search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "18 pounds of jewelry"

    • மேலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை-ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை போனது.
    • அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காமிராவை போலீசார் ஆய்வு செய்தும் வருகின்றனர்.

    மேலூர்

    சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சங்கீதா. இவர்களது குழந்தைகளின் படிப்பிற்காக மேலூர் அருகே உள்ள குத்தப்பன்பட்டியில் உள்ள தென்றல் நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி தமராக்கியில் உள்ள உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கணேசன் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அங்கிருந்த அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் வைக்கப் பட்டிருந்த 18 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் பணம், விலை உயர்ந்த செல்போன் மற்றும் பொருட்களை திருடி சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த கணவன்-மனைவி இருவரும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தது. அறையில் இருந்த பீரோவும் திறக்கப்பட்டு பணம், நகை மற்றும் பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டி ருந்தது.

    இதுகுறித்து மேலூர் காவல் நிலையத்தில் கணேசன் புகார் கொ

    டுத்தார். சப்-இன்ஸ் பெக்டர் சுப்புலட்சுமி, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். உடனே அந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் எதுவும் உள்ளதா? என்று சோதனை நடத்தினர். பின்பு மோப்ப நாயை வரவழைக்கப் பட்டது. மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காமிராவை ஆய்வு செய்தும் வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியும் வருகின்றனர்.

    • வேலை முடிந்து மோட்டார் சைக்கிளின் சென்றபோது 2 பேர் அவரை வழிமறித்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து
    • விசாரணையில் அவர்கள் 2 பேரும் சேலத்தில் 3 பெண்களிடம் நகைபறித்தது தெரியவந்தது

    சேலம்:

    சேலம் பனமரத்துப்பட்டி குரால்நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 27). புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளின் சென்றபோது 2 பேர் அவரை வழிமறித்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்று தப்பி ஓடி ஓடினர்.

    இது பற்றி ஜீவானந்தம் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் . போலீசார் வழக்கு பதிவு ெசய்து மர்ம நபர்களை ைகது செய்தனர். இதில் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த லோகேஷ்வரன் (24), நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த வேல் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் 2 பேரும் சேலத்தில் 3 பெண்களிடம் 18 பவுன் நகைபறித்தது தெரியவந்தது .அவர்களிடம் இருந்து போலீசார் நகையை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி 2 பேரையும் ஜெயலில்அடைத்தனர்.

    ×