search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    75 படகுகளில் தேசிய கொடியுடன் கடலில் குப்ைபகள் சேகரிக்கும் நிகழ்ச்சி-கவர்னர் தமிழிசை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    X

    சாதனை நிகழ்ச்சியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்த காட்சி. 

    75 படகுகளில் தேசிய கொடியுடன் கடலில் குப்ைபகள் சேகரிக்கும் நிகழ்ச்சி-கவர்னர் தமிழிசை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    • புதுவை யுவர்பேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் ஏழைகளுக்குஉணவு வழங்குதல், துப்புரவு பணிகளை மேற்கொள்ளுதல், கடற்கரையோரம்,கடலின் உள்ளே சென்று பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துவது உள்பட பல்வேறு சமூகசேவைகளை செய்து வருகிறது.
    • 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யுவர்பேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சியை பாண்டி மெரினாவில் நடத்தியது.

    புதுச்சேரி:

    புதுவை யுவர்பேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் ஏழைகளுக்குஉணவு வழங்குதல், துப்புரவு பணிகளை மேற்கொள்ளுதல், கடற்கரையோரம்,கடலின் உள்ளே சென்று பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துவது உள்பட பல்வேறு சமூகசேவைகளை செய்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக இன்று 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யுவர்பேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சியை பாண்டி மெரினாவில் நடத்தியது.

    வீராம்பட்டினத்திலிருந்து தொடங்கி 75 படகுகளில்,75 தேசிய கொடிகளுடன் நடுக்கடலின் உள்ளே சென்று கடலில் கிடக்கும் குப்பைகளை 75 நிமிடங்கள் சேகரிக்கும் நிகழ்ச்சியை நடத்தியது.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விழாவில் 75 சின்னத்திரை நட்சத்திரங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    முன்னதாக கவர்னர் தமிழிசையை யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    Next Story
    ×