என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பால், ஐஸ்கிரீம், தயிர், வெண்ணை, நெய், குல்பி போன்றவை பாண்லே பாலகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    • பாண்லே பாக்கெட்டுகளில் வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை குருமாம்பேட்டில் இயங்கும் பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் பால், ஐஸ்கிரீம், தயிர், வெண்ணை, நெய், குல்பி போன்றவை பாண்லே பாலகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுதோறும் தேசிய கொடியை ஏற்ற வலியுறுத்தி பாண்லே பாக்கெட்டுகளில் வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிப்படுகிறது. அடுத்த கட்டமாக மக்கள் விரும்பி உண்ணும் குல்பியை தேசியக் கொடியின் 3 வண்ணத்தில் தயாரித்து வினியோகிக்கப்படுகிறது.

    16-ந் தேதி வரை அனைத்து பாண்லே பாலகத்தின் மூவர்ணத்தில் குல்பி கிடைக்கும் என பாண்லே மேலாண் இயக்குனர் முரளி தெரிவித்துள்ளார்.

    • சுதந்திர தின விழாவில் தொகுதி,எம்.எல்.ஏ.வும். உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் திருக்கனூர் கடைவீதியில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
    • மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

    புதுச்சேரி:

    நாட்டின் 75- வது சுதந்திர தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    மண்ணாடிப் பட்டு தொகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தொகுதி,எம்.எல்.ஏ.வும். உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் திருக்கனூர் கடைவீதியில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இதனை தொடர்ந்து கொ.மண வெளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

    அப்போது அமைச்சர் நமச்சிவாயம் பேசியாதவது:-

    மண்ணாடிப் பட்டு தொகுதி மக்கள் மட்டுமல்லாது , புதுவை மாநில மக்கள் அனைவரும் வீடு தோறும் தேசியக் கொடியினை ஏற்ற வேண்டும். 75-வது ஆண்டு அமுத திருவிழாவை அனைவரும் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கொடாத்தூர் பகுதியில் பாரத மாதா சிலைக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாரதமாதா சிலைக்கு மலர் தூவி. தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    • புதுவையில் 28 மோட்டார் சைக்கிள்களை திருடிய கடலூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • புதுவையில் சமீப காலமாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடந்துவருகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் 28 மோட்டார் சைக்கிள்களை திருடிய கடலூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுவையில் சமீப காலமாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடந்துவருகிறது. ஒரு நாளைக்கு 2-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் திருடு போகின்றன. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டாலும் இதனை முற்றிலும் தடுக்க முடியாமல் போலீசார் திண்டாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் நேற்று இரவு புதுவை முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அதுபோல் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் புதுவை காந்தி வீதி-சின்னவாய்க்கால் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தினர்.

    அந்த மோட்டார் சைக்கிளில் முன்பக்கத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கடலூர் சி.என்.பாளையத்தை அடுத்த கிடையார்குப்பத்தை சேர்ந்த சவுந்திரராஜன்(வயது25) என்பது தெரியவந்தது. பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை பின் பக்கத்தில் இருந்து நம்பர் பிளேட்டை வைத்து விசாரணை நடத்திய போது அந்த வாகனம் புதுவை பதிவு எண் கொண்டதாக இருந்தது. இதனை தொடர்ந்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரிடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் அந்த வாகனத்தை புதுவை அண்ணா சாலையில் மதுக்கடை எதிரே திருடி வந்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் இதுபோல் புதுவையில் 27 வாகனங்களை திருடியதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதையடுத்து சவுந்தரராஜனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து திருடிய 28 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    • புதுவை கடற்கரை சாலையில் நாளைமறுநாள் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது.
    • விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியேற்றுகிறார்.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது

    புதுவை கடற்கரை சாலையில் நாளைமறுநாள் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியேற்றுகிறார்.

    சுதந்திர தினவிழா இறுதி ஒத்திகை நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நடந்தது. இதில் காவல்துறையினர், தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

    தொடந்து சட்ட சபையிலும் ஒத்திகை நடந்தது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடுதி அறைகள், மாநில எல்லைகளில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    • கோரிமேட்டில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வீட்டு மாடியில் 2 தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்கம் போல் ஒரு தேசியகொடியை ஏற்றியுள்ளனர். அங்கன்வாடி மூலம் கொடுத்த கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இதன்படி புதுவையில் பல வீடுகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் கோரிமேட்டில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வீட்டு மாடியில் 2 தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது. போலீசார் வழக்கம் போல் ஒரு தேசியகொடியை ஏற்றியுள்ளனர். அங்கன்வாடி மூலம் கொடுத்த கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.

    இதனை இன்று காலை பால்கனிக்கு மேல்சட்டையின்றி கைலியுடன் வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார்.

    இதனை படமெடுத்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் படம் வைரலாகி வருகிறது.

    • பக்தர்கள் பகவானுக்கு அர்ச்சனைகள், அபிஷேகம் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
    • எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

    காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக புகழ் மிக்க சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது, இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இன்று சனிக்கிழமை என்பதாலும், தொடர்ந்து ஞாயிறு | சுதந்திர தின விடுமுறை என தொடர் விடுமுறையாக இருப்பதால் இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் திருநள்ளாறு நளன் குளத்தில் புனித நீராடி சனீஸ்வரனை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் சில பக்தர்கள் பகவானுக்கு அர்ச்சனைகள், அபிஷேகம் சிறப்பு பூஜைகள் செய்தனர். எள் தீபம் ஏற்றி தங்களது தோஷங்கள் நீங்க வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். பக்தர்கள் வருகை காரணமாக திருநள்ளாறு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மத்திய மந்திரி அமித்ஷாவிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆலோசனை நடத்தினார்.
    • அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மத்தியஉள்துறை அமைச்சகம் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவையின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆலோசனை நடத்தினார்.

    டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் புதுவை மாநில சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பின்போது புதுவை மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அமித்ஷா கேட்டறிந்தார். புதுவை மாநில வளர்ச்சிக்காக தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மத்தியஉள்துறை அமைச்சகம் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

    அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், புதுவை மாநிலத்தில் சுதந்திரதின அமுதப் பெருவிழாவை யொட்டி, அமைக்கப்பட் டுள்ள தியாகிகளுக்கான தியாகச்சுவர் குறித்து எடுத்து கூறினார்.

    இந்த சந்திப்பின் போது எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதன் தொடர்ச்சியாக மாணவி களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது.
    • பாரதிதாசன் மகளிர் கல்லூரி பேராசிரியை ரஜினி சனோலியன் பங்கேற்றார்.

    புதுச்சேரி:

    புதுவை திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 75-வது சுதந்திர தின விழாவை யொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மாணவி களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணை முதல்வர் கலாவதி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் மகளிர் கல்லூரி பேராசிரியை ரஜினி சனோலியன் பங்கேற்றார். நடுவர்களாக பள்ளியின் விரிவுரையாளர்கள் மணிமொழி, சிவபிரியா ஆகியோர் பணிபுரிந்து மாணவிகளின் ஓவியங் களை மதிப்பீடு செய்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விரிவுரை யாளர் தெய்வகுமாரி மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    • பணம் கொடுத்த தகராறில் மாமியாரை தாக்கிய மருமகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • புதுவை வேல்முருகன் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்.

    புதுச்சேரி:

    உறவினர் திருமணத்துக்கு நகை அடகு வைத்து பணம் கொடுத்த தகராறில் மாமியாரை தாக்கிய மருமகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை வேல்முருகன் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பானுமதி (வயது67). இவர்களது மகன் கோபிநாத் (45). இவரது முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதால் கோபிநாத்துக்கு பானுமதி தனது தம்பி ஜெயக்குமாரின் மகளான ஜெயந்தியை 2-வது திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

    இதற்கிடையே ஜெயந்தி தனது தம்பி முரளிதரன் திருமணத்துக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டதின் பேரில் பானுமதி தனது நகைகளை அடகு வைத்து ரூ.6 லட்சம் கொடுத்திருந்தார். அதன் பிறகு ஜெயந்தி ஒரு ஆண்டுக்கு பின் கணவரை விட்டு பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் ஜெயந்தி மற்றும் அவரது பெற்றோர் சகோதரர் முரளிதரன் மற்றும் உறவினர்களுடன் பானுமதி வீட்டுக்கு வந்தனர். அங்கிருந்த பானுமதியிடமும் கோபிநாத்திடமும் அவர்கள் நாங்கள் நகையை திருப்பி கொடுத்து விட்டோம் என்று கூறி பிரச்சினை செய்தனர்.

    மேலும் ஜெயந்தி மாமியார் என்று கூட பார்க்காமல் கன்னத்தில் தாக்கினார். பின்னர் பானுமதியை பிடித்து தள்ளியதில் அவர் கீழே விழுந்து கையில் காயமடைந்தார். மேலும் ஜெயந்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கோபிநாத்தை தாக்கினர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த பானுமதி புதுவை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 75-வது சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.
    • இதன்படி மாணவ- மாணவிகள் இடையே கட்டுரை, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் மணவெளி ராதா ஆங்கில மேல்நிலைப்பள்ளி இணைந்து 75-வது சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.

    இதன்படி மாணவ- மாணவிகள் இடையே கட்டுரை, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் பரிசு வழங்கினார்.

    ராதா ஆங்கில மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பெர்லின் ஜெயக்குமார் முன்னிலை வகுத்தார். நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து மேலாளர் வீரம்மாள், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், இளநிலை எழுத்தர் செழியன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • புதியதாக கட்டப்பட்டிருக்கும் உள் விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
    • விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா பள்ளியில் புதியதாக கட்டப்பட்டிருக்கும் உள் விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தேசிய மாணவர் படை தலைவர் சுப்பிரமணி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

    புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மாணவர்களை வாழ்த்தி பேசினார். மேலும் டாக்டர் ரங்கநாயகி வளவன் கவுண்டன் பாளையம் ஊர் தலைவர் ஜெகதீஸ்வரன், பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா , துணை முதல்வர் மங்கையர்க்கரசி பள்ளியின் ஆலோசகர் ரத்தின பிரியா அருண் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சுந்தர நாட்டியாலயா பள்ளி மாணவர்களின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • விழாவிற்கு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் பேராசிரியர் செந்தில்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்.
    • சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் சண்முககனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஸ்கூல் ஆப் ‌அலைடு‌ ஹெல்த் சயின்ஸ் துறையின் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா பெரிய காட்டுப்பாளையம் ஜனனி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் பேராசிரியர் செந்தில்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட‌‌ சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் சண்முககனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார்.

    விநாயக மிஷன் ரிசர்ச் பவுண்டேசன் இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்கலைகழக அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி பாராட்டி பேசினார். சிறப்பு அழைப்பாளர் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரியின் டீன். செந்தில்குமார் நினைவு பரிசு வழங்கினார்.

    விழாவில் 325 மாணவ-மாணவிகள் பட்டம் பெற்றனர். இதில் 4 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலப்பதக்கம் பெற்றனர். முடிவில் புதுவை பிரிவு இயக்குனர் ஆண்ட்ரூ ஜான் நன்றி கூறினார். விழாவிற்க்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, கல்லூரி ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ பேராசிரியர்கள், நிர்வாகம் மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் செய்திருந்தனர்.

    ×