அவரின் ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஆசிரமம் அமைத்து மகான் ஸ்ரீ அரவிந்தர் என அழைத்தனர். அரவிந்தர் 1950-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி 78 வயதில் மறைந்தார். அவரது உடலை ஆசிரமத்திலேயே சமாதி வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் 6 நாட்கள் புதுவை நகரின் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், அரவிந்தர் பயன்படுத்திய அறை பக்தர்களின் தரிசனம் செய்ய திறக்கப்படும்.
இன்று அரவிந்தரின் 150-வது பிறந்த நாளையொட்டி அரவிந்தர் ஆசிரமம் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 6 மணிக்கு தியான நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அரவிந்தர் பயன்படுத்திய அறையை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
உலக மக்கள் வேறுபாடுகளை மறந்து ஒரே இடத்தில் வசிக்க வேண்டும் என்பது அரவிந்தரின் கனவு. அதனை ஆரோவில்லில் சர்வதேச நகரை உருவாக்கி செயல்படுத்தியவர் அரவிந்தரின் முக்கிய சீடரான அன்னை மீரா.
அரவிந்தரின் பிறந்த நாளை யொட்டி ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள மாத்ரி மந்திரில் கூட்டு தியானமும், ஆம்பி தியேட்டரில் அதிகாலை 4.30 மணியிலிருந்து 6. 30 மணி வரை போன் பயர் எனப்படும் தீபமேற்றி கூட்டு தியானம் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகள், ஆரோவில்வாசிகளும் பங்கேற்றனர்.
- புதுவை மாநிலத்தில் நேற்று 1,220 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
- மாகியில் தொற்று பாதிப்பு இல்லை
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் நேற்று 1,220 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 77 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 52 பேர் புதுவையையும், 21 பேர் காரைக்காலையும், 4 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள்,
மாகியில் தொற்று பாதிப்பு இல்லை. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் மருத்துவமனையிலும், 476 பேர் வீட்டு தனிமையிலும் என ஒட்டுமொத்தமாக 482 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இன்று 49 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதில் 43 பேர் புதுவையையும், 3 பேர் காரைக்காலையும், 3 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 72 ஆயிரத்து 126 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 677 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 1,967 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இத்தகவலை சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது.
- ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை உத்தரவை அமல்படுத்தும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு செயல் விளக்க கூட்டம் நடத்தப்பட்டது.
- மாசுக்கட்டுப்பாட்டு துறை சீனியர் என்ஜினீயர் ரமேஷ் தலமை தாங்கினார்.
புதுச்சேரி:
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை உத்தரவை அமல்படுத்தும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு செயல் விளக்க கூட்டம் நடத்தப்பட்டது.
புதுவை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மாசு கட்டுப்பாட்டு குழும அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாட்டு துறை சீனியர் என்ஜினீயர் ரமேஷ் தலமை தாங்கினார். இதில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, கடந்த ஜூலை 1-ந் தேதியில் இருந்து நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை ஆணையை புதுவை மாவட்டத்தில் அமல்படுத்துவதற்கான மத்திய அரசு பொர்டல் எனப்படும் அமைப்பு மூலம் கண்காணிக்க உள்ளது. இதனை புதுவையில் உள்ள சுற்றுச்சூழல் துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் அமுல்படுத்தும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து புதுவையில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விபரங்கள் குறித்தும், அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள் தொடர்பாகவும், அவற்றின் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து, படக் காட்சிகளுடன் விளக்கம் அளித்தார்.
இப்பயிற்சி முகாமில், புதுவை நகராட்சி, உழவர்கரை நகராட்சி, பாகூர், நெட்டப்பாக்கம், வில்லியனுார், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுவை மாசுக் கட்டுப்பாட்டு குழுமத்தின் அறிவியல் உதவியாளர் செல்வநாயகி, தினேஷ், விமல்ராஜ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- 75-வது சுதந்திர தினம் அமுத பெருவிழாவாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இதையொட்டி பள்ளிகளில் ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி நடத்தி பா.ஜ.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.
புதுச்சேரி:
75-வது சுதந்திர தினம் அமுத பெருவிழாவாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பள்ளிகளில் ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி நடத்தி பா.ஜ.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.
புதுவையில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளின் இல்லத்திற்கு சென்று கவுரவித்தல், நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்ட பாரதமாதா சிலையினை மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் செல்லக்கூடிய ரத யாத்திரை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இந்த நிலையில் கீழூர் நினைவு சின்னத்தை பாரதீய ஜனதா கட்சியினர் சுத்தம் செய்தனர். மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் மாநில துணைத்தலைவர் முருகன், மாநில செயலாளர் ஜெயக்குமார், வில்லியனூர் மாவட்ட தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட 20- ற்கும் மேற்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் பாரதப் பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்தினை அனைவரும் செயல்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையில் கீழூர் கிராமத்தில் அமைந்துள்ள நினைவு சின்னத்தை சுத்தம் செய்து அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டனர்.
- முதலியார்பேட்டை தொகுதியில் பாரத மாதா சிலை ரதயாத்திரைக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- 75-வது சுதந்திர விழாவை யொட்டி பா.ஜனதா சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை தொகுதியில் பாரத மாதா சிலை ரதயாத்திரைக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
75-வது சுதந்திர விழாவை யொட்டி பா.ஜனதா சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக புதுவை முழுவதும் பாரத மாதா ரதயாத்திரை ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பா.ஜனதா மாநில தலைவர் சாமி நாதன், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரின் ஆலோசனைப்படி புதுவை மாநில பா.ஜனதா துணைத்தலைவர் செல்வம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு புதுவை முழுவதும் பாரத மாதா ரதயாத்திரை ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
இந்த ரத யாத்திரை ஊர்வலம் இன்று காலை முதலியார்பேட்டை தொகுதிக்கு வந்தது. ரோடியர் ஆலை ரோட்டில் உள்ள பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அசோக்பாபு எம்.எல்.ஏ, தலைமையில் ரத யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரத மாதா சிலைக்கு ஆராதனை செய்து ஏராளமானோர் வணங்கினர். இதனை யொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் விஜயரங்கன், அய்யனராப்பன், நடராஜ், சரவணன், தமிழரசன், பிரவீன், சத்தியா, செல்வம், லட்சுமி, மஞ்சுளா, சாந்தி, கீதா,அய்யப்பன், ஸ்டீபன்ராஜ், வேலு, பாபு, பாண்டு, கணேசன், தில்லைகோவிந்தன், சுந்தரமூர்த்தி, பார்த்தீபன், கார்த்திக், சங்கர், பிரகாஷ், ஆனந்த், அஜித், முருகன், சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி, நாகமுத்து, அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 75-வது சுதந்திர தின விழா சின்ன கோட்டக்குப்பம் 14 வது வார்டில் இன்று கொண்டாடபட்டது. 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஸ்டாலின் சுகுமார் அனைவரையும் வரவேற்றார்.
- விழாவில் சிறப்பு விருந்தி னராக கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.
புதுச்சேரி:
75-வது சுதந்திர தின விழா சின்ன கோட்டக்குப்பம் 14 வது வார்டில் இன்று கொண்டாடபட்டது. 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஸ்டாலின் சுகுமார் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தி னராக கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். விழாவில் 80 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் பேனா - பென்சில் இனிப்புகள் வழங்கப்பட்டது.
விழாவில் 14-வது வார்டை சார்ந்த 36 மகளிருக்கும் தூய்மை பணியாளர்கள் 3 நபர்களுக்கு புடவை வழங்கப்பட்டது.
விழாவில் முஹம்மது முபாரக், சுகுமார் 15-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜாகீர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவி தன்யாஸ்ரீ பாரதியார் வேடத்திலும், மாணவர் கிரண்பாலா மகாத்மா வேடமிட்டு வந்தது அனைவரையும் கவர்ந்தது.
இந்த விழாவை ஆசிரியர் மஞ்சுளா ஒருங்கிணைப்பு செய்திருந்தார். விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
சுதந்திர தின விழாவில் நலத்திட்ட உதவிகளை நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி வழங்கினார். அருகில் வார்டு கவுன்சிலர் ஸ்டாலின் சுகுமார் மற்றும் பலர் உள்ளனர்.
- விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் நிகழ்வுகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
- மக்கள் தங்கள் ஊர் வழியாக டிப்பர் லாரி செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதுச்சேரி:
திருவக்கரை பகுதியில் இருந்து ஜல்லி ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக சொல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் நிகழ்வுகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகப் பகுதியான நெமிலியில் ஒரு பட்டதாரி வாலிபர் டிப்பர் லாரி மோதி பலியானதால் அப்பகுதி மக்கள் தங்கள் ஊர் வழியாக டிப்பர் லாரி செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனால் திருமங்கலம் பாதை , கொடுக்கூர், எறையூர், பெரும்பாக்கம் வழியாக டிப்பர் லாரிகள் செல்லவில்லை.
ஆனால் புதுவை பகுதியான சந்தை புதுக்குப்பம், சுத்துக்கேணி, காட்டேரிக் குப்பம் வழியாகவும், குமாரபாளையம் வழியாகவும் டிப்பர் லாரிகள் புதுவையை நோக்கி செல்லத் தொடங்கின.
நேற்று சுத்துக் கேணி மயிலம் பாதையில் சாப்ட்வேர் என்ஜினீயர், அவருடன் வந்த உறவுக்கார பெண் ஆகியோர் டிப்பர் லாரி மோதியதில் படுகாயம் அடைந்து ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால்
ஆவேசமடைந்த பொதுமக்களும் அவர்களது உறவினர்களும் லாரியை உடைத்து தீ வைத்து கொளுத்த முயன்றனர். இதனைத் தொடர்ந்து காட்டேரிக்குப்பம் வழியாகவும் டிப்பர் லாரிகள் செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று காட்டேரிக்குப்பம் போலீசார் சந்தை புதுக்குப்பம், குமாரபாளையம் ஆகிய இரண்டு ஊர்களில் பேரிகேட் மூலமாக தடுப்பு அமைத்துள்ளனர்.
இப்பகுதி வழியாக புதுவை எல்லைக்குள் டிப்பர் லாரிகள் செல்ல தடை விதித்துள்ளனர். காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையில் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருக்கனூர் கடைவீதி வழியாகவும் அதி வேகமாக டிப்பர் லாரிகள் செல்வதால் திருக்கனூர் கடைவீதிக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் டிப்பர் லாரிகளை கண்டு அச்சத்தில் உள்ளனர்.
திருக்கனூர் கடைவீதி வழியாகவும் டிப்பர் லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 30 மாணவிகள் ஒருங்கிணைந்து 30 விதமான வண்ண ஓவியங்களை வரைந்துள்ளனர்.
- தேசியத்தை வலியுறுத்தியும் தேசியக் கொடியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் ஓவியங்கள் வரையபெற்றுள்ளன.
புதுச்சேரி:
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திர தின விழாவையொட்டி புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. முத்தியால்பேட்டை சோலை நகரில் உள்ள சின்னாத்தா அரசு மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவிகள் 5 மீட்டர் கதர் துணியில் தேச பக்தி ஓவியங்களை வரைந்துள்ளனர்.
30 மாணவிகள் ஒருங்கிணைந்து 30 விதமான வண்ண ஓவியங்களை வரைந்துள்ளனர். தேசியத்தை வலியுறுத்தியும் தேசியக் கொடியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் இந்த ஓவியங்கள் வரையபெற்றுள்ளன. பள்ளி முதல்வர் ஹர்பிதா தாஸ், சமூக அறிவியல் ஆசிரியை செலின் அண்ட்டனெட் ஆகியோர் மாணவிகளுக்கு வழிகாட்டியுள்ளனர்.
இந்த ஓவியங்களை பள்ளியில் நடைபெறும் 75-வது சுதந்திர தின விழாவில் கண்காட்சியாக வைக்கின்றனர்.






