என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சு போட்டி ஓய்ஸ்மேன் பள்ளியில் நடை பெற்றது.
    • நிகழ்ச்சிக்கு சிந்தனை யாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை சிந்தனையாளர் பேரவை மற்றும் தமிழ்நாடு வ.உ.சி. இலக்கிய வானம் சார்பில் 75-வது சுதந்திர தினம் மற்றும் வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சு போட்டி ஓய்ஸ்மேன் பள்ளியில் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு சிந்தனை யாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் தலைமை தாங்கினார். பொருப்பாளர்கள் வீரசேகரன், கவுசல்யாதேவி, சரஸ்வதி வைத்தியநாதன், கலியபெருமாள், காமராசு, ராஜாராம், இடைக்கலிநாடு செல்வமணி, பழனி பாஸ்கரன், இளமுருகன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்ஸ் மேன் பள்ளி தாளாளர் சரோஜாபாபு கலந்து கொண்டார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    • கடந்த 18-ந் தேதி மாலை 4 மணியளவில் நகைகடையில் ஊழியர்கள் ரஞ்சித் மணிகண்டன் ஆகியோர் இருந்தனர்.
    • அவர்கள் கையில் வைத்திருந்த கத்தி, உருட்டுகட்டை, பீர் பாட்டில்கள், கற்களை கொண்டு கடைகண்ணாடியை அடித்து உடைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை வைசாள் வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 52) இவர் கொசக்கடைவீதியில் நகைக்கடை வைத்துள்ளார்.

    கடந்த 18-ந் தேதி மாலை 4 மணியளவில் நகைகடையில் ஊழியர்கள் ரஞ்சித் மணிகண்டன் ஆகியோர் இருந்தனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்தபடி கடைக்குள் புகுந்தனர்.

    அவர்கள் கையில் வைத்திருந்த கத்தி, உருட்டுகட்டை, பீர் பாட்டில்கள், கற்களை கொண்டு கடைகண்ணாடியை அடித்து உடைத்தனர். பின்னர் அங்கிருந்த பொருட்களை சூறையாடிவிட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து கடை உரிமையாளர் முருகன் பெரியகடை போலீசார் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நகை கடையை சூறையாடியதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். நகைக்கடை உரிமையாளர் முருகனின் சம்மந்தி கடலூரில் வசித்து வருகிறார். அவர் சிலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை அவர் கட்டவில்லை என தெரிகிறது.

    இந்த பிரச்சனையில் முருகன் தனது சம்மந்திக்கு ஆதரவாக செயல் பட்டதால் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் ஆத்திரமடைத்து முருகன் கடையை சூறையாடியதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆடி செவ்வாய் முன்னிட்டு பெரியநாயகி அம்மன் உடனுறை அரசியலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது.
    • இதில் திரளானவர்கள் கலந்து ருத்ராட்சம் அணிந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்க்கண்டேயர் திரு மடம் சார்பில் புதுவை ஆதீனம் சந்திரசேகர சாமிகள் முன்னிலையில் வளர்பிறை பிரதோஷம் மற்றும் ஆடி செவ்வாய் முன்னிட்டு பெரியநாயகி அம்மன் உடனுறை அரசியலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது.

    தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகள் ஓதி நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து ருத்ராட்சம் அணிந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • புதுவை கவர்னர் மாளிகையில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார்.
    • மோட்டார் சைக்கிளை கவர்னர் மாளிகை பின் பக்க நுழைவு வாயிலில் நிறுத்தி விட்டு சமையல் வேலையில் ஈடுபட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை ஆண்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் புதுவை கவர்னர் மாளிகையில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் காலை கவர்னர் மாளிகைக்கு பணிக்கு வந்த பழனி அவரது மோட்டார் சைக்கிளை கவர்னர் மாளிகை பின் பக்க நுழைவு வாயிலில் நிறுத்தி விட்டு சமையல் வேலையில் ஈடுபட்டார். பின்னர் பழனி பணி முடிந்த பின்பு வெளியே வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அவர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.அப்போது காலை 11 மணியளவில் கல்லூரி மாணவர்கள் போல் டிப்-டாப் உடை அணிந்து கொண்டு வந்த 2 வாலிபர்கள் கள்ளசாவி போட்டு மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

    இதனை அடுத்து சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளுடன் பெரிய கடை போலீஸ் நிலையத்தில் பழனி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாகவே நகர பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் தொடந்து திருடப்பட்டு வரும் நிலையில் தற்போது கவர்னர் மாளிகை வாயிலில் போலீசார் அதிகம் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருக்கும் இடத்தில், பட்ட பகலில் வாலிபர்கள் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சம்பவம் ராஜ்நிவாசில் பணிபுரியும் மற்ற ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகம்,கேரளா கர்நாடக மாநிலங்களில் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • இதனால் ஆற்றில் நிரம்பிய உபிரி நீரை அணைக்கட்டுகள் மூலம் வெளியேற்றுகின்றனர்.

    புதுச்சேரி:

    தமிழகம்,கேரளா கர்நாடக மாநிலங்களில் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் நிரம்பிய உபிரி நீரை அணைக்கட்டுகள் மூலம் வெளியேற்றுகின்றனர்.

    அதன்படி சாத்தனூர் அணைக்கட்டில் நிரம்பிய நீர் 2 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு தென்பெண்ணையாற்றில் வந்து கொண்டுள்ளது. இந்த உபரி நீர் படிப்படியாக குறைந்து புதுவையின் எல்லை பகுதியான கரையாம்புத்தூர் அருகே உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டுக்கு சுமார் 500 கன அடியாக இன்று காலை வந்தடைந்தது. தற்பொழுது இந்த ஆற்றில் ஒரு மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

    அணைக்கட்டில் இருந்து ஒரு மதகு திறக்கப்பட்டு அதன் வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த நீர் சித்தேரி அணைக்கட்டை அடைய 2 நாட்கள் பிடிக்கும் என கூறப்படுகிறது. சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் மூலமாக பாகூர் ஏரிக்கு நீர் கொண்டு வர பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகுகளை திறந்து உள்ளனர்.

    அதன் வழியாக சுமார் 80 சென்டிமீட்டர் உயரத்திற்கு தண்ணீர் வாய்க்காலில் ஓடுகிறது. இந்த நீர் பாகூர் ஏரியை இன்று இரவு அல்லது காலையில் வந்தடையும். வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    ஆறு வற்றி இருந்த நிலையில் தண்ணீர் வந்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைக்கட்டை பொதுமக்கள் நேரில் வந்து பார்வையிட்டு ரசித்து வருகின்றனர்.

    • புதுவை சட்டசபையில் பட்ஜெட் கூட்டதொடர் இன்று காலை தொடங்கியது.
    • புதுவையில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பட்ஜெட் கூட்டதொடர் இன்று காலை தொடங்கியது. கவர்னர் தமிழிசை உரையாற்றினார். கூட்டத்தில் இருந்து தி.மு.க-காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கவர்னர் உரை மீது நாளையும், நாளை மறுநாளும் விவாதம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் புதுவை சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    கவர்னர் உரை மீதான விவாதம் வேறு தேதியில் நடைபெறுமெனவும் அவர் கூறினார். புதுவையில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் சட்டசபை காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    • கவர்னர் தமிழிசை உரை நிகழ்த்த தொடங்கியதும் அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • புதுவை சட்டசபையில் வருகிற 17-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கவர்னர் தமிழிசை உரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்க வந்த தி.மு.க. - காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

    கவர்னர் தமிழிசை உரை நிகழ்த்த தொடங்கியதும் அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    அவர்களை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். ஆனால் கவர்னர் தமிழிசை தொடர்ந்து உரை நிகழ்த்தினார். நாளை மற்றும் நாளை மறுநாள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. இதில் உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.

    புதுவை சட்டசபையில் வருகிற 17-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    • டெல்லியில் மத்திய சுகாதார மந்திரி மான்சுவிக் மாண்டவியாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி சந்தித்து மனு அளித்தார்.
    • கடந்த 2010 முதல் செயல்பட்டு வரும் புதுவை இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை மருத்துவ மாணவர்களின் ஆண்டு சேர்க்கை 180 ஆகும்.

    புதுச்சேரி:

    டெல்லியில் மத்திய சுகாதார மந்திரி மான்சுவிக் மாண்டவியாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி சந்தித்து மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2010 முதல் செயல்பட்டு வரும் புதுவை இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை மருத்துவ மாணவர்களின் ஆண்டு சேர்க்கை 180 ஆகும். மேலும் இந்தக் கல்லூரி 8 துறைகளில் பட்டமேற் படிப்புகளை வழங்கி வருகிறது.

    இந்த ஆண்டு மேலும் 5 துறைகளில் பட்ட மேற்படிப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியில் மிகச் சிறந்த நவீன உள்கட்ட மைப்பு வசதிகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த நிறுவனத்தை மருத்துவப் பல்கலைக்கழகமாகவும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகவும் தரம் உயர்த்த மத்திய அரசின் அனுமதி தரவேண்டும்.

    இதற்குத் தேவையான நிதியை வழங்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கைப்படி காரைக்கால் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி மற்றும் அதற்குத் தேவையான நிதியை வழங்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பா.ஜனதா சார்பில் வில்லியனூர் ரெயில் நிலையத்தை சுற்றி ஜே.சி.பி. மூலமாக சுத்தம் செய்யும் பணி நடந்தது.
    • பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கலந்து கொண்டு சுத்தம் செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பா.ஜனதா சார்பில் வில்லியனூர் ெரயில் நிலையத்தை சுற்றி ஜே.சி.பி. மூலமாக சுத்தம் செய்யும் பணி நடந்தது.

    இதில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கலந்து கொண்டு சுத்தம் செய்யும் பணியினை தொடங்கி வைத்தார். அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் முன்னிலை வகித்தார்.

    தூய்மை பணியின் போது பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், மாநில துணைத்தலைவர் முருகன், மாநில செயலாளர் அகிலன், வில்லியனூர் மாவட்ட தலைவர் ஆனந்தன், வில்லியனூர் தொகுதி பொறுப்பாளர் கண்ணபிரான் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டு தூய்மை பணியினை மேற்கொண்டனர்.

    ெரயில் நிலையம் தூய்மைப்படுத்தும் பணி ஏற்பாட்டினை மாநில துணைத் தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் அருணகிரி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • இந்திய நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, புதுவை மாநில ஒருங்கிணைந்த கராத்தே சங்கம் மற்றும் புதுவை மாநில ஒருங்கிணைந்த விளையாட்டு வீரர்களின் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.
    • முகாமிற்கு கராத்தே சங்கத் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    இந்திய நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, புதுவை மாநில ஒருங்கிணைந்த கராத்தே சங்கம் மற்றும் புதுவை மாநில ஒருங்கிணைந்த விளையாட்டு வீரர்களின் நல சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான கராத்தே பயிற்சி முகாம் மேட்டுப்பாளையம் தமிழ் திருமண மண்டபத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.

    முகாமிற்கு கராத்தே சங்கத் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் மோகன், அமிர்தராஜ், கிருஷ்ணராஜ். அய்யனார், பிரவீன், குமார், விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தேசிய நடுவர்கள் அபிலாஷ், ராகுல், செபஸ்டியன், சந்தோஷ், மோகன் சந்துரு, அன்புமணி ஆகியோர் பயிற்சி முகாமின் தேசிய நடுவராக செயல்பட்டனர்.

    பயிற்சி முகாமில் அதிநவீன கட்டா பிரிவு, சண்டை பிரிவு, ஆயுதப் பிரிவு மற்றும் புதிய விதிமுறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டன, இதில் சிறந்து விளங்கிய, 120 மாணவ-மாணவிகளுக்கு கலர் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை கராத்ேத சங்கத் தலைவர் இளங்கோவன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    • புதுவை மின்துறையில் நீண்டகாலமாக அடாக்கில் இருந்து வந்த உதவியாளர் பதவியை ரெகுலராக மாற்றம் செய்து அவர்களுக்கு வயர்மேன் பதவி உயர்வு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
    • பணிநிரந்தரமற்ற வேலைக்கு கூலி என்ற முறையில் பணியாற்றியவர்களுக்கு அதை நீக்கம் செய்த நிரந்தர தன்மை ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மின்துறை தொழில்நுட்ப சான்றிதழாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மின்துறையில் நீண்டகாலமாக அடாக்கில் இருந்து வந்த உதவியாளர் பதவியை ரெகுலராக மாற்றம் செய்து அவர்களுக்கு வயர்மேன் பதவி உயர்வு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

    பணிநிரந்தரமற்ற வேலைக்கு கூலி என்ற முறையில் பணியாற்றியவர்களுக்கு அதை நீக்கம் செய்த நிரந்தர தன்மை ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றிக்கு ஐ.டி.ஐ. நலச்சங்க நிர்வாகிகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளே காரணம். இந்த வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட புதுவை அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி, மின்துறை செயலர் அருண், சார்பு செயலர் முருகேசன், துறைத்தலைவர், அதிகாரி களுக்கு நலச்சங்கத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளது
    • ஆலையைத் திறக்க வேண்டும், ஆலைக்கு விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கான நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளது.

    ஆலையைத் திறக்க வேண்டும், ஆலைக்கு விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கான நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    புதுவை விவசாயிகள் வளர்ச்சி சங்கத்தினர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், சட்டசபை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்ற முதல்-அமைச்சர், நடவடிக்கை எடுக்கும்படி வேளாண்துறைக்கு உத்தரவிட்டார்.

    வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலுவையில் உள்ள ரூ.13 கோடியை, விவசாயிகளுக்கு விரைவாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

    ×