என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணலை திருடிய லாரி டிரைவர்
- ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணலை திருடி சென்ற லாரி டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவை குயவர்பாளையம் டி.ஆர்.நகரை சேர்ந்தவர் அம்பலவாணன்(வயது65). ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
புதுச்சேரி:
காலிமனையில் சுற்று சுவரை உடைத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணலை திருடி சென்ற லாரி டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை குயவர்பாளையம் டி.ஆர்.நகரை சேர்ந்தவர் அம்பலவாணன்(வயது65). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் கடந்த 2004-ம் ஆண்டு ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரில் தனது மனைவியின் பெயரில் வீட்டுமனை வாங்கி அந்த மனையை சுற்றிலும் சுற்று சுவர் அமைத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அம்பலவாணன் வாங்கிய இடத்தில் சுற்று சுவரை உடைத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் காலி மனையில் இருந்து மினி லாரியில் மணல் ஏற்றப்படுவதாக அப்பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர் அம்பலவாணனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அம்பலவாணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணலை திருடிய லாரி டிரைவரிடம் தட்டிக்கேட்டார். அப்போது லாரி டிரைவர் அம்பலவாணனை தகாத வார்த்தைகளால் திட்டி லாரியை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் பயந்து போன அம்பலவாணன் அங்கிருந்து சென்று விட்டார்.
பின்னர் இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் இதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அம்பலவாணன் கோர்ட்டில் முறையீடு செய்தார். இதைத்தொடர்ந்து கோர்ட்டு அம்பலவாணன் புகார் மீது நடவடிக்கை எடுக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டது. இதனை ஏற்று ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






