என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
    X

    விநாயக மிஷன் அலைடு சயின்ஸ் துறை மாணவிக்கு விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சண்முககனி பட்டம் வழங்கினார். அருகில் விநாயக மிஷன் இயக்குநர் அனுராதா கணேசன், டீன் செந்தில்குமார் உள்ளனர்.

    325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

    • விழாவிற்கு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் பேராசிரியர் செந்தில்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்.
    • சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் சண்முககனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஸ்கூல் ஆப் ‌அலைடு‌ ஹெல்த் சயின்ஸ் துறையின் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா பெரிய காட்டுப்பாளையம் ஜனனி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் பேராசிரியர் செந்தில்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட‌‌ சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் சண்முககனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார்.

    விநாயக மிஷன் ரிசர்ச் பவுண்டேசன் இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்கலைகழக அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி பாராட்டி பேசினார். சிறப்பு அழைப்பாளர் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரியின் டீன். செந்தில்குமார் நினைவு பரிசு வழங்கினார்.

    விழாவில் 325 மாணவ-மாணவிகள் பட்டம் பெற்றனர். இதில் 4 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலப்பதக்கம் பெற்றனர். முடிவில் புதுவை பிரிவு இயக்குனர் ஆண்ட்ரூ ஜான் நன்றி கூறினார். விழாவிற்க்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, கல்லூரி ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ பேராசிரியர்கள், நிர்வாகம் மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×