search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money stolen"

    • மேலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை-ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை போனது.
    • அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காமிராவை போலீசார் ஆய்வு செய்தும் வருகின்றனர்.

    மேலூர்

    சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சங்கீதா. இவர்களது குழந்தைகளின் படிப்பிற்காக மேலூர் அருகே உள்ள குத்தப்பன்பட்டியில் உள்ள தென்றல் நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி தமராக்கியில் உள்ள உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கணேசன் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அங்கிருந்த அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் வைக்கப் பட்டிருந்த 18 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் பணம், விலை உயர்ந்த செல்போன் மற்றும் பொருட்களை திருடி சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த கணவன்-மனைவி இருவரும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தது. அறையில் இருந்த பீரோவும் திறக்கப்பட்டு பணம், நகை மற்றும் பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டி ருந்தது.

    இதுகுறித்து மேலூர் காவல் நிலையத்தில் கணேசன் புகார் கொ

    டுத்தார். சப்-இன்ஸ் பெக்டர் சுப்புலட்சுமி, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். உடனே அந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் எதுவும் உள்ளதா? என்று சோதனை நடத்தினர். பின்பு மோப்ப நாயை வரவழைக்கப் பட்டது. மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காமிராவை ஆய்வு செய்தும் வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியும் வருகின்றனர்.

    • பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி செல்வது வழக்கம்.
    • இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கோவில் அர்ச்சகர் பூஜை முடித்து கோவிலை பூட்டி சென்றார்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டையில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்று விட்டான்.

    புதுவை லாஸ்பேட்டை சாந்தி நகரில் ரேணுகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கோவில் அர்ச்சகர் பூஜை முடித்து கோவிலை பூட்டி சென்றார். நேற்று காலை வழக்கம் போல் அர்ச்சகர் பூஜை செய்ய கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் இருந்த உண்டி யல் உடைக்கப்பட்டு காணிக்கைப்பணம் கொள்ளையடிக்கப்பட்டி ருந்ததை கண்டு அதிர்ச்சிய டைந்தார்.

    உண்டியலில் சுமார் ரூ.2 ஆயிரத்துக்கும் மேலாக காணிக்கை பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அர்ச்சகர் கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகி பரமசிவம் இதுபற்றி லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது முக கவசம் அணிந்த ஒரு வாலிபர் கோவில் உண்டி யலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம வாலிபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    மதுரையிலிருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை எழும்பூர் வந்த திமுக கொறடா சக்கரபாணியின் பணப்பை திருட்டுபோனதையடுத்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #DMK #Sakkarapani
    சென்னை:

    மதுரையிலிருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை எழும்பூர் வந்த திமுக கொறடா சக்கரபாணியின் பணப்பை திருட்டு போனது.



    தனது பையில் ரூ.1 லட்சம் ரொக்கம், தங்க மோதிரம், செல்போன் உள்ளிட்டவை இருந்ததாக சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து திமுக எம்எல்ஏ சக்கரபாணி அளித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.  #DMK #Sakkarapani

    கர்நாடக மாநில பா.ஜனதா பெண் எம்.பி. ஷோபா காரன்ட்லஜி வங்கி கணக்கில் இருந்து ரூ.15 லட்சம் பணம் திருடப்பட்ட வழக்கு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. #ShobhaKarandlaje
    புதுடெல்லி:

    கர்நாடக மாநில பா.ஜனதா பெண் எம்.பி. ஷோபா காரன்ட்லஜி. இவர் தனது சம்பள பணம் வரும் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது அதில் ரூ.15 லட்சத்து 62 ஆயிரம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடந்த டிசம்பர் மாதம் முதல் பல பரிவர்த்தனை மூலம் பணம் திரட்டப்பட்டு இருந்தது. ஆனால் வங்கி கணக்கில் பணம் எடுக்கும் போது எஸ்.எம்.எஸ். தகவல் எதுவும் வரவில்லை. மர்ம நபர்கள் அவரது வங்கி கணக்கை ஹேக் செய்து பணத்தை எடுத்து இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஷோபா காரன்ட்லஜி கூறும்போது, “எனது வங்கி கணக்கில் இருந்து நான் பணம் எடுக்கும்போது ஒவ்வொரு முறையும் எஸ்.எம்.எஸ். தகவல் வரும். ஆனால் இவ்வளவு பெரிய தொகை எடுக்கப்படும்போது கூட எனக்கு எந்த எஸ்.எம்.எஸ். தகவலும் வரவில்லை” என்றார்.

    இந்த மோசடி குறித்து வடக்கு அவென்யூ போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஷோபா காரன்ட்லஜி எம்.பி. வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட வழக்கு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த பண பரிவர்த்தனை உள்நாட்டில் நடந்ததா? அல்லது வெளிநாட்டில் நடந்ததா? என்ற விவரத்தை வங்கியிடம் இருந்து கேட்டு இருக்கிறோம்” என்றார்.

    கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியின் செயலாளர் அசோக் மாலிக்கின் கிரடிட் கார்டு மூலம் மர்ம நபர்கள் ரூ.1.38 லட்சத்தை திருடினர் என்பது குறிப்பிடத்தக்கது. #ShobhaKarandlaje
    ×