என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விருது வழங்கும் விழா
    X

    பாவேந்தர் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்ற காட்சி.

    விருது வழங்கும் விழா

    • பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா நடைபெற்றது.
    • விடுதலைப் போராட்டத்தில் புரட்சிக் கவிஞர் என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவரும் பாரதிதாசனின் பேரனுமான கோ.பாரதி தலைமை தாங்கிப் பேசினார்.

    புதுச்சேரி:

    பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா நடைபெற்றது. விடுதலைப் போராட்டத்தில் புரட்சிக் கவிஞர் என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவரும் பாரதிதாசனின் பேரனுமான கோ.பாரதி தலைமை தாங்கிப் பேசினார்.

    அன்பே சிவம் அறக்கட்டளைத் தலைவர் ஜெயந்தி ராஜவேலு முன்னிலை வகித்தார். பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணணன் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் தொண்டாற்றிய துரை.மாலிறையன், சுனிதி, சாயபு மரைக்காயர், நசீமாபானு, கிருஷ்ணகுமார், விஸ்வநாதன் ஆகியோருக்கு விருதுகளை வழங்கியதுடன் மன்னர் மன்னன் அறக்கட்டளை நடத்திய ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து 75-ம் ஆண்டு சுதந்திர தின அமுதப்பெரு விழா சிறப்புக் கவியரங்கம் விடுதலை வாழ்க என்ற தலைப்பில் நடைபெற்றது. 40 கவிஞர்கள் பங்கேற்றுக் கவிதை வாசித்தனர்.

    செல்வதுரை நீஸ், படைப்பாளி ரமேஷ் பைரவி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். முன்னதாக் கவிஞர் விசாலாட்சி வரவேற்றார். முடிவில் செயலர் வள்ளி நன்றி கூறினார்.

    Next Story
    ×