என் மலர்

  புதுச்சேரி

  மத்திய மந்திரி அமித்ஷாவுடன் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆலோசனை
  X

  மத்திய மந்திரி அமித்ஷாவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சந்தித்த காட்சி. அருகில் எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன் உள்ளனர்.

  மத்திய மந்திரி அமித்ஷாவுடன் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆலோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மத்திய மந்திரி அமித்ஷாவிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆலோசனை நடத்தினார்.
  • அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மத்தியஉள்துறை அமைச்சகம் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

  புதுச்சேரி:

  புதுவையின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆலோசனை நடத்தினார்.

  டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் புதுவை மாநில சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சந்தித்து பேசினார்.

  இந்த சந்திப்பின்போது புதுவை மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அமித்ஷா கேட்டறிந்தார். புதுவை மாநில வளர்ச்சிக்காக தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மத்தியஉள்துறை அமைச்சகம் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

  அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், புதுவை மாநிலத்தில் சுதந்திரதின அமுதப் பெருவிழாவை யொட்டி, அமைக்கப்பட் டுள்ள தியாகிகளுக்கான தியாகச்சுவர் குறித்து எடுத்து கூறினார்.

  இந்த சந்திப்பின் போது எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

  Next Story
  ×