என் மலர்
புதுச்சேரி

கட்டுரை, ஓவியப்போட்டியில் கலந்துக் கொண்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கும் காட்சி.
கட்டுரை, ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா
- 75-வது சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.
- இதன்படி மாணவ- மாணவிகள் இடையே கட்டுரை, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் மணவெளி ராதா ஆங்கில மேல்நிலைப்பள்ளி இணைந்து 75-வது சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.
இதன்படி மாணவ- மாணவிகள் இடையே கட்டுரை, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் பரிசு வழங்கினார்.
ராதா ஆங்கில மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பெர்லின் ஜெயக்குமார் முன்னிலை வகுத்தார். நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து மேலாளர் வீரம்மாள், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், இளநிலை எழுத்தர் செழியன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






