என் மலர்
புதுச்சேரி
- பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கு தல் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது
- பள்ளியின் துணை முதல்வர் ஆஷா ராணி தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழா மற்றும் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
பள்ளியின் துணை முதல்வர் ஆஷா ராணி தலைமை தாங்கினார். விரிவுரையாளர் சரவணன் வரவேற்றார் . நெட்டப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும் துணை சபாநாயகருமான ராஜவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
தனவேலு அறக்கட்டளை நிறுவனர் தனவேல் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியளவில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச நோட்டுகளை வழங்கினார்.
விழாவில் விரிவுரையாளர்கள் கார்த்திகேயன், அருள்செல்வி, முத்துக்குமரன், பழனி, யமுனா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவை பட்டதாரி ஆசிரியர் பாலசுந்தரம் தொகுத்து வழங்கினார். விரிவுரையாளர் சூரிய பிரகாசம் நன்றி கூறினார். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாறுவேட போட்டிகள் நடைபெற்றது.
- பச்சைவாழி அம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.
- முன்னதாக கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
புதுச்சேரி:
பாகூர் தொகுதி கன்னிய கோவில் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர் உடனுரை பச்சைவாழி அம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.
முன்னதாக கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு சாமி வீதியுலா நிகழ்ச்சி நடை பெற்று வந்தது.
பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர் மேலும் நேர்த்திக்கடனாக மொட்டை அடித்து வழிபாடு செய்தனர். பிற்பகல் 12.30 மணிய ளவில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி விமர்சியாக நடந்தது. மாலை 5 மணிக்கு கோவில் எதிரில் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.
தீமிதி விழாவில் புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குவிந்து வருகின்றனர்.
- மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாதயாத்திரை நடத்தப்பட்டது.
- கதிர்காமம் முத்திரையர்பாளையம், வி.வி.பி. நகர் வழியாக ராஜீவ்காந்தி சிலை வரை 12 கி.மீ. பாதயாத்திரை நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாதயாத்திரை நடத்தப்பட்டது.
முதலியார்பேட்டை வானொலி திடலில் தொடங்கி, ரோடியர் மில், நெல்லித்தோப்பு மார்க்கெட், இந்திராகாந்தி சிலை, ரெட்டியார்பாளையம், மூலக்குளம், கதிர்காமம் முத்திரையர்பாளையம், வி.வி.பி. நகர் வழியாக ராஜீவ்காந்தி சிலை வரை 12 கி.மீ. பாதயாத்திரை நடத்தப்பட்டது.
இதற்கு மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், முன்னள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள்எக்கம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், எம்.என்.ஆர். பாலன், காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் கோபாலமூர்த்தி, பொதுச்செயலாளர் இளையராஜா, கதிர்காமம் பொறுப்பாளர் செல்வநாதன், வட்டார தலைவர்கள் ஜெகவீர பாண்டியன், பாபு, சுந்தர், மோகன், வேணுகோபால், கதிரவன், மாநில தலைவர் சிவா, இந்திராநகர் பொறுப்பாளர் ராஜாகுமாரி, சோமசுந்தரம், ராஜசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பாதயாத்திரையில் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
- இவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
- அதுபோல் தருண் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே மூர்த்தி நகரை சேர்ந்தவர் முரளி. இவரது மகன் தருண் (வயது22). இவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று திரும்புவது வழக்கம். அதுபோல் தருண் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டார்.
ஆரியப்பாளையம் மேம்பாலத்தை கடந்து மங்கலம் ரோடு சந்திப்பில் சென்ற போது தருண் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வில்லியனூரை சேர்ந்த குலசேகரன் (60) என்பவர் மீது மோதி விட்டு பின்னர் அதன் பின்னால் மனைவி-மகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த விழுப்புரம் ராம ரெட்டிக்குளம் விமல்(32) என்பவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட தருண் தலை, முகத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். மற்ற 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த குலசேகரன், விமல் மற்றும் அவரது மகள் கவிதா(13) ஆகியோர் படுகாயமடைந்தனர். விமலின் மனைவிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து காயமடைந்த 3 பேரும்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருக்காமீஸ்வரர் ஆலயத்தில் மாதாந்திர பவுர்ணமி கிரிவல பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
- புனித திருகாமேஸ்வரன் ஆன்மீக பணியில் கிடைத்த நிதியை கொண்டு தேசிய கொடிகளை இலவசமாக வழங்கினார்.
புதுச்சேரி:
வில்லியனூரில் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் ஆலயத்தில் மாதாந்திர பவுர்ணமி கிரிவல பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆன்மீக சொற்பொழிவாளர் சங்கீதா, ஆனந்தன் தம்பதியரின் மகன் கயிலை புனித திருகாமேஸ்வரன் ஆன்மீக பணியில் கிடைத்த நிதியை கொண்டு தேசிய கொடிகளை இலவசமாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் மனைவி ஆதிலட்சுமி தேசிய கொடியினை பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்கினார்கள்.
நிகழ்ச்சியின் பொழுது வாஞ்சிநாதன் மன்ற தலைவர் ராமன், கலிய முருகன், டெரகோட்டா முனுசாமி, சரவணன், சிவராஜன், சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சத்யமூர்த்தி தெருவை சேர்ந்தவர் ஏசுராஜா(வயது35). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
- முருகா தியேட்டர் சிக்னல் அருகில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க வந்தனர்.
புதுச்சேரி:
புதுவை சண்முகா புரத்தை அடுத்த வடக்கு பாரதிபுரம் சத்யமூர்த்தி தெருவை சேர்ந்தவர் ஏசுராஜா(வயது35). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இன்று அதிகாலை இவரும், அதே பகுதியை சேர்ந்த லாரன்ஸ், தாமஸ் ஆகியோர் முருகா தியேட்டர் சிக்னல் அருகில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க வந்தனர்.
அப்போது அங்கு வீமன் நகரை சேர்ந்த குகன்(25), அரவிந்த்(25) மற்றும் திலாஸ்பேட்டை சாய்பாபா நகரை சேர்ந்த சிவபிரியன்(19) ஆகியோரும் டீ குடிக்க வந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இரு தரப்பினரும் கையாளும், கல்லாலும் தாக்கி கொண்டனர்.
இந்த மோதலில் ஏசுராஜா, சிவபிரியன் ஆகியோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே கோரிமேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஓடும் பஸ்சில் முதியவர் இறந்து போனார்.
- இவர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
புதுச்சேரி:
ஓடும் பஸ்சில் முதியவர் இறந்து போனார்.
நாமக்கல் மாவட்டம் வேட்டுவாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது52). இவர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகாததால் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடிவு செய்தார்.
இதையடுத்து அவரை உறவினர் மணி(வயது67) என்பவர் நேற்று பஸ்சில் புதுவைக்கு அழைத்து வந்தார். புதிய பஸ் நிலையத்தில் பஸ் நின்றதும் நடராஜனை இருக்கையில் இருந்து எழுப்ப முயன்ற போது அவர் அசைவற்று காணப்பட்டார். இதைத்தொடர்ந்து நடராஜனை ஒரு ஆட்டோவில் கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் . அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நடராஜன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஓடும் பஸ்சிலேயே நடராஜன் இறந்து போனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது உறவினர் மணி கொடுத்த புகாரின் பேரில் உருளை யன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி செல்வது வழக்கம்.
- இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கோவில் அர்ச்சகர் பூஜை முடித்து கோவிலை பூட்டி சென்றார்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டையில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்று விட்டான்.
புதுவை லாஸ்பேட்டை சாந்தி நகரில் ரேணுகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கோவில் அர்ச்சகர் பூஜை முடித்து கோவிலை பூட்டி சென்றார். நேற்று காலை வழக்கம் போல் அர்ச்சகர் பூஜை செய்ய கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் இருந்த உண்டி யல் உடைக்கப்பட்டு காணிக்கைப்பணம் கொள்ளையடிக்கப்பட்டி ருந்ததை கண்டு அதிர்ச்சிய டைந்தார்.
உண்டியலில் சுமார் ரூ.2 ஆயிரத்துக்கும் மேலாக காணிக்கை பணம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அர்ச்சகர் கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகி பரமசிவம் இதுபற்றி லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது முக கவசம் அணிந்த ஒரு வாலிபர் கோவில் உண்டி யலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம வாலிபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- கடந்த 2 நாட்களாக ராஜ்குமார் தங்கியிருந்த அறை திறக்கப்படாமல் இருந்தது.
- சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை தட்டி பார்த்த போது கதவை உள்பக்கமாக பூட்டி இருந்தது.
சேதராப்பட்டு:
சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் ராசய்யா. இவரது மகன் ராஜ்குமார் (வயது 38). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் ஆன்லைன் வர்த்தகம் தொழில் செய்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுவை வந்த ராஜ்குமார் பின்னர் ஆரோவில் அருகே குயிலாப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் இரவு அறை எடுத்து தங்கினார். மறுநாள் (திங்கட்கிழமை) காலை உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் விடுதி அறைக்கு சென்றார். பின்னர் அறையில் லேப்டாப் மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்ததை விடுதி ஊழியர்கள் பார்த்துள்ளனர்.
ஆனால் கடந்த 2 நாட்களாக ராஜ்குமார் தங்கியிருந்த அறை திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை தட்டி பார்த்த போது கதவை உள்பக்கமாக பூட்டி இருந்தது.
உடனடியாக இதுகுறித்து விடுதி ஊழியர்கள் ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் சென்று கதவை உடைத்து விட்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மர்மமான முறையில் ராஜ்குமார் இறந்து கிடந்தார். உடல் முழுவதும் எறும்பு மொய்த்த நிலையில் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
இது குறித்து ராஜ்குமாரின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு போலீசார் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆரோவில் போலீஸ் நிலையத்துக்கு வந்த, ராஜ்குமாரின் உறவினர்களிடம் போலீசார் விசாரித்த போது, ராஜ்குமாருக்கு நீரழிவு நோய், ரத்த அழுத்தம் இருந்ததும் அவர் இன்சுலின் ஊசி செலுத்தி வந்ததாக தெரிவித்தனர். ஆன்லைன் வர்த்தகத்திற்காக புதுவை செல்வதாக புறப்பட்ட ராஜ்குமாரை அவரது மனைவி தடுத்து ஆலோசனை வழங்கினார். ஆனாலும் அதனை மீறி ராஜ்குமார் புதுவைக்கு வந்துள்ளார். ராஜ்குமார் திடீர் மாரடைப்பு அல்லது உடல் நலக்குறைவால் இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சுகாதாரத்துறை ஆய்வு செய்த போது, கருத்தரிப்பு மையத்தில் வெளிப்புற சிகிச்சைக்கு மட்டுமே அனுமதி பெற்றுவிட்டு, உட்புற சிகிச்சை, பிரசவம் நடத்தியது தெரியவந்தது.
- விசாரணை அறிக்கை கலெக்டர் வல்லவனிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை சாரம் கவிக்குயில் நகரை சேர்ந்த பெருமாள்-சுலோச்சனா தம்பதிக்கு நீண்டகாலமாக குழந்தையில்லை.
இந்த நிலையில் புதுவை இந்திரகாந்தி சதுக்கத்தில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தை அணுகி சிகிச்சை பெற்றனர். 2021-ல் கருவுற்ற சுலோச்சனாவுக்கு கடந்த மார்ச் 18-ந்தேதி ஆண், பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ் கேட்டு மருத்துவமனையை அணுகிய போது இழுத்தடித்துள்ளனர்.
இதனால் சுகாதாரத்துறையில் தம்பதி புகார் அளித்தனர். சுகாதாரத்துறை ஆய்வு செய்த போது, இந்த கருத்தரிப்பு மையத்தில் வெளிப்புற சிகிச்சைக்கு மட்டுமே அனுமதி பெற்றுவிட்டு, உட்புற சிகிச்சை, பிரசவம் நடத்தியது தெரியவந்தது. விசாரணை அறிக்கை கலெக்டர் வல்லவனிடம் ஒப்படைக்கப்பட்டது.
கலெக்டர் சுகாதாரத்துறைக்கு அனுப்பிய உத்தரவின்பேரில், இயக்குனர் ஸ்ரீராமுலு தனியார் கருத்தரிப்பு மையத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் உடனடியாக உட்புற சிகிச்சைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.
- மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கடலூர் கே-புட்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கடலூர் கே-புட்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரி சார்பாக முதல்வர் மலர்க்கண், கே-புட்ஸ் நிறுவன உரிமையாளர் விஸ்வநாதன் ஆகியோர் கையொப்பமிட்டனர். உணவுத்தொழில் நுட்பத்துறை தலைவர் திருச்செல்வம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் குறித்து பேசினார். இதில் வேலை வாய்ப்பு அதிகாரி ஜெயக்குமார், துறைத் தலைவர்கள் அருண்மொழி, ரேணுகாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
உணவு பதப்படுத்தலில் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்து விஸ்வநாதன் சிறப்புரை யாற்றினார். இதற்கான ஏற்பாட்டினை உணவு தொழில்நுட்பதுறையின் பே ராசிரியர் சாந்தலட்சுமி, பாக்யா நிஷா ஆகியோர் செய்திருந்தனர்.
- அன்னியர்களின் கணக்கை பொய்யாக்கி ஒருமைபாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் உலக அரங்கில் சிறந்த எடுத்தகாட்டாக இந்தியா திகழ்கிறது.
- பதக்க பட்டியலில் 4-ம் இடத்தில் இந்தியா என்ற வரலாற்றுப் பதிவை செய்திருக்கின்றது
புதுச்சேரி:
என்.ஆர். இலக்கியப் பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
75ஆண்டுகளுக்கு முன்னர் நம்மை அடிமை படுத்தி ஆண்டவர்களின் மண்ணில் இன்று 22 தங்கம் உட்பட 61 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 4-ம் இடத்தில் இந்தியா என்ற வரலாற்றுப் பதிவை செய்திருக்கின்றது என்றால் இது சுதந்திர போராட்டம் நமக்கு கற்றுக் கொடுத்த வெற்றியாகும்.
அன்னியர்களின் கணக்கை பொய்யாக்கி ஒருமைபாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் உலக அரங்கில் சிறந்த எடுத்தகாட்டாக இந்தியா திகழ்கிறது.
வறுமை இருக்கிறது, கொரோனாவால் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. ஆனாலும் ராணுவ பாதுகாப்பில் இந்தியா உலக அளவில் 3-ம் இடத்தில் நிற்கிறது. இது புதுவை விடுதலைக்கு வித்திட்ட வீரப் போராளிகளான பாரதியார், பாரதிதாசனார் ஆகியோரின் படைப்புகளை நாட்டுடமையாக்கியதோடு, ஆண்டுதோறும் சிறப்பிக்கப்படுகின்றார்கள். தியாகி சுப்பையா, குபேர், புதுவை சிவம் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறைக்கு என்.ஆர். இலக்கிய பேரவை கொண்டு செல்லும் என்று உறுதியேற்கிறது. தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் தேசப்பற்றை வெளிப்படுத்தி மக்கள் பணியாற்றி வரும் நம் மக்கள் முதல்-அமைச்சர் என்.ஆர். வழி நின்று, நம் சுவாசகாற்றை சுத்தப்படுத்திய சுதந்திர போராட்ட தியாகிகளை வணங்குவோம். வீடுதோறும் விடுதலைக் கொடி ஏற்றுவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






