என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சுகாம்பிகை அம்மன் கோவிலில் 94-ம் ஆண்டு ஆடிப் பெருவிழா நடை பெற்று வருகின்றது.
    • அதன் ஒரு பகுதியாக அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் பள்ளிகொண்ட பெருமாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி

    புதுவை உருளையன் பேட்டை, ஒத்தவாடை வீதியில் அமைந்துள்ள சுகாம்பிகை அம்மன் கோவிலில் 94-ம் ஆண்டு ஆடிப் பெருவிழா நடை பெற்று வருகின்றது.

    அதன் ஒரு பகுதியாக அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் பள்ளிகொண்ட பெருமாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. மாநில அமைப்பாளருமான சிவா, தொகுதி பொறுப்பாளர் கோபால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    விழா ஏற்பாடுகளை தொகுதி செயலாளர் சக்திவேல், கோகுல்ராஜ், ராமமூர்த்தி, கருணாகரன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பலராமன், ஆளவந்தார், ராஜா, ராஜீ, ரவி, நாகராஜ், ஆனந்த், பிரவீன், சரவணன், மணி, மகளிரணி சந்திரா, உமா, கலைச்செல்வி உட்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த நிலையில் பாகூர் தனியார் கல்லூரி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ‌ரகசிய தகவல் கிடைத்தது.
    • அதன்பேரில் பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சாதாரண உடையில் சென்று கண்காணித்து வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.ஆனாலும் தொடந்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பாகூர் தனியார் கல்லூரி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ‌ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சாதாரண உடையில் சென்று கண்காணித்து வந்தனர்.அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற 3 வாலிபர்களை பிடித்து அவர்களது சட்டைப்பைகளை சோதனை நடத்தினர்.

    அப்போது சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தனர். இதையடுத்து 3 பேரையும் பாகூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் தமிழக பகுதியான நெய்வேலியை சேர்ந்த சூர்யா (23), வசந்த (21), ஜெர்விஸ் (23) என தெரியவந்தது. மேலும் சூர்யா கொடுத்த தகவலின் பேரில் மற்றொரு 3 பேர் கொண்ட கும்பல் சென்னையில் இருந்து கோவைக்கு கிலோ கணக்கில் கஞ்சா எடுத்து செல்வது தெரியவந்தது.

    இதையடுத்து சூர்யா மூலமாக போலீசார் மற்றும் 3 பேரை தொடர்பு கொண்டு கஞ்சா வாங்குவதுபோல் வரவழைத்து அந்த கும்பலை பொறிவைத்து பிடித்தனர்.

    பின்னர் அந்த கும்பலிடமும் பாகூர் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த கும்பலும் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த பிரதீப் மோகன் (26), கோபால் (22), சந்துரு (23) என்பதும், ஆந்திரமாநிலம் நெல்லூர் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து 6 கிலோ கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.2.½ லட்சம் ஆகும்.கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் டிப்ளமோ, என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கஞ்சா வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசாரை தெற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு விஷ்னுகுமார் பாராட்டினார்‌.

    • வெள்ளையனே வெளியேறு இயக்க நாளை யொட்டி நாடு முழுவதும் காங்கிரசார் பாதயாத்திரை நடத்துகின்றனர்.
    • என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா மாநில அரசை கண்டித்தும் பாதயாத்திரை நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    வெள்ளையனே வெளியேறு இயக்க நாளை யொட்டி நாடு முழுவதும் காங்கிரசார் பாதயாத்திரை நடத்துகின்றனர்.

    அதன்படி புதுவை யில் உருளையன்பேட்டை, உப்பளம், ராஜ்பவன் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பா.ஜனதா அரசை எதிர்த்தும், என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா மாநில அரசை கண்டித்தும் பாதயாத்திரை நடத்தப்பட்டது.

    வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை அருகிலிருந்து தொடங்கிய பாதயாத்திரைக்கு மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், நிர்வாகிகள் இளையராஜா, தனுசு, ரகுமான், மருதுபாண்டியன், வேல்முருகன், லட்சுமணன், குமரன், ஆறுமுகம், ரமேஷ், ஜெரால்டு, ராஜ்மோகன், பஞ்சகாந்தி, விஜயகுமாரி, பிரதீஸ் இருதயராஜ், ஜோசப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாதயாத்திரை வெங்கட சுப்பாரெட்டியார் சிலையிலிருந்து புறப்பட்டு கோவிந்தசாலை, காமராஜர் சாலை, நேருவீதி, காந்திவீதி, ரயில்வே நிலையம், உழவர்சந்தை வழியாக மறைமலை அடிகள் சாலை வழியாக மீண்டும் வெங்கடசுப்பாரெட்டியார் சிலையை அடைந்தது.

    புதுவையில் பஞ்சாலை களை திறக்க வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவு விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை தர வேண்டும். ரேஷன்கடைகளை திறக்க வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், அனைத்து துறையிலும் ஊழல் மலிந்துவிட்டது என குற்றம்சாட்டியும் பாத யாத்திரை நடத்தப்பட்டது.

    • புதுவையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • 3 வாலிபர்களை பிடித்து அவர்களது சட்டைப்பைகளை சோதனை நடத்தினர்.

    பாகூர்:

    புதுவையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.ஆனாலும் தொடந்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பாகூர் தனியார் கல்லூரி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ‌ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சாதாரண உடையில் சென்று கண்காணித்து வந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற 3 வாலிபர்களை பிடித்து அவர்களது சட்டைப்பைகளை சோதனை நடத்தினர்.

    அப்போது சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தனர். இதையடுத்து 3 பேரையும் பாகூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தமிழக பகுதியான நெய்வேலியை சேர்ந்த சூர்யா (23), வசந்த (21), ஜெர்விஸ் (23) என தெரியவந்தது. மேலும் சூர்யா கொடுத்த தகவலின் பேரில் மற்றொரு 3 பேர் கொண்ட கும்பல் சென்னையில் இருந்து கோவைக்கு கிலோ கணக்கில் கஞ்சா எடுத்து செல்வது தெரியவந்தது.

    இதையடுத்து சூர்யா மூலமாக போலீசார் மற்றும் 3 பேரை தொடர்பு கொண்டு கஞ்சா வாங்குவதுபோல் வரவழைத்து அந்த கும்பலை பொறிவைத்து பிடித்தனர்.

    பின்னர் அந்த கும்பலிடமும் பாகூர் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த கும்பலும் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த பிரதீப் மோகன் (26), கோபால் (22), சந்துரு (23) என்பதும், ஆந்திரமாநிலம் நெல்லூர் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து 6 கிலோ கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.2.½ லட்சம் ஆகும்.

    கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் டிப்ளமோ, என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கஞ்சா வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசாரை தெற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு விஷ்னுகுமார் பாராட்டினார்‌.

    • சென்னை திருவான்மியூர் கொட்டிவாக்கம்குப்பம் பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்தவர் சிங்காரம்.
    • மோட்டார் சைக்கிளை ராஜமாணிக்கம் ஓட்டினார்.

    சேதராப்பட்டு:

    சென்னை திருவான்மியூர் கொட்டிவாக்கம்குப்பம் பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் ராஜமாணிக்கம் (வயது 24) லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த யோகேஷ் (வயது 27) இருவரும் நேற்று முன்தினம் பணி நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் புதுவை வந்தனர்.

    வேலையை முடித்துவிட்டு புதுவையின் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு நேற்று இரவு புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பி கொண்டு இருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை ராஜமாணிக்கம் ஓட்டினார். யோகேஷ் பின்னால் அமர்ந்து இருந்தார். தமிழக பகுதியான கோட்டகுப்பம் அடுத்த மஞ்ச குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மரக்காணத்திலிருந்து புதுவை நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் ராஜமாணிக்கம் மற்றும் யோகேஷ் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். தலை உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் ராஜமாணிக்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சென்றனர்.

    விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யோகேசை மீட்டு கனக செட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு யோகேஷ் பறிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டகுப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விபத்தில் இறந்த ராஜமாணிக்கம் மற்றும் யோகேஷ் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். புதுவையில் வேலையை முடித்துவிட்டு நள்ளிரவில் சென்னை திரும்பிய வாலிபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அன்னுசாமி மேல்நிலைப்பள்ளியில் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.
    • இதன் தொடக்க நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர் இருதயமேரி வரவேற்றார்.

    புதுச்சேரி:

    பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேல்நிலைப்பள்ளியில் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.

    இதன் தொடக்க நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர் இருதயமேரி வரவேற்றார். பள்ளி தாளாளர் ராஜராஜன் நோக்க உரையாற்றினார்.

    விழாவில் தினம் ஒரு பேச்சாளர் என்ற நிகழ்ச்சியில் அரிமதி இளம் பரிதி கலந்துகொண்டு நாம் பெற்ற சுதந்திரம் என்ற தலைப்பில் பேசுகையில், சுதந்திரத்திற்காக தலைவர்கள் செய்த தியாகம், அர்ப் பணிப்பு ஆகியவை குறித்து எடுத்துக்கூறினார்.

    மேலும் பாடல், ஓவியம், பேச்சு, கோலம், நடனம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு சுதந்திர தினவிழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. முடிவில் பள்ளியின்முதல்வர் அருள் செல்வி நன்றி கூறினார்.

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களின் காலிப்பணியிடங்கள் நிரப்பபட வில்லை.
    • மேலும் பதவி உயர்வுகளில் பாரப்பட்சம் காட்டி கடந்த 50 ஆண்டுகளாக மறுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில கூட்டுறவு வங்கியில் கடந்த 50 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களின் காலிப்பணியிடங்கள் நிரப்பபட வில்லை.

    மேலும் பதவி உயர்வுகளில் பாரப்பட்சம் காட்டி கடந்த 50 ஆண்டுகளாக மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் புதுவை மாநில கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வரும் 95 ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணிப்பதவி உயர்வு ஒட்டுமொத்தமாக மறுக்கப்பட்டுள்ளது.

    இதைச் சுட்டிக்காட்டி முதல்-அமைச்சர் ரங்க சாமியிடம் புதுவை மாநில கூட்டுறவு வங்கியில் உள்ள காலியிடங்கள் மற்றும் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கோரிக்கை மனுவை புதுவை பூர்வீக ஆதிதிராவிடர் மற்றும் அட்டவணை கட்டமைப்பு தலைவர் ராமலிங்கம் வழங்கினார்.

    கூட்டமைப்பின் நிர்வாகிகள் கஜேந்திரன் விநாயகமுருகன், அன்புமணி, காரல்மாரஸ், சரவணபெருமாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது ரங்கசாமி கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.

    • டாடா எலக்ஸி நிறுவனத்தின் சார்பில் இறுதி ஆண்டுக்கு பயிலும் மாணவர்களின் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • இதில் டாடா எலக்ஸி நிறுவனத்தில் இருந்து 11 மனித வள மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை நடத்தினர்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் டாடா எலக்ஸி நிறுவனத்தின் சார்பில் இறுதி ஆண்டுக்கு பயிலும் மாணவர்களின் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    இந்த முகாமினை கல்லூரி முதல்வர் விஜய் கிருஷ்ணா ரபாக்கா, துணை முதல்வர் அய்யப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் டாடா எலக்ஸி நிறுவனத்தில் இருந்து 11 மனித வள மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை நடத்தினர்.

    முன்னதாக அந்நிறுவனத்தின் சென்னைமற்றும் பெங்களூரு மண்டல மனிதவள மேலாளர், மாணவர்க ளுக்கு நிறுவனத்தின் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் பணிகள் குறித்து விளக்கினர்.

    மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு தொழில்நுட்பத் தேர்வு மற்றும் மனிதவள தேர்வு என 3 கட்டங்களாக தேர்வுகள் நடத்தி 17 மாணவர்களுக்கு வேலைக்கான பணி ஆணையை வழங்கினர். பணியில் சேர்ந்தவர்க ளுக்கு ஆண்டிற்கு ரூ. 3.5 லட்சம் சம்பளம் கிடைக்கும்.

    முகாமிற்கான ஏற்பாடு களை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் சேதுமாதவன், மக்கள் தொடர்பு அதிகாரி ஜெரார்டு, கணக்கு மேலாளர் ராஜேஷ்குமார் கொண்ட குழுவினர் செய்திருந்தனர்.

    • நாட்டின் 75 -வது சுதந்திர தினம் அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அதன் தொடக்க நாளாக நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொடியேற்று விழா நடைபெற்றது

    புதுச்சேரி:

    நாட்டின் 75 -வது சுதந்திர தினம் அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடக்க நாளாக நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொடியேற்று விழா நடைபெற்றது.

    துணை முதல்வர், ஆஷா ராணி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் நூர் முகமது வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நெட்டப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ.,வும் துணை சபாநாயகரருமான ராஜவேலு கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மழை அங்கி வழங்கினார். நிகழ்ச்சியை சாமுண்டீஸ்வரி தொகுத்து வழங்கினார்.

    இறுதியாக உடற்கல்வி விரிவுரையாளர் ரஷீத் அகமது நன்றிகூறினார். விழாவிற்கான ஏற்பாடு களை விரிவுரையாளர் கார்த்திகேயன், பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் உடற்கல்வி ஆசிரியர் சதீஷ் மற்றும் சித்தானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • குடிதண்ணீர் மிகவும் கலங்கிய நிலையில் பச்சை நிறமாக வருவதாக தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
    • அதிகாரிகளின் பதிலால் சமாதானம் அடையாத எம்.எல்.ஏ. நீர் தேக்க தொட்டியின் மேல் ஏறி அங்குள்ள மூடிகளைத் திறக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி கோலாஸ் நகரில் குடிதண்ணீர் மிகவும் கலங்கிய நிலையில் பச்சை நிறமாக வருவதாக தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் அணுகி நிலைமையை விளக்கினார். அதிகாரிகளின் பதிலால் சமாதானம் அடையாத எம்.எல்.ஏ. நீர் தேக்க தொட்டியின் மேல் ஏறி அங்குள்ள மூடிகளைத் திறக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அதன் பின் தண்ணீர் கலங்கலாக உள்ளதையும், பாசி பிடித்து உள்ளதையும் சுட்டிக்காட்டி உடனடியாக போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

    மேலும் நீர்த்தேக்கத் தொட்டியில் உள்ள இரு மூடிகளும் உடைந்த நிலையில் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மக்கள் குடிக்கும் குடிநீர் தூய்மையாக இருக்க வேண்டும் என்று பணியில் உள்ளவர்களுக்கு அறிவுரை கூறினார்.

    அதன் பின் கீழே இறங்கி வந்து தண்ணீர் சேமிக்கும் சம்பையும் ஆய்வு செய்தார். அதிலும் பாசி பிடித்து இருந்ததை சுட்டிக்காட்டினார். உடனே இந்த குறைகளை சரிசெய்து தருவதாக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வாசு, இளநிலை பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் உறுதிமொழி அளித்தனர்.

    இந்நிகழ்ச்சியின் போது உப்பளம் தொகுதியின் அவைத்தலைவர் ரவி, மீனவரணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி மாநில தி.மு.க. இளைஞர் அணிதுணை அமைப்பாளர் ஆரோக்கிராஜ், முன்னாள் தொகுதி இளைஞர் அணிதுணை அமைப்பாளர் ரவிக்குமார், தி.மு.க. பிரமுகர்கள் அஷ்ரப், நிஷார், தப்பு, இருதயராஜ், காலப்பன், மோரிஸ், ரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • முதலியார்பேட்டை, காராமணிக்குப்பத்தில் உள்ள சக்தி வேல் பரமானந்தர் சுவாமி சித்தர் பீடத்தில் இன்று மகா குருபூஜை பெருவிழா நடந்தது.
    • சித்தர் பீடத்தில் அதிகாலை 4 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை, காராமணிக்குப்பத்தில் உள்ள சக்தி வேல் பரமானந்தர் சுவாமி சித்தர் பீடத்தில் இன்று மகா குருபூஜை பெருவிழா நடந்தது.

    சித்தர் பீடத்தில் அதிகாலை 4 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. 6.30 மணிக்கு சிவபுராணம், 7.30 மணிக்கு சிறப்பு மகா யாகசாலை பூஜை, 9.30 மணிக்கு கலசபூஜை, மகா தீபாராதனை நடந்தது. குருபூஜை விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    மாலை 4 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, 5 மணிக்கு திருவாசக விண்ணப்பம், இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • புதுவை குருமாப்பேட் ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 58 பேராசிரியர்கள் மற்றும் 120 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • அனைத்து ஊழியர்களும் கடந்த 1-ந் தேதி முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை குருமாப்பேட் ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 58 பேராசிரியர்கள் மற்றும் 120 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. உயர் அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் எந்த பலனும் இல்லாததை தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் கடந்த 1-ந் தேதி முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று முதல் அனைத்து ஊழியர்களும் காலை 9 மணி முதல் 9.30 மணி வரை மேட்டுப்பாளையத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாக வாயிலில் அரை மணிநேரம் காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதையொட்டி இன்று காலை கல்லூரியின் மருத்துவமனை வளாகத்தில் திரண்ட பேராசிரியர்கள் உடனடியாக நிலுவை சம்பளத்தை வழங்க கோரி முழக்கம் எழுப்பினர். இப்பிரச்சினையில் கவர்னர், முதல்-அமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

    ×