என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அன்னியர்களின் கணக்கை பொய்யாக்கி ஒருமைபாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் உலக அரங்கில் சிறந்த எடுத்தகாட்டாக இந்தியா திகழ்கிறது.
    • பதக்க பட்டியலில் 4-ம் இடத்தில் இந்தியா என்ற வரலாற்றுப் பதிவை செய்திருக்கின்றது

    புதுச்சேரி:

    என்.ஆர். இலக்கியப் பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    75ஆண்டுகளுக்கு முன்னர் நம்மை அடிமை படுத்தி ஆண்டவர்களின் மண்ணில் இன்று 22 தங்கம் உட்பட 61 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 4-ம் இடத்தில் இந்தியா என்ற வரலாற்றுப் பதிவை செய்திருக்கின்றது என்றால் இது சுதந்திர போராட்டம் நமக்கு கற்றுக் கொடுத்த வெற்றியாகும்.

    அன்னியர்களின் கணக்கை பொய்யாக்கி ஒருமைபாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் உலக அரங்கில் சிறந்த எடுத்தகாட்டாக இந்தியா திகழ்கிறது.

    வறுமை இருக்கிறது, கொரோனாவால் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. ஆனாலும் ராணுவ பாதுகாப்பில் இந்தியா உலக அளவில் 3-ம் இடத்தில் நிற்கிறது. இது புதுவை விடுதலைக்கு வித்திட்ட வீரப் போராளிகளான பாரதியார், பாரதிதாசனார் ஆகியோரின் படைப்புகளை நாட்டுடமையாக்கியதோடு, ஆண்டுதோறும் சிறப்பிக்கப்படுகின்றார்கள். தியாகி சுப்பையா, குபேர், புதுவை சிவம் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறைக்கு என்.ஆர். இலக்கிய பேரவை கொண்டு செல்லும் என்று உறுதியேற்கிறது. தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் தேசப்பற்றை வெளிப்படுத்தி மக்கள் பணியாற்றி வரும் நம் மக்கள் முதல்-அமைச்சர் என்.ஆர். வழி நின்று, நம் சுவாசகாற்றை சுத்தப்படுத்திய சுதந்திர போராட்ட தியாகிகளை வணங்குவோம். வீடுதோறும் விடுதலைக் கொடி ஏற்றுவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அரசு பள்ளிகளில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஒவ்வொரு பள்ளியாக சென்று தேசிய கொடியை ஏற்றி வந்தார்.
    • அங்குகொடி ஏற்றிய பிறகு அங்கிருந்து மாணவர்கள் கூட்டமாக தட்டில் உணவை எடுத்து வந்தனர்.

    புதுச்சேரி:

    75-வது சுதந்திர தின விழாவை ஒட்டி பாகூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஒவ்வொரு பள்ளியாக சென்று தேசிய கொடியை ஏற்றி வந்தார்.

    அதுபோல பாகூர் பாரதி அரசு பள்ளிக்கு இன்று காலை செந்தில்குமார் எம்.எல்.ஏ. கொடியேற்ற சென்றார். அங்குகொடி ஏற்றிய பிறகு அங்கிருந்து மாணவர்கள் கூட்டமாக தட்டில் உணவை எடுத்து வந்தனர். அவர்கள் தொடர்ந்து தர மற்ற உணவை வழங்கி வருகின்றனர். உணவு சரியில்லை என்று பலமுறை கூறியும் அதே தரமற்ற உணவை தான் வழங்கி வருகின்றனர். ஒரு சில நாட்களில் மோசமான துர்நாற்றம் வீசும் உணவு அளிக்கிறார்கள் என்று சரமாரியாக குற்றச்சாட்டு கூறினர். உணவுக்கூடம் தரமற்றதாக உள்ளது துர்நாற்றம் வீசுகிறது. உப்பு போடுவதில்லை என்று உணவை எம்.எல்.ஏ.விடம் கொடுத்தனர்

    இதையடுத்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. உடனடியாக உணவை வாங்கி அங்கேயே சாப்பிட்டு பார்த்து உணவு சரியில்லை தான் என்று ஒப்புக்கொண்டார். தொடர்ந்து இது சம்பந்தமாக முதல்வரிடமும் சட்டசபையிலும் முறையிட்டு நல்ல முடிவு எடுக்கிறேன் என்று மாணவர்களுக்கு உத்திரவாதம் அளித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையில் பா.ஜனதாவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
    • அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இசைக்குழுவினர் வந்தே மாதரம் உள்ளிட்ட தேசபக்தி பாடல்களை பாடி சென்றனர்.

    புதுச்சேரி:

    75-வது சுதந்திர தினத்தை அமுத பெரு விழாவாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையில் பா.ஜனதாவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

    அதன் ஒரு கட்டமாக காலாப்பட்டு கனகசெட்டி குளத்தில் பாரதமாதா சிலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக புதுவை நோக்கி புறப்பட்டது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பாரதமாதா சிலையை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் முன்னிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பாரதமாதா சிலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இசைக்குழுவினர் வந்தே மாதரம் உள்ளிட்ட தேசபக்தி பாடல்களை பாடி சென்றனர்.

    பாரதமாதா சிலை பேரணியில் கையில் தேசிய கொடி ஏந்தி அமைச்சர் சாய். ஜெ.சரவணன் குமார், செல்வகணபதி எம்.பி., ஜான்குமார், எம்.எல்.ஏ. பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், துணைத் தலைவர்கள் ரவிச்சந்திரன், செல்வம், முருகன், பட்டியல் அணி மாநிலத் தலைவர் தமிழ்மாறன், காலாப்பட்டு கண்ணன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் தேசியக் கொடியை ஏந்தி காலாப்பட்டு, பிள்ளைசாவடி, கோட்ட குப்பம், லாஸ்பேட்டை வழியாக விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தனர்.

    • மீனவ கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது
    • இந்த கோவிலில் ஆடி மாத தேரோட்டம் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத தேரோட்டம் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான ஆடித் தேரோட்டம் வரும் ஆகஸ்டு 19-ம் தேதி காலை நடக்கிறது.

    அதனை முன்னிட்டு (வியாழக்கிழமை) காலை 5.15 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக 10-ந் தேதி மாலை 6 மணி அளவில் விநாயகர் பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து விழா நாட்களில் தினசரி இரவு நேரங்களில் அம்மன் விதியுலா நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19-ந் தேதி காலை நடைபெற உள்ளது. புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். 20-ந் தேதி இரவு 9 மணி அளவில் தெப்பல் உற்சவமும், 26-ந் தேதி இரவு 10 மணியளவில் சிறப்பு முத்து பல்லக்கில் அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • பாண்டிச்சேரி ரோட்டரி சங்கத்தின் உதவியோடு 75 ஆயிரம் பனைவிதை நடும் விழா நடந்தது.
    • சமூக அமைப்பின் தலைவர் ஆனந்தன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுக்குப்பம் கடற்கரைப் பகுதியில், வனத்துறை மற்றும் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சமூக அமைப்பு இணைந்து பாண்டிச்சேரி ரோட்டரி சங்கத்தின் உதவியோடு 75 ஆயிரம் பனைவிதை நடும் விழா நடந்தது.

    கவர்னர் தமிழிசை பனை விதை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வன காப்பாளர் சத்தியமூர்த்தி, துணை வனக்காப்பாளர் வஞ்சுள வள்ளி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், வேளாண் அறிவியல் கல்லூரியின் தலைவர் கணேஷ், பாண்டிச்சேரி ரோட்டரி சங்கத் தலைவர் சாமி, தனசுந்தராம்பாள் சமூக அமைப்பின் தலைவர் ஆனந்தன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

    விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    பனை விதை வருங்காலத்தில் மிகப்பெரிய பொருளாதாரத்தை ஈட்டித் தரும். இயற்கையைப் பாதுகாக்கும். பனை என்பது கற்பக தரு. அதிலுள்ள பதநீர், பனங்கிழங்கு, பனம்பழம், ஓலைகள் பனை மரப் பொருட்களில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக சொல்கின்றனர். பனைமரப் பொருட்களை சாப்பிட்டு வந்தால் நோய் தொற்று ஏற்படாது என சொல்கின்றனர்.

    அப்படிப்பட்ட பனை அழிந்து கொண்டே போகிறது. அதைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. அப்படி பலன் தரக்கூடியதை விட்டுவிட்டு செயற்கையாக போய்க் கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் இல்லாத புதுவையை நாம் உருவாக்கப் போகிறோம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனைப் பொருட்களைப் பயன் படுத்த முடியும்.

    அதனால் பனையை விதைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 75 ஆயிரம் பனை விதைகளை விதைப்பதற்கான முயற்சி செய்துவரும் தனசுந்தராம்பாள் சமூக அமைப்பிற்கு எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை அருகே உள்ள பொம்மையர் பாளையத்தில் மயிலம் பொம்மபுர ஆதின மடம் உள்ளது.
    • இந்த மடத்தினை சிவஞான பாலய சுவாமிகள் நிர்வகித்து வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே உள்ள பொம்மையர் பாளையத்தில் மயிலம் பொம்மபுர ஆதின மடம் உள்ளது. இந்த மடத்தினை சிவஞான பாலய சுவாமிகள் நிர்வகித்து வருகிறார்.

    பொம்மபுர ஆதினத்துக்கு சொந்தமான இடங்களை பலர் ஆக்கிரமித்து கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்ற செயல்முறை நடவடிக்கைகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பிள்ளை சாவடி கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதியில் பொம்மபுர ஆதினத்துக்கு சொந்தமான இடத்தை வடிவாம்பிகை இளையராஜா தம்பதியினர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இது தொடர்பாக ஆதீனம் மூலம் கோர்ட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயராணி தலைமையில் ஆய்வாளர்கள், செல்வராஜ், தினேஷ் செயலர் சிவக்குமார் மற்றும் வானூர் வருவாய்த்துறையினர், கோட்டகுப்பம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், ‌ தலைமை காவலர் ராஜாராம் முன்னிலையில் ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த வீட்டை அப்புறப்படுத்தினர். மீட்கப்பட்ட இடம் பொம்புர ஆதீனம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

    பிரச்சனை ஏதும் நடக்காமல் இருக்க தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    • அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் உருவாக்கும் கலை பொருட்கள் தற்போது பலரது பரிசு பொருட்களாக மாறி வருகிறது.
    • கண்கவர் கலை படைப்புகளை மாணவர்கள் உருவாக்கி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    சேலியமேடு கிராமத்தில் இயங்கி வரும் வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் உருவாக்கும் கலை பொருட்கள் தற்போது பலரது பரிசு பொருட்களாக மாறி வருகிறது.

    கிராமப்புறத்தில் கிடைக்க கூடிய வீணாகும் சுரக்காய் குடுவை, தென்னை, பனை மற்றும் வாழை மரங்களின் உலர்ந்த இலை, பூ, மட்டைகளை கொண்டு கண்கவர் கலை படைப்புகளை மாணவர்கள் உருவாக்கி வருகின்றனர். அழிவின் உயிர்ப்பு என்ற பெயரில் பள்ளியில் இயங்கும் கலைக்கூடம் அசத்தும் கைவினைப் பொருட்களை உருவாக்கும் சுற்றுலா தலமாகவே மாறிவிட்டது.

    இந்தக் கலை முயற்சிக்குப் பின்னணியில் உந்து சக்தியாக இருப்பவர் பள்ளியின் ஓவிய ஆசிரியர் உமாபதி. அவரது பயிற்சியில் அடுத்து ஒரு படைப்பை மாணவர்கள் சந்தோஷ்,நவநீதன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

    இந்த கலைப் பொருள் மற்ற மாணவர்களுக்கும், ஊர் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    • சேதராப்பட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
    • கோவில் விழாவையொட்டி அங்கு நடந்த பாட்டு கச்சேரியை பார்க்க ராம்குமார் சென்றார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் கோவில் விழாவையொட்டி நடந்த பாட்டு கச்சேரியில் ஏற்பட்ட மோதலில் தனியார் நிறுவன ஊழியருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.

    வில்லியனூர் அருகே அகரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (வயது23). இவர் சேதராப்பட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவில் விழாவையொட்டி அங்கு நடந்த பாட்டு கச்சேரியை பார்க்க ராம்குமார் சென்றார். அங்கு கூட்ட நெரிசலில் நின்று ராம்குமார் பாட்டி கச்சேரியை ரசித்துகொண்டிருந்த போது அங்கு வந்த கணுவாய்ப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் ராம்குமாரிடம் இங்கு நிற்க வேண்டாம் எனது மகன்களுக்காக இடம் பிடித்து வைத்திருக்கிறேன். எனவே இங்கிருந்து சென்று விடு என வெங்கடேசன் கூறினார்.

    அதற்கு ராம்குமார் நான் இங்கிருந்து செல்ல முடியாது என்று மறுத்தார். இதனால் ராம்குமாருக்கும், வெங்கடேசனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது வெங்கடேசன் செல்போனில் பேசி தனது மகன்களான தினகரன் மற்றும் விஜயகுமாரை அழைத்தார்.

    இதையடுத்து சற்று நேரத்தில் தினகரன், விஜயகுமார் மற்றும் அவருடன் மற்றொருவர் அங்கு வந்தனர். அவர்கள் ராம்குமாரிடம் எங்கள் ஊரில் வந்து எங்களது அப்பாவிடமே தகராறு செய்கிறாயா? என கூறி தகாத வார்த்தைகளால் திட்டினர்.

    இதனை ராம்குமார் தட்டிக்கேட்ட போது அவர்கள் 4 பேரும் சேர்ந்து ராம்குமாரை தடியாலும், கல்லாலும் தாக்கினர். மேலும் வெங்கடேசன் அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து ராம்குமாரின் தலையில் குத்தினார். அதோடு ராம்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த ராம்குமாரை அவரது நண்பர்கள் மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் ராம்குமார் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஊழியரை அரிவாளால் வெட்டிய வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • சினிமா தியேட்டரில் கேண்டீன் பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவையில் சினிமா தியேட்டருக்குள் புகுந்து ஊழியரை அரிவாளால் வெட்டிய வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுவை திலாஸ்பேட்டை கருணாஜோதி வீதியை சேர்ந்தவர் ரஞ்சித்(வயது26). இவர் புதுவை திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் கேண்டீன் பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு இவர் சினிமா தியேட்டரில் பணியில் இருந்த போது திலாஸ்பேட்டை கருணாஜோதி வீதியை சேர்ந்த முகேஷ் கண்ணன் மற்றும் சுரேந்தர் ஆகியோர் போன் செய்து சினிமா தியேட்டர் வாசலுக்கு வருமாறு அழைத்தனர். அதன்படி ரஞ்சித் சினிமா தியேட்டர் வாசலுக்கு வந்தார்.

    அப்போது முகேஷ் கண்ணன் மற்றும் சுரேந்தர் ஆகியோர் ரஞ்சித்திடம் உனது தாய் எங்களை திட்டுகிறார். அதற்கு ரஞ்சித் வீட்டுக்கு வந்து விசாரிப்பதாக கூறிக்கொண்டு இருக்கும் போது சுரேந்தர் தகாத வார்த்தைகளால் திட்டி ரஞ்சித்தை தாக்க முயன்றார்.

    இதனால் பயந்து போன ரஞ்சித் அவர்களிடமிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால், ரஞ்சித்தை தப்பி செல்ல முடியாதவாறு முகேஷ்கண்ணன் அவரை பிடித்துக்கொண்டார். பின்னர் சுரேந்தர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரஞ்சித்தை வெட்ட முயன்றார். இதனை தடுத்த போது ரஞ்சித்தின் வலது கையில் வெட்டு விழுந்தது.

    இதனால் வலியால் ரஞ்சித் அலறியதால் சினிமா தியேட்டர் ஊழி யர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு வரவே முகேஷ் கண்ணனும், சுரேந்தரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதையடுத்து ரஞ்சித்தை அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக புதுவை அரசுஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற ரஞ்சித் பின்னர் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முகேஷ் கண்ணன் மற்றும் சுரேந்தர் ஆகிய 2பேரையும் தேடி வருகிறார்கள்.

    • வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுவதற்காக என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.
    • நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தேசிய தலைவர்களின் படங்களுக்கு மரியாதை செலுத்தி தேசியக்கொடிகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தினநாளையொட்டி வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுவதற்காக என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தேசிய தலைவர்களின் படங்களுக்கு மரியாதை செலுத்தி தேசியக்கொடிகளை வழங்கினார்.

    இதில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா , துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், பாஸ்கர், நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இந்திய ஒசாக சிடோ-ரயூ கராத்தேபயிற்சி பள்ளி உள்ளது.
    • 3 நாட்கள் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இந்திய ஒசாக சிடோ-ரயூ கராத்தேபயிற்சி பள்ளி உள்ளது. இங்கு பள்ளிகளுக்கு இடையேயான கராத்தே சாம்பியன்ஷிப்-2022 போட்டி நடந்தது.

    3 நாட்கள் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கராத்தே பயிற்சி பள்ளி தலைமை பயிற்சி நுட்ப இயக்குனர் மூர்த்தி தலைமை தாங்கினார். கராத்தே நுட்ப பயிற்று விப்பாளர் சுந்தர்ராஜன், உதவி பயிற்றுவிட்பாளர் சூர்யா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளராக ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு கலந்து கொண்டு வெற்றி பெற்ற கராத்தே மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    • பூணூல் அணியும் திருவிழா நடைப்பெற்றது.
    • திருபுவனைபாளையம் நவசக்தி விநாயகர் கோவிலில் நடைப்பெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில விஸ்வகர்ம சமுகத்தினர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் பூணூல் அணியும் திருவிழா நடைப்பெற்றது. அதில் திருபுவனை தொகுதியில் உள்ள விஸ்வகர்ம சமுகத்தினர் பூணூல் அணியும் விழா திருபுவனைபாளையம் நவசக்தி விநாயகர் கோவிலில் நடைப்பெற்றது.

    விழாவிற்கு விஸ்வகர்ம சமூகத்தினர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புதுவை மாநில விஸ்வகர்மா சங்க துணைத்தலைவர் சிங்காரம் கலந்துகொண்டு பூணூல் அணியும் விழாவை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் புரோகிதர் பார்தீபன் அனைவருக்கும் பூணூல் அணிவித்து பிரசாதம் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் திருபுவனை தொகுதியை சேர்ந்த விஸ்வ கர்ம சமுக முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பூணூல் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×