என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை தமிழ்ச் சங்கத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாள் கவிதை மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
    • தமிழ்ச்சங்கத் தலைவர் பாஸ்கர்,இலக்கியத் திறனாய்வாளர் கொடைக்கானல் காந்தி, தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், பேராசிரியர் பெருமாள், ஹரிசுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை தமிழ்ச் சங்கத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாள் கவிதை மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    அமைச்சர் லட்சுமி நாராயணன் மலரினை வெளியிட்டார். அதனை முன்னாள் எம்.எல்.ஏ. என். எஸ். ஜே.ஜெயபால் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் துணைசபாநாயகர் ராஜவேலு, புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர்முத்து, நக்கீரர் தமிழ்ச்சங்கத் தலைவர் பாஸ்கர்,இலக்கியத் திறனாய்வாளர் கொடைக்கானல் காந்தி, தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், பேராசிரியர் பெருமாள், ஹரிசுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு உப்பளம் சட்டமன்றத் தொகுதி பா.ஜனதா சார்பில் வம்பாக்கீரப்பாளையம் சிவன் கோவிலில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடைபெற்றது.
    • மாணவர்கள் கலந்து கொண்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசத் தலைவர்களின் ஓவியங்களை வரைந்தனர்.

    புதுச்சேரி:

    75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு உப்பளம் சட்டமன்றத் தொகுதி பா.ஜனதா சார்பில் வம்பாக்கீரப்பாளையம் சிவன் கோவிலில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடைபெற்றது. தொகுதி தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

    தொகுதி பொறுப்பாளரும், மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளருமான டாக்டர் க.வெற்றிச்செல்வம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அசோக்பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார். 75-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசத் தலைவர்களின் ஓவியங்களை வரைந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தெய்வநாயகம், மாரியப்பன், மாவட்ட செயலாளர் அற்புதழகன், தொகுதி பொதுச்செயலாளர்கள் ராஜீவ், துணைத் தலைவர் பிரான்சிஸ், மாவட்டத் துணைத் தலைவர் விஜயரங்கம், ஓவியப்போட்டியின் இணை பொறுப்பாளர்கள் நடராஜன், பிரவீன் குமார், தமிழரசன் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், உப்பளம் தொகுதிக்குட்பட்ட மாநில, மாவட்ட, தொகுதி ,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    நிகழ்ச்சியை ரிக்ஷா மாமா சமூக சேவை மையம் நிறுவனர் ஜான்பீட்டர் ஒருங்கிணைத்தார்.

    • கவர்னர் தமிழிசை உத்தரவின் பேரில் நாளை மொகரம் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
    • விடுமுறை வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பணிநாளாக ஈடு செய்யப்படும்.

    புதுச்சேரி:

    மொகரம் பண்டிகையையொட்டி நாளை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக புதுவை அரசின் சார்பு செயலர் ஹிரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் தமிழிசை உத்தரவின் பேரில் நாளை (9-ந்தேதி) மொகரம் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பணிநாளாக ஈடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணலை திருடி சென்ற லாரி டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • புதுவை குயவர்பாளையம் டி.ஆர்.நகரை சேர்ந்தவர் அம்பலவாணன்(வயது65). ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.

    புதுச்சேரி:

    காலிமனையில் சுற்று சுவரை உடைத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணலை திருடி சென்ற லாரி டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை குயவர்பாளையம் டி.ஆர்.நகரை சேர்ந்தவர் அம்பலவாணன்(வயது65). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் கடந்த 2004-ம் ஆண்டு ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரில் தனது மனைவியின் பெயரில் வீட்டுமனை வாங்கி அந்த மனையை சுற்றிலும் சுற்று சுவர் அமைத்திருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அம்பலவாணன் வாங்கிய இடத்தில் சுற்று சுவரை உடைத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் காலி மனையில் இருந்து மினி லாரியில் மணல் ஏற்றப்படுவதாக அப்பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர் அம்பலவாணனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அம்பலவாணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணலை திருடிய லாரி டிரைவரிடம் தட்டிக்கேட்டார். அப்போது லாரி டிரைவர் அம்பலவாணனை தகாத வார்த்தைகளால் திட்டி லாரியை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் பயந்து போன அம்பலவாணன் அங்கிருந்து சென்று விட்டார்.

    பின்னர் இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் இதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அம்பலவாணன் கோர்ட்டில் முறையீடு செய்தார். இதைத்தொடர்ந்து கோர்ட்டு அம்பலவாணன் புகார் மீது நடவடிக்கை எடுக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டது. இதனை ஏற்று ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் 100 மிலி பால், பிஸ்கெட் வழங்கப்பட்டு வந்தது
    • பின்னர் பாலில் ஊட்டச்சத்து பவுடர் கலந்து வழங்கப்பட்டது. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இத்திட்டம் 2 ஆண்டுக்கு பின் தற்போது மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் 100 மிலி பால், பிஸ்கெட் வழங்கப்பட்டு வந்தது.

    பின்னர் பாலில் ஊட்டச்சத்து பவுடர் கலந்து வழங்கப்பட்டது. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இத்திட்டம் 2 ஆண்டுக்கு பின் தற்போது மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது. வருகிற 10-ந் தேதி முதல் மாணவர்களுக்கு மீண்டும் பால் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மதிய உணவு திட்டத்தின் துணை இயக்குனர் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

    வருகிற 10-ந் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தின் கீழ் 100 மில்லி டோன்ட் பால் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதுவையின் அனைத்து நிறுவன தலைவர்களும் இதற்கான வழிமுறைகளை பின்பற்றி பால் வழங்க வேண்டும்.

    பாண்லே மூலம் வழங்கப்புடும் பால், சர்க்கரையின் தரம், அளவை உறுதி செய்ய வேண்டும். இதற்கான சிலிண்டரை சம்பந்தப்பட்ட கியாஸ் ஏஜென்சியில் இருந்து பெற வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வீடு வாடகைக்கு எடுத்து அங்கு மக்களை சந்தித்து குறைகேட்டு வந்தார்.
    • பெரும்பாலான மக்கள் அங்கு வந்து அமைச்சரை சந்திக்க சிரமம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    அமைச்சர் நமச்சிவாயம் தனது தொகுதியான மண்ணாடிப்பட்டில் மக்களை சந்திக்க கொ.மணவெளியில் வீடு வாடகைக்கு எடுத்து அங்கு மக்களை சந்தித்து குறைகேட்டு வந்தார்.

    பெரும்பாலான மக்கள் அங்கு வந்து அமைச்சரை சந்திக்க சிரமம் ஏற்பட்டது. இதனால் காட்டேரிக்குப்பத்தில் ஒரு எம்.எல்.ஏ. அலுவலகமும், திருக்கனூரில் ஒரு எம்.எல்.ஏ.அலுவலகம் திறந்து மக்கள் பணியாற்ற முடிவு செய்தார். காட்டேரிகுப்பத்தில் கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில் அரசின் எம்.எல்.ஏ. அலுவல கமும், திருக்கனூரில் சொந்த செலவில் தனியார் இடத்தில் ஒரு எம்.எல்.ஏ. அலுவலகத்தை தேர்வு செய்து அமைச்சர் பார்வையிட்டார்.

    இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    தொகுதி மக்கள் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்துஎன்னை சந்திக்க சிரமப்படுவநைத அறிந்தேன். எனவே தொகுதி மக்கள் எளிமையாக என்னை சந்திக்க 2 அலுவலகம் அமைக்க ஏற்பாடு செய்துள்ளேன். வாரம் 2 நாட்கள் இங்கு வந்து மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

    • முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள காட்டாமணிக்குப்பம் வீதியில் 42 ஆண்டு கால இட பிரச்சினைக்கு தீர்வு காண கோர்ட்டு மூலம் தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் நடவடிக்கை எடுத்தார்.
    • அப்பகுதி மக்கள் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள காட்டாமணிக்குப்பம் வீதியில் 42 ஆண்டு கால இட பிரச்சினைக்கு தீர்வு காண கோர்ட்டு மூலம் தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் நடவடிக்கை எடுத்தார். இதன் அடிப்படையில் குடியிருப்போருக்கு இடம் உரிமை என்ற தீர்ப்பை பெற்றார். அதன் பேரில் அந்த பகுதி மக்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    • பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா நடைபெற்றது.
    • விடுதலைப் போராட்டத்தில் புரட்சிக் கவிஞர் என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவரும் பாரதிதாசனின் பேரனுமான கோ.பாரதி தலைமை தாங்கிப் பேசினார்.

    புதுச்சேரி:

    பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா நடைபெற்றது. விடுதலைப் போராட்டத்தில் புரட்சிக் கவிஞர் என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவரும் பாரதிதாசனின் பேரனுமான கோ.பாரதி தலைமை தாங்கிப் பேசினார்.

    அன்பே சிவம் அறக்கட்டளைத் தலைவர் ஜெயந்தி ராஜவேலு முன்னிலை வகித்தார். பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணணன் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் தொண்டாற்றிய துரை.மாலிறையன், சுனிதி, சாயபு மரைக்காயர், நசீமாபானு, கிருஷ்ணகுமார், விஸ்வநாதன் ஆகியோருக்கு விருதுகளை வழங்கியதுடன் மன்னர் மன்னன் அறக்கட்டளை நடத்திய ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து 75-ம் ஆண்டு சுதந்திர தின அமுதப்பெரு விழா சிறப்புக் கவியரங்கம் விடுதலை வாழ்க என்ற தலைப்பில் நடைபெற்றது. 40 கவிஞர்கள் பங்கேற்றுக் கவிதை வாசித்தனர்.

    செல்வதுரை நீஸ், படைப்பாளி ரமேஷ் பைரவி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். முன்னதாக் கவிஞர் விசாலாட்சி வரவேற்றார். முடிவில் செயலர் வள்ளி நன்றி கூறினார்.

    • புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
    • மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் ஏனைய வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    9-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    11-ந்தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் ஏனைய வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக கடலோர பகுதிகளில், குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதி, லட்சத்தீவு பகுதி, கேரளா-கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    • புதுவை மாநிலத்தில் ஆயிரத்து 154 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    • புதுவையில் 43 பேரும், காரைக்காலில் 9 பேரும், ஏனாமில் 7 பேரும் இதில் அடங்குவர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் ஆயிரத்து 154 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    புதுவையில் 43 பேரும், காரைக்காலில் 9 பேரும், ஏனாமில் 7 பேரும் இதில் அடங்குவர். மாகியில் தொற்று பாதிப்பு இல்லை. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையிலும், 692 பேர் வீட்டு தனிமையிலும் என ஒட்டு மொத்தமாக 701 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இன்று 85 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 84 பேர் புதுவையையும், ஒருவர் காரைக்காலையும் சேர்ந்தவர்கள்.

    புதுவையில் இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இதில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 960 பேர் குணமடைந்துள்ளனர், 1967 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இத்தகவலை சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது.

    • புதுவையில் இந்து முன்னணி சார்பில் இந்துகளின் உரிமையை மீட்க நடைபெற்றது.
    • சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவையில் இந்து முன்னணி சார்பில் இந்துகளின் உரிமையை மீட்க நடைபெற்ற பிரச்சாரத்தின் போது இந்து முன்னணியின் வரவேற்பு பேனர் கிழிக்கப்பட்டதை கண்டித்தும் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசாரை கண்டித்தும் இந்து முன்னணி சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ் என்ற சிவா தலைமை தாங்கினார்.

    இளஞ்செழியன் வரவேற்புரையாற்றினர். செந்தில் முருகன், நாகராஜ், மணிவீரப்பன், தியாகராஜன், செல்வம், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிவண்ணன், சிவமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் குமார் நன்றி கூறினர்.

    • பள்ளி மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்ட தேச விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் படம் வரையும் ஓவியப்போட்டி நடைபெற்றது.
    • இந்த ஓவியப் போட்டியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு அமிர்த திருவிழாவை முன்னிட்டு மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் பகுதியில் பள்ளி மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்ட தேச விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் படம் வரையும் ஓவியப்போட்டி நடைபெற்றது.

    இந்த ஓவியப் போட்டியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.

    இந்த ஓவிய போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு தேச தலைவர்களின் படங்களை வரைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, கூட்டுறவு கடன் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், தெய்வசிகாமணி, சக்திபாலன், திருவேங்கடம், ஆனந்தன், ராஜதுரை, பழனி, தமிழ், வாழுமுனி, கும்பா குமாரசாமி, அய்யனார், முருகானந்தம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ×