என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காங்கிரசார் பாதயாத்திரை
    X

    மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடந்த போத எடுத்த காட்சி.

    காங்கிரசார் பாதயாத்திரை

    • மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாதயாத்திரை நடத்தப்பட்டது.
    • கதிர்காமம் முத்திரையர்பாளையம், வி.வி.பி. நகர் வழியாக ராஜீவ்காந்தி சிலை வரை 12 கி.மீ. பாதயாத்திரை நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாதயாத்திரை நடத்தப்பட்டது.

    முதலியார்பேட்டை வானொலி திடலில் தொடங்கி, ரோடியர் மில், நெல்லித்தோப்பு மார்க்கெட், இந்திராகாந்தி சிலை, ரெட்டியார்பாளையம், மூலக்குளம், கதிர்காமம் முத்திரையர்பாளையம், வி.வி.பி. நகர் வழியாக ராஜீவ்காந்தி சிலை வரை 12 கி.மீ. பாதயாத்திரை நடத்தப்பட்டது.

    இதற்கு மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், முன்னள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள்எக்கம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், எம்.என்.ஆர். பாலன், காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் கோபாலமூர்த்தி, பொதுச்செயலாளர் இளையராஜா, கதிர்காமம் பொறுப்பாளர் செல்வநாதன், வட்டார தலைவர்கள் ஜெகவீர பாண்டியன், பாபு, சுந்தர், மோகன், வேணுகோபால், கதிரவன், மாநில தலைவர் சிவா, இந்திராநகர் பொறுப்பாளர் ராஜாகுமாரி, சோமசுந்தரம், ராஜசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பாதயாத்திரையில் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

    Next Story
    ×